தாரமங்கலம் வளவன்

சுய விபரக் குறிப்பு: சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் 1961 ஆம் ஆண்டு பிறந்த நான், சேலம் அரசு பொறியியற் கல்லூரியில் 1983 ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தேன். தந்தை தமிழாசிரியர் மற்றும் கவிஞர். முதலில் தமிழ்நாட்டில் பணி புரிந்த நான், பிறகு பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம், மும்பை என்று பணி புரிந்து விட்டு தற்போது தில்லியில் பணி புரிகிறேன். நான் கல்லூரி காலத்தில் இருந்தே சிறுகதைகள், கவிதைகள் எழுதி மேலும் படிக்க...»

ராஜி ரகுநாதன்

ராஜி ரகுநாதன்: ​’கணையாழி களஞ்சியம் பாகம் 3′ ல் திரு என். எஸ். ஜகந்நாதன் அவர்கள் மூன்றாவது பத்தாண்டு காலத் தொகுப்பாக தேர்நதெடுத்து கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட 80 கதைகளில் ஒன்று ராஜி ரகுநாதன் எழுதி கணையாழி ​,​ செப்டம்பர் 1989ல் வெளிவந்த ‘வேப்பமரத்தை வெட்டிய போது…’ சிறுகதை. பெரிய ஜாம்பவான்களோடு சேர்ந்து இவர் கதையும் சிறந்த கதைகளுக்கான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவது குறித்து ​மகிழ்கிறார். கீழ்வேளூரில் பிறந்து ஹைதராபாத்தில் மேலும் படிக்க...»

ஸ்ரீ.தாமோதரன்

பெயர்: ஸ்ரீ.தாமோதரன் எண்.64,பகுதி.1, பி.எல்.எஸ்.நகர், சின்னியம்பாளையம் (அ) கோயமுத்தூர்-641 062 செல் : 9486822851     பணி புரியும் முகவரி: நூலகர், துணை மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவ மையம். தபால் பெட்டி.ஏன்.3209, அவிநாசி சாலை, கோயமுத்தூர்-641 062 எழுத்தாளராய் என் பயணம் தொடங்கியது. வலைதளத்தில் : www.sirukathaigal.com முதல் கதை 21 ம் தேதி டிசம்பர் .2014 ல் வெளி வந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக வெளியிட்டு மேலும் படிக்க...»

ஜே.வி.நாதன்

ஜே.வி.நாதன், பொறுப்பாசிரியர், ‘ஜன்னல்’ மாதமிருமுறை இதழ், சென்னை. ஜே.வி.நாதன் சிதம்பரத்தில் பிறந்தவர். கடந்த 37 ஆண்டுகளாக வேலூரில் வாசம். இவருடைய மனைவி ஜெயா, வேலூர் டி.கே.எம். மகளிர் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். ஆனந்த விகடன் குழும ஆசிரியர் இலாகா நிர்வாக செயல் அலுவலர், அதே பத்திரிகையின் மூத்த பத்திரிகை யாளர் (ஸீனியர் கர°பாண்டெண்ட்), விகடன் குழும சேர்மன் திரு மேலும் படிக்க...»

இரா.சந்தோஷ் குமார்

இரா.சந்தோஷ் குமார் எனும் நான் திருப்பூரில் வசிக்கிறேன். உளவியல் இளங்கலை பட்டபடிப்பை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பயின்றேன். மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் எனும் மருத்து அறிக்கை தயாரிக்கும் கணினி சார்ந்த பணிக்காக சொந்த அலுவகத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறேன். கல்லூரி காலத்திலிருந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தாலும் .. கடந்த இரண்டு ஆண்டுகளாகதான் தீவிரமாக எழுத்து.காம் உள்ளிட்ட இணையத்தளங்களில் படைப்புகள் சமர்பித்து வருகிறேன். இணையத்தளங்களை தவிர்த்து வேறு எந்த ஊடகத்திலும்… இதழ்களிலும் எனது மேலும் படிக்க...»

இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம்

இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் - கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். -கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம்(எம்.ஏ) திரைப்படத்துறையில்பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் -எழுத்துக்கள்: 7 நாவல்கள்,6 சிறுகதைத்தொகுப்புக்கள்,2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. -இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. -கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்போட்டி நடத்திப் பல பெண்களை எழுதப்பண்ணியிருக்கிறேன்.அவற்றில் மேலும் படிக்க...»

எஸ்.கண்ணன்

என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது ‘தாக்கம்’ சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. ‘புலன் விசாரணை’ 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது ‘மனிதர்களில் ஒரு மனிதன்’ மேலும் படிக்க...»

வி.ஜே.பிரேமலதா

முனைவர் ஜ.பிரேமலதா, தமிழ் இணைப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி,சேலம் -7. அரசு கல்லூரிப் பேராசிரியர், கட்டுரையாளர், சிறுகதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுபவர், 60 ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்ளையும், 6 முனைவர் பட்ட மாணவர்களையும் உருவாக்கியிருப்பவர். செந்தமிழ்ச்செல்வி போன்ற இலக்கிய இதழ்களில் கட்டுரை எழுதுபவர். தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு நெறிகாட்டுநராக இருப்பவர். திராவிடப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்யும் முனைவர்பட்ட மாணவர்களுக்கும் மேலும் படிக்க...»

சாந்தி ரமேஷ் வவுனியன்

பெயர்: சாந்தி ரமேஷ் வவுனியன் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேர்மன் பிரஜையான தமிழ்ப்பெண் ஊடகவியலாளர் இவர். ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம், ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (சங்கமம்), தமிழ் இணையத்தள வானொலி மற்றும் பல்வேறு இணையத்தள ஊடகங்கள் ஆகியவற்றுக்காகப் பணியாற்றி வருபவர் சாந்தி ரமேஷ் இவற்றுள் தமிழ் இணையத்தள வானொலி நேரடியாக அவரால் நடத்தப்படுவது. 31 வயதுடைய சாந்தி ரமேஷ் யாழ்ப்பாணம், குப்பிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கணவர் மேலும் படிக்க...»

சிவக்குமார் அசோகன்

நான் குமுதத்தில் ஒரு பக்கக் கதைகள்(பல வருடங்கள் முன்பு) எழுதியிருக்கிறேன். ஜோக்ஸ் முயற்சி செய்திருக்கிறேன். குமுதம், கல்கி, குங்குமம் இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன. இணையத்தில் கட்டுரைகள் எழுதி வருகிறேன். sivakumarasokan16.wordpress.com என்ற வலைப்பூவில் என்னுடைய சில கட்டுரைகளைக் காணலாம். ஃபேஸ்புக், ட்விட்டரிலும் சற்று இயங்கி வருகிறேன்.(https://www.facebook.com/sivakumar.asokan.9) ஷேர் மார்கெட்டில் வேலை. தஞ்சாவூர் வாசம். மேலும் படிக்க...»

ரேவதி பாலு

சிறு குறிப்பு சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்ற்ருக்கிறார். இலைக்கிய பீடம் சிறுகதைப் போட்டியில் இரு முறை பரிசு, கலைமகள் சிறுகதை போட்டி, மற்றும் குறுநாவல் போட்டியில் பரிசு கிடைத்துள்ளது. இலக்கிய சிந்தனை அமைப்பின் மாதப் பரிசினை, இரு முறை வென்றிருக்கும் மேலும் படிக்க...»

