Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

பரிணாமம்

 

இப்போதெல்லாம் அவன் என்னோடு அவ்வளவாகப் பேசுவதில்லை.

நட்ட நடு ஹாலில் ஈஸிசேரில் கால் விரித்து நடுநாயகமாய் படுத்துக் கொண்டிருக்கும் என்னை ஏùடுத்தும் பார்க்காமல், சுவரோரமாய் பதுங்கி நடந்து பின்கட்டுக்குச் சென்றுவிடுகிான். கல்லுக்குண்டாய் படுத்துக் கொண்டிருக்கும் என்னைக் கொஞ்சமும் மதிக்காமல் இப்படி அட்டைப் பூச்சியாய் சுவரை ஒட்டிக்கொண்டு போகும் அவனைப் பார்க்கும் போது எனக்குள் கோபம் கொப்பளிக்கும்.

நான் ரெ rowத்திரம் பொங்கிய முகத்தோடு, அவனையே வெறித்தபடி அவன் செல்லும் திசை முழுக்க என் பார்வையைச் செலுத்துவேன். அவன் மருந்துக்குக் கூட என் பார்வை படும் திக்கில், தன் விழி திரும்பாமல் நடந்து செல்வான்.

இவன், நான் பெத்த பிள்ளையே இல்லையோ என்றுகூட சில சமயம் சங்கடத்தில் ஆழ்ந்து போவேன். அந்த அளவுக்கு நான் பெற் என் மகன் வாசு கொஞ்ச நாட்களாய் என்னை மறுதலிக்கிான்.

சிறு வயதில் என்னோடு ஆசையாய் விளையாடியவன். என் மார்பில் உருண்டபடி என் மார்பு ரோமங்களைத் தன் பிஞ்சுக் கைகளால் பற்றியிழுத்து, அது தரும் வலியில் என்னைச் சந்தோஷிக்கச் செய்தவன். அப்பா.. அப்பா.. என்று என் கால்களைக் கட்டிக்கொண்டு சமீப நாட்களாய் கூட என்னை வளைய வந்தவன்.

ஏனோ சில நாட்களாய் இப்படி இருக்கிான். எப்போதிலிருந்து இப்படி என்று எனக்குள் நானே யோசித்துப் பார்க்கிúன். அவனுக்கு வெறுப்பு தருமளவுக்கு நானும் சுத்தமாய் ஏதும் செய்துவிட்டதாய் எனக்கு நினைவில்லை. அவன் மூக்குக்குக் கீழே மெலிதாய் ரோமங்கள் துளிர் விட ஆரம்பித்த சில நாட்களாய் தான் இது என்று என் உள்மனது சொல்கிது. அது உண்மையாக இருக்க வேண்டும்.

இந்தக் காலத்தில் எதுதான் சீரழியவில்லை? அரசியல் முதல் ஆன்மிகம் வரை எல்லாமே தன் நிமிழந்து கலியுகத்தின் பூர்த்தியை அல்லவா நிரூபித்துக் கொண்டிருக்கின்ன. அதே வரிசையில் இதுவுமோ? ஆசிரியரை மதிக்காத மாணவன், அதிகாரியை மதிக்காத தொழிலாளி, பெற்úாரை மதிக்காத பிள்ளை… இப்படி எல்லா உவுகளுமே சீரழியத் தலைப்பட்டுவிட்டதன் தொடர்ச்சிதானோ இதுவும்?

நான் எனக்குள்ளேயே அதிகமாய் சிந்தித்து அதீதமாய்க் குழம்பிக் கொண்டேன்.

ஆனால் அதுவும் கூட முழு உண்மை இல்லை. அவன் என்னை மட்டுமே பார்க்க பயப்படுகிான். என்னிடமே பேசத் தயங்குகிான். என்னை மட்டுமே முற்ாய் மறுதலிக்கிான். அவன் அம்மாவிடம் அப்படி இல்லை. வீட்டுக்கு வந்தால் அவள் புடவைத் தலைப்பையே பிடித்துக்கொண்டு திரிவான். பதினெட்டு வயதுப் பையன், வெட்கம் இல்லாமல் அவன் அம்மாவின்கன்னம் கிள்ளி விளையாடுவான். அவளிடம் அதீத பாசமழை பொழிவான்.

