டேய் சிவா என்ற குரல் அத்தனை வாகன இரைச்சல்களையும் கடந்து என்னைத் தாக்கியது.
திரும்பிப் பார்த்தேன்.
எதிர் திசையில் கோபால். பால்யத்தில் என் பக்கத்து வீட்டில் குடியிருந்தார்கள்.
நில்லு. நானே அங்க வர்றேன்.
சாலையைக் கடந்து அருகில் வந்து என்ன சிவா எப்படியிருக்க என்ற கோபாலின் கன்னங்கள் ஒட்டியிருந்தன. இடுங்கின கண்கள். வியர்வையில் ஊறிய முகம்.
நல்லாயிருக்கேன்.நீங்க எப்படியிருக்கீங்க என்றேன்.
ஏதோ இருக்கேன். பாச்சலுர்லதான் இருக்கேன். பழனிக்கு வந்தா உன்னை விசாரிப்பேன். வீட்ல அப்பா எல்லாம் நல்லாருக்காங்களா?
ம்.
நீ கவர்மென்ட்ல ஆபீஸரா இருக்கேன்னு மணி சொன்னான். சந்தோசம்டா ரொம்ப சந்தோசம். நாங்கள்லாம் படிக்கல. நீ நல்லா படிச்ச. ரெண்டு குழந்தைங்க. வீட்ல அடிக்கடி உடம்பு முடியாம போகுது. எனக்கும் வயசாச்சு.சிரமந்தான். ஏதோ வண்டி ஓடுது.
கோபால் பேசப் பேச, சரசரவென எனக்குள் ஊர்ந்து படமெடுத்தது ஒரு எண்ணம். பணம் கேட்கப் போகிறாரோ?
சட்டென்று அத்தனை புலன்களும் விழித்துக் கொள்ள, உடல் இறுகியது. கொடுக்காமலும் இருக்க முடியாது. சரி. அப்படியே கொடுத்தாலும், நுாறு ருபாய்க்கு மேல் தரக் கூடாது.
எல்லாம் ஒரே குடும்பமா இருந்தோம். இப்ப அது மாதிரி யாரிருக்கா. பத்து வருஷமானாலும் பக்கத்து வீட்டுக்காரன் சிரிக்க மாட்டேங்கிறான்.
சிவா, செலவுக்கு காசில்ல கொஞ்சம் பணம் கொடு என்று கோபால் கேட்பதை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
சட்டைப்பாக்கெட்டினுள் கை விட்டு பணத்தை எடுத்து என் கையில் வைத்து, வீட்டுக்கு வர முடியல. குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடு என்றதும் உறைந்து போனேன்.
இதெல்லாம் எதுக்கு? பலவீனமாய் ஒலித்தது என் குரல்.
அட வைப்பா. என்ன லட்சக் கணக்கிலயா கொடுத்திட்டேன். ஏதோ என்னால ஆனது. வரட்டுமா, வீட்ல எல்லாரையும் கேட்டதா சொல்லு என்றபடி கோபால் போனதும் கையைப் பார்த்தேன்.
நடுங்கிக் கொண்டிருந்த கையினுள் தணலென மின்னியது நுாறு ருபாய் நோட்டு.
தொடர்புடைய சிறுகதைகள்
சொன்னா கேளுங்க இப்ப அவ தூங்க மாட்டா என்று சமையலறையிலிருந்து வந்த திவ்யாவின் குரல்,தமிழ் சினிமாக்களில் சேலன்ஞ் என்று இடைவேளை விடும் சமயத்தில் திரையெல்லாம் ஆக்ரமித்து நிற்கும் கட்டைவிரல் மாதிரி என் ஈகோவின் முன்னே சவாலாய் விரிந்து நின்றது.
பாப்பா தூங்கு பாப்பா ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது.
இந்த நேரம் ஜனனியும் பாப்பாவும் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? ஜனனி டிவியில் பாடல்கள் கேட்டபடி வேலை செய்து கொண்டிருக்கலாம். பாப்பா ஸ்கூலில் இருப்பாள்.
பேங்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? சரியாகத் தெரியவில்லை.சுமாராக ஒரு ஐம்பதாயிரம் இருக்கும். ஜனனிக்கு ...
மேலும் கதையை படிக்க...
மிகப்பெரிய அற்புதமொன்று நிகழப் போவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் வழக்கம் போலத்தான் விடிந்தது இன்றைய காலைப் பொழுது.
மணி கடையில் இலக்கின்றி எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருந்த பேச்சை,அச்சா,ஆன ஆன என்று கலைத்த மலையாளச் சிறுவன்,யானையின் அசைவுகளை பரவசத்துடன் கவனித்துக் கொண்டிருந்தான்.கிட்டிப்புள்,கோலி,பம்பரம்,திருடன் போலீஸ் எல்லவாற்றையும் ...
