சுபா நிமிடக் கதைகள்!

 

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

ரொம்ப வருடங்கள் கழித்து நாக்பூர் சித்தப்பா வரப்போவதாக போன் செய்தார். அம்மாவிடம் சொன்னதும்,,,

“அவரோட கொள்ளிக் கண் பட்டா துளசிச் செடியே பட்டுப்போயிடுமேடா! இதப் பாரு… குரோம்பேட்டையில வீடு கட்டியிருக்கேன்… பிரமோஷனுக்கப்புறம் 40,000 சம்பளம்னு எல்லாத்தையும் அவர்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காதே!” என்று எச்சரித்தாள்.

ரயில்வே ஸ்டேஷனில்…

ரயிலிலிருந்து எல்லாரும் இறங்கி விட்டிருந்தார்கள். சித்தப்பா மட்டும் இறங்காமல் உட்கார்ந்திருந்தார்.

என் குரல் கேட்டதும், என் கைகளை ஆசையுடன் பற்றினார். உடலெங்கும் தடவினார். “நல்லா இருக்கியா நாகு? உன் முகம்கூடத் தெரியலைடா..! கண்ல ஏதோ கோளாறு. பார்வை மங்கிட்டே வந்து இப்ப சுத்தமா ஒண்ணும் தெரி யலை. அம்மா எப்படியிருக்கா?”

இந்தக் கண்களா கொள்ளிக் கண்கள்?

கல்லுளி மங்கன்

“அம்மா செத்துக் கிடக்கா… கண்ல ஒரு பொட்டுத் தண்ணி வருதா பாரு… சரியான கல்லுளி மங்கன்!”

“வீடு பூரா அழுகைச் சத்தம்… ஆனா, இவன் மட்டும் ஐஸ் வந்தாச்சா, ஐயர் வந்தாச்சா, சுடுகாட்டுக்குச் சொல்லியாச் சான்னு மெஷின் மாதிரி நடந்துக்கறானே, என்ன ஜென்மமோ?”

உறவினர்கள் சேதுவின் காதுபடப் பேசினர்.

எல்லாம் முடிந்து, எல்லோரும் கலைந்து போன பின், அம்மாவின் படத்தின் முன் சேது மண்டியிட்டு, குமுறிக் குமுறி அழுதான்… “ஒத்தையாப் பொறந்தவனுக்கு உதவி செய்ய யாருமில்லம்மா..! உனக்குச் செய்ய வேண்டியதைக் குறையில்லாம செஞ்சு முடிக்கிற வரைக்கும் எனக்கு அழக்கூட நேரமில்லம்மா..!”

துரத்தாதே!

மஞ்சுளாவுக்கு அச்சத்தில் மிக வியர்த்திருந்தது. புத்தகங்களை நெஞ்சோடு அணைத்தபடி திரும்பிப் பார்த்தாள். அந்த இளைஞன் அதே இடைவெளி விட்டுத் தொடர்ந்துகொண்டு இருந்தான்.

நடையைத் துரிதப்படுத்தினாள்.அவன் நடையிலும் வேகம் கூடியது.

நிற்கச் சொல்லி சைகை வேறு செய்கிறான், ராஸ்கல்..! பயந்து நடுங்கி னால், வீடு வரை வந்துவிடுவான்.

நின்றாள். திரும்பினாள். “ஏய்.. யார்றா நீ? பஸ்ல பக்கத்துல நின்னு வந்தாப் போதுமே… பின்னாலேயே துரத்திட்டு வருவீங்களே! ரெண்டே நாள்ல லவ் லெட்டர் கொடுப்பீங்க… அப்படித்தானே! செருப்பு பிஞ்சிடும்!”

அவன் நடுங்கியபடி சொன்னான்… “ஸாரி சிஸ்டர்..! பஸ்ல நீங்க நிக்கும் போது புக்ஸைக் கொடுத்திருந்தீங்களே, அதே அம்மாகிட்டதான் நானும் கொடுத்திருந்தேன். அவசரத்துல என் புக்ஸையும் சேர்த்து வாங்கிட்டு இறங் கிட்டீங்க..! அதைத் திருப்பிக் கொடுத்தா போதும்!”

தப்புதான்

‘‘ஐயா… இப்படித் தடால்னு என் புருஷனை வேலையை விட்டு எடுத்துட்டா, எங்கேய்யா போவோம்? கொஞ்சம் கருணை வையுங்க ஐயா!” & கணவனின் முதலாளி முன் தேவகி தலை குனிந்தபடி அழுது இறைஞ்சினாள்.

“இதோ பார், எதை வேணும்னாலும் பொறுத்துப்பேன்.. ஆனா, ஒழுக்கமில்லாம நடந்துக்கிட்டா பொறுக்க மாட்டேன். உன் புருஷனை நம்பிக் கொடுத்த பணத்தை பேங்க்ல கட்டாம ஏமாத்திட்டான்..!’’

“தப்புதான்யா! பசங்க ஸ்கூல் ஃபீஸ் கட்டறதுக்காக எடுத்துட்டாருங்க. அந்தப் பணத்தை நான் கொண்டுவந்திருக்கேன்!’‘

“பணம் இருக்கட்டும். அவனுக்கு பதிலா உனக்கு வேலை தரேன். சம்பளம் கூடவே போட்டுத் தரேன். என்ன சொல்றே?” & முதலாளியின் கை தேவகி யின் தோளில் பதிந்தது.