எனக்கு ரொம்பவும் பொாமையாக இருக்கும். நான் என்ன, புலியா இல்லை கரடியா என்று கேட்டுக்கொண்டு எனக்குள்ளேயே மருகுவேன்.

அவன் சம்பந்தப்பட்ட விஷயங்களை அவன் அவளிடமே கேட்டுக் கொள்ளட்டும். எனக்கதில் அட்டியில்லை. கல்லூரிக்கு பீஸ் கட்ட வேண்டுமென்ால் கூட கையை நீட்டிக்கொண்டு என் முன்னால் தைரியமாக வந்து நிற்கமாட்டான். அட, அது போகட்டும். தலையைக் கவிழ்த்துச் சொரிந்துகொண்டாவது என் முன்னால் வந்து நிற்கக் கூடாதா? நான், என்று அவனுக்கு காசு தர மறுத்திருக்கிúன்?

அதற்கும் வக்காலத்து அவன் அம்மா “”என்னங்க.. அவனுக்கு காலேஜ் பீஸ் கட்டணுமாம்” என்று அவள், அவன் சார்பாக என் முன்னால் வந்து நிற்பாள். எனக்கு கணுக்கால் நரம்பு தொட்டு ஆத்திரம் பொங்கும். “”ஏன்.. தொரை வர மாட்டாரா?” அடித்தொண்டையிலிருந்து ஆங்காரத்தோடு கர்ஜிப்பேன்.

என் மனைவியே என்னை இடிப்பாள். “”இது, இதுக்குத்தான். இதுக்குத்தான் அவன் வரமாட்டேங்கான்” அவள் என் குரலுயர்த்திய பிளிலை கேலி செய்வாள்.

எனக்கு என்னைப் பற்றியே ஆதங்கம் பொங்கும். “ஐயோ.. மீனாட்சி, நான் என்ன புலியா சிங்கமாம்மா… என் மகன் என்னிடம் ஆசையாய், உரிமையாய் கேட்கட்டுமே’ மனசுக்குள் கேவுவேன்.

ஆனால் இதை வெளியில் விரித்துச் சொல்ல தைரியம் வராது. எனது ஆளுமை உணர்வு என்னை இறுக்கி வைக்கும்.

நான் இடுங்கிய முகத்தோடு தோல்வியை உள்ளடக்கிக்கொண்டு, கேட்கப்பட்ட பணத்திற்கும் கூடுதலாகவே எடுத்துக் கொடுப்பேன். பணம் கைமாறும் போது, மனைவியின் கையை இறுக்கிப்பிடித்துக் கொடுக்கும் என் செயல், அவளுக்குப் புரிந்ததாய் இது நாள் வரை தெரியவில்லை.

ஆனால் இதுவே வழக்கமாகிப் போனது. கண்ணுக்குத் தெரியாத ஒரு திரை எனக்கும் மகனுக்குமிடையே அடர்ந்திருந்தது வெகுவாய் வேதனைப்படுத்திற்று. அதை விட, அந்தத் திரையின் மûப்பு ஏற்படுத்தும் ஏக்கமும் தாபமும், என் மனைவி உட்பட யாருக்கும் புரியாமல் போனது, இன்னமும் கூடுதலாய் வாட்டிற்று.

நாளாக நாளாக, இந்த இடைவெளியின் நீட்சி என் குணாம்சத்தை கொஞ்சம் கொஞ்சமாய் மாற் ஆரம்பித்தது. தொட்டதற்கெல்லாம் கோபப்படும் குரூபியாய் மாறிப் போனேன். கோபங்கள், என் குடும்பத்தாரை இன்னமும் என்னிலிருந்து விலக்கியது.

இந்த இடைவெளி என்னைச் சிதிலப்படுத்த ஆரம்பித்ததை மனைவி கொஞ்சமாய் யூகித்துக்கொண்டாள் போலும்.

ஒரு நாள் என்னிடம் பேசினாள். மகனிடம் கடுமை காட்டாமல் இதமாய் பதமாய்ப் பேசி நடந்து பார்க்க அறிவுறுத்தினாள். அது மாதிரியான இதம், கொஞ்சம் கொஞ்சமாய் அவனை ஆட்கொண்டு, நாளடைவில் என்னையும் சீர்படுத்த வாய்ப்பிருப்பதாய் எடுத்துச் சொன்னாள்.