மேலும் கதையை படிக்க...
அவள் காத்திருந்தாள்.வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த வேட்டைநாள் இன்றுதானென்பது அவளுக்குத் தெரிந்து விட்டது.
கொப்பளிக்கும் கோபம் நாடி நரம்புகளிலெல்லாம் கசியும் ரௌத்ர சூரியன் பற்ற வைத்த நெருப்பு, அந்த பொட்டல் வெளியெங்கும் பற்றியெறிந்து கொண்டிருந்தது.நா வறணடு துவணடு நகர்ந்தது முடமான காற்று. மேகங்களற்ற வானில் ...
மேலும் கதையை படிக்க...
அவன் ஓடிக்கொண்டிருக்கிறான் காட்டுக் கொடிகளும் செடிகளும் கிழித்து உடலெங்கும் ரத்தமும், வியர்வை வழிய வழிய நா வறண்டு அசுரத்தனமாக ஓடியவன் மர வேரோ எதுவோ தடுக்கி தடுமாறி விழுகிறான்.அய்யோஓஓஓஓஓ…. வனத்தின் அமைதியில் அவனது குரல் எதிரொலிக்கிறது அருகில் இருளை வார்த்தது போல் ...
மேலும் கதையை படிக்க...
ஆயுள் உள்ளவரை இன்ப துன்பம் பகிர்வேன் என்று அக்னி சாட்சியாய் கரம் பிடித்து ஆறே மாதத்தில் பலவீனமாய் இயற்கையால் சபிக்கப்பட்டவளை,. திருப்பித் தாக்க இயலாதவளை. பெற்றோர் உறவினர் நண்பர்களை விட்டு என்னையே சதம் என்று நம்பி வந்தவளை, என்னில் ஒரு துளியை ...
மேலும் கதையை படிக்க...
எம் மேல கோபமா?
அலைகளின் மேல் தாழப்பறந்து விழுந்து பரவும் அலைகளின் இரைச்சலில் விலகி பின்னும் பறந்து காகமொன்று ஏதோ ஒரு சிவப்பு நிறப் பொருளை அலகுகளில் கவ்வி வந்தது. ஈரமணலில் அமர்ந்து பரவும் அலைகளுக்கு விலகி அலகுகளால் குத்தியது. சுற்றுமுற்றும் ஒர ...
மேலும் கதையை படிக்க...
மூடியிருந்த பிரஸ் வாசலில் ராஜா சித்தப்பா உட்கார்ந்திருந்ததை வண்டிக்கு ஸ்டாண்ட் போடும்போது தான் கவனித்தேன்.
நரைத்த ரோமம் மண்டியிருந்த ஒட்டிப்போன கன்னங்களுக்கு மேலே சாராயம் வழிந்து கொண்டிருந்த பிதுங்கின பெரிய விழிகள் என்னைப் பார்த்ததும் நொடி நேரத்தில் தாழ்ந்து பதுங்கின.
ஆர் ஏ ஜே ...
மேலும் கதையை படிக்க...
ஏம்ப்பா மணி ஒன்பதரை ஆச்சு ஒன்பது மணின்னு டிக்கெட்ல போட்டு இருக்கு எப்பத்தான் எடுப்பீங்க? ஏழு மணிக்கு மேல சிட்டிக்குள்ள பஸ்சை விடமாட்டான் தெரியுமில்ல.
அஞ்சு நிமிஷம் சார் ஒருத்தர் வந்துக்கிட்டு இருக்கார்.
பழனி பேருந்து நிலையத்தில் வெளிப்புறமாக நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் ...
மேலும் கதையை படிக்க...
ஜானகியைப் பார்ப்பேனென்று நான் நினைக்கவேயில்லை.
அலங்கரிக்கப்பட்ட யானை,கோவில் மரத்திலிருந்து பிடுங்கிய தென்னை மட்டையின் கீற்றுக்களை துதிக்கையால் வளைத்து இழுத்து உடைத்து உண்பதை அவள் காலருகில் இருந்த குழந்தை மிரட்சியுடனும் ஆர்வத்துடனும் கவனித்துக் கொண்டிருந்தது. மாப்பிள்ளை அழைப்புக்கான கார்,ஜெனரேட்டர் பொருத்தப்பட காத்திருந்தது.பட்டுப் புடவைகளில்,மின்னும் நகைகளில், ...
மேலும் கதையை படிக்க...
இறந்தவனின் அலைபேசியிலிருந்து வரும் அழைப்பு