செங்கை ஆழியான்

 செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (சனவரி 25, 1941 – 28 பெப்ரவரி 2016) மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.நீலவண்ணன் என்ற பெயரிலும் ஆக்கங்கள் வரைந்தார். இவர் கந்தையா அன்னம்மா தம்பதிகளின் எட்டாவது குழந்தையாக வண்ணார்பண்ணையில் பிறந்தார். யாழ். மேலும் படிக்க...»

யோ.பெனடிக்ற் பாலன்

 பெனடிக்ற் பாலன், யோ. (1939 – 1997) ஓர் எழுத்தாளர். இவர் கல்வித்துறையில் முதுகலைமாணிப் பட்டம் பெற்று உளவியல் விரிவுரையாளராகக் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 1984 முதல் 8 ஆண்டுகள் பணியாற்றிப் பின்னர் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றினார். இவர் பல சிறுகதைகளையும் நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது ‘விபச்சாரம் செய்யாதிருப்பாயா’ என்ற சிறுகதைத் தொகுதிக்கு 1995 இல் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. இவரது நீயொரு பெக்கோ என்ற மேலும் படிக்க...»

செம்பியன் செல்வன்

 இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (சனவரி 1, 1943 – மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழக புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம், தின்னவேலியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்து இவரையும் இவரது தமையன் கணேசபிள்ளையையும் வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை மேலும் படிக்க...»

குப்பிழான் ஐ.சண்முகன்

 ஐ. சண்முகலிங்கம் (பிறப்பு ஆகஸ்டு 1, 1946, குப்பிழான், யாழ்ப்பாணம்) குப்பிழான் ஐ. சண்முகம் என்ற பெயரில் எழுதும் ஈழத்து எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் ஓர் ஆசிரியர். சிறுகதையாசிரியராக கவனம் பெற்ற சண்முகன் இசை, சினிமா, ஓவியம் போன்றவற்றிலும் ஈடுபாடுடையவர். அலையின் ஆரம்ப ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர். இவரது நூல்கள் கோடுகளும் கோலங்களும் (சிறுகதைகள் – 1976) பதிப்பு விபரம் அலை வெளியீடு 6. மேலும் படிக்க...»

செ.யோகநாதன்

 ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன் – எழுதியவர்: முல்லை அமுதன் – 05 February 2008 1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் இறக்கும் வரை நிறையவே எழுதிக்குவித்தவர். 1962ல் தன் முதல் சிறுகதையான ‘மனக்கோலத்தை’ எழுதியது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுநாவல், சிறுவர் இலக்கியம், திரைப்படம், விமர்சனங்கள் என எழுத்தை விரிவுபடுத்தியவர். ஜெயகாந்தனின் ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலை ‘அக்கினிப் பிரவேசம்’ எனும் சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வலைகள் எனக்கு மேலும் படிக்க...»

மருதூர் வாணர்

 மன உறுதியோடு நில்லாமல் இலக்கியப் பணி செய்தவர் கலாபூஷணம் மருதூர் வாணர் - கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர் -May 9th, 2019 மருதூர் வாணர் தனது எழுபதாவது வயதில் கடந்த 2009.05.08ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மருதமுனை பிரதான வீதியைக் கடக்க முற்படும் போது விபத்தில் உயிரிழந்தார். மருதூர் வாணர் இலங்கையின் இலக்கியப்பரப்பில் இலக்கியப் படைப்பாளிகளின் வரிசையில் குறிப்பிடத்தக்க பல சாதனைகளை புரிந்துள்ளார்.இலக்கியமே இவர் பேச்சிலும் நடைமுறைச் செயற்பாடுகளிலும் இருந்து வந்ததையாரும் மேலும் படிக்க...»

வாஸந்தி

 தமிழ் எழுத்துலகில் தனக்கென தனித்துவமான அடையாளம் கொண்டவர். தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவராகக் கருதப்படுபவர். சமூக, மனித உளவியல் கூறுகளை வெகு இயல்பாக எழுத்தில் கையாண்டவர். இயற்பெயர் பங்கஜம். கர்நாடகாவில் உள்ள தும்கூரில் 1941, ஜூலை 26ல் பிறந்தார். பெங்களூரில் வசித்தபோது, ஜேன் ஆஸ்டன், ஜெயகாந்தன், அலெக்ஸாண்டர் டூமாஸ், சார்லஸ் டிக்கன்ஸ் எழுத்துகளைப் படிக்க ஆரம்பித்து, தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தார். இவருடைய ஆரம்ப கால நாவல்கள் எல்லாமே பெண்களை மேலும் படிக்க...»

நாகரத்தினம் கிருஷ்ணா

 நாகரத்தினம் கிருஷ்ணா ஒரு தமிழக எழுத்தாளர். புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வருகிறார். இவர் எழுதிய “நீலக்கடல்” மற்றும் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி இரண்டு நாவல்களும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கின்றன வாழ்க்கைச் சுருக்கம் இவர் தமிழ்நாடு, விழுப்புரம், கொழுவாரி என்ற ஊரைச் சேர்ந்தவர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்சில் மேலும் படிக்க...»

முல்லைஅமுதன்

 எழுத்தாளர் முல்லை அமுதன் கல்லியங்காடு, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முல்லைஅமுதன் எனும் பேயரில் 80களில் இருந்து எழுதி வருகிறார். அவர் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் எனப் பல தளங்களிலும் கால் பதித்தவர். வருடந்தோரும் இங்கிலாந்தில் ஈழத்து எழுத்தாளர்களின் மேலும் படிக்க...»

நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் உள்ள நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவன். படிப்பு இளங்கலை வணிகவியல், பணி நத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திருவாலீஸ்வரர் ஆலய குருக்கள். எழுத்தார்வத்தால் 1993 முதல் எழுதி வருகிறேன். முதல் படைப்பு கோகுலம் சிறுவர் இதழில் வெளியானது. கல்கி, குமுதம், பாக்யா, ஆனந்தவிகடன், குங்குமம், இந்து தமிழ் இதழ்களில் நகைச்சுவை துணுக்குகள், குறுங்கதைகள் எழுதியுள்ளேன். தளிர் என்னும் வலைதளம் நடத்தி வருகிறேன். thalirssb.blogspot.com மேலும் படிக்க...»

வாசுகி நடேசன்

 வாசுகி நடேசன் யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டில் கலாநிதி க சொக்கலிங்கம், தெய்வானை ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சொக்கன் என்ற புனைபெயரில் எல்லோராலும் அறியப்படும் சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வாசுகி யாழ் இந்துக்கல்லூரியில்த மது உயர்கல்வியைக் கற்றார். பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்து கலைமாணி பட்டதை பெற்றோர். பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் ஆ.சண்முகதாஸ் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் “சங்க இலக்கியங்களில் மருதத்திணையின் மேலும் படிக்க...»

சரசா சூரி

 இயற் பெயர் சரஸ்வதி சூரியநாராயண்.தற்போது கோயமுத்தூர் வாசியாகிய நான் ‘ சரசா சூரி’ எனும் பெயரில் நான்கு வருடங்களுக்கு மேலாக சிறுகதைகள் எழுதி வருகிறேன்… நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் சிறப்புத் தேவை வேண்டும் குழந்தைகளுடன் பணியாற்றியதை , வாழ்வில் எனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறேன்.. பெரிய குடும்பத்தில் பிறந்ததால் உறவுகளின் பெருமை அறிந்தவள்.சிறுவயதிலேயே நான்கு சகோதரிகள் இணைந்து’ ஜாங்கிரி’ எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தியது மகிழ்ச்சியான மேலும் படிக்க...»

ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்

 அடியேனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர். தொழில் தனியார் பள்ளி ஆசிரியர். இது வரை மொழிபெயர்ப்பு, புனைவு இலக்கியம், குறு நாவல்கள், கட்டுரை நூல்கள், ஆங்கிலக்கவிதை, தமிழ்த்திரைக்கதை, என்று 15 நூல்கள் வெளியிட்டுள்ளேன். எமது 3 நூல்களுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை நூல் வெளியிட நிதி தந்துள்ளது. தொலைந்து போன கால்டுவெல் ஐயரின் நூல்களை மீட்டெடுத்து, மீள் பதிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.   ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். மேலும் படிக்க...»

தொ.மு.சி.ரகுநாதன்

 தமிழ்ப் படைப்பாளி தொ.மு.சிதம்பர ரகுநாதனின் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: • ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார். • ‘சாந்தி’ என்னும் முற்போக்கு இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தியவர், அதன் வாயிலாக டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமும் செய்தார். மேலும் படிக்க...»

முனைவர் வா.நேரு

 முனைவர் வா.நேரு..பிறந்த தேதி 31.05.1964. பெற்றோர்கள் க.வாலகுரு,சு.முத்துக்கிருஷ்ணம்மாள், இருவரும் ஆசிரியராகப் பணியாற்றி, இப்போது நினைவில் வாழ்பவர்கள். சொந்த ஊர் மதுரை மாவட்டம் சாப்டூர்.இப்போது வசிப்பது மதுரையில். தமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றவர். 1. பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் 2. சூரியக்கீற்றுகள் என்னும் இரண்டு கவிதைப்புத்தகங்களும், 3. நெருப்பினுள் துஞ்சல் என்னும் சிறுகதைத்தொகுப்பும் இவரால் படைக்கப்பட்டு வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...»

உதயசங்கர்

 கா. உதயசங்கர் (பிறப்பு: 1960) ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம், கட்டுரை போன்றவற்றை எழுதி வருகிறார். வாழ்க்கைக் குறிப்பு 1960 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் பிறந்தவர். இவர் தந்தை ச. கார்மேகம் மற்றும் தாயார் கமலம். இவர் மல்லிகா என்பவரை ஏப்ரல் 12, 1987 அன்று திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு நவீனா, துர்கா என்ற இரு மகள்கள் உள்ளனர், மேலும் படிக்க...»

செய்யாறு தி.தா.நாராயணன்

 செய்யாறு தி.தா.நாராயணன் நான் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்ற ஊரைச் சேர்ந்தவன்…ஓய்வு பெற்ற அரசு ஊழியர். .எழுபத்தைந்துக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், இரண்டு அறிவியல் நாவல்களையும் செய்யாறு தி.தா நாராயணன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்,எழுதிகொண்டுமிருக்கிறேன். சிறுகதைகள்:— என் கதைகள் குமுதம், தினமணி கதிர், தினமலர், இலக்கியப்பீடம், கலைமகள்,கணையாழி, செம்மலர் ,தாமரை, கிழக்கு வாசல் உதயம், தாராமதி, போன்ற இதழ்களிலும், அவைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும், திண்ணை டாட்காம் போன்ற இணையதள இதழ்களிலும், மேலும் படிக்க...»

துடுப்பதி ரகுநாதன்

 கடந்த 60 ஆண்டுகளில் கதை, கட்டுரை, நாவல்கள், தொடர்கதைகள் என 600-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கும் துடுப்பதி ரகுநாதன், 80 வயதைக் கடந்த நிலையில் இன்னும் சுறுசுறுப்பாய் எழுதிக்கொண்டிருக்கிறார். தற்போது கோவை நஞ்சுண்டாபுரம் சாலை நேதாஜி நகரில் வசித்து வரும் துடுப்பதி ரகுநாதனை சந்தித்தோம். “பூர்வீகம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள துடுப்பதி. பெற்றோர் செல்லப்பன்-செல்லம்மாள். ஜவுளி வியாபாரம். பெருந்துறை உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு, கோவையில் தங்கி கூட்டுறவில் மேலும் படிக்க...»