இமையம்

கடலூர் மாவட்டம், கழுதூரில் பிறந்த (1966) இமையம் அவர்களின் இயற்பெயர் வெ.அண்ணாமலை. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவரும் இவர், இப்போது விருத்தாசலத்தில் வசித்து வருகிறார். தமிழின் மிக முக்கியமான நாவலாசிரியராக, சிறுகதையாசிரியராக அறியப்படும் இமையத்தின் முதல் நாவலான `கோவேறு கழுதைகள்’ (1994) உடனடியான கவனம் பெற்று, இன்றுவரை பேசப்படும் ஒன்றாக உள்ளது. `கோவேறு கழுதைகள்’ ஆங்கிலத்தில் ‘Beasts of Burden என்ற தலைப்பில் 2001ஆம் ஆண்டில் வெளியாகி இருக்கிறது. `ஆறுமுகம்’ 1999லும், மேலும் படிக்க...»

உஷா அன்பரசு

உஷா அன்பரசு, வேலூர். கல்வி- M.A தமிழ். இத்தளத்தில் வெளியாகியுள்ள என் சிறுகதைகள் பெரும்பாலானவை பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. என் கதை, கவிதை, கட்டுரை என என் படைப்புகள் வெளிவந்த பத்திரிக்கைகள் தினமலர்-பெண்கள் மலர், வாரமலர், பாக்யா, தேவதை, காலைக்கதிர், ராணி, கல்கி, தங்கமங்கை. மேலும் http://tamilmayil.blogspot.com என்ற என் வலைப்பக்கத்தில் என் படைப்புகள் அனைத்தையும் வாசிக்கலாம். மின்னஞ்சல்: uavaikarai@gmail.com - உஷா அன்பரசு, வேலூர். மேலும் படிக்க...»

சுதாராஜ்

விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம் புனைபெயர்: சுதாராஜ் கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு: முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்) சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட், 189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த, கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj) Seacrest Appartment, 189/1, 6/1, Mahavithyalaya Mawatha, Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை) தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.com மேலும் படிக்க...»

கலைச்செல்வி

பெயர் : கலைச்செல்வி கணவர் பெயர் : சு.கோவிந்தராஜு வீட்டு முகவரி : கே.கே.நகர், திருச்சி 620 021 இமெயில் முகவரி : shanmathi1995@live.com இதுவரை வெளிவந்த படைப்புகள் : “சக்கை“ என்ற இவரின் நாவல் NCBH வெளியீடாக 2015 ஜனவரியில் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியானது. இந்நாவல் நேரு மெமோரியல் கல்லுாரி, புத்தனாம்பட்டியில் தமிழ் இலக்கியத்திற்கான பாடமாக ஆக்கப்பட்டுள்ளது. காந்திகிராம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இவரது சக்கை நாவலை மேலும் படிக்க...»

ஜெஸிலா

துபாய் ஊடக நகரத்தில் மேலாளராகப் பணிபுரியும் ஜெஸிலா பிறந்து வளர்ந்தது சென்னையில். பட்டிமன்ற பேச்சாளர். வலையுலகில் கதைகள் கவிதைகள் கட்டுரைகள் படைத்து வரும் இவர் அமீரகத் தமிழ் மன்றத்தின் தூண்களில் முக்கியமானவர். அமீரகத்தில் தமிழ் வானொலியொன்றில் பகுதி நேர அறிவிப்பாளராகவும் செயல்படும் இவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அனுபவமும் உண்டு. பெண்ணியச் சிந்தனையும்,நேர்படப் பேசுவதும் இவரது சிறப்பியல்புகள். மூட நம்பிக்கைகள், பெண்களுக்கெதிரான சிறுமைகளுக்கெதிராக தனது ‘கிறுக்கல்கள்’ வலைப்பதிவில் காரமான மேலும் படிக்க...»

அகணி

அகணி என்ற புனைபெயரில் எழுதி வரும் சி.அ.சுரேஸ் என்ற எழுத்தாளர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். இவர் அறிவியல் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதைகள் என்பவற்றை எழுதி வருகின்றார். இவர் கவிச்சாரல்(புதுக்கவிதைத் தொகுதி), சாயி அமுதம்(மரபுக் கவிதைத் தொகுதி), நினைவாற்றல்(அறிவியல் நூல்) ஆகிய நூல்களைக் கனடாவில் வெளியிட்டுள்ளார். அத்துடன் கனடாவில் “பொதிகைப் புதுமலர்கள்” என்ற மரபுக்கவிதைத் தொகுதியை உருவாக்கிய கவிஞர் எண்மரில் இவரும் ஒருவராவர். இவரது சில தெய்வீகப் மேலும் படிக்க...»

சரஸ்வதி ராஜேந்திரன்

பெயர்: சரஸ்வதி ராஜேந்திரன் புனை பெயர்: மன்னை சதிரா ஊர்: மன்னார்குடி இந்த வலைப்பூவில் எனது சின்ன சிறுகதைகள் வலம் வரப்போகிறது நிண்ட தூரம் நடந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்ட இடம் தேடிப்போய் காபி குடிப்பார்கள் சிலர். காரணம், அந்த காப்பி இன் தரத்திற்காக. காப்பிஇன் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்ன சிறுகதைகளில் தரம், மனம், சுவை மேலும் படிக்க...»

பானுரவி

எனது சிறுகதைகள் மங்கையர்மலர், ஆனந்த விகடன், அமெரிக்காவின் தென்றல், கலைமகளில் வெளிவருகின்றன. சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் தமிழ்முரசில் எனது படைப்புக்கள் வெளிவந்துள்ளன..  மேலும், சிங்கப்பூர் தேசியக் கலைக்கழகத்தார் நடத்தும் தங்க முனை விருதுப் போட்டியில், எனது கவிதைக்கு 2011-ஆம் ஆண்டு முதல்பரிசு கிடைத்தது.  கெளரவத்துக்குரிய அப்பரிசை சிங்கப்பூரின் அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். (சிங்கப்பூர் வெள்ளி பத்தாயிரம்). அது தவிரவும், சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம், சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கம் போன்றவை நடத்திய மேலும் படிக்க...»

சந்திரவதனா செல்வகுமாரன்

சந்திரவதனா செல்வகுமாரன் (மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை, இலங்கை) ஜேர்மனிய, ஈழத்து எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். பல இணைய இதழ்களின் ஆசிரியராகவும் இருக்கிறார். வாழ்க்கைச் சுருக்கம் சந்திரவதனா இலங்கையின் வடபுலத்தில் அமைந்துள்ள மேலைப்புலோலியூர், பருத்தித்துறை, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மு.ச.தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகள் பெற்றெடுத்த எண்மரில் இரண்டாமவர். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி யில் கல்வி கற்றவர். கணிதத் துறையில் மேலும் படிக்க...»