அவளின் அனுசரணையான இந்தப் பேச்சு என்னை உசுப்பி விட, நான் இதனைப் பரிட்சித்துப் பார்க்கத் தயாரானேன்.

அதற்கு ஏதுவாய் ஒரு விஷயமும் நடந்தது.

அந்தசெமஸ்டரில் அவன் கல்லூரியிலேயே முதல் மார்க் வாங்கியிருந்தான். அவனுக்கு ஏதாவது பரிசு ஒன்று வாங்கிக் கொடுத்து அவனின் விருப்பத்தை என்பால் ஈர்க்க வேண்டுமென்று என்னுள் ஆசை கிளர்ந்தது.

என்ன வாங்கித் தரலாம் என்று குழம்பிக்கொண்டு யோசித்ததில் பைக், ஜீன்ஸ், ஷø, வாட்ச் என்று ஏதேதோ பொருட்கள் எனக்குள் பவனி வந்தன. இவற்றுள் எதை வாங்கிக் கொடுத்து அவனை என்பால் ஈர்ப்பது? எது அவனுக்கு மிகவும் ப்ரீதியான பொருள்? எனக்குள் ஏதேதோ யோசிப்புகள்.

நான் பாட்டுக்கு ஏதாவது வாங்கி, அது அவன் விரும்பாத பொருளாகி விட்டால்? அது அவனை இன்னும் என்னிலிருந்து விலக்கிவிடுமல்லவா? நினைக்கும் போதே எனக்கு பயப்பிராந்தி பற்றிக்கொண்டது. அப்படி ஏதாவது வாங்கித் தந்து அதை அவன் நிராகரித்துவிட்டால், என்னையே நிராகரித்துவிட்டதாய் அல்லவா எனக்குத் தோன்றிவிடும். அந்த ஹிம்ûஸயை தாங்குவேனா? இந்த எண்ணமே அதீத அச்சம் விளைத்தது.

சரி.. இது பற்றி அவனிடமே கேட்டுவிடுவோம் என்று முடிவு செய்து கொண்டேன். அவனின் விருப்பம் எதுவென்று கேட்டு, அதை அவன் அகம் மகிழ அவனுக்குப் பரிசளித்து அவனுடனான எனது உவை இயல்பாக்க வேண்டும். நினைக்கும் போதே மனதுக்குள் மெல்லிசாய் ஒரு சந்தோஷம்.

அன்று நான் அவனை வலுவில் விளித்து என் முன் நிற்க வைத்துக் கொண்டேன்.

அவனது முதல் மார்க் விஷயம் குறித்து அவனிடம் எனது சந்தோஷத்தையும் பாராட்டுதலையும் தெரிவித்தேன். இதை அவனிடம் சொல்லும் போதே மனசுக்குள் மெலிதான ஒரு நெருடல். இந்த மார்க் விஷயம் கூட அவன் அம்மா மூலமே என் காதுக்கு வந்தது. அவன் நேரடியாய் என்னிடம் இதைச் சொல்லவில்லை. இந்த நினைவு என்னுள் தட்டுப்பட்ட போது, லேசான கோபம் மூளை முனையில் மெல்லமாய் முளைவிட்டது. அடுத்த நொடியே முளைவிட்ட கோபத்தை குதிகால் கொண்டு அழுத்தி அடக்கி, இயல்புக்கு வந்தேன்.

“”தம்பி.. உனக்கு நான் ஒரு பரிசு தர விரும்புகிúன்.”

அவன் அளவாய்ச் சிரித்தான்.

“”உனக்கு எது பிடிக்குமோ அதைக் கேள் தம்பி. வாங்கித்தர அப்பா உடனே தயாராயிருக்கிúன்.”

பையன் தலையைக் குனிந்துகொண்டு ஒன்றுமில்லையென்பதாய் இடம் வலமாய்த் தலையாட்டினான்.

“”என்ன,ஒன்றும் வேண்டாமா?”

அவன் அதற்கும் அதே மாதிரி இடம் வலமாய்த் தலையசைத்தான்.