பா.அய்யாசாமி

 பா.அய்யாசாமி தந்தை பெயர்: கி.பாலசுப்ரமணியன். பிறந்த ஊர்: சீர்காழி. நான் 15/10/1969 ஆம் ஆண்டு சீர்காழி எனும் ஊரிலே பிறந்தவன் என்னுடைய இளங்கலை இயற்பியல் படிப்பினை பூம்புகார் பேரவைக் கல்லூரியிலே 1989 ஆம் ஆண்டு முடித்து , தற்போது முதுகலை தமிழ் படித்துக்கொண்டு இருக்கின்றேன். தில்லி, உத்தர் பிரதேஷ் ,சென்னை என பல இடங்களில் பணிபுரிந்து தற்போது மயிலாடுதுறையிலே வசித்துக் கொண்டு இருக்கின்றேன்.2015 ஆம் ஆண்டு முதல் என்னை ரோட்டரியில் மேலும் படிக்க...»

தாரமங்கலம் வளவன்

 சுய விபரக் குறிப்பு: சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் 1961 ஆம் ஆண்டு பிறந்த நான், சேலம் அரசு பொறியியற் கல்லூரியில் 1983 ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தேன். தந்தை தமிழாசிரியர் மற்றும் கவிஞர். முதலில் தமிழ்நாட்டில் பணி புரிந்த நான், பிறகு பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம், மும்பை என்று பணி புரிந்து விட்டு தற்போது தில்லியில் பணி புரிகிறேன். நான் கல்லூரி காலத்தில் இருந்தே சிறுகதைகள், கவிதைகள் எழுதி மேலும் படிக்க...»

ராஜி ரகுநாதன்

 ராஜி ரகுநாதன்: ​’கணையாழி களஞ்சியம் பாகம் 3′ ல் திரு என். எஸ். ஜகந்நாதன் அவர்கள் மூன்றாவது பத்தாண்டு காலத் தொகுப்பாக தேர்நதெடுத்து கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட 80 கதைகளில் ஒன்று ராஜி ரகுநாதன் எழுதி கணையாழி ​,​ செப்டம்பர் 1989ல் வெளிவந்த ‘வேப்பமரத்தை வெட்டிய போது…’ சிறுகதை. பெரிய ஜாம்பவான்களோடு சேர்ந்து இவர் கதையும் சிறந்த கதைகளுக்கான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவது குறித்து ​மகிழ்கிறார். கீழ்வேளூரில் பிறந்து ஹைதராபாத்தில் மேலும் படிக்க...»

ஸ்ரீ.தாமோதரன்

 பெயர்: ஸ்ரீ.தாமோதரன் எண்.64,பகுதி.1, பி.எல்.எஸ்.நகர், சின்னியம்பாளையம் (அ) கோயமுத்தூர்-641 062 செல் : 9486822851 பணி புரியும் முகவரி: நூலகர், துணை மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவ மையம். தபால் பெட்டி.ஏன்.3209, அவிநாசி சாலை, கோயமுத்தூர்-641 062 எழுத்தாளராய் என் பயணம் தொடங்கியது. வலைதளத்தில் : www.sirukathaigal.com முதல் கதை 21 ம் தேதி டிசம்பர் .2014 ல் வெளி வந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக வெளியிட்டு ஊக்கப்படுத்தினர். பின்னர் மேலும் படிக்க...»

ஜே.வி.நாதன்

 ஜே.வி.நாதன், பொறுப்பாசிரியர், ‘ஜன்னல்’ மாதமிருமுறை இதழ், சென்னை. ஜே.வி.நாதன் சிதம்பரத்தில் பிறந்தவர். கடந்த 37 ஆண்டுகளாக வேலூரில் வாசம். இவருடைய மனைவி ஜெயா, வேலூர் டி.கே.எம். மகளிர் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். ஆனந்த விகடன் குழும ஆசிரியர் இலாகா நிர்வாக செயல் அலுவலர், அதே பத்திரிகையின் மூத்த பத்திரிகை யாளர் (ஸீனியர் கர°பாண்டெண்ட்), விகடன் குழும சேர்மன் திரு மேலும் படிக்க...»

இரா.சந்தோஷ் குமார்

 இரா.சந்தோஷ் குமார் எனும் நான் திருப்பூரில் வசிக்கிறேன். உளவியல் இளங்கலை பட்டபடிப்பை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பயின்றேன். மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் எனும் மருத்து அறிக்கை தயாரிக்கும் கணினி சார்ந்த பணிக்காக சொந்த அலுவகத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறேன். கல்லூரி காலத்திலிருந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தாலும் .. கடந்த இரண்டு ஆண்டுகளாகதான் தீவிரமாக எழுத்து.காம் உள்ளிட்ட இணையத்தளங்களில் படைப்புகள் சமர்பித்து வருகிறேன். இணையத்தளங்களை தவிர்த்து வேறு எந்த ஊடகத்திலும்… இதழ்களிலும் எனது மேலும் படிக்க...»

இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம்

 இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் - கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். -கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம்(எம்.ஏ) திரைப்படத்துறையில்பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் -எழுத்துக்கள்: 7 நாவல்கள்,6 சிறுகதைத்தொகுப்புக்கள்,2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. -இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. -கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்போட்டி நடத்திப் பல பெண்களை எழுதப்பண்ணியிருக்கிறேன்.அவற்றில் மேலும் படிக்க...»

எஸ்.கண்ணன்

 என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது ‘தாக்கம்’ சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. ‘புலன் விசாரணை’ 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது ‘மனிதர்களில் ஒரு மனிதன்’ மேலும் படிக்க...»

வி.ஜே.பிரேமலதா

 முனைவர் ஜ.பிரேமலதா, தமிழ் இணைப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி,சேலம் -7. அரசு கல்லூரிப் பேராசிரியர், கட்டுரையாளர், சிறுகதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுபவர், 60 ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்ளையும், 6 முனைவர் பட்ட மாணவர்களையும் உருவாக்கியிருப்பவர். செந்தமிழ்ச்செல்வி போன்ற இலக்கிய இதழ்களில் கட்டுரை எழுதுபவர். தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு நெறிகாட்டுநராக இருப்பவர். திராவிடப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்யும் முனைவர்பட்ட மாணவர்களுக்கும் மேலும் படிக்க...»

சாந்தி ரமேஷ் வவுனியன்

 பெயர்: சாந்தி ரமேஷ் வவுனியன் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேர்மன் பிரஜையான தமிழ்ப்பெண் ஊடகவியலாளர் இவர். ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம், ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (சங்கமம்), தமிழ் இணையத்தள வானொலி மற்றும் பல்வேறு இணையத்தள ஊடகங்கள் ஆகியவற்றுக்காகப் பணியாற்றி வருபவர் சாந்தி ரமேஷ் இவற்றுள் தமிழ் இணையத்தள வானொலி நேரடியாக அவரால் நடத்தப்படுவது. 31 வயதுடைய சாந்தி ரமேஷ் யாழ்ப்பாணம், குப்பிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கணவர் மேலும் படிக்க...»

சிவக்குமார் அசோகன்

 நான் குமுதத்தில் ஒரு பக்கக் கதைகள்(பல வருடங்கள் முன்பு) எழுதியிருக்கிறேன். ஜோக்ஸ் முயற்சி செய்திருக்கிறேன். குமுதம், கல்கி, குங்குமம் இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன. இணையத்தில் கட்டுரைகள் எழுதி வருகிறேன். sivakumarasokan16.wordpress.com என்ற வலைப்பூவில் என்னுடைய சில கட்டுரைகளைக் காணலாம். ஃபேஸ்புக், ட்விட்டரிலும் சற்று இயங்கி வருகிறேன்.(https://www.facebook.com/sivakumar.asokan.9) ஷேர் மார்கெட்டில் வேலை. தஞ்சாவூர் வாசம். மேலும் படிக்க...»

ரேவதி பாலு

 சிறு குறிப்பு சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்ற்ருக்கிறார். இலைக்கிய பீடம் சிறுகதைப் போட்டியில் இரு முறை பரிசு, கலைமகள் சிறுகதை போட்டி, மற்றும் குறுநாவல் போட்டியில் பரிசு கிடைத்துள்ளது. இலக்கிய சிந்தனை அமைப்பின் மாதப் பரிசினை, இரு முறை வென்றிருக்கும் மேலும் படிக்க...»

இமையம்

 கடலூர் மாவட்டம், கழுதூரில் பிறந்த (1966) இமையம் அவர்களின் இயற்பெயர் வெ.அண்ணாமலை. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவரும் இவர், இப்போது விருத்தாசலத்தில் வசித்து வருகிறார். தமிழின் மிக முக்கியமான நாவலாசிரியராக, சிறுகதையாசிரியராக அறியப்படும் இமையத்தின் முதல் நாவலான `கோவேறு கழுதைகள்’ (1994) உடனடியான கவனம் பெற்று, இன்றுவரை பேசப்படும் ஒன்றாக உள்ளது. `கோவேறு கழுதைகள்’ ஆங்கிலத்தில் ‘Beasts of Burden என்ற தலைப்பில் 2001ஆம் ஆண்டில் வெளியாகி இருக்கிறது. `ஆறுமுகம்’ 1999லும், மேலும் படிக்க...»

உஷா அன்பரசு

 உஷா அன்பரசு, வேலூர். கல்வி- M.A தமிழ். இத்தளத்தில் வெளியாகியுள்ள என் சிறுகதைகள் பெரும்பாலானவை பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. என் கதை, கவிதை, கட்டுரை என என் படைப்புகள் வெளிவந்த பத்திரிக்கைகள் தினமலர்-பெண்கள் மலர், வாரமலர், பாக்யா, தேவதை, காலைக்கதிர், ராணி, கல்கி, தங்கமங்கை. மேலும் http://tamilmayil.blogspot.com என்ற என் வலைப்பக்கத்தில் என் படைப்புகள் அனைத்தையும் வாசிக்கலாம். மின்னஞ்சல்: uavaikarai@gmail.com - உஷா அன்பரசு, வேலூர். மேலும் படிக்க...»

சுதாராஜ்

 விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம் புனைபெயர்: சுதாராஜ் கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு: முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்) சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட், 189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த, கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj) Seacrest Appartment, 189/1, 6/1, Mahavithyalaya Mawatha, Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை) தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.com மேலும் படிக்க...»

கலைச்செல்வி

 பெயர் : கலைச்செல்வி கணவர் பெயர் : சு.கோவிந்தராஜு வீட்டு முகவரி : கே.கே.நகர், திருச்சி 620 021 இமெயில் முகவரி : shanmathi1995@live.com இதுவரை வெளிவந்த படைப்புகள் : “சக்கை“ என்ற இவரின் நாவல் NCBH வெளியீடாக 2015 ஜனவரியில் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியானது. இந்நாவல் நேரு மெமோரியல் கல்லுாரி, புத்தனாம்பட்டியில் தமிழ் இலக்கியத்திற்கான பாடமாக ஆக்கப்பட்டுள்ளது. காந்திகிராம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இவரது சக்கை நாவலை மேலும் படிக்க...»

ஜெஸிலா

 துபாய் ஊடக நகரத்தில் மேலாளராகப் பணிபுரியும் ஜெஸிலா பிறந்து வளர்ந்தது சென்னையில். பட்டிமன்ற பேச்சாளர். வலையுலகில் கதைகள் கவிதைகள் கட்டுரைகள் படைத்து வரும் இவர் அமீரகத் தமிழ் மன்றத்தின் தூண்களில் முக்கியமானவர். அமீரகத்தில் தமிழ் வானொலியொன்றில் பகுதி நேர அறிவிப்பாளராகவும் செயல்படும் இவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அனுபவமும் உண்டு. பெண்ணியச் சிந்தனையும்,நேர்படப் பேசுவதும் இவரது சிறப்பியல்புகள். மூட நம்பிக்கைகள், பெண்களுக்கெதிரான சிறுமைகளுக்கெதிராக தனது ‘கிறுக்கல்கள்’ வலைப்பதிவில் காரமான மேலும் படிக்க...»