இராஜன் முருகவேல்

இராஜன் முருகவேல் (சோழியான், பிறப்பு: ஆகஸ்ட் 4, 1960, சுழிபுரம், யாழ்ப்பாணம், இலங்கை) ஒரு ஈழத்து எழுத்தாளர். பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். தமிழமுதம் இணைய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். தற்போது புலம் பெயர்ந்து ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார். வாழ்க்கைச் சுருக்கம் இராஜன் முருகவேல் இலங்கையின் பறாளாய் வீதி, சுழிபுரம், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முருகவேல் சரோஜியினி தம்பதிகளின் மூத்த புதல்வர். சுழிபுரம் விக்ரோறியாக் மேலும் படிக்க...»

ஸ்ரீஜா வெங்கடேஷ்

இயற் பெயர்: ஸ்ரீஜா வெங்கடேஷ். படிப்பு : M.A ஆங்கில இலக்கியம். சொந்த ஊர்: நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி. தற்போது வசிப்பது சென்னையில். கணவர்: திரு.வெங்கடேஷ். தமிழ் நாடகங்கள்: 1997 முதல் 2007 வரை ஒரிஸ்ஸா புவனேஸ்வரில் வாசம். அந்த வருடங்களில் மொத்தம் ஆறு தமிழ் நாடகங்கள் எழுதி இயக்கிய அனுபவம் உண்டு. அதில் இரு நாடகங்கள் ஒரிஸ்ஸாவின் அப்போதைய ஆளுநர் திரு M . M . இராஜேந்திரன் மேலும் படிக்க...»

மா.பிரபாகரன்

பெயர்: மா.பிரபாகரன படிப்பு: பி.எஸ்.எம்.எஸ் சித்த மருத்துவர் அரசுப்பணியில் இருக்கிறேன் வசிப்பது மதுரையில் எனது முதல் படைப்பு ‘புறக்கணிப்பு’ எனும் சிறுகதை தினமணிகதிரில் வெளியானது. தொடர்ந்து நிறைய படைப்புக்கள் கதிரில் வெளிவந்துள்ளன. தற்போது நான் சிறுவர்களுக்கான படைப்புகளில் மட்டும் எனது கவனத்தைச் செலுத்தி வருகிறேன். சிறுவர்கதைகள் குழந்தை பாடல்கள் சிறுவர்மணியிலும் சுட்டிவிகடனிலும் வெளிவரப் பெற்றுள்ளன. வளரும் இளைய தலைமுறையின் மனங்களில் ஒரு சிறிய நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தால் அதுவே மேலும் படிக்க...»

நிலாமகள்

இயற்பெயர்: இரா. ஆதிலட்சுமி புனைப்பெயர்: நிலாமகள் துணைவர் : ச. செந்தில்குமார் (எ) நெய்வேலி பாரதிக்குமார் கல்விச் செல்வம்: முதுகலை தமிழ், இளங்கலை ஆசிரியப் பட்டப்படிப்பு. (M.A., B.Ed.) இருப்பிடம் : (முன்னாள்) குறியாமங்கலம், சிதம்பரம் வட்டம். (இந்நாள்) நெய்வேலி நகரம், கடலூர் மாவட்டம்., தமிழ்நாடு, இந்தியா. எழுத்துலகில் பிரவேசித்த சூழல்: திரு. கோவை ஞானியின் பெண் எழுத்தாளர் சிறுகதைப் போட்டிக்காக பாரதிக்குமாரின் தூண்டுதலின் பேரில். துவக்கம் : 2003 மேலும் படிக்க...»

உஷாதீபன்

உஷாதீபன் தன் குறிப்பு இயற்பெயர்: கி.வெங்கட்ரமணி தகப்பனார் பெயர்:ஆ.ப.கிருஷ்ணய்யர் பிறந்த தேதி: 10.12.1951 கல்வித் தகுதி: பி.யு.சி. பிறந்த ஊர்: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பணி: தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து பின்னர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவிக் கணக்கு அலுவலகராகப் பணி புரிந்து ஓய்வு. புனை பெயருக்கான காரணம் திரு. நா. பார்த்தசாரதி, அவர்களின் தீபம் இலக்கிய இதழின் மீதான வாசிப்பு மேலும் படிக்க...»

யுவகிருஷ்ணா

யுவகிருஷ்ணா என்ற பெயரில் எழுதும் கிருஷ்ணகுமார் ஒரு தமிழ் எழுத்தாளர். தொடக்கத்தில் இணைய விவாத தளங்களிலும், வலைப்பதிவுகளிலும் எழுதத் தொடங்கிய இவர் விளம்பரத்துறை குறித்த சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் என்ற புத்தகம் ஒன்றினை எழுதியிருக்கிறார். குங்குமம், பெண்ணேநீ, ஆனந்த விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், பில்டர்ஸ் வேர்ல்டு உள்ளிட்ட பத்திரிகைகளிலும்.. திண்ணை, தமிழோவியம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுத்துப் பங்களிப்பு அளித்திருக்கிறார். குமுதம் இதழ் கடந்த 2008ஆம் ஆண்டு தொகுத்த மேலும் படிக்க...»

குரு அரவிந்தன்

குரு அரவிந்தன் கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம் எழுதுவதுடன் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள், மற்றும் நாடகங்களும் எழுதி வருகிறார். வாழ்க்கைக் குறிப்பு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை பெயர் அருணசலம் குருநாதபிள்ளை. காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். எழுத்துத் துறையில் இவரின் சிறுகதைகள், தென்னிந்திய சஞ்சிகைகளான ஆனந்த மேலும் படிக்க...»

பாரததேவி

அடிப்படையில் பாரததேவி ஒரு கதைசொல்லி. ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரன்…’ என்று அவர் ஆரம்பித்தால், அவரது சொக்கலிங்கபுரம் கிராமமே (ராஜபாளையம் அருகில் உள்ளது) வந்து கதை கேட்க உட்கார்ந்துவிடும். நாகரிகப் பூச்சு அறியாத வார்த்தைகளும் வர்ணனைகளும் பாரததேவியின் ஸ்பெஷாலிட்டி! களத்துமேடுகளிலும், கண்மாய் கரைகளிலும் சொல்லப்படும் கிராமத்துக் கதைகள் காற்றோடு கரைந்துவிடாமல் சேகரித்து, 6 புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் பாரததேவி படித்தது, ஐந்தாம் வகுப்பு வரைதான்! சிறுவயதில் மாடுமேய்க்கப் போனபோது கதை கேட்டு மேலும் படிக்க...»

கமலாதேவி அரவிந்தன்

கமலாதேவி அரவிந்தன் பிறப்பால் மலையாளி, எனினும் தமிழ் பால் தணியாத காதல் கொண்டவர். மிக இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்து இ்ன்று வரை எழுதி வருபவர். தமிழுக்குக் கிட்டிய தவச்செல்வி என தமிழவேள் கோ. சாரங்கபணியால் பாராட்டப்பெற்றவர். தன் தாய்மொழியான மலையாளத்திலும் தமிழிலும், ஏறக்குறைய 120 சிறுகதைகள், 18 தொடர்கதைகள், 142 வானொலி நாடகங்கள், 100க்கும் மேற்பட்ட இலக்கியக்கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழிலும் மலையாளத்திலும் 22 மேடை நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார் மேலும் படிக்க...»

