சக்தி மாற்றம்

 

விஸ்வா பௌதிகத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சக்தி மாற்றத்தைப்பற்றி ஆராச்சி செய்தவர். அறிவியலில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும் ஈடுபாடுள்ளவர். உயிர் வாழும் எந்த ஜீவனுக்கும் உடல், ஆன்மா என்பது இரு முக்கிய அம்சங்களாகும். உடல். அழிந்தாலும் ஆன்மா அழியாது. ஊடலானது இறப்பின் போது செயல் இழந்துவிடுகிறது. ஆனால் ஆன்மா என்ற சக்தியானது, சக்தி மாற்றத்தினால் மறுபிறவி மூலம் வேறு புது உடலுக்குள் புகுந்துவிடுகிறது. இந்தத் தத்துவத்தை கருவாகக் கொண்டே அவரது ஆராச்சியிருந்தது.

மறு பிறவியின் போது எந்த உடலுக்குள் இறந்தவரின் சக்தி புகுகிறது என்பதை இறைவன் தீர்மானிக்கிறான். இது ஒரு பிறவியில் செய்த கர்மாக்களைப் பொறுத்தது என்கிறது இந்து மதம். ஏன் அதை மனிதனால் தீர்மானிக்முடியாது என்ற கேள்வி விஸ்வாவின் மதைக் குடைந்து கொண்டிருந்தது.

சித்தர்களின் தெய்வீகமான சக்தியைப் பற்றி பல நூல்களை வாசித்து அறிந்தார் விஸ்வா. இவருடைய ஆராச்சியினால், மனதில் புதைத்திருக்கும் சந்தேகங்களைத் தீர்க்கக் கூடியவர் அவரது பாட்டனாரும் ஆன்மீகவாதியுமான முருகானந்தா சுவாமிகள் என்பதை விஸ்வா அறிவார். முருகானந்தா சுவாமி அவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடமுன் பல்ககைலைகழகத்தில் விஞ்ஞானத்; துறையில் படித்துப் பட்டம் பெற்றவர். சுவாமி விபுலானந்தரின் பரம இரசிகர். அதற்கு காரணம் விபுலானந்தரும் ஒரு விஞ்ஞான பட்டதாரியாகி ஆசிரியராக கடமையாற்றி, ஆன்மீகத்தில் ஈடுபட்டவர். இசைக் கருவி யாழைப் பற்றி ஆராச்சி செய்து, கட்டுரைகள் எழுதியவர்.

விஸ்வா, தனது பாட்டனார் குலசேகரப்பட்டனத்தில் நடத்தி வரும் ஆச்சிரமத்துக்குச் சென்று அவரோடு உரையாடி, தன் ஆராச்சி தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்யத் தீர்மானித்தார்.

******

குலசேகரபட்டணத்தில் இருந்து திருச்செந்தூருக்குப் போகும் பாதையில், கடற்கரை ஓரமாக, அரைமமைல் தூரத்தில், அமைதியான சூழலில், ஞான பீட ஆச்சிரமம் அமைந்துள்ளது. ஆச்சரமத்துக்கு முன்னால் ஒரு சடைத்த வேப்ப மரம். மரத்தின் கீழ் உள்ள மணலில் அமர்ந்தபடியே ஸ்வாமி முருகானந்தாவும் விஸ்வாவும் உரையாடிக்கொண்டிருந்தனர். ஸ்வாமி தன் உரையாடலின் போது 64 சித்தர்களை பற்றியும் அவர்களில் பலர் தமிழ்நாட்டில் வாழந்ததாகவும் குறிப்பிட்டார்.

“ சித்தர்களுக்கும் ரிஷிகளுக்கும் என்ன வித்தியாசம் ஸ்வாமி. இருவரும்; நடக்கப் போவதை முன்கூட்டியே சொல்லும் வல்லமை படைத்தவரகள். ஆனால் அவர்கள் வாழந்தது வௌ;வேறு காலத்தில்தானே”?, விஸ்வா கேட்டார்.