அகணி

 அகணி என்ற புனைபெயரில் எழுதி வரும் சி.அ.சுரேஸ் என்ற எழுத்தாளர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். இவர் அறிவியல் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதைகள் என்பவற்றை எழுதி வருகின்றார். இவர் கவிச்சாரல்(புதுக்கவிதைத் தொகுதி), சாயி அமுதம்(மரபுக் கவிதைத் தொகுதி), நினைவாற்றல்(அறிவியல் நூல்) ஆகிய நூல்களைக் கனடாவில் வெளியிட்டுள்ளார். அத்துடன் கனடாவில் “பொதிகைப் புதுமலர்கள்” என்ற மரபுக்கவிதைத் தொகுதியை உருவாக்கிய கவிஞர் எண்மரில் இவரும் ஒருவராவர். இவரது சில தெய்வீகப் மேலும் படிக்க...»

சரஸ்வதி ராஜேந்திரன்

 பெயர்: சரஸ்வதி ராஜேந்திரன் புனை பெயர்: மன்னை சதிரா ஊர்: மன்னார்குடி இந்த வலைப்பூவில் எனது சின்ன சிறுகதைகள் வலம் வரப்போகிறது நிண்ட தூரம் நடந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்ட இடம் தேடிப்போய் காபி குடிப்பார்கள் சிலர். காரணம், அந்த காப்பி இன் தரத்திற்காக. காப்பிஇன் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்ன சிறுகதைகளில் தரம், மனம், சுவை மேலும் படிக்க...»

பானுரவி

 எனது சிறுகதைகள் மங்கையர்மலர், ஆனந்த விகடன், அமெரிக்காவின் தென்றல், கலைமகளில் வெளிவருகின்றன. சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் தமிழ்முரசில் எனது படைப்புக்கள் வெளிவந்துள்ளன..  மேலும், சிங்கப்பூர் தேசியக் கலைக்கழகத்தார் நடத்தும் தங்க முனை விருதுப் போட்டியில், எனது கவிதைக்கு 2011-ஆம் ஆண்டு முதல்பரிசு கிடைத்தது.  கெளரவத்துக்குரிய அப்பரிசை சிங்கப்பூரின் அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். (சிங்கப்பூர் வெள்ளி பத்தாயிரம்). அது தவிரவும், சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம், சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கம் போன்றவை நடத்திய மேலும் படிக்க...»

சந்திரவதனா செல்வகுமாரன்

 சந்திரவதனா செல்வகுமாரன் (மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை, இலங்கை) ஜேர்மனிய, ஈழத்து எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். பல இணைய இதழ்களின் ஆசிரியராகவும் இருக்கிறார். வாழ்க்கைச் சுருக்கம் சந்திரவதனா இலங்கையின் வடபுலத்தில் அமைந்துள்ள மேலைப்புலோலியூர், பருத்தித்துறை, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மு.ச.தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகள் பெற்றெடுத்த எண்மரில் இரண்டாமவர். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி யில் கல்வி கற்றவர். கணிதத் துறையில் மேலும் படிக்க...»

இராஜன் முருகவேல்

 இராஜன் முருகவேல் (சோழியான், பிறப்பு: ஆகஸ்ட் 4, 1960, சுழிபுரம், யாழ்ப்பாணம், இலங்கை) ஒரு ஈழத்து எழுத்தாளர். பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். தமிழமுதம் இணைய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். தற்போது புலம் பெயர்ந்து ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார். வாழ்க்கைச் சுருக்கம் இராஜன் முருகவேல் இலங்கையின் பறாளாய் வீதி, சுழிபுரம், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முருகவேல் சரோஜியினி தம்பதிகளின் மூத்த புதல்வர். சுழிபுரம் விக்ரோறியாக் மேலும் படிக்க...»

ஸ்ரீஜா வெங்கடேஷ்

 இயற் பெயர்: ஸ்ரீஜா வெங்கடேஷ். படிப்பு : M.A ஆங்கில இலக்கியம். சொந்த ஊர்: நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி. தற்போது வசிப்பது சென்னையில். கணவர்: திரு.வெங்கடேஷ். தமிழ் நாடகங்கள்: 1997 முதல் 2007 வரை ஒரிஸ்ஸா புவனேஸ்வரில் வாசம். அந்த வருடங்களில் மொத்தம் ஆறு தமிழ் நாடகங்கள் எழுதி இயக்கிய அனுபவம் உண்டு. அதில் இரு நாடகங்கள் ஒரிஸ்ஸாவின் அப்போதைய ஆளுநர் திரு M . M . இராஜேந்திரன் மேலும் படிக்க...»

மா.பிரபாகரன்

 பெயர்: மா.பிரபாகரன படிப்பு: பி.எஸ்.எம்.எஸ் சித்த மருத்துவர் அரசுப்பணியில் இருக்கிறேன் வசிப்பது மதுரையில் எனது முதல் படைப்பு ‘புறக்கணிப்பு’ எனும் சிறுகதை தினமணிகதிரில் வெளியானது. தொடர்ந்து நிறைய படைப்புக்கள் கதிரில் வெளிவந்துள்ளன. தற்போது நான் சிறுவர்களுக்கான படைப்புகளில் மட்டும் எனது கவனத்தைச் செலுத்தி வருகிறேன். சிறுவர்கதைகள் குழந்தை பாடல்கள் சிறுவர்மணியிலும் சுட்டிவிகடனிலும் வெளிவரப் பெற்றுள்ளன. வளரும் இளைய தலைமுறையின் மனங்களில் ஒரு சிறிய நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தால் அதுவே மேலும் படிக்க...»

நிலாமகள்

 இயற்பெயர்: இரா. ஆதிலட்சுமி புனைப்பெயர்: நிலாமகள் துணைவர் : ச. செந்தில்குமார் (எ) நெய்வேலி பாரதிக்குமார் கல்விச் செல்வம்: முதுகலை தமிழ், இளங்கலை ஆசிரியப் பட்டப்படிப்பு. (M.A., B.Ed.) இருப்பிடம் : (முன்னாள்) குறியாமங்கலம், சிதம்பரம் வட்டம். (இந்நாள்) நெய்வேலி நகரம், கடலூர் மாவட்டம்., தமிழ்நாடு, இந்தியா. எழுத்துலகில் பிரவேசித்த சூழல்: திரு. கோவை ஞானியின் பெண் எழுத்தாளர் சிறுகதைப் போட்டிக்காக பாரதிக்குமாரின் தூண்டுதலின் பேரில். துவக்கம் : 2003 மேலும் படிக்க...»

உஷாதீபன்

 உஷாதீபன் தன் குறிப்பு இயற்பெயர்: கி.வெங்கட்ரமணி தகப்பனார் பெயர்:ஆ.ப.கிருஷ்ணய்யர் பிறந்த தேதி: 10.12.1951 கல்வித் தகுதி: பி.யு.சி. பிறந்த ஊர்: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பணி: தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து பின்னர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவிக் கணக்கு அலுவலகராகப் பணி புரிந்து ஓய்வு. புனை பெயருக்கான காரணம் திரு. நா. பார்த்தசாரதி, அவர்களின் தீபம் இலக்கிய இதழின் மீதான வாசிப்பு மேலும் படிக்க...»

யுவகிருஷ்ணா

 யுவகிருஷ்ணா என்ற பெயரில் எழுதும் கிருஷ்ணகுமார் ஒரு தமிழ் எழுத்தாளர். தொடக்கத்தில் இணைய விவாத தளங்களிலும், வலைப்பதிவுகளிலும் எழுதத் தொடங்கிய இவர் விளம்பரத்துறை குறித்த சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் என்ற புத்தகம் ஒன்றினை எழுதியிருக்கிறார். குங்குமம், பெண்ணேநீ, ஆனந்த விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், பில்டர்ஸ் வேர்ல்டு உள்ளிட்ட பத்திரிகைகளிலும்.. திண்ணை, தமிழோவியம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுத்துப் பங்களிப்பு அளித்திருக்கிறார். குமுதம் இதழ் கடந்த 2008ஆம் ஆண்டு தொகுத்த மேலும் படிக்க...»

குரு அரவிந்தன்

 குரு அரவிந்தன் கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம் எழுதுவதுடன் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள், மற்றும் நாடகங்களும் எழுதி வருகிறார். வாழ்க்கைக் குறிப்பு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை பெயர் அருணசலம் குருநாதபிள்ளை. காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். எழுத்துத் துறையில் இவரின் சிறுகதைகள், தென்னிந்திய சஞ்சிகைகளான ஆனந்த மேலும் படிக்க...»

பாரததேவி

 அடிப்படையில் பாரததேவி ஒரு கதைசொல்லி. ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரன்…’ என்று அவர் ஆரம்பித்தால், அவரது சொக்கலிங்கபுரம் கிராமமே (ராஜபாளையம் அருகில் உள்ளது) வந்து கதை கேட்க உட்கார்ந்துவிடும். நாகரிகப் பூச்சு அறியாத வார்த்தைகளும் வர்ணனைகளும் பாரததேவியின் ஸ்பெஷாலிட்டி! களத்துமேடுகளிலும், கண்மாய் கரைகளிலும் சொல்லப்படும் கிராமத்துக் கதைகள் காற்றோடு கரைந்துவிடாமல் சேகரித்து, 6 புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் பாரததேவி படித்தது, ஐந்தாம் வகுப்பு வரைதான்! சிறுவயதில் மாடுமேய்க்கப் போனபோது கதை கேட்டு மேலும் படிக்க...»

கமலாதேவி அரவிந்தன்

 கமலாதேவி அரவிந்தன் பிறப்பால் மலையாளி, எனினும் தமிழ் பால் தணியாத காதல் கொண்டவர். மிக இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்து இ்ன்று வரை எழுதி வருபவர். தமிழுக்குக் கிட்டிய தவச்செல்வி என தமிழவேள் கோ. சாரங்கபணியால் பாராட்டப்பெற்றவர். தன் தாய்மொழியான மலையாளத்திலும் தமிழிலும், ஏறக்குறைய 120 சிறுகதைகள், 18 தொடர்கதைகள், 142 வானொலி நாடகங்கள், 100க்கும் மேற்பட்ட இலக்கியக்கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழிலும் மலையாளத்திலும் 22 மேடை நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார் மேலும் படிக்க...»

முகில் தினகரன்

  பெயர் – முகில் தினகரன் முகவரி – சைட் நெ-3ஃ சாந்தி நகர் ஆவாரம்பாளையம் ரோடு கணபதி அஞ்சல் கோயமுத்தூர் – 641 006. அலை பேசி எண் – 98941 25211 கல்வித் தகுதி – எம்.ஏ.(சமூகவியல்) எம்.காம். பி.ஜி.டி.பி.எம். (மனித வள மேம்பாடு) டி.ஈ.எம். (ஏற்றுமதியியல்) வயது – 49 ஆண்டுகள் தொழில் – மத்திய அரசு சார்பு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரி சிறுகதைகள் மேலும் படிக்க...»

நிலாரசிகன்

 நிலாரசிகன் ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் ஆனந்த விகடன், வார்த்தை, உயிர்மை, கல்கி, புன்னகை, அகநாழிகை, நவீன விருட்சம், உயிர் எழுத்து, கல்குதிரை, கொம்பு போன்ற அச்சிதழ்களிலும், கீற்று, கூடல்திணை, அதிகாலை, உயிரோசை, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன. மேலும் படிக்க...»