“யாரை வேணும்னாலும் பொறுத் துப்பேன்… ஆனா, பேச்சுல மட்டும் ஒழுக் கத்தை வெச்சிருக்கிறவங்களைப் பொறுத் துக்க மாட்டேன். எடுரா, கையை!”

தலை நிமிர்ந்து வெளியே வந்தாள் தேவகி.

- வெளியான தேதி: 27 டிசம்பர் 2006 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த ஒரு நாள்
ரயிலில் அவளைப் பார்த்தபோது, அவன் வாழ்வில் அவ்வளவு பெரிய மாற்றங் களை அவள் ஏற்படுத்துவாள் என்று கருணா எதிர்பார்க்கவில்லை. ஜன்னல் ஓரத்தில் ஒரு கொக்கிபோல் முடங்கி உட்கார்ந்திருந்தவள் டிக்கெட் பரிசோதகர் வந்தபோதுதான் முகத்தை முழுசாகக் காட்டினாள். பதின்வயதின் பளபளப் புடன் செழுமையான ...
மேலும் கதையை படிக்க...
அந்த புதன்கிழமை வந்திருக்காவிட்டால், ரங்கா மற்றபடி ஒரு சாதாரணன். திருச்சியில் வேதியியல் படித்து, நேஷனல் கெமிக்கல் கம்பெனியின் ஆர் அண்ட் டி பிரிவில், டெல்லியிலும் மும்பையிலும் 25 வருடங்கள் குப்பை கொட்டிவிட்டு இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் கொல்கத்தா வந்து சேர்ந்திருந்தான். காவிரிக் கரையில் ...
மேலும் கதையை படிக்க...
உயிர் வியூகம்!
கேப்டன் ராம்குமாரின் கால்கள் இரண்டும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. கைகளை விலங்குகள் கோத்திருந்தன. அவன் மீது செம்மண் தூசு அடர்ந்து இருந்தது. திறந்த ஜீப்பின் வெளியே வானில் பறவைகள் சுதந்திரமாகப் பறந்தன.யுக காலத்துக்குக் குலுங்கி, பயணம் செய்து முடிவாக ஜீப், ஒரு நிறுத்தத்துக்கு ...
மேலும் கதையை படிக்க...
என்னைப் பிடிச்சிருக்கா?
''எனக்குப் பிடிக்கலை, ரசிகா...' 'எதும்மா... என் டிரெஸ்ஸா?' 'ஒரு எடத்துல உக்காந்து பேச வேண்டியதுதான..? அது என்ன, கார்ல ரவுண்டு அடிச்சுக்கிட்டே பேட்டி எடுக்கிறது?' 'ஏம்மா, செங்குட்டுவன் என்னை அப்படியே அவரோட கெஸ்ட் ஹவுஸுக்கு நைஸா கூட்டிட்டுப் போயிடுவார்னு பயப்படுறியா? அப்படியே போனாலும், ஐ டோன்ட் ...
மேலும் கதையை படிக்க...
தொடரும் அல்லது ஏற்பது மகிழ்ச்சி
ஒரு காதல் கதையைக் கேட்கிறீர்களா? வருண்குமார் என்னும் நான் இன்றைய நவீனங்களுக்குப் பழக்கமானவன். பீட்ஸா. கே.எஃப்.சி.யின் சிக்கன் லாலிபாப். சப்வே. டீஸல் ஜீன்ஸ். அடிடாஸ் ஷூஸ், ஆப்பிள் லாப்டாப். பிளாக்பெர்ரி. எக்ùஸட்ரா. எக்ùஸட்ரா. வயது இருபத்தாறு. அந்தக் கால மோகன், ராமராஜன்களை நினைவுபடுத்துவேன். ஐந்து ...
மேலும் கதையை படிக்க...
மல்லிகா அக்கா
"டீச்சர்... நான் சொல்றதை யாரும் நம்ப மாட்டேங்கறாங்க. சத்தியமா உண்மையைத்தான் சொல்றேன். எங்கம்மா எப்பவுமே உண்மைதான் பேசணும்னு சொல்லி இருக்காங்க. நீங்க இதுவரைக்கும் பொய்யே பேசலைன்னாதான் நான் சொல்றத நம்புவீங்க. அய்யம்பேட்டைதான் எங்க ஊரு. குடமுருட்டி ஆத்துல சுழிச்சுக்கிட்டு ஓடுற தண்ணி, படித்துறை ...
மேலும் கதையை படிக்க...
அந்த ஒரு நாள்
கூட்டத்தில் ஒருவன்!
உயிர் வியூகம்!
என்னைப் பிடிச்சிருக்கா?
தொடரும் அல்லது ஏற்பது மகிழ்ச்சி
மல்லிகா அக்கா

சுபா நிமிடக் கதைகள்! மீது ஒரு கருத்து

  1. ramachandran r says:

    வழக்கம் போல சுபாவின் கை வண்ணத்தில் நிமிட கதைகள் நன்றாக இருந்தது பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)