முகில் தினகரன்

பெயர் – முகில் தினகரன் முகவரி – சைட் நெ-3ஃ சாந்தி நகர் ஆவாரம்பாளையம் ரோடு கணபதி அஞ்சல் கோயமுத்தூர் – 641 006. அலை பேசி எண் – 98941 25211 கல்வித் தகுதி – எம்.ஏ.(சமூகவியல்) எம்.காம். பி.ஜி.டி.பி.எம். (மனித வள மேம்பாடு) டி.ஈ.எம். (ஏற்றுமதியியல்) வயது – 49 ஆண்டுகள் தொழில் – மத்திய அரசு சார்பு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரி சிறுகதைகள் இதுவரை மேலும் படிக்க...»

நிலாரசிகன்

நிலாரசிகன் ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் ஆனந்த விகடன், வார்த்தை, உயிர்மை, கல்கி, புன்னகை, அகநாழிகை, நவீன விருட்சம், உயிர் எழுத்து, கல்குதிரை, கொம்பு போன்ற அச்சிதழ்களிலும், கீற்று, கூடல்திணை, அதிகாலை, உயிரோசை, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன. மேலும் படிக்க...»

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஓர் இடம் பெற்றவர். சிறுகதை , நாவல் , கட்டுரைகள், கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த பதினைந்து வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி.பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். நவீன வாழ்க்கையின் பிரச்சனைகளையும், சிதைவுகளையும் பற்றிய நுட்பமான பார்வை இவருக்கு உண்டு. அது இவரது எழுத்துக்களில் விரவி இருக்கும்.156 கதைகளைக் கொண்ட என் தொகுப்பு மேலும் படிக்க...»

சி.பி.செந்தில் குமார்

18 வருடங்களாக ஆனந்த விகடன் , குமுதம் போன்ற ஜன ரஞ்சக இதழ்களில் ஜோக்ஸ், எழுதி வருகிறேன், கதைகள் அப்பப்போ எழுதுவேன் , குமுதம் வார இதழ் நடத்திய கட்டுரை போட்டியில் ரூ 1 லட்சம் பரிசு பெற்றிருக் கிறேன் தீபாவளி மலர் 2000 குமுதம் இதழில் தமிழ் நாட்டின் டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் செலக்‌ஷனில் ஒரு வராக தேர்வாகி அது பற்றி கட்டுரை வந்தது. 12 வருடங்களுகுப்பிறகு மேலும் படிக்க...»

வண்ணதாசன்

வண்ணதாசன் என சிறுகதைகள் மூலமும், கல்யாண்ஜி என்று கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ். கல்யாணசுந்தரம் (1946) பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மூத்த எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன்.தமிழ் இலக்கியச் சூழலில் அனைவருக்கும் நெருக்கமானவர். மிக எளிய, யதார்த்த மனிதர். திருநெல்வேலிக்காரர். ‘’அடுத்து நான் என்ன எழுதப் போகிறேன் என்பது என் முதல் வரிக்குக் கூடக் தெரியாது. எதையும் திட்டமிட்டு வாழ்பவன் மேலும் படிக்க...»

நீல பத்மநாபன்

நீல பத்மநாபன் (பிறப்பு: சூன் 24, 1938, கன்னியாக்குமரி மாவட்டம்), தமிழகத்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். இலை உதிர் காலம் புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது விருது பெற்றுள்ள நீல பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக நவீனத்துவ வடிவ மேலும் படிக்க...»

கி.வா.ஜகந்நாதன்

கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 – நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் (1906-1988). இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. மேலும் படிக்க...»

பெருமாள்முருகன்

கவிதையில் தொடங்கிச் சிறுகதை, புதினம், கட்டுரைகள், அகராதி, பதிப்பு, தொகுப்பு என எதையெதையோ செய்து கொண்டிருப்பவன். மாணவர்களின் மனங்கவர்ந்தவனாக இருக்க விரும்பும் தமிழ் இலக்கியம் பயின்ற அரசுக் கல்லூரி ஆசிரியன். Interests:கற்பித்தல், எழுத்து. பெருமாள்முருகன் http://www.perumalmurugan.com கல்லூரி ஆசிரியன் நாமக்கல், தமிழ்நாடு மேலும் படிக்க...»

மெலட்டூர் இரா.நடராஜன்

பாரம்பரியம் மிக்க இசைக்கும், பரதத்திற்கும் பெயர் போன தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மெலட்டூர் என்ற அழகிய கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் இந்த நூலின் ஆசிரியர். இவரது சிறுகதைகள் பெரும்பாலான முன்னணி தமிழ் இதழ்களில் வெளியாகி பேரும் புகழும் ஈட்டியிருக்கின்றன. மனித நேயம், உறவுகளின் மேன்மை, நமது கிராமிய கலாச்சாரம் ஆகியவைகளை நுட்பமான உணர்வுகளோடு, எளிய எழுத்துக்களில் வடித்திருக்கிறார். எனவே இவரது கதைகளை படிக்கும் போது, நம் இயல்பு வாழ்க்கையில் எதிர் மேலும் படிக்க...»

அ.முத்துலிங்கம்

1937 ஜனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாணம் அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் மேலும் படிக்க...»

எம்.ஏ.சுசீலா

மதுரை, பாத்திமாக்கல்லூரியில், தமிழ்த்துறைப்பேராசிரியர் பணி. 36 ஆண்டுகள்(1970-2006); (இடையே இரண்டு ஆண்டுகள் அதே கல்லூரியில் துணை முதல்வராகவும்.) 2006 ஜூனில் பணி நிறைவு பெற்றபின், தற்போதைய தற்காலிக வாசம், புதுதில்லியில். படைப்புக்கள்; சிறுகதைப்படைப்பு, பெண்ணிய ஆய்வு என்னும் இருதளங்களிலும் இயங்கி வருபவர். முதல் சிறுகதையே “அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டி”யில் முதல் பரிசுபெற்றது(1979). எழுபதுக்கும்  மேற்பட்ட சிறுகதைகள், கல்கி, கலைமகள், ஆனந்த விகடன், தினமணிகதிர்,  அமுத சுரபி, மங்கையர் மேலும் படிக்க...»

சுப்ரஜா

சுப்ரஜா என்கிற புனைப்பெயரை வைத்தவர் மறைந்த மூத்த பத்திரி’கயாளர் சாவி. கல்லூரியில் படித்து கொண்டே அவரின் சாவி வார இதழில் பணிபுரிந்த வேளையில் ‘’’கிரியேடிவாக எழுது ‘என்றார்.அவரிடம் பணி புரிந்த போது மற்ற பத்திரிக’ளுகும் எழுத அனுமதித்தார். ஒரு சிறுகதையை எழுதி எனது உண்மை பெயரான ஸ்ரீதரன் என்கிற பெயரின் முன்னால் எனக்கு பிடித்த எம்.எஸ்.வி.அம்மாவின் சுப்ரபாத பிரியத்தில் சுப்ரஜா ஸ்ரீதரன் என்று எழுதி தர முதலில் அந்த பெயரில் மேலும் படிக்க...»