சுப்ரபாரதிமணியன்

 சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஓர் இடம் பெற்றவர். சிறுகதை , நாவல் , கட்டுரைகள், கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த பதினைந்து வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி.பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். நவீன வாழ்க்கையின் பிரச்சனைகளையும், சிதைவுகளையும் பற்றிய நுட்பமான பார்வை இவருக்கு உண்டு. அது இவரது எழுத்துக்களில் விரவி இருக்கும்.156 கதைகளைக் கொண்ட என் தொகுப்பு மேலும் படிக்க...»

சி.பி.செந்தில் குமார்

 18 வருடங்களாக ஆனந்த விகடன் , குமுதம் போன்ற ஜன ரஞ்சக இதழ்களில் ஜோக்ஸ், எழுதி வருகிறேன், கதைகள் அப்பப்போ எழுதுவேன் , குமுதம் வார இதழ் நடத்திய கட்டுரை போட்டியில் ரூ 1 லட்சம் பரிசு பெற்றிருக் கிறேன் தீபாவளி மலர் 2000 குமுதம் இதழில் தமிழ் நாட்டின் டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் செலக்‌ஷனில் ஒரு வராக தேர்வாகி அது பற்றி கட்டுரை வந்தது. 12 வருடங்களுகுப்பிறகு மேலும் படிக்க...»

வண்ணதாசன்

 வண்ணதாசன் என சிறுகதைகள் மூலமும், கல்யாண்ஜி என்று கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ். கல்யாணசுந்தரம் (1946) பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மூத்த எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன்.தமிழ் இலக்கியச் சூழலில் அனைவருக்கும் நெருக்கமானவர். மிக எளிய, யதார்த்த மனிதர். திருநெல்வேலிக்காரர். ‘’அடுத்து நான் என்ன எழுதப் போகிறேன் என்பது என் முதல் வரிக்குக் கூடக் தெரியாது. எதையும் திட்டமிட்டு வாழ்பவன் மேலும் படிக்க...»

நீல பத்மநாபன்

 நீல பத்மநாபன் (பிறப்பு: சூன் 24, 1938, கன்னியாக்குமரி மாவட்டம்), தமிழகத்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். இலை உதிர் காலம் புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது விருது பெற்றுள்ள நீல பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக நவீனத்துவ வடிவ மேலும் படிக்க...»

கி.வா.ஜகந்நாதன்

 கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 – நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் (1906-1988). இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. மேலும் படிக்க...»

பெருமாள்முருகன்

 கவிதையில் தொடங்கிச் சிறுகதை, புதினம், கட்டுரைகள், அகராதி, பதிப்பு, தொகுப்பு என எதையெதையோ செய்து கொண்டிருப்பவன். மாணவர்களின் மனங்கவர்ந்தவனாக இருக்க விரும்பும் தமிழ் இலக்கியம் பயின்ற அரசுக் கல்லூரி ஆசிரியன். Interests:கற்பித்தல், எழுத்து. பெருமாள்முருகன் http://www.perumalmurugan.com கல்லூரி ஆசிரியன் நாமக்கல், தமிழ்நாடு மேலும் படிக்க...»

மெலட்டூர் இரா.நடராஜன்

 பாரம்பரியம் மிக்க இசைக்கும், பரதத்திற்கும் பெயர் போன தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மெலட்டூர் என்ற அழகிய கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் இந்த நூலின் ஆசிரியர். இவரது சிறுகதைகள் பெரும்பாலான முன்னணி தமிழ் இதழ்களில் வெளியாகி பேரும் புகழும் ஈட்டியிருக்கின்றன. மனித நேயம், உறவுகளின் மேன்மை, நமது கிராமிய கலாச்சாரம் ஆகியவைகளை நுட்பமான உணர்வுகளோடு, எளிய எழுத்துக்களில் வடித்திருக்கிறார். எனவே இவரது கதைகளை படிக்கும் போது, நம் இயல்பு வாழ்க்கையில் எதிர் மேலும் படிக்க...»

அ.முத்துலிங்கம்

 1937 ஜனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாணம் அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் மேலும் படிக்க...»

எம்.ஏ.சுசீலா

 ​எம்.ஏ.சுசீலா-குறிப்பு தமிழ்ப்பேராசிரியர்-பணிநிறைவு, எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர் www.masusila.com 3/217,கிருஷ்ணா நகர்,திருப்பாலை, மதுரை 625014 மின் அஞ்சல் : susila27@gmail.com எம்.ஏ.சுசீலா, மதுரை- பாத்திமாக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர். 1979ஆம் ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப்போட்டியில் இவரது’ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் ஆக்கம்,முதற்பரிசு பெற, இவர் அறிமுக எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றார். தொடர்ந்து தொண்ணூறுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகளும்,கட்டுரைகளும் பல வார மாத இதழ்களில் மேலும் படிக்க...»

சுப்ரஜா

 சுப்ரஜா என்கிற புனைப்பெயரை வைத்தவர் மறைந்த மூத்த பத்திரி’கயாளர் சாவி. கல்லூரியில் படித்து கொண்டே அவரின் சாவி வார இதழில் பணிபுரிந்த வேளையில் ‘’’கிரியேடிவாக எழுது ‘என்றார்.அவரிடம் பணி புரிந்த போது மற்ற பத்திரிக’ளுகும் எழுத அனுமதித்தார். ஒரு சிறுகதையை எழுதி எனது உண்மை பெயரான ஸ்ரீதரன் என்கிற பெயரின் முன்னால் எனக்கு பிடித்த எம்.எஸ்.வி.அம்மாவின் சுப்ரபாத பிரியத்தில் சுப்ரஜா ஸ்ரீதரன் என்று எழுதி தர முதலில் அந்த பெயரில் மேலும் படிக்க...»

கலைவேந்தன்

 கலைவேந்தன் என்னும் பெயரில் கதைகள் கவிதைகள் எழுதி வரும் என் இயற்பெயர் எஸ் ராமஸ்வாமி. நான் புதுதில்லியில் ஆங்கில ஆசிரியனாக கடந்த 24 வருடங்களாகப் பணியாற்றி வருகிறேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப்பட்டமும் கல்வியியல் இளங்கலைப்பட்டமும் பெற்றுள்ள நான் எழுதிய சில கதைகள் விகடனிலும் விகடன் பவளவிழா சிறப்புக் கவிதைப்போட்டியில் 7000 ரூபாய்கள் பரிசுபெற்று முதலிடத்தில் வந்த எனது கவிதையும் எனது சிறு சாதனைகளாகக் குறிப்பிடலாம். மூன்று நான்கு புத்தகத்தொகுப்புக்கு ஏற்ற மேலும் படிக்க...»

ஜெயந்தி சங்கர்

 சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன. மேலும் படிக்க...»

அறிஞர் அண்ணாதுரை

 காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 – 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் மேலும் படிக்க...»

அகிலன்

 அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (ஜூன் 27, 1922 – ஜனவரி 31, 1988) புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார். வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது மேலும் படிக்க...»

அசோகமித்திரன்

 அசோகமித்திரன், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறினார். எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது மேலும் படிக்க...»


ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள் – செம்பியன் செல்வன்

 

தமிழில் சிறுகதை : ஒரு வாயில்

சிறுகதை ஒரு நவீன கலை வடிவம்: தமிழிற்கோ மிக மிக நவமான கலை வடிவம்

மேனாட்டவரின் ஏகாதிபத்தியப் படை எடுப்பாலும், காலனி ஆதிக்கத்தாலும் – கீழைத் தேசங்களில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார அரசியல் மாற்றங்களினாலும், ஆங்கிலக் கல்வியி; விருத்தியினாலும் – கீழைத்தேய இலக்கிய வடிவங்களிலும், தன்மைகளிலும் அவற்றின் போக்குகளிலும் பலத்த புத்திருப்ப மாற்றங்கள் ஏற்பட்டதுடன், புதிய புதிய இலக்கிய வகைகளும் அறிமுகமாயின.

மேனாட்டவரின் வருகையும், மதம் பரப்பும் அவாவும் இங்கு அச்சு யந்திரங்களையும், செய்தித்தாள்களையும் மக்களிடையே துரிதகதியில் பரப்பி, மக்களின் அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசியப் பொருட்களாக மாற்றி விட்டன. இவற்றால், கவிதையின், செய்யுட்களின் முக்கியத்துவம் குறைந்து, உரைநடையின் செல்வாக்கு மிக மிக வளரலாயிற்று.

வாய்மொழியாகவும், ஏடம் எழுத்தாணியுமாக இருந்துவந்த தமிழிலக்கியம் – அச்சின் வருகையினால் புதிய உரு; புதிய கலை; புதிய நடை என மாறத் தொடங்கியது. இத்தகைய மாற்றங்களுக்கு ஆட்சியிலிருந்த அன்னியரின் அரவணைப்பும் உறுதுணையாயிற்று.

கதை எனும் கலை
மனித குலம், உலகின் எந்த ஒரு மூலையில், எப்போ அரும்பத் தொடங்கியதோ, – மக்கள் கூட்டம் கூட்டமாக என்று வாழத் தொடங்கினரோ அன்றே கதை சொல்லும், கதை கேட்கும் பழக்கங்களும் ஆரம்பமாகிவிட்டன எனலாம்.

இப்பழக்கமே நாளடைவில் கதைகளை- பெருங்கதை, நாவல் சிறுகதை என்று தோற்றுவித்தமைக்கு முயற்சிகளாகப் பரிணமித்தன எனவும் கருதலாம். இதற்குதவியாகப் பிரித்தானியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சி, – அச்சு யந்திர சாதனங்களை வளர்த்து மக்களிடையே கதை கேட்கும் பழக்கத்தை கதை படிக்கும் வடிக்கமாக மாற்றியமைத்தது. இதனால் ஏற்பட்ட உரைநடை வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று இணைந்து வரலாயிற்று.

புதுக்கலையா? மரபுக்கலையா?

ஆயினும், இங்கு கதை என்பது – உருவம், உள்ளடக்கம் என்பனபற்றியவரைவிலக்கணங்கட்கு அப்பாற்பட்ட கதை அளத்தலையே குறிக்கும். எம்மொழியிலாயினும் புதிதாகத் தோன்றுகின்ற எந்தக் கலை வடிவமும் பழைய மரபை ஒட்டியோ, தழுவியோ ஏற்படுவது வழக்கம். இதனாற்றான் உண்மை புரியாத பலரும் -

‘சிறுகதை தமிழிற்குப் புதியதல்ல’ என வாதிடுகின்றனர். இதற்குச் சான்றாகச் சங்கப் பாடற் காட்சிகளையும், தொல்காப்பியச் சூத்திரத்தையும் (தொல் : பொருள் : செய்யுளியல்-17) விக்கிரமாதித்தன் கதை, மதனகாமராஜன் கதை, மகாபாரதக்கதை, பாகவதக்கதை, பஞ்சதந்திரக் கதை, இதோபதேசம், வேத உபநிடதக் கதைகள், கதாசாசுரம் புத்த ஜாதகக்கதைகள், இக்குணிக் கதைகள், தென்னாலிராமன் கதைகள் என்பவற்றைச் சுட்டுவர். இவ்வாறு கூறுவதானால் -

மேனாடுகளில் கூட சிறுகதையின் காலம் பின்தள்ளிப் போடப்பட்டுவிடும். அங்கும் ‘விவிலிய நூற்கதைகள், நாட்டுப்புலவர் பாடிய நாடோடிக் கதைகள், ஹோமர் இதிகாசக்கதைகள், ஈசாப் கட்டுக் கதைகள், கவி சாசர் எழுதிய கந்தர்பரிக்கதைகள், மத்திய பிரெஞ்சுக் கதைகள், லாபோர்த்தேர்ண் கதைகள் போன்ற எத்தனையோ காண்கின்றன. 1′

சிறுகதை வித்து

ஆனால், நாம் இன்றிறயும்படியான கலையுருவம் படைத்த சிறுகதை பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ஆரம்பமானது. தற்காலத்தில் வழக்கிலிருக்கும், சிறுகதைப் பண்புகளையும் அவற்றின் போக்கினையும் அவதானிக்கும்போது – சிறுகதை ஒரு கலைவடிவமாயினும், அது விஞ்ஞான பூர்வமாக ஒழுங்குபடுத்தப்பட்ட நவீனகலை என்பதும், அது தமிழிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அறிமுகமானதென்பதும் புலனாகின்றது.