“சித்தர்களின் பேசும் மொழி தமிழ், ஆனால் ரிஷிகள் சமஸ்கிருதத்தை தம் மொழியாக பாவித்தனர். அவர்கள் மன்னர்களின் அலோசகர்களாக கடமையாற்றியவர்கள். எல்லா சித்தர்களும் ரிஷிகளாவார்கள். ஆனால் எல்லா ரிஷிகளும் சித்தர்கள் அல்ல. சித்தர்கள் அனுஷ்டித்த யோகா முறையானது ரிஷிகளினது யோகா முறையிலும் இருந்து வேறுபட்டது. ரிஷகளின் மருத்துவம் வடக்கில் உள்ள மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் சித்தர்களின் மருத்துவம் தெற்கில் உள்ள மூலிகைகளைக் கொண்டது”, ஸ்வாமி சொன்னார்.

“ ஸ்வாமி, நான் வாசித்து அறிந்தமட்டில் சித்தர்களின் சக்தியானது நேரத்தையும், வெளியையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது, திண்மத்தை மாற்றக் கூடிய சக்தி அவர்களுக்கு இருந்தது. நேரத்தையும், வெளியையும் அவர்கள் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள் என்றூல் அவர்களுக்கு 18ஆம் நூற்றாண்டில் அயின்ஸ்டீனின் நேரம், வெளி தொடர்பான சார்புக் கொள்கை பல நூற்றூண்டுகளுக்கு முன் கூட்டியே தெரியும் என நினைக்கிறேன்”, விஸ்வா சித்தர்களின் செயல்களைப் பொளதீகத்தோடு தொடர்பு படுத்திச் சொன்னார்.

“ விஸ்வா நீர் சொல்வது ஓரளவுக்கு உண்மையாகவும் இருக்கலாம். மேற்கத்தியவர்கள் இந்தியாவில் இருந்தே பண்டைய விஞ்ஞான தத்துவங்களை தங்கள் கண்டு;பிடிப்புகளுக்குப் பாவித்துள்ளார்கள்”.

“சுவாமி, சித்தர்களின் விஞ்ஞான சக்தியை பற்றி மேலும் விபரமாக எனக்குச் சொல்லமுடியுமா? எனது சக்;தி மாற்றம் பற்றிய ஆராச்சிக்கும் சித்தர்களின் சக்திக்கும் தொடர்பு இருப்பதினால் இதை பற்றி மேலும் அறிய ஆவலாக இருக்கிறேன்”, விஸ்வா சொன்னார்.

“ அவர்கள் ஒரு உடலை அணுவளவு சிறிதாகவும, மிகப் பெரிய பருமன் உள்ளதாகவும் மாற்றியவர்கள். உடலின் பருமன் நிறை குறைந்ததாகவும், ஆவியாக மாற்றக் கூடிய வல்லமை படைத்தவர்கள். அவர்கள் தம் உடலை வேறு உடலாக மாற்றக் கூடியவர்கள்”.

“சித்தர்களின் இச்செயல் பௌதீகத்தில் சக்தி மாற்ற தத்துவத்தைக் குறிக்கிறது என்பது என் கருத்து. சக்தியானது பல வடிவங்களில் அமைந்துள்ளது. உதாரணத்துக்கு வெப்பச்சகதி, ஒலிச்சக்தி, ஒளிச்சக்தி, இயந்திரவியல் சக்தி, இரசாயனச் சக்தி, அணுச் சக்தி, இயக்கச்சக்தி, நிலைச் சக்தி என்பவற்றை குறிப்பிடலாம். இதைப் பின்னனியாக வைத்தே சக்தி, திண்மம், ஒளியின் வேகம் ஆகியவையோடு இணைந்த அயின்சடியினின் பிரபல்யமான சமன்பாடு E=mc 2 கண்டுபிடிக்கப்பட்டது. இதன் படி ஒவ்வொரு பொருளோடு தொடர்புள்ள சக்தியுண்டு. சக்தியில் மாற்றம் ஏற்படும் போது திடப்பொருள் மாறுகிறது. ஓவ்வொரு பொளுக்கும் சக்தியோடு இணைந்த இயற்கையான அலை அதிர்வுண்டு. இவ்வதிர்வுகள் ஒத்துப்போனால் இரு மனங்கள் ஒத்துப்போவதைக் குறிக்கும் என்பது என் விளக்கம் ஸ்வாமி”, விஸ்வா சொன்னார்.