“”ஒண்ணுமே வேண்டாமா?” என் கேள்வியில் அழுத்தம் அதிகரிக்க, அவன் மீண்டும் அதே மாதிரி தலையசைக்க, என் ரத்தக் குழாய்கள் மெலிதாய் புடைக்க ஆரம்பித்தன.

அவனின் மறுதலிப்பு, “உன் பரிசல்ல, நீயே வேண்டாம்’ என்பதாய் எனக்குச் செய்தி சொன்னது.

அந்தச் செய்தி என்னை ரெüத்ரனாக்கியது.

“”ஏண்டா.. ஏன் வேண்டாம்? நா குடுத்தா என்ன? தொரைக்குப் புளிக்குமோ! தொரை என்ன அவ்ளோ பெரிய மனுஷரு ஆயிட்டாரோ? போ.. உன் ஆத்தா சேலைத் தலைப்புக்குள்ள பூந்துக்கோ. அவதான் ஈ ஈன்னு இளிச்சு உன்னைக் கெடுத்து வெச்சுருக்கா. போடா ராஸ்கல். கொழுப்பெடுத்துப் போன உனக்கெல்லாம் ஏதும் கொடுக்கதை விட நாலு ஏழைக்குச் செஞ்சா வாயார வாழ்த்திட்டாவது போவான். என் கண் முன்னால நிக்காதடா ஃபூல்…”

இயல்பு மீறிக் கரைந்துகொண்டிருந்த போது, என் மகன், முகம் பார்க்க மறுத்து தலையைக் கவிழ்த்துக்கொண்டான். தன் வலதுகால் கட்டைவிரலை சற்று மடக்கி தரையில் கோலமிடுவதாய் உராய்த்துக்கொண்டிருந்தான். தன் தோளினை சுவற்றில் ஒட்டக் கொடுத்து வளைந்தபடி நின்றிருந்தான்.

அவனது இடுப்பு வளைசலும், கால்விரல் கோலமும், வெட்கத்தினாலான தலைகுனிவும் எனக்கு பெருத்த எரிச்சலைக் கொடுத்தது. நெஞ்சில் மண்டிய எரிச்சல், அவனது சவ மெüனத்தால், ரசாயன மாற்ம் பெற்று மூளைக்குள் எரிமலைக் குழம்பாய் உருமாற்ம் அடைந்தது. எனது வெறித்த பார்வையும் அவனின் தனித்த நிலைப்பாடும் தொடர்ந்து நிகழ, இவற்றின் கால நீட்சி, ஏற்கனவே கனன்று கிடந்த எரிமலைக் குழம்பை என் மேனி நரம்புகளுக்குள் மெல்லப் பரப்பி உஷ்ணப்படுத்தியது. கைகள் பரபரத்தன. ஸ்வாதீனம் இழந்தேன்.

நாலு கால் பாய்ச்சலில் தாவிச் சென்று அவன் தலைமயிர்க்கற்ûயை கொத்தாய்ப் பற்றி அவன் கன்னத்தில் அயை கையை ஓங்கினேன். சடுதியில் வந்த என் கையை அவன் தன் இடதுகை உயர்த்தி லாவகமாய்த் தட்டி விட்டான். தட்டிவிட்டு, தன் ஒற்û விரலை என்னை நோக்கி உயர்த்தி “”இந்த அடிக்க வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க” என்பதாய் அடிக்குரலில் சொன்னான்.

அவனது நிமிஷத்திய மாற்மும், ஒற்ûவிரல் உயர்த்தலும், அடித் தொண்டை கர்ஜிப்பும் என்னைப் பொடிப் பொடியாய் பொடித்துப் போட்டது.

நான் மொத்தமாய்க் கலைந்து போனேன்.

திரும்பி நடந்துகொண்டிருந்த அவனின் பாதம் பதிந்த சுவடுகளையே நான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு ஆயாசமான பெருமூச்சு என் அடி வயிற்று நரம்பிலிருந்து வெளிக் கிளம்பி, மெல்லமாய் மேலேறி நாசித் துவாரங்களினின்றும் பலமாய் வெளியேறிக்கொண்டிருந்தது.

- மே 2000 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)