இன்றைய சிறுகதையின் தோற்றம் கொகோல் (1809-1852) என்ற ரூஷிய எழுத்தாளர் உக்ரேனியரின் வாழ்க்கையைப் பரிகசித்து யதார்த்தவாதமாக எழுதிய சிறுகதைகளுடன் ஆரம்பமாவதாக இலக்கிய விமர்சகர்கள் கருதுகின்றனர். இவரைத் தொடர்ந்து லியோ டால்ஸ்டாய், ஐவன்துர்க்கனேவ், அன்ரன் செகோவ், மாக்ஸிம் கோர்க்கிய் போன்றவர்கள் எழுதி வந்தனர். இச்சிறுகதை இலக்கியம் ரூ~pய நாட்டில் தோன்றியதாயினும்.

இதனை நவீனப்படுத்தி, சிறுகதைக்கலை உருவம் பெறுவதற்குரிய சாத்தியக் கூறுகளையுணர்ந்து, அதற்கு விதிகளமைத்து வளம் படுத்தும் முயற்சியிலீடுபட்டு உழைத்தவர்கள் அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளர்களே.

அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளர்களில் முதன்மையானவர்களாக வா~pங்டன் இர்விங் (1783-1859). நதானியலட ஹோர் தோர்ண் (1804-1864), எட்கார் அலன்போ (1809-1849) ஆகிய மூவரைக் குறிப்பிடுவர். சிறுகதையானர் இலக்கியத்தில் நிலையான இடம் பெற்றது. இவர்களினால் என்பர். இவர்கள் எழுதியது புதுரகக் கதைகளாகும். சிறப்பாக 1820ல் வா~pங்டன் இர்விங் தான் வெளியிட்ட ஷஸ்கெச் புக்| என்ற நூலில் கலையம்சம் படைத்த சிறுகதைகளை எழுதியிருந்தார். 1837ல் நதானியல் ஹோர்தோர்ணும், 1830ல் எட்கார் அலன்போவும் தத்தம் தொகுப்புகளை வெளியிட்டனர்.

அமெரிக்காவில் இங்ஙனம் உற்பத்தியான சிறுகதை உலகெங்கும் பரந்தது. இங்கிலாந்தில் ஸ்டீவன்சன், கிப்ளிங், காதரைன் மான் ஸ்பீல்ட், கோப்பார்ட், பேட்ஸ் என்போரும், பிரான்சில் எமிலி ஜோலா, மாப்பசான், அனத்Nதூல் பிரான்ஸ் ஆகியோரும் இக்கலையை மேன்மேலும் ஆழமும், இலக்கியத்தரமும் மிக்கதாக வளர்த்தனர்.

சிறுகதைப் பண்பு
சிறுகதைத் தொகுப்புகளும், சிறுகதை வரலாறுபற்றி எழுந்த நூல்களும் இன்று இலட்சக்கணக்கில் வெளிவந்துள்ளன. வந்து கொண்டுமிருக்கின்றன. ஆயினும்,

சிறுகதை என்றால் என்ன? அதன் பண்பு என்ன? அதன் வரை விலக்கணங்கள் யாவை? உருவம் என்ன? – என்பது பற்றி முடிந்த முடியாத எந்தவித கருத்துக்களும் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதுடன், சரியாக வரையறுத்துக் கூறமுடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுகதையின் மூலபிதா என்று கருதப்படும் எட்கார் அலன்போ கூட, ‘அரைமணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் உள்ள காலம்வரையில் படித்து முடித்து மகிழக் கூடியதாகச் சிறுகதை இருக்கவேண்டும்’ – என்று கூறி வாசகனின் வாசிப்பு ஆற்றல், மனநிலைக் காலம், இன்பநுகர்ச்சி என்பனவற்றினடியாக விளக்குகிறாறேயன்றி, சிறுகதைப் பண்பினடியாக விளக்க – முடிய – முயலவில்லை எனலாம்.

‘வாழ்க்கையின் சாளரம் சிறுகதை’ – என்ற புதமைப்பித்தனும் – சிறுகதையின் உருவ, உள்ளடக்கப்பண்பின் ஒரு உருகப்பாணியில் கூறமுடிந்தாலும், இவ்விளக்கம் அவரவர் மனோபாவ, விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப பொருள் கொள்ள வாய்;ப்பளிக்கிறதேயன்றி, முடிவாகவோ, தெளிவாகவோ விளக்கத் தவறிவிட்டது என்பது தெளிவு.

பேராசிரியர் வெல்ஸ் – ‘பத்தாயிரம் சொற்களுக்கு மேற்போகாமல் சற்றேறக்குறைய அரைமணி நேரத்தில் வாசித்து முடிக்கக் கூடிய தொன்றாக இருக்கவேண்டும்’ – என்பது சிறுகதை வாசிப்பின் காலஅளவையும், எழுத்தாளனின் சொல்லாற்றலையும் கொண்ட கருத்தாகும்.

வாசகனின் கவனத்தை ஒரேயொரு சம்பவத்தில் ஒரு முனைப்படுத்தவேண்டும். அதன் மூலம் பாத்திரங்களின் குணாதிசயத்தை வெளிப்படுத்தவேண்டும்… … ஒரேயொரு ராகத்தை எவ்வளவு விஸ்தாரமாக ஆலாபனம் செய்தாலும், அது ஒரே ராகமாகத்தானிருக்கும் 2| – என்று தி.ஜ.ரங்கநாதன் கூறுவது உள்ளடக்கம் பற்றி விளக்கினாலும், சிறுகதையினளவு, உருவம் பற்றிய நிலையில் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என்று கூறலாம்.

ஆகவே, ‘சிறந்த சிறுகதையின் அமைப்பே சிறுகதையின் இலக்கணம் எனலாம் 3′

தமிழில் சிறுகதை
மேனா:களில் சிறுகதையின் தோற்றம் பற்றி ஆராய்ந்த ஒரு சில அறிஞர்கள் – சமூக அமைப்பின் மகத்தான மாறுதல்களே சிறுகதைக் கலைக்கு வித்திட்டன் எனக்கூறுவர். தொழிற்புரட்சியின் யந்திரமயமான வேகமான இயக்க வாழ்வினாரும், அதனாலேற்பட்ட நிலமானிய அமைப்பின் சிதைவினால் உருவான புதிய வாழ்க்கை முறையினாலும், தனிமனித முக்கியத்துவம் அதிகரித்து இதற்கு முன்பமைந்த குடும்பக் கூட்டு வாழ்க்கை சிதைந்ததினால், தனிமனிதனின் ஒவ்வொரு அம்சங்களும், உணர்ச்சி பேதங்களும் .இலக்கியத்தின் முக்கியத்துவமடைந்தன. இதே போன்ற நிலையே ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்டதனால், சிறுகதை தோன்றியது என்பர்.

இன்னும் சிலர், தொழிற்புரட்சியினால் ஏற்பட்ட பரபரப்பான வாழ்க்கை முறையில் – முன்பு போல் நீண்ட கதைகளைக் கேட்கவோ, படிக்கவோ ஏற்ற மன நிலையில் மக்களில்லாததால், சுருங்கிய நேரத்தில் சுவைப்பதற்கேற்ற கதைகளையே மக்கள் விரும்பியதால் தான் சிறுகதை உற்பவித்தது எனவும் கூறுவர்.

எவ்வாறு இருந்தபோதிலும், சிறுகதைக்கலை 19ஆம் நூற்றாண்டின் சமூக அமைப்பில் எழுந்த தவிர்க்கமுடியாததொன்று என்பதனையும் எவரும் மறுத்திலர்.


முதல் மூவர்

தமிழ் நாட்டில், ஆங்கிலேயரின் ஆட்சியின் பயனாக ஏற்பட்ட ஆங்கிலக் கல்வி மக்களின் மனோபாவங்களையும், இலக்கியத் தாகங்களையும் வேறுதிசையில் திருப்பின.

சமுதாயத்தின் மேல்தளத்தில் இருந்தோரே இம் மாற்றங்களினால் பாதிக்கப்பட்டனர். வாழ்க்கை நிலையிலும், கடல் கடந்த படிப்பாலும் இததன்மைமிக்கவராக விளங்கியவர் தான் – தமிழின் சிறுகதையின் தந்தை எனப் புகழப்படும்-

வரசுநேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர்

இவர் ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், இந்தி, வங்காளி, இலத்தீன், கிரேக்கம், செருமானியம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளை நன்கு சுற்றிருந்ததனால், அம்மொழிகளிலெழுந்த இலக்கியங்களின் பண்புகளையும், அவற்றின் போக்குகளையும், அலை சமூகத்தில் கொண்டிருந்த தொடர்பு, செல்வாக்கு, பாதிப்புக்களை நன்கு யம் திரிபற உணர்ந்திருந்தார்.

ஆயினும், ‘இவர் சிறுகதை வளர்ச்சிக்குத் தொண்டாற்றியது எதிபாராததொன்று 4| ஏனெனில் ஐயருக்குத் தமிழிலக்கியத்திற்குத் தொண்டாற்றும் எண்ணத்தைவிட தேபத்தியை, விடுதலையுணர்ச்சியை வளர்ப்பதே மேலோங்கி நின்றது. இதனாற்றான் இவர் பெரும்பாலும் இத்தகைய உணர்ச்சிகளை வளர்க்கும் வரலாற்றுச் சம்பவங்களையும், புராணக்கதைகளையும் தமது சிறுகதைகளின் கருப்பொருளாகக் கொண்டார். அத்துடன் மட்டுமல்லாது ஐயரவர்களுக்குத் தாம் படைப்பது சிறுகதையாக இருந்தாலும்சரி, நீண்ட கதைகளாக இருந்தாலும்சரி தன் எண்ணத்திற்கு ஏற்றதாகக் கருப்பொருள் இருக்கவேண்டும் என்பதே முக்கய நோக்கமாக இருந்தது. என்பதனை, அவரே தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘……. தமிழ் நாட்டுச் சரித்திரமனைத்தும் கற்பனைக் கதைகளாகச் செய்ய வேண்டு மென்றிருக்கின்றேன்…..

……..தீரயுகம் இங்கு பிறக்க, வழிகாட்டியாக நாம் அமைந்து விடுவோம. இந்த நோக்கத்துடனேயே ‘மங்கையர்க்கரசியின் காதல்| முதலிய கதைகளை வெளிப்படுத்தியதோடு லைலி மஜ்னூன், அனார்கலி முதலிய கதைகளும் எழுதிவருகிறேன். நாளாவட்டத்தில் பெரிய சரித்திரத்தை எழுதும் நிலைமைக்கு வரும் என நினைத்தே சிறுகதைகளை எழுதிவருகிறேன்.5|

இவர் திட்டமிட்டுத் தமிழில் சிறுகதையைக் கலையாக வளர்க்கமுற்படாவிட்டாலும் கூட, இவர்பெற்ற பிறமொழி இலக்கியப் பயிற்சிகளினால், இவரின் சிறுகதைகள் உயர்தரத்தினதாக, சிறந்த கலையுணர்வை எழுப்பியமையாற்றான் புதமைப்பித்தனும், ஷஐயரவர்களின் சிறுகதைகள் மிகவும் உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தவைகள். அவர் தமது சிரு~;டிகளில் மனிதனின் மேதையை, தெய்வீகத்துயரை, வீரத்தைக் காண்pப்பதில் களித்தார். அவரின் மனம் இலட்சியத்தைச் சிரு~;டிப்பதில் இலயித்தது 6| என்றார்.