கலைவேந்தன்

கலைவேந்தன் என்னும் பெயரில் கதைகள் கவிதைகள் எழுதி வரும் என் இயற்பெயர் எஸ் ராமஸ்வாமி. நான் புதுதில்லியில் ஆங்கில ஆசிரியனாக கடந்த 24 வருடங்களாகப் பணியாற்றி வருகிறேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப்பட்டமும் கல்வியியல் இளங்கலைப்பட்டமும் பெற்றுள்ள நான் எழுதிய சில கதைகள் விகடனிலும் விகடன் பவளவிழா சிறப்புக் கவிதைப்போட்டியில் 7000 ரூபாய்கள் பரிசுபெற்று முதலிடத்தில் வந்த எனது கவிதையும் எனது சிறு சாதனைகளாகக் குறிப்பிடலாம். மூன்று நான்கு புத்தகத்தொகுப்புக்கு ஏற்ற மேலும் படிக்க...»

ஜெயந்தி சங்கர்

சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன. மேலும் படிக்க...»

அறிஞர் அண்ணாதுரை

காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 – 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் மேலும் படிக்க...»

அகிலன்

அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (ஜூன் 27, 1922 – ஜனவரி 31, 1988) புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார். வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது மேலும் படிக்க...»

அசோகமித்திரன்

அசோகமித்திரன், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறினார். எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது மேலும் படிக்க...»


கதை சிறுத்து – ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன்

srirangam v mohanakrishnan

கதை சொல்லிகள் நம் கிராம வாழ்க்கையில் பழக்கம்தான்.

இரவின் கடையாமம் வரை ஒயிலாடும் காடா விளக்குகள் அவிந்து தூபமாய்க் கேட்ட கதைகளை அசைபோடும் தொழுவத்து மாடுகள் தோற்க.

ஆயினும் சிறுகதை நம் வரலாற்றில் புதுசுதான்.

காரணம் சிறுகதையில் இருக்க வேண்டியது கதை அன்று. கதையின் ஒரு சிறு அம்சம் மட்டுமே.

சரி விவரணைகளோ என்னில் இல்லை. விவரணையின் ஒரு தோற்றமே.

அது மட்டுமன்று. சிறுகதை என்பது கவிதையின் ஒரு மூர்ச்சனையையும் தன்னுள் கொண்டது.

சரி கவிதை என்றால் கற்பனை; தரையில் கால் பாவா கிறக்க மொழிதலோ என்னில் அதுவுமன்று; யதார்த்தத்தின் நங்கூரம் கழண்டுவிடக் கூடாது.

எனவேதான் சொன்னேன் நம் வரலாற்றில் சிறுகதை முற்றிலும் புதியது.

நமது பெரும் சிறுகதை மன்னர்கள் கூட சிறுகதை என்ற பேரில் நெடுங்கதை, குறுங்கதை, அளவுக் கதை என்றுதான் சொல்லி வைத்திருக்கிறார்கள். கதை கேட்கும் ஜோரில் நாமும் அவர்களைச் சிறுகதை ஜாம்பவான்களாகப் பட்டியல் போட்டு சிறுகதை வரலாறும் எழுதிவிட்டோம். போகட்டும்.

அதில் பழகிப் பழகி நமக்கு உண்மையான சிறுகதையைப் படித்தால் ஆச்சரியமாக இருக்கக் கூடும். ‘இதில் என்ன இருக்கிறது? பெரிசாகச் சொல்கிறார்களே இதைப் பற்றி’ என்று.

மாபெரும் சிறுகதை மன்னன் எனப்படும் தி ஜானகிராமனிடம் கூட உண்மையாகவே சிறுகதை ஆன இடங்கள் கொஞ்சம்தான்.

அதாவது ‘கதை சிறுத்து…’ என்பதுதான் சிறுகதையின் உயிர்நாடி.

கொடி இடையாளை ‘இடை சிறுத்து’ என்பார்கள். அதாவது இடை இருக்கிறதோ இல்லையோ என்று சந்தேகிக்க வேண்டும் படி இருக்கிறதாம். உடலின் மேற்பகுதியும், கீழ்ப்பகுதியும் இருப்பதால் இடை என்று ஒன்று இருக்கிறது என்று யூகிக்க வேண்டியுள்ளதாம். இது எந்தக் கொடி இடையாளுக்குப் பொருந்துமோ தெரியாது. ஆனால் ‘கதை சிறுத்து’ என்பதில் இதைப் பொருத்திப் பார்த்தால் ஓரளவிற்குச் சரிப்படும்.

அதாவது சிறுகதையில் கதை இருக்கிறதாக ஊகிக்கும்படி இருக்க வேண்டும்.

நன்றாக உப்பி, இளந்தொந்தி, பெருந்தொந்தி என்றபடி கதையம்சம் இருந்தால் அது சிறுகதை என்பதற்குச் சேராது என்பது நான் பார்த்த வரையில் மேலை நாட்டுச் சிறுகதைகளின் ரீதி, கொள்கை.

ஆனால் நாங்கள் சுதேசிப்பற்று மிக்கவர்கள்; எங்கள் நாட்டில் நெய்த கதை எப்படி ஆயினும் அதையே மகிழ்ந்து, அதிலேயே பரவசமாகி நிற்போம் என்று சொன்னால் ஒன்றும் செய்ய முடியாது. ஹமாரா ஹிந்துஸ்தான் ஜெய் என்று சொல்லிப் போகவேண்டியதுதான்.

இல்லையேல் நீராரும் கடலுடுத்த நிழல் மடந்தைக்கு எழில் ஒழுகும் சீராரும் வதனம் எனத் திகழ் கதைக் கடலில் தோய வேண்டியதுதான்.

ஆனால் சிறுகதை என்பது நம்மைவிட்டு நழுவியபடியே இருக்கும். ஒன்றும் செய்ய முடியாது.

சிறுகதை என்பதில் கதை சொல்வது எப்படி ஒரு விடமுடியாத பழக்கமாக நம்மவரிடத்தில் தொற்றிக்கொண்டுள்ளதோ அதைப் போலவே கட்ட கடைசியில், ‘நச்’ சங்கதிகளும்.

அதாவது நிகழ்வின் ஓட்டங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். அதெல்லாம் முக்கியமில்லை. எல்லாம் சேர்ந்து கடைசி ஒரு புள்ளியில் போய் கண்ணாடி போட்டு உடைத்தாற்போன்று ஒரு டணார். அதற்காகவே நம் மனமும் காவு காத்துக்கொண்டு இருக்கும்.

இதுதான் சினிமாத்தனம். அல்லது இந்தக் கதை கேட்கும் பழக்கத்தைத்தான் பின்னால் சினிமா வந்து காசாக்கி, சினிமாத்தனமாக ஆக்கிவிட்டது என்று சொல்லலாம்.

என்ன சார்? கதை கூடாது. கடைசி உச்சக்கட்ட முனையான திருப்பமோ, டயலாக்கோ இருந்தால் அது சினிமாத்தனம் — இப்படிச் சொன்னால் என்ன அர்த்தம்? என்று கோபிக்காதீர்கள்.

கதை சொல்வதில் இந்த அம்சங்கள் எல்லாம் முக்கியம். நான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் சிறுகதை என்பதன் விஷயம் வேறு.