“ அது சரி விஸ்வா என்ன காரணத்தைக் கொண்டு சக்திமாற்றத்தை வைத்து பரிசோதனை செய்ய இருக்கிறீர். ஸ்வாமி கேட்டார்.

“ இறக்க முன்னரே தனக்கு விரும்பிய உடலுக்குள் சக்தி மாற்;றத்தினால் மறு பிறவி எடுக்கக்கூடிய பரசோதனையை செய்து கொண்டிருக்கிறேன் ஸ்வாமி;.”

“ விஸ்வா, ஒன்று மட்டும் சொல்லுகிறேன். இயற்கைக்கு எதிராக எதையும் செய்யமுயற்சிக்காதே. உமது முயற்சி வெற்றி பெறட்டும்“ என ஸ்வாமி வாழ்த்தினார்.

*******

தனது பரிசோதனை சாலையில் இறந்த பூனை ஒன்றையும் உயிருள்ள சுண்டெலியையும் வைத்து சக்திமாற்றப் பரிசோதனையை விஸ்வா செய்து கொண்டிருந்தார். இருதயத் துடிப்பின அதிர்வினால் உருவாகும் சக்தியானது இறந்தவுடன் நின்று விடும். அது நடக்க முன்பே அச்சக்தியை ஒரு கருவிக்குள் கவர்ந்து பாதுகாப்பது முக்கியச் செயலாக இருந்தது. உயிருள்ள சுண்டெலியின் இருதயத் துடிப்பினால் உருவாகும் சக்தியை கருவிக்குள் மாற்றியவுடன் பச்சை நிறச் சிக்னல் தோன்றும். எலியின் இருதையத் துடிப்பினது சக்தியானது கருவிக்குள் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும். கருவியில் உள்ள மொனிட்டரில் இருதயத்தின் அதிர்வலைகள் தெரியத் தொடங்கும். சுண்டெலியின் உடல், செயற்பாட்டை இழந்து விடுகிறது. கருவி சுண்டெலியின் இருதையமாக இயங்குகிறது. அரைமணி நேரத்துக்குள் கருவிக்குள் உள்ள எலியின் உயிர் சக்தியை இறந்த பூனையின் உடலுக்குள் மாற்றியாகவேண்;டும். இல்லையேல் சக்தி விரையமாகிவிடும். தாமதிக்காது பூனையின் இருதயத்துக்குள் கருவியில் இருந்து தொடர்பை ஏற்படுத்தி சுண்டெலியின் சக்தியை இறந்த பூனையின் உலுக்குள் செலுத்தினார். நடக்கப்போகும் விளைவை யோசித்தபடி பூனையின் உடலை அவதானித்துக் கொண்டிருந்தார். இறந்த பூனையின் உடல் மெதுவாக அசையத் தொடங்கியது. எதிரிகளான இரு ஜீவன்களின் உயிர்கள் தம் உயிர்களை பரிமாறிக் கொண்டன. சக்தி மாற்றத்துக்குத் துணைபோன கருவியில் தெரிந்த சிக்னல் படிப்படியாக குறைந்து மறைந்தது. சுண்டெலியின் சக்தி பூனைக்கு மாற்றப்பட்டுவிட்டது என்பதை அது காட்டியது. விஸ்வாவால் தன் பரிசோதனை ஓரளவுக்கு வெற்றியடைந்து விட்டது என்பதை அறிந்ததும், தான் காண்பது நிஜமா என்பதை அறிவதற்கு, தன் உடலை விஸ்வா கிள்ளிப் பார்த்தார்.