இவரின் மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பில் உள்ள கதைகளுக்கு இவர் எழுதியுள்ள சூசிகை சிறுகதைமரபை மீறியதொன்றாகும். எவ்வாறு இருப்பினும் இவரின்கதைகளே தமிழில் தோன்றிய சிறுகதையின் ஆரம்பமாக இருப்பதாலும், இவரின் உரைநடையிலே வடமொழியின் காவியத்தின் காம்பீரியம் மேலெழுந்து நின்று கலையழகைக் கொடுப்பதாலும், சிறுகதையின் தந்தை இவர் எனக் குறிப்பிடுவதில் தவறில்லை என்றே படுகிறது. இதனாற்றான்.

‘இக்கதைகளுக்கு முன்பே தமிழில் கதைகள் இல்லாமலில்லை. பரமார்த்தகுரு கதை என்றநூலிலும், வீராசாமிச் செட்டியாரின் விநோதரசமஞ்சரியிலும் சுவையற்ற பலகதைகளுண்டு. சுதாசிந்தாமணி எழுதிய ஈழத்துச் சந்திரவர்ணம்பிள்ளை. அபிநவக்கதைகள் எழுதிய செல்வக்கேசவராயமுதலியார் போன்ற அறிஞர்களும் இத்துறையில் முயன்றதுண்டு. எனினும் சிறுகதை என்னும் புதிய இலக்கிய வகைக்கான உத்திகளின் ஓர்மையுடன் தமிழில் முதன் முதல் எழுந்தவை வ.வே.சு. ஐவரின் கதைகளே7| என்பர்.

இவரைத் தொடர்ந்து அ. மாதவையா, சி. சுப்பிரமணிய பாரதியார், ஸ்ரீராமாநுஜலுநாயுடு போன்றோர் சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்டனர். அ. மாதவையா 1924-25-ம் ஆண்டுகளில் தாம் பதிப்பித்த ஷபஞ்சாம்ருதம்| பத்திரிகையில் பல சிறுகதைகளை எழுதி வெளியிட்டுள்யளார். ஷஎன்னைமன்னித்து, மறந்துவிடு| ஏட்டுச் சுரைக்காய், முரகன், நிலவரி ஓலம், ஆரூடம் முதலிய கதைகள் குறிப்பிடத்தக்கவைகளே. இக் கதைகள் ஷகுசிகர் குட்டிக்கதைகள்| என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவரின் கதைகளில் சமூகச் சீர்கேடுகள் உணர்ச்சியுடன் சித்தரிக்கப்பட்டுள்ளதுடன், சிறுகதை உருவமும் நன்கு அமைந்துள்ளது. இதனாற்றான் புதமைப்பித்தனும், ஷதமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் இவர் கதைகளுக்கு முக்கிய இடமுண்டு| எனக் கூறியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரான்சியமொழி இலக்கியங்களைத் திறம்படக்கற்றிருந்த சுப்பிரமணிய பாரதியார், கவிதையில் சிறந்ததுபோல், சிறுகதையில் சிறக்க முடியவில்லையாயினும், 1900-1920-ம் ஆண்டுகளின் சிறுகதை முக்கியத்துவரின் இவரும் ஒருவரே பாரதியார் கதைகள் (இருபாகங்கள்), பாரதியார் மொழிபெர்த்த தாகூரின் சிறுகதைகள் என்பனவே இவரின் சிறுகதைப்பணிகளாகும். தாகூரின் சிறுகதை மொழிபெயர்ப்புகள் அக்கால மக்களின் சிறு கதைப்பயிற்சிக்கும், ஈடுபாட்டிற்கும் பெருந்துணையாயின. உரை நடையில் புதியசோபையையும், கவர்ச்சியையும் கொண்டு, பாரதியார் சிறுகதைகளைச் சமூகக் கண்ணோட்டத்தில் சொந்தமாகப் படைத்தபோதிலும், சிறுகதை உருவ அமைதி சீர்குலைந்தே காணப்படுகின்றது. இதற்கு பாரதியார் இவற்றைக் கதைகளாகக் கருதினதேயன்றி – சந்திரிகையின் கதை – நவீனகலையான சிறுகதைகளாகக் கருதாமையே காரணம் என்றுபடுகிறது.

காந்தீயக் கதைகள்
|1920-ம் ஆண்டுகளில் இந்தியக்காங்கிரசின் இயக்க சக்தியாக காந்திமாறியதும். உப்புச்சத்தியாக்கிரகம் (1930) சட்டமறுப்பு இயக்கம் (1932), ஒத்துழையாமை இயக்கம் – போன்ற அரசியலியக்க உணர்ச்சித்தாக்கங்கள் மக்கள் மனதைப்பெரிதும் பாதித்தன. எனவே, நாட்டுமக்களைப் பல நிலைகளிலும் ஒற்றுமையாக்க இந்திய ஒற்றுமை, தொழிற்சங்க ஒற்றுமை, சாதிஒழிப்பு என்பன முன்னணிக்கு வரவே, எழுத்தாளர்களின் கவனமும் இவற்றின் பால் திரும்பின8| ராஜாஜி, தி.ஜ. ரங்கநாதன், ந. பிச்சமூர்த்தி, கல்கி போன்றோர் இவற்றை அடிப்படையாகக்கொண்டு சிறுகதைகள் எழுதலாயினர். 1935-ல் ராஜாஜி நடாத்திய ஷவிமோசனம்| பத்திரிகையில் ராஜாஜியும் கல்கியும் இத்தகைய கதைகளையே நிறைய எழுதினர். ஷராஜாஜி கதைகள்| தொகுப்பிலிடம் பெற்றுள்ளகதைகள் ஷவிமோசனத்தில்| வெளிவற்தவையே. இவர்கள் பிற்காலத்தில் சிறந்த சிறுகதைகளை எழுதியுள்ளனர்- (தி.ஜ.ர-வின் சந்தனக்காவடி, நொண்டிக்கிளி- தொகுப்புகள், ந. பிச்சமூர்த்தியின் மோகினி, பதினெட்டாம் பெருக்கு, முள்ளும் ரோஜாவும், காவல், கல்கியின் கேதாரியின் தாயார், ராஜாஜியின் தேவானை – சிறந்த சிறுகதைகளே) ராஜாஜி நீதிக்கதைகளையும், போதனைவிளக்கச்சிறுகதைகளையும் எழுதித் தம்மை சிறு கதைத்துறையினின்றும் மாற்றிக்கொண்டது போலவே, கல்கியும் நீண்டகதைகளை எழுதி, தம்மை ஒரு நாவலாசிரியராகப் பரிணமித்துக் கொண்டார். எவ்வாறாயினும், தமிழ்மக்களை தமிழ்க் கதைகள் படிக்க வைத்த மாபெரும் தொண்டைச் செய்தவர் கல்கி எனில் மிகையாகாது. இதனாற்றான், ‘சிறுகதையின் அகலவளர்ச்சிக்குக்| காரணமானவர் கல்வி: ஆழவளர்ச்சிக்குக் காரணமானவர்கள் மணிக்கொடிக்குழுவினர் என்கின்றனர்.

‘சிறுகதை – மணிக் கொடி|
1933-ம் ஆண்டுப் பிற்பகுதியில், கே. சீனிவாசனும், வ. ராமசாமி ஐயங்காரும் தோற்றுவித்த ஷமணிக்கொடிப் பத்திரிகை| காலத்திற்குக் காலம் மறைந்தும், புத்துருக்காட்டியும், புதிய புதிய ஆசிரியர்களைக் கொண்டும் வெளிவந்து, இந்தியத் தமிழிலக்கிய வரலாற்றில் தனக்கொரு தனியிடத்தைப் பிடித்துக்கொண்டது. 1994-ல் டி.எஸ்.சொக்கலிங்கத்தை ஆசிரியராகக் கொண்ட காந்தி என்ற பத்திரிகையையும், தன்னுடன் இணைத்து மணிக்கொடி வெளிவரலாயிற்று. பின்னர் இந்த மணிக்கொடியும் 1936-ல் மறைந்து 937-ல் பி.எஸ். ராமையாவையும் வ ராவையும் ஆசிரியராகக் கொண்டு சிறுகதை மணிக்கொடியாக 1939வரை வெளிவந்தது.

மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று இன்று சில எழுத்தாளர்களைக் குறிப்பிடுவது வழக்கம். இதனால் இவர்கள் தங்கள் சிறந்த படைப்புக்களை முதன் முதலாக மணிக்கொடியில்தான் வெளியிட்டார்கள். என்றோ, அதிற்றான் எழுத ஆரம்பித்தார்கள் என்றே பொருளில்லை. இவர்களில் பலர் மணிக்கொடி வரமுன்னரே, காந்தி, கலை மகள், ஊழியன் சுதந்திரச்சங்கு, ஆனந்தவிகடன் பத்திரிகைகளில் எழுதித் தமக்கொரு இடத்தை சிறுகதை இலக்கியத்தில் பிடித்துக் கொண்டவர்கள். இவர்களின் தனித்துவம் சுடர்விட்டுப் பிரகாசிக்கவும் இலக்கிய-உரு, உள்ளடக்கப் பரிசீலனை செய்யவும், மணிக்கொடி பெரிதும் பயன்பட்டதாலும். இவ் எழுத்தாளர்கள் ஒன்று கூடித்தமக்குள்ளே விவாதித்தும், குழு முறையில் செயல்பட்டும் வந்தமையினால், பிற்காலத்தில் இவர்களை மணிக்கொடி எழுத்தாளர் என வழங்கினர்.

நவீன இலக்கியச் சிறுகதையின் பரிசோதனைக்களமாக மணிக்கொடி விளங்கியது. புமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜ கோபாலன், பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி), பி.எஸ். ராமையப, மௌனி (எஸ். மணி). கி.ரா.ந. சிதம்பர சுப்பிரமணியம், ஆர். ~ண்முக சுந்தரம், எம்.வி.வெங்கட்ராம், சி.அ. செல்லப்பா,பி.எம். கணணன், லா.ச. ராமாமிர்தம், க.நா. சுப்பிரமணியம் என்போரை மணிக்கொடி எழுத்தாளர் எனலாம்.