அதாவது நாட்டுப்புறத் தெம்மாங்கு இசைக்கும் இசையியல் நுணுக்கம் மிக்க யாழிசை காட்டும் ‘பிடிக்கும்’ உள்ள வித்யாசம் இந்தக் கதை சொல்லல்களுக்கும், சிறுகதை என்பதற்கும் உண்டு.

நமது மக்கள் கடந்த பல பத்தாண்டுகளாகவே சினிமா ஜனங்களாக மூளைச்சலவை செய்யப்பட்டு வருகிறார்கள் என்பதன் விளைவு சிறுகதை என்று வந்ததும் சும்மா சின்னக் கதையா சொல்லணும் அவ்வளவுதானே ஜாலி என்று ஆளுக்காள் உள்புகுந்து எழுத்துத் துறையை நிரப்பிவிட்டார்கள்.

என்னை விட்டால் நமது சிறுகதை உலகத்தில் மிகக் குறைவானவைகளே சிறுகதைகளாகத் தேரும். மற்றவை எல்லாம் வெறும் கதைகளே. சிறுகதையாளர்களின் லிஸ்டும் மாறும். இந்தக் குழப்பம் இங்கு மட்டுமன்று. வடக்கே, கிழக்கே எங்கு பார்த்தாலும் எல்லாரும் குட்டி வியாசர்கள் வால்மீகிகளாக இருக்கின்றார்களேயன்றி, சிறுகதை என்ற டெக்னிகல் பர்ஃபெக்க்ஷன் பலப்பல பேருக்கு சித்தியாகவில்லை; சித்தியாவது என்ன? முயலவே இல்லை; அதைப்பற்றிப் பெரிதும் பிரக்ஞை இருப்பதாகவும் தெரியவில்லை.

இவர்களிடம் இதுதான் சிறுகதை என்று உலகத்தரம் வாய்ந்த சிறுகதை ஒன்றைக் காட்டினால் நம்மைப் பார்த்துச் சிரிப்பார்கள்.

ஒருமுறை மௌனியின் பேரர்கள் வந்திருந்தார்கள் என்று திரு சச்சிதாநந்தம், திரு வெங்கட் சாமிநாதன், திரு அசோகமித்திரன் இவர்களோடு நானும் சென்னையில் ஓரிடத்திற்குப் போயிருந்தோம்.

அப்பொழுது சிறுகதை என்றால் என்ன என்ற பேச்சு வந்தது. கேள்வியை எழுப்பியவர் திரு அசோகமித்திரன். அதாவது மௌனியின் சிறுகதை உல்கத்திற்கு வருகிறோம் அதற்குமுன் தொடக்கம் இது.

கேள்வி உருண்டு என் பக்கம் வந்தது. அப்பொழுது இப்படிக் கூறியதாக நினைவு.

ஒரு அடர்ந்த செடியின் நடுவே ஒரு முத்து விழுந்துவிட்டது. நீங்கள் இதோ இந்த இடத்தில் அந்த முத்து இருக்கிறது என்று செடி கொடிகளை விலக்கிக் கண்ணுக்கு அந்த முத்து மட்டும் தென்படும் வகையில் காட்டுகிறீர்கள். அவ்வாறு காட்டுவதில் நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் முயற்சி சிறுகதை.

என்ன பார்க்கிறீர்கள்?

வாழ்க்கையின் அடர்ந்த அனுபவங்கள் மிக்க செடிகொடிகளிடை நீங்கள் காட்ட விரும்பும் ஏதோ முத்துப் போன்ற அம்சம் எப்படிக் காட்டப் படுகிறது? அனைத்தையும் விலக்கினால்தான் தெரியும். அப்பொழுதுதான் விண்ணொளியும், கண்ணொளியும் அங்கு விழுந்து அந்த முத்தின் இருப்பை உணரும்.

கதை சொல்லல் முத்தைக் காட்டுவது ஆகாது. செடி கொடி எல்லாவற்றையும் விவரிக்கும். அந்தச் செடியில் வந்தமர்ந்து சென்ற பறவையினங்களைப் பதியவைக்கும். உள்ள செடி கொடி ஒரு புதர் என்றால் கதை அதைக் காடாக்கும். ஒண்டிக்கொண்டிருந்த விலங்கு திடீரென்று வெளிப்பட்டு ஓடிய நிகழ்வைப் பேசும்; அங்கு பூத்த மலர்கள், காய்கனி வகைகள் இவைபற்றியும் தெரிவிக்கும். ஆனால் முத்து? ஆம் அதுவும் அங்கே எங்கோ உள்ளேதான் விழுந்து கிடக்கிறது. அதாவது கதை என்பதில் எங்கோ இதிகாசத் தனமை உள்ளேயே புதைந்து கிடக்கிறது.

ந்ம்மவர்கள் என்று இதிகாசத்தை விட்டு வெளியே வருகின்றார்களோ அன்றுதான் இவர்கள் சிறுகதை எழுதுவார்கள்.

உண்மையில் வியாசர் என்ற அந்தப் பெரும் கிழவர் மிக விவரமானவர். படைப்புலகில் இன்றும் அந்தக் கிழவனை விஞ்ச ஆளில்லை. இதிகாசமாக ஒரு முக்கியக் கதையை ஓடவிட்டுவிட்டு அப்புறம் என்ன செய்கிறார் பாருங்கள்?

ஏகப்பட்ட சிறுகதைகள். மனித வாழ்வின் தோய்விலும், தொய்விலும் கருவைத்த் எத்தனையோ முத்துக்கள் அவரால் சிறுகதைகளாகப் பொதிந்து வைக்கப் பட்டுள்ளன. உண்மையில் அவைதான் வியாசரின் பர்ணசாலை.

நாவல் எழுதுவது எப்படி என்று வழிகாட்டிகள் இருக்கலாம். நெடுங்கதை, குறுநாவல், கதை இவற்றிற்கு கைட் போடலாமாக இருக்கும். ஆனால் சிறுகதை எழுதுவது எப்படி என்று வழிகாட்டி போடுவது ஒரு வித ஹாஸ்யமே.

ஏனெனில் சிறுகதை என்பது பார்வை சார்ந்த விஷயம். கவிதையைப் போலவே சிறுகதையும், ஒரு கலைஞன் சிறுகதையைப் பார்க்கிறான் என்பதைச் சார்ந்தது.

மற்றவர்களுக்கு மொட்டையாகத் தெரியும் இடத்தில் சிறுகதையைப் பார்ப்பவன் எழுதுவது சிறுகதை.

கவிதை எழுதுவது எப்படி என்பது எவ்வாறு வெட்டிப் பொழுது போக்கோ அப்ப்டியே சிறுகதை எழுதுவது எப்படி என்ற வியாபாரமும்.

ஹென்றி டேவிட் தோரோ கூறியது கண்ணில் பட்டது.

Not that the story need be long, but it will take a long while to make it short.

நெடுநேரம் பேசிக்கொண்டு இருப்போம். சரி இப்ப முடிவா என்ன சொல்ல வரேன்னா…என்று சொல்வோம். இந்த மாதிரியான சந்தர்ப்பத்துக்குத்தான் to make the long story short என்ற வழக்கப்படியான சொற்பொருள் கோவை பயன்படுகின்றது.