இறந்த பூனை உயிர்பெற்றுவிட்டது, ஆனால் அதன் குரலிலும, குணத்திலும் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி விஸ்வாவின் மனதில் தோன்றியது. பாத்திரத்தில் தயாராக வைத்திருந்த பாலை உயிர் பெற்ற பூனைக்கருகே நீட்டினார். என்ன அதிசயம் மியாவ் மியாவ் என்று நன்றி தெரிவித்தபடி பாலைப் பூனை குடித்தது. குடித்து முடிந்தவுடன் பக்கத்தில் உயிரில்லாமல் இருந்த சுண்டெலியைக் கண்டு, அதைத் தன் வாயால் கவ்வியது. விஸ்வாவாவினால் பூனையின் போக்கை நம்பமுடியவில்லை. பூனை பூனைதான. மறு பிறவி எடுத்தாலும் அதன் பிறவிக் குணம் மாறவில்லை என மனதுக்குள் நினைத்துக் கொண்டான். இந்தப் பாரிசோதனை மனிதனுக்கு போருந்துமா என்பது விஸ்வாவின் சிந்தனையில் தோன்றியது ஒரு கேள்விக்குறி.

“ இயற்கைக்கு எதிராக எதையும் செய்ய முயற்சிக்காதே” என்று ஸ்வாமி சொன்னது அப்போது நினைவுக்கு வந்தது.

*******

(இது என் கற்பனையில் தோன்றிய அறிவியற் கதை.) 

தொடர்புடைய சிறுகதைகள்
“ஏதோ முற்பிறவியிலை செய்த கர்மாக்களோடு உங்கடை குடும்பத்திலை வந்து பிறந்திருக்கிறாள் உண்டை மகள். எதற்காக அவளுக்குச் சரஸ்வதி என்று பெயர் வைத்தாயோ தெரியாது. இவளால் பேசமுடியாது. எழுத முடியாது, காது மட்டும் கேட்டால் போதுமா? நீயும் உன் புருஷனும் இல்லாத காலத்தில் ...
மேலும் கதையை படிக்க...
இரத்தினக் கற்கள் அதிகம் காணப் படும் நாடான இரத்தினபுரி மன்னர் இரத்தினசிங்கத்தின் ஒரே மகள் வடிவுக்கரசி. பெயருக்கு ஏற்ப அழகானவள் . அவளுக்கு நீண்ட கூந்தல். கயல்விழிகள் முத்து போன்ற பற்கள் அவளின் அழகை வர்ணித்து கவி பாட வார்த்தைகள் தேடினார் ...
மேலும் கதையை படிக்க...
முன்னுரை சம்மரிக்கும் செம்மறி ஆட்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை . சம்மரி என்ற ஆங்கில சொல்லின் அர்த்தம் அரசிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ வேலை செய்யும் நண்பர்கள் வதியும் இடம் என்பதாகும். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இராணுவ வீரர்கள் தங்கிய இடத்தை சம்மரி ...
மேலும் கதையை படிக்க...
இன்ஸ்பெக்டர் சிவலிங்கத்தை (சிவா) தன் அலுவலகத்திற்கு உடனே வரும்படி யாழ்ப்பாணம் போலீஸ் அத்தியட்சகர் (Superintendent) ஹரி வாட்சன் என்பவரால் அவசரமாக அழைக்கப்பட்டார். பறங்கி அதிகாரிகள் இலங்கை போலீசில் வேலை செய்த காலத்தில் ஹரி வாட்சனும் அவர்களில் ஒருவர் . வாட்சன் கண்டிப்பான ...
மேலும் கதையை படிக்க...
உடுவில் கிராமத்தில் ஆறடி உயரம் உள்ள ஒருவரைத் தேடினால் அது காஸ் மணியமாகத்தான் இருக்கும். உடுவில், கிறிஸ்தவர்கள் அனேகர் வாழும் கிராமம். அழகான தோற்றமுள்ளவன் மணியம். பெண்கள் விரும்பும் திடகாத்திரமான சிவந்த உடல், கழுத்தில் ஐந்து பவுனில் தங்கச்சங்கிலி, ஒரு கையில் ...
மேலும் கதையை படிக்க...
புதுமைப் பெண்
இளவரசி வடிவுக்கரசி
சண்முகம் சம்மரி
கனவு துலங்கிய கொலை
காஸ் (Gas) மணியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)