இவர் எல்லாரும் ஒரே காலத்திலோ, ஒரே தரத்திலோ, ஒரே எண்ணத்திலோ எழுதியவர்களல்லர். ஒவ்வொருவரும் தத்தம் வழியே இலக்கியத்திற்கென பார்வையையும், தனித்துவத்தையும் கொண்டவர்கள். தனித்துவம் மிக்கவர்களின் சேர்க்கையாக மணிக்கொடி பத்திரிகை விளங்கியது. இவர்கள் எல்லாரும் சிறுகதைத்துறையி; ஆழ்ந்து ஈடுபட ஷஅப்போதைய பத்திரிகைகளில் பொறுப்பு ஏற்றிருந்தவர்கள் பத்திரிகைக்கு வேண்டிய அம்சங்களில் ஒன்றாக சிறுகதையைக் கருத முன்வந்ததும். மேனாடுகளில் சுமார் முக்கால் நூற்றாண்டு காலமாக வளம்பெற்றுவந்திருந்த சிறுகதை இலக்கியத்துடன் இவர்களுக்கு இருந்த பரிச்சயமும் இதற்குக் காரணம். இதோடு நம் நாட்டில் தாகூர், பிரேம் சந்த், சிறுகதைகள் தமிழுக்கு அறிமுகம் ஆனதும் சேரும். இவையோடு ஐயரின் சிறுகதை முயற்சிகள்தந்த உந்துதலும் காரணம். 9|

தமிழ்ச் சிறுகதைத்துறையில் உருவத்திலும், உள்ளடக்கத்திலும் பலவிதமான சோதனைகளை இவ் எழுத்தாளர்கள் நடாத்தி வந்தனர். இவர்களில் சமூகப் பார்வையில் புதமைப்பித்தனும் பால் உணர்ச்சி அடிப்படையில் கு.ப. ராஜகோபாலனும், மனக்குகை ஓவிய வார்ப்பில் மௌனியும் குறிப்பிடத்தக்கவர்கள்.

‘பாரதி வனத்தின் மூத்த பிள்ளையான| புதமைப்பித்தன் வலுவும் வேகமும் கொண்ட, இழுத்து மடக்கும் நடையில், புதப் புதச் சொல்லாட்சிகளைக் கொண்டு சமுதாயத்தின் பச்சை உண்மைகளை, ஆழமும், பரப்பும் கொண்ட சிறுகதைகளைப் படைத்தார்.

தமிழ்ச் சிறுகதைத்துறைகளில் அதிகம் வெற்றியீட்டினவரெனக் கருதப்படும் கு.ப.ரா. மென்மையான, நளினமா உத்திகள் மூலம் ஆண், பெண் இருபாலருடைய பருவ மன அதிர்வுகளை சிறுகதைகள் மூலம் வெளியிட்டார்.

‘சிறுகதையின் திருமூலர்| – என புதமைப் பித்தனாலேயே பாராட்டப்பட்ட மௌனி ‘கனமான விடயங்களை ஏற்க மறுக்கின்றன மெலிந்த சொற்களில் ‘மனப்போக்குகளின் நடப்பியல்புகளை பரிபூரணமாக சித்தரித்துள்ளார். நிகழ்ச்சிகளைச் சிக்களப் படுத்தி மனித நிலைமைகளை சிக்கனச் சொற்களிலே அகண்டாரமாகக் காட்டிவிடும் ஆற்றல் மிக்கவர். தமிழில் ஆழமான கதையம்சத்தின் துணையின்றி சாதாரண கதைகளில் ஒரு காவிய உணர்வைத்தருகிறார். சொற்களுக்கு முக்கியம் கொடுப்பவர். இவர் 10| இவரின் கதைகளைத் தமிழிலேயே படித்து, ஆங்கிலத்தி;ல் இவரின் அத்துவானவெளி என்ற கதையை பிரதக்~pணம்ஷ என்ற தலைப்பில் மொழிபெயர்ந்து வெளியிட்ட அமெரிக்க அறிஞர் அல்பர்ட் பி. பிராங்கிளின் ‘மௌனிஒரு மேதை11| என நிர்ணயிக்கிறார். அத்துடன் கேரளப் பல்கலைக்கழகத்தில் இலக்கியக் கலாநிதிப் பட்டத்திற்காக, மே. காந்தி என்ற மாணவர் மௌனிகதைகளை (மௌனி மொத்தம் இன்றுவரை இருபத்தி நான்கு கதைகளே எழுதியுள்ளார்) ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதும் மௌனியின் சிறப்பைப் புலப்படுத்தும்.12

ந. பிச்சமூர்த்தி ஆழ்ந்த அனுபவங்களை, தரிசனம் நிறைந்த தத்துவச் சரடுகளில், உவகை மிகுந்த சொற்றொடர்கள் நிறைந்த நடைகளில் சிறுகதைகளை வெளியிட்டார்.

பி.எஸ். ராமையா காந்திய அடிப்படையில், சமுதாயச் சீர்கேடுகளைச் சித்தரிக்கும் கதைகளையே பெரும்பாரும் இக்காலத்தில், எழுதினார். இவர்களுடன் ஈழத்தில் சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகியோரும் எழுதிவந்தனர். கலைமகள், ஈழக்கேசரி என்பன இவர்களுக்கு உதவின.

இவர்களுக்கும். இவர்களைச் சார்ந்த மணிக்கொடி எழுத்தாளர்களுக்கும் தாகூர், பிரேம் சந்த், அன்ரன் செகாவ், டால்ஸ்டாய், ஜேம்ஸ் ஜொய்ஸ், எமிலிஜோலா, மாப்பசான், டி.ஹெச்.லோறன்ஸ், எட்கார் அலன்போ, ஏர்னஸ்ட் ஹெமிங்வே, நட்காம்சன், செல்மா லாகர்லா – போன்ற மேனாட்டு இலக்கியவாணர்கள் முன்மாதிரியக விளங்கினராகத் தெரிகிறது.

எவ்வாறு இருந்தபோதிலும், மணிக்கொடி கால எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தத்தம் தனித்துவத்தையும், பூரணத்துவத்தையும் தாபிக்கமுயன்று ஓரளவு வெற்றியும் பெற்றனர் – எனலாம்.

பல்முனைத் தாக்கங்கள்
இதே வேளைகளில், இத்தமிழ் எழுத்தாளர்களுக்குத் தூண்டுகோலாக பாரதத்தின் பல பாகங்களிலும், பல்லேறு மொழிகளிலும் ஏற்பட்ட இலக்கிய மாற்றங்கள், எழுச்சிகள், மறுமலர்ச்சிகள், புத்வேகம் என்பன பெருந்துணையாக நின்றன.

1936-ம் ஆண்டளவில் பிரேம்சந்த் தலைமையில் ஷஅகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்| தோன்றியது. இச்சங்கத்தின் முல்க்ராஜ் ஆனந்த, லிஜ்ஜத்ஸாஹீர், ய~;பால், கே.ஏ. அப்பாஸ் ஆகிய எழுத்தாளர்களின் புதமை இலக்கியங்கள் நாட்டின் சமூக, பொருளாதார, அரசியலடிப்படையில் எழுந்து தமிழ் எழுத்தாளர்களிடையே பெரும் விழிப்புணர்ச்சியையும், துடிப்பையும் எழுப்பின.

இக்கால கட்டத் தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலோர். கல்லூரிகளில் படித்தவர்கள்; தேசிய உணர்ச்சி மிஞ்சியவர்கள்; பழமையின் எதிரிகள்; வாழ்வின் உண்மைகளை நேருக்கு நேர் நின்று தரிசித்து, அவற்றை விமர்சன அடி;படையில் சர்வதெச இலக்கியத்தின் தரத்திற்குக் கலையழகுடன் தமிழில் சிறுகதை எழுதவேண்டுமெனத் துடித்தவர்கள் என்பதனை அவர்களின் படைப்புக்கள் இன்றும் எடுத்துக்காட்டுகின்றன.

1934-35-ல் மஞ்சேரி ஈசுவரன் ளுர்ழுசுவு ளுவுழுசுலு என்ற மாத சஞ்சினையை நடாத்தினார். இதில் லா.ச.ரா. போனறோர் ஈசுவரனுடன் சேர்ந்து எழுதிவந்தனர். சிறுகதை வரலாற்றில் இதற்குத் தனியிடமுண்டு.

மணிக்கொடி மறைவில்

மணிக்கொடி மறைவின்பின் தோன்றிய கிராம ஊழியன், கலாமோகினி, பாரத்தேவி, சூறாவளி போன்ற பத்திரிகைகள், மணிக்கொடிப் பாதையில் முன்னேறின. இப்பத்திரிகைகளில் மணிக்கொடி எழுத்தாளர் பலரும், வல்லிக் கண்ணன், தி, ஜானகிராமன் போன்றாரும் எழுதிவந்தனர். இவர்களுடன் ஈழத்து எழுத்தாள முதல்வர்களும் எழுதிவந்தனர். இக்காலத்திற்கு முன்னரே தோன்றி இயங்கிவந்த ஈழகேசரியை விட, மறுமலர்ச்சி என்ற பத்திரிகை 1945-ல் தோன்றி ஈழத்து எழுத்தாளர்களுக்கு பெரும் ஊக்கம் அளித்து வந்தது. இவ்வேட்டினால் வரதர், அ.செ. முரகானந்தம், அ. ந. கந்தசாமி, சு. இராஜநாயகன், சொக்கன், வ.அ.இராசரத்தினம், சு.வே.கனக, செந்திநாதன் போன்றோர் முன்னணிக்கு வந்தனர்.

சுதந்திர இலக்கியங்கள்
1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி பாரத நாடு சுதந்திரம் பெற்றபின், இலக்கியப் போக்குக்கள் மாற்றமடையத் தொடங்கின. ஆட்சிப் பொறுப்பு அன்னியரின் கையிலிருந்து, சுதெசிகளின் கையில்வந்ததும், நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக உணர்வுகள் மாற்றம் பெறலாயின. ஒற்றுமையுணர்ச்சி கன்றி, பிரதேச உணர்ச்சி வலுவடையவே, தமிழ்நாட்டில் தமிழுணர்ச்சி ஓங்கி தனித்தமிழ் இயக்கம், திராவிட நாடுதோரும் திராவிட முன்னேற்றக் கழகம் என்பன தோன்றி – சிறுகதைபிரச்சார இலக்கியமாகியது.

இத்தகைய கதைகளை தி.மு. கழகத்தினரே எழுதினர். பெரும் போராட்டத்தின்பின், மக்களிடையே ஏற்பட்ட ஓய்வுக்குகந்த கதைகளை ஆனந்தவிகடன், கல்கி போனற பத்திரிகைகள் வெளியிடலாயின. இதேவேளையில் சமூகச்சீர்திருத்த எண்ணங்கொண்ட பொதுவுடமைக்கட்சியிலிருந்த பழைய எழுத்தாளர்களும், இவ்வணியில் புதிதாகச் சேர்ந்து கொண்ட எழுத்தாளர்களும் முற்போக்குக் கதைகளை எழுதலாயினர். 1948-ல் எம்.வி. வெங்கட் ராமனை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்த ஷதேன்| தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு ஆகியோரைச் சிறப்பாக அறிமுகம் செய்தது.

1950-ன் பின் ஏற்பட்ட, மனிதன், சாந்தி, சரஸ்வதி, தாமரை போன்ற பொதுவுடமைச் சார்புள்ள பத்திரிகை மூலம், – விந்தன், கு. அழசிரிசாமி, சுந்தர. ராமசாமி, ஜெயகாந்தன் போன்ற நல்ல பல சிறுகதை எழுத்தாளர்கள் தோன்றினர். இதே போன்றே இலங்கையிலும், முற்போக்கு எண்ணம் கொண்ட பாட்டாளி, பாரதி முதலிய தீவிர ஏடுகள் தோன்றி கே. ராமநாதன், கே. கணே~;, எம்.பி. பாரதி போன்ற எழுத்தாளர்களை நல்கின.