இங்கு கொஞ்சம் தோரோ அந்தச் சொலவடையைச் சிறிதே திருப்புகிறார்.

It takes a long while to make it short என்று.

நாம் இன்னும் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம் பண்ணிப் பார்த்தால் என்ன? இந்த எக்ஸ்ப்ரெஷனை கொஞ்சம் கொட்டி தட்டி மாற்றிப் பார்த்தால் நம் நோக்கத்திற்கு எதுனாச்சும் கிடைக்கிறதா? என்பது என் நோக்கம்.

அதாவது நான் அதில் என்ன சொல்ல வருகிறேன் என்றால் to make the long story short கதையைச் சுருக்குவது என்பது மிக நெடிய நேரத்தை எடுத்துக் கொள்வது. இங்கு சுருக்குவது என்றால் precis writing அன்று. ஜ்ழானரில் கதையம்சம் தொட்டுக்கொ தொடைச்சுக்கோ என்று இருக்கும்படி ஒரு மானிட வாழ்வின், உயிர்க்குல புழக்கத்தின் இண்டு இடுக்குகளில் காணாமலே போய்விடும் சில மறைகணங்களை அப்ப்டியே பிடித்து அதை மெருகு துலக்கி, மைக்ராஸ்கோப் வைத்துக் கண்ணுக்குக் காட்டுவது.

நாவல் என்பது panoramic view என்றால் அதற்கு நேர் பிரதிகோடி சிறுகதை.– microscopic view தூர தரிசனியில், காட்சிமாலை தரிசனியில் எவ்வளவு அதிகப்படியான பரிமாற்றங்களின் கொண்டு கொடுத்தல்களைக் காட்ட முடிகின்றதோ அது நாவல். Telescopic view, the big view

சராசரி வாழ்விலேயே கண்ணுக்கும் கருத்துக்கும் புலப்படாமலே போய்விடும் நுணுக்கமான மனித சுபாவப் பரிமாற்றங்களின் உள்புறங்களைத் தோன்றி மறையும் கணத்திற்குள் பிடித்துக் காட்டிவிடும் நுண்தர்சனி சிறுகதை.

கதை என்றால் என்ன என்பது கேள்வி கேட்கும் வரை நன்றாகப் புரிகின்ற விஷயம். அது என்ன என்பது எப்படி முடிவானாலும் எனக்குச் சம்மதமே. கதை என்றால் என்ன என்று முடிவு பண்ணி அதில் சின்னது சிறுகதை என்று முடிவுக்கு வரமுடியாது என்பது நான் உணர்த்த வரும் விஷயம்.

I had little doubt என்றால் நோ டவுட் என்று அர்த்தம். கொஞ்சூண்டு சந்தேகம் என்று பொருள் அன்று.

அதைப்போல சிறுகதை என்றால் கதை அங்கு இல்லை. கதை ஏதோ இருப்பதாக ஊகிக்க மட்டுமே முடிகிறது என்று பொருள்.

‘யோவ்! நான் அப்படித்தான் கதை சொல்வேன்’ என்று சொன்னால் ஒன்றும் தவறில்லை. அது கதை குறுங்கதை, நெடுங்கதை என்று நேரேடிவ்வாக இருக்குமே அன்றி சிறுகதையின் வகையில் சேராது என்பது நான் இப்போதைக்குக் கட்சி கட்டுகின்ற வாதம் என்று வைத்துக் கொள்வோமே.

சிறுகதை இலக்கணம் வைத்துக்கொண்டுதான் கதை எழுதணூமா?

ஐயோ நான் எழுதறது சிறுகதையா தெரியல்லியே என்று இப்படிப்பட்ட கவலைகளோ, தயக்கங்களோ தேவையே இல்லை.

படைப்பு எந்த இலக்கணத்தையும் ஒப்பு நோக்கிப் பிறவாது.

நான் எழுதிய கதைகளிலேயும் எந்த இலக்கணப் பிரக்ஞையும் இல்லாமல்தான் எழுதினேன்.

இலக்கியம் கண்டதற்கேற்பத்தான் இலக்கணம் என்பது போல சிறுகதை என்ற ஒரு ஜ்ழானர் என்ன ? அது கதை, மற்ற கதையாடல்கள் வகைகளிலிருந்து எப்படி வேறுபடத் தெரியும்படி வளர்ந்திருக்கிறது?

இப்படி ஒரு குறுக்கு நெடுக்கான சஞ்சாரம்தான் நான் இங்கே செய்ய முயல்வது.

எனவே எலக்க்ஷன் ரிசல்ட்டுக்கு வெயிட் செய்வதுபோல் கதா வல்லபர்கள் இதைச் சிறிதும் கருத வேண்டாம்.

இங்கெல்லாம் நீங்கள் பின்பற்ற வேண்டிய left-handed குறள் என்ன தெரியுமோ?

,,கற்றபின் நிற்காதீர் அதற்குத் தக,,

அதாவது, நிறைய பக்கங்கள் வரும்படி நெடுங்கதையாக எழுதுவதற்கு நடுவில் ஒரு சின்ன சம்பவம், ஒரு விவரிப்பு, மனத்தைத் தொடும் ஒரு நிகழ்வு இதைச் சுருக்கமாகச் சொல்லி ஒரு பத்து பதினைந்து நிமிடத்திற்குள் படித்துவிடும்படி எழுதினால் அது சிறுகதை என்று பேர் வந்திருக்கும். அதற்கு ஏன் இவ்வளவு பெரிய ஆலாபனை? என்று உங்களுக்குத் தோன்றினால் அதிலும் தவறில்லை. ஏனென்றால் எதேச்சையான தொடக்கங்கள் அப்படித்தான் அமையும். ஆனால் அங்கிருந்து சிறுகதை என்ற வடிவம் எந்த நிலைக்கு வளர்ந்து நிற்கிறது என்று பார்க்கலாமே என்பதுதான் என் ஆசை. தான் இது இல்லை, அது இல்லை என்று தன்னைத் தன் வகைப்பாட்டைத் தவிர பிறிதொன்றோடு ஒரு சேரக் கட்டுவதைத் தவிர்க்கும் போக்கில் சிறுகதையின் பிரத்யேகத் தன்மையை இனங்காண முடியுமா? என்பதுதான் கேள்வி.

ஏனய்யா வேலை மெனக்கெட்டு? ஏதோ நல்ல கதையா படித்தோம். ரசித்தோம் என்று போகாமல் கோழி முட்டைக்கு எதையோ பிடுங்கத் தொடங்கினான் என்ற கதையாய்….என்றெல்லாம் என் மேல் அக்கறை உள்ள ஆத்மாக்கள் நினைக்கக்கூடும். இருக்கட்டும். ஆனால் இலக்கிய இன்பம் என்பது ரசிப்பதோடு சேர்த்து, இலக்கிய வகைப்பாடுகளை நன்கு அறுதியிடுவதிலும் அறிவின் ஊக்கம் செயல்படுவது ரசனையை ஆழப்படுத்துவதும், திறம் மிகச்செய்வதும் அல்லவா?

சிறுகதை பற்றி இன்னொரு ஹூக்லி பந்தும் போட்டுவிடுகிறேன். — கதைகளின் நடுவே கதையற்ற புள்ளிகளைக் காண்பதும் காட்டுவதும் சிறுகதை.

இப்படி எதையாவது குடுகுடுப்பாண்டி போல் சொல்லிக் கொண்டிருக்காமல் உதாரணம் காட்டிச் சொன்னால் இன்னும் விஷயம் ரசப்படும்.

வால்மீகி சொல்லும் ஸ்ரீராமனின் கதை நெடுக போகிறது. அடுத்து அடுத்து ஒன்றைத் தொடர்ந்து ஒன்று என்று கதை பின்னிப் போகிறது. ஆனால் சிராவணனின் உபாக்யானம்.

அங்கு கதை அற்றுப் போய் நின்று விடுகிறது. அது சிறுகதை. வில்லில் சரம் தொட்டு விட்ட தசரதனின் குறி சிராவணன் அன்று. அம்பும் அவனைக் குறிக்கொண்டு போகவில்லை. எந்த அசுரனையும் இலக்கு வைத்து தசரதன் எய்யவும் இல்லை. வேட்டை, உல்லாசம், வேந்தர்தம் பொழுதுபோக்கு, அதில் கொடிய விலங்கு இறந்தால் ஒரோவழி நாட்டுக்கும் உபகாரம். ஆனால் இறந்த விலங்கு என்ன விதத்தில் கொடியது? அதுவும் அது தண்ணி குடித்தது என்றால் அதனால் நாட்டிற்கு என்ன தீங்கு? ஒன்றும் இல்லை. சப்த வேதி என்ற அஸ்திரத் திறமை தெரியும். அதை நிரூபித்துக் காட்ட ஒரு யதேச்சையான சந்தர்ப்பம். சப்தத்தை அறிந்தான் தசரதன் ஆனால் சப்தார்த்தம் பிழையாகி விட்டது. நதியின் பிழையன்று நறும்புனலின்மை. அதுதான் சிறுகதை. பெரும் காதையைச் சொல்லவருகின்ற வால்மீகி ஏன் இவ்வாறு கதையே அற்று, ஸ்தம்பித்த இந்த சூன்ய கணத்தைப் பதிவு செய்தான். அங்குதான் அவன் சிறுகதை ஆசிரியன்.

கிரௌஞ்ச பட்சியைக் கொன்ற அம்பு வேடனின் இலக்கு. ஆனால் சிராவணனைக் கொன்ற அம்பிற்கு இலக்கு எதுவும் இல்லை. நட்ட நடுவானில் நம் கண்ணை உறுத்துகின்ற கூர் முனை அம்பாக இன்றும் தழல்கிறது சிராவணன் என்னும் சிறுகதை.

அந்தச் சிறுகதை முடிந்ததும் நீள்கதை மீண்டும் பாய்கிறது. ஸ்தம்பித்த கணம் விட்டு அனைத்தும் நகர்கின்றன. அந்தச் சிராவணனைக் கொன்றதால் தசரதன் தன் மகனைப் பிரிய நேர்ந்தது. — இப்படிச் சொன்னதும்தான் கதைக்கு ஒரு பெருமூச்சு !! . அப்பாடா எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கிறது என்று.

ஆனால் சிறுகதை புரியாத புள்ளியில் மூர்த்தண்யத்துடன் நிற்கும். சால்ஜாப்பு சொல்லி மழுப்பாது. ஏனெனில் அதற்குக் கதையைப் பற்றிச் சிறிதும் இலட்சியமே இல்லை.

கதை சிறுத்த காரணத்தால் அதன் கண் தீட்சண்யம் மிகுந்து மனித வாழ்வின் கதையற்ற கணங்களின் கடுமையில் காலூன்றி நிற்கிறது. இறகு ஒடிந்த சம்பாதி சிறுகதை. அதன் பார்வையின் தீட்சண்யத்தில் அசோகவனம் தெரியும்.

கதை சொல்வது ஆதிகால ஊக்கம். மனிதர் கதை சொல்லிகள்தாம். மனத்தில் அடர்ந்து மண்டி வளர்ந்து பெருகுவதும் கதைகள்தாம். கதைகளுக்கு நடுவில்தான் மனிதன் பிறக்கிறான். முலைப்பால் கிட்டாத குழந்தை இருக்கலாம். ஆனால் மனத்தில் கதை ஊட்டாத குழந்தை இல்லை. எனவேதான் நம் மனமே நம்மைப் பற்றிச் சிந்தனைகள் இடும்போதே பாருங்கள் குட்டிக் குட்டிக் கதைகளாகப் பின்னிக்கொண்டே போகும்.

ஒன்றுமில்லை. கடைத்தெருவுக்குப் போகவேண்டும்; ஒரு வேலையாக என்று நினைக்கும் போதே அங்கும் உள்ளே ஒரு கதை ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு குட்டி கிளைமாக்ஸ், ஒரு சின்ன ஆண்டி கிளைமாக்ஸ், ஒரு குட்டியூண்டு ப்ளாட் எல்லாம் அதுபாட்டுக்கு மினி எம் எம்மில் ஒரு பக்கத்தில் ஓடும்.

மனிதன் கதையாடுவது சுபாவம். கதைகளின் நடுவே தன் இருப்பைக் கற்பனை செய்து ஒரு பாதுகாப்பைத் தேடிக்கொள்வது உளவியல் ஒத்தடம்.

ஆனால் இந்த சர்வ ஜன பொதுமையிலிருந்து அந்தர்முகமான பாதைக்கு மாறுகிறது, மாற்றுகிறது கதையாடல் போன்ற ஒன்று. ஆனால் அங்கு கதையாடல் இல்லை. கதைகள் ஓய்வு பெறுகின்றன. சுழலும் பம்பரம் சுற்றி ஓயும் கிடைவட்ட அசைவு மட்டுமே அந்தச் சொல்லாடலில் தோற்றும் கதைத்தோற்றம்.

இதற்கு உண்மையில் ‘அகதா’ என்று பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிறுகதை என்று வளர்ந்து விட்டிருக்கிறது.

புத்தர் வீட்டைத் துறந்து காட்டுக்குப் போனதைக் கதையாகச் சொல்ல முடியும்.

ஆனால் புத்தர் போதி மரத்தின் அடியில் சட்டென்று குமிண்சிரிப்பு துலங்க ஸ்தம்பித்த கணத்தைச் சிறுகதையால்தான் குறிப்பு காட்ட முடியும்.

மகள் வந்தது; அவள் சொன்னது; எங்கும் திரிந்தது; அனைவரும் சேர்ந்து பல கொட்டங்கள் அடித்தது; — கதை.

மகள் கிளம்பிப் போன இரவு விமானம் ஏற்றிவிட்டு வந்து படுத்துக் காலை விழித்ததும் அவள் விட்டுச் சென்ற பொருள், ஆளுக்கு ஒரு மூலையைப் பார்த்த வண்ணம் விடும் நெட்டுயிர்ப்பு, கனத்த கலைக்க விரும்பாத மௌனம், நிரம்பி வழியும் வெறுமை — சிறுகதை.

- ஆசிரியர் திரு ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)