1948 – 2 – 4ல் இலங்கை சுதந்திரமடைந்த பின் ஏற்பட்ட இலவசக் கல்வித்திட்டத்தினாலும், 1956-ல் ஏற்பட்ட சமூகப் புரட்சியினாலும், இலங்கைத் தமிழரிடையே தேசிய உணர்ச்சி பிறந்ததுடன், வர்க்க உணர்வுகள் தீர்க்கமடைந்தன. தேசிய விழிப்பும், வர்க்கப் போராட்டங்களும் சுதந்திரத்தின் பின் மக்களிடையே பெரியதொரு சிந்தனை மறுமலர்ச்சியை ஏற்படுத்தவே, இலக்கியமும் அவ்வழியே திசைதிரும்பிற்று. நாட்டின் பிரச்சினைகளை இலக்கியங்கள் முன்னிறுத்த வேண்டும் என்ற துடிப்பில் தேசிய இலக்கியக் கொள்கை தீவிரமடைந்தது. இப்பின்னணியை நன்குணர்ந்தவரான, க. கைலாசபதி 1957-ல் தினகரன் ஆசிரியராக விளங்கியபோது இவ் எழுச்சியைத் தூண்டிவளர்த்தார். புதியதொரு எழுத்தாளபரம்பரையையும் தோற்றுவித்தார். இக்காலகட்டத்தில் எஸ். பொன்னுத்துரை, கே. டானியல், செ. கணேசலிங்கன், என்,கே. ரகுநாதன், காவலூர் ராசதுரை, டொமினிக் ஜீவா போன்றவர்கள் தரமான சிறுகதைகளைப் படைத்தனர். இதே போன்று, இக்காலகட்டத்தில் தென்னி;ந்தியாவில் எழுதத் தொடங்கிய ஆர். சூடாமணி கி. ராஜநாராயணன், கிரு~;ணன் நம்பி போன்றோரும் தரமான சிறுகதைகளைப் படைக்கத் தொடங்கி, இன்றும் நல்ல சிறுகதைகளை எழுதி வருகின்றனர்.

பல்கலைக் கழக எழுத்தாளர்

ஷ190 தொடக்கம் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி தாய் மொழிமூலம் போதிக்கப்படலாயிற்று. சிறப்பாகக்கலைத்துறைப் பாடங்கள் தமிழிலும், சிங்களத்திலும் கற்பிக்கப்படவே, பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பிறமொழிச் சிறுகதைகளையும், அவற்றின் ஆய்வுகளையும் படித்ததோடமையாது தாமும் எழுத ஆரம்பித்தனர். மலையாளம், ரு~pய, வங்காள நவீன எழுத்துக்களுடன், தமிழகச் சிற்சில நவீனத்துவப் போக்குகளும் இவர்களுக்கு ஊக்கியாக அமைந்தன. இவர்களில் செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன், செம்பியன் செல்வன், செங்கை ஆழியான், துருவன், குந்தலை, மு. பொன்னம்பலம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் 13|

இப் பல்கலைக்கழக எழுத்தாளர்களுக்கு – இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனையின் தமிழ்ச் சங்கத்தினரால் வெளியிடப்படும் ஆண்டுச் சஞ்சிகையான இளங்கதிர், மாணவர் சங்க ஆண்டுச் சஞ்சிகையாக மும்மொழிகளில் வெளியாகும். ளுவுருனுநுNவுளு ஊழுருNஊஐடு ஆயுபுயுணுஐNநு – என்பன பெருமளவிற்குதவின.

பல்கலை வெளியீடு
இவை மட்டுமன்றி, இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றிலேயே முதன் முதலாக பல்கலைக்கழக எழுத்தாளர்களிள் சிறுகதைகளை வெளியிடும் தனியார்தாபனம் ஒன்றை ஷபல்கலைவெளியீடு| என்ற பெயரில், அப்போது பட்டதாரி மாணவர்களாக பயின்றுகொண்டிருந்த செங்கைஆழியான், க.நவசோதி, செம்பியன்செல்வன் ஆகியோர் அமைத்து, தங்கள் பயிற்சிக் காலங்களில் ஆண்டொன்றிற்கு ஒரு சிறுகதைக் கோவையாக மூன்று தொகுதிகளை வெளியிட்டமை ஈழத்து இலக்கிய வரலாற்று முக்கியத்தும் பெற்ற சம்பவங்களே. ஷசெங்கை ஆழியான் – நவசோதி, தொகுத்த ஷகதைப்பூங்கா| ஷசெம்பியன்செல்வன்| தொகுத்த ஷவிண்ணும் மண்ணும்| கலா பரமேஸ்வரன் தொகுத்த ஷகாலத்தின் குரல்கள்| இமையவன் தொகுத்த ஷயுகம்| என்பன பல்கலை வெளியீடுகளே. ஈழத்துப் பெரிய பதிப்பகங்களோ – தாபனங்களோ – துணிந்து முதலிட்டுச் செய்ய முடியாத ஒரு தொண்டை பல்கலைக்கழக மாணவர் ஒரு சிலர் மட்டுமே – (பல்கலை வெளியீடு தாபகர்களும், பின் இரு நூல்களின் அதன் தொகுப்பாசிரியர்கள் இருவரும்) மூலதனமிட்டுச் செய்தார்கள் என்றால் அதற்கு அவர்களின் இலக்கிய ஆhவமும், நிகழ்கால வாழ்வின் சத்திய தரிசனமுமே காரணங்கள் எனலாம். இவ்வாறு இவர்கள் எழுந்தமையால் தான், இப் பல்கலை, வெளியீட்டில் எழுதியவர்களில் பலர் இன்று ஈழத்தின் புதிய யுகத்தின் பூபாளராக எழுத்தாளர்களாக விளங்க முடிகின்றது என்பதும் விமர்சன உண்மையாகும்.

மூன்று நிகழ்ச்சிகள்

1960ஆம் ஆண்டைத் தொடர்ந்து, தென்னகத்திலிருந்து ஈழம் வந்த முக்கிய எழுத்தாளர்கள தெரிவித்த கருத்துக்கள், ஈழத்து எழுத்தாளரின் தன்மான உணர்ச்சியையும், இலக்கிய ஆற்றலையும் கிளர்ந்தெரியச் செய்தன. 1960-ல் இலங்கைவந்த – ஷகங்கை| (தற்போது சத்யகங்கை) ஆசிரியர் பகீரதன். ஷஈழம் – இலக்கிய வளர்ச்சியில் தமிழகத்தினைவிட இருபத்தைந்து வருடங்கள் பின் தங்கியுள்ளது| – என்ற அறியாமை நிரம்பிய கருத்தை வெளியிட்டதும், அதன்பின் 1961-ல் ஈழம் வந்த இன்றைய தீபம் ஆசிரியர் நா. பார்த்தசாரதி ஷதரத்தின் அடிப்படையில் தமிழகப் பத்திரிகைகளில் ஈழத்து எழுத்தாளர் இடம் கேட்பது நல்லது| – என்று தெரிவித்த ஆணவமான ஆலொசனையும், 1966 அளவில் வந்துபோன கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் ஷஈழத்து எழுத்துகளுக்கு அடிக்குறிப்புத் தேவை| – என்ற பாமரத்தனமாக கருத்தும் ஈழத்திலே பெரிய இலக்கியச் சூறாவளியைக் கிளப்பிவிட்டது.

புத்துணர்ச்சியையும், எழுச்சியையும் இதனால் பெற்ற ஈழத்து எழுத்தாளர் – உண்மை இலக்கியம் எது? எங்கேயிருக்கிறது அது? – என்பதனை தென்னகத்தாருக்குப் புலப்படுத்தும் வண்ணம் எழுதத் தொடங்கியதும் இக்காலகட்டத்தில் தான். இந்தப் பரபரப்பான சூழலில் – தனது இலக்கியப் பத்திரிகையான ஷசரஸ்வதி|க்கு சந்தா திரட்டவும், ஆதரவு தேடவும் ஈழத்திற்கு வந்திருந்த வ. விஜய பாஸ்கரன் ஈழத்தின் இலக்கியப் போக்கை நன்குணர்ந்து, ஷஈழத்து இலக்கியமே சரியான தடம்பிடித்துச் செல்கிறது| என்று கூறியதோடமையாது, தனது சரஸ்வதியி; ஈழத்துப் படைப்புகளுக்கு முக்கிய இடம் கொடுத்தும், ஈழத்து எழுத்தாளர்களின் புகைப்படங்களை அட்டைப்படத்திலிட்டும் கௌரவித்தார்.

ஈழ – மலையகம்

தன்க்கொருவாழ்க்கைமுறை, மொழிவழக்கு, பொருளாதார அமைப்பு எனக்கொண்டு, ஒரு நூற்றாண்டுக்குமேலாக மனிதத்துவமில்லா நிலையில் வஞ்சிக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வாழ்ந்த மலையகத்திலும், பற்பல எழுத்தாளர்கள், ஒடுக்கப்பட்டும் வாழ்ந்த மலையகத்திலும், பற்பல எழுத்தாளர்கள் அவ்வப்போது இனம்; காட்டி வந்தாலும், ஷசிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை ஆகிய இலக்கியத் துறைகளில் மலையக எழுத்தாளர்கள் 1950-ம் ஆண்டிற்குப் பின்னர் காலடி எடுத்துவைத்தனர். என்றாலும் மலையகம் என்ற பிராந்திய பிரக்ஞையோடும், ஒருவகை உத்வேகத்துடனும் எழுதத் தொடங்கியது 1960-ம் ஆண்டுக்குப் பின்னரேயாகும்.|

என்.எஸ்.எம்.ராமையா, தெளிவத்தையோசப், சாரல் நாடன், திருச்செந்தூரன், நூரளை சண்முகநாதன், மாத்தளை சோமு, மல்லிகை சி. குமார், பூரணி என்போர் தரமான மலையகச் சிறுகதைகளைப் படைத்துள்ளனர். மலையகத்தில் அவ்வப்போது தோன்றிய சிற்றேடுகளும் இவர்களின் ஆக்க முயற்சிக்கு பெரும் துணைபுரிந்தன. மலைமுரசு, சாரல், செய்தி – பத்திரிகைகளின் தொண்டு குறிப்பிடத்தக்கது. வீரகேசரித்தாபனம் வெளியிட்ட ஷகதைக்கனிகள்| சிறுகதைத் தொகுப்பு மலைநாட்டைச் சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தியது.

முந்தாய்ப்பு
தற்காலத்தில், தமிழகத்திலும் ஈழத்திலும் புதிய எண்ணங்களும், புதிய பார்வைகளும் கொண்ட புதிய புதிய எழுத்தாளர்கள் தோன்றிவருகிறார்கள். பலபுதியவர்கள் பழையவர்களைக்காட்டிலும் ஆழமானசிந்தனைகளிலும், அவற்றின் கலாபூர்வமான வெளியீடுகளிலும் சிறந்துவிளஙகுகின்றனர். புதிய தலைமுறையினர் மாக்ஸிய லெகிகிசதத்துவார்த்த அடிப்படைகளில் தங்கள் படைப்புக்களை வெளிக்கொணரமுனைகின்றனர்.

தமிழகத்தில் – நீலபத்மனாதன், அசோகமித்திரன், ஆ. மாதவன், பூமணி, சர்ணன், கே. ராமசாமி, ஆதவன், ந. முத்துச்சாமி, சா. கந்தசாமி, அம்பை, ஆர். ராசேந்திரச்சோழன், ராமகிரு~;ணன், நா. சேதுராமன் போன்றோரும் ஈழத்தில் எஸ். பொன்னுத்துரை, டானியல், செ. யோகநாதனட, டொமினிக் ஜீவா, தெணியான், குப்பிளான், ஐ. சண்முகம், சாந்தன், நல்லை, க. பேரன், செங்கை ஆழியான், கே.வி. நடராஜன், மு. பொன்னம்பலம் செம்பியன் செல்வன் போன்றோரும் – தரமான சிறுகதைகளைப்படைப்பதில் பெரிதும் பாடுபட்டுவருகின்றனர்.

நன்றி: http://www.noolaham.net 

ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள் – செம்பியன் செல்வன் மீது ஒரு கருத்து

  1. ALM Nowzath says:

    நல்ல ஆய்வு இருந்தாலும் பொதுப்படையாக இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW