Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

ஒரு தேசம் முகமிழந்து….

 

மனோரம்மியமான மாலை வேளை பால் நிலவின் ஒளியை பண்ணை வீதியில் நடைப் பயணத்தில் அனுபவித்தோம். மதியின் அழகில் வாசமிழந்தோம். காற்றின் சுகந்தம் கண்களை மூடவைத்தது. வாடை பெயர்ந்துபோக மகிழ்ச்சியின் வரவில் சோளகம்.

உதிரப் புனல் ஓடும் வீதியில் கடந்துபோன வருடங்களில் அவ்வப்போது ஒரு இடைவெளியும்ää சிறுமாற்றமும் வைகறையாய் எட்டிப் பார்த்தபோதும் நிரந்தர வெளிச்சம் இன்னும் நெடுந்தூரம்தான். வசந்த காலம் வாசலில் வந்ததாக மக்கள் மகிழ்ந்திருந்த வேளையில்தான் அந்த யுத்தம் தொடங்கியது.

அந்தக் கிராமத்திலிருந்து குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்து வேலணைக்கும்ää யாழ்ப்பாண இந்துக் கல்லூpக்கும் போய்விட்டார்கள். சில குடும்பங்கள் மட்டும் ‘’நீக்கிலாரே’’ தஞ்சம் என்று கோயிலுக்குள் இருந்து விட்டனர். கோட்டையை பிடிப்பதற்காக காக்கை தீவுப்பாதையால் வந்த இந்திய இராணுவம் கடற்கரை வீதியால் முன்னேறிச் சென்றபோது கோயிலுக்குள் இருந்தவர்கள் சிறைக் கைதிகளானார்கள். காலையில் குறிப்பிட்ட நேரம் வரை வீட்டைப் பார்ப்பதற்காக வெளியில் விடுவார்கள். மிகுதி நேரம் முழுவதும் கோயில் வளவைச் சுற்றியே வாழ்க்கை. கோயிலின் முன்பாக சீக்கிய இராணுவம் எந்நேரமும் காவலில் நிற்கும்.

சீக்கிய இராணுவம் என்றதும் சின்ராசாவுக்கு மதுரையில் கூடல்நகர் அகதி முகாமில் 85ம் ஆண்டு இருந்தபோது நடந்த நிகழ்வுகள்தான் அவன் நினைவுக்கு வருகின்றன. அங்கு வாழ்ந்த காலத்தில் பல கசப்பான அனுபவங்களை உள்வாங்கினான். அவற்றில் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது கிடைத்த அனுபவம் அவனுக்கு ஒரு வகையானது. ஒரு சீக்கிய இராணுவம் சுட்டதற்காக அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போதெல்லாம் கவலைப்படான்ää கண்ணீர் வடித்தான் இப்போது இந்தச் சீக்கிய இரானுவத்தின் அடாவடித்தனத்தை நினைத்து ஆத்திரம் கொண்டான். குப்பென்று வந்த கோபத்தில் உடல் உறைந்தது.

சின்ராசாவுக்கு மனைவியின் இழப்பால் மனசு சிதிலமடைந்து போனது. முறுக்கிய மீசையும் தேர்வடம் போல் கழுத்தைச் சுற்றியபடி கிடக்கும் தங்கச் சங்கிலியும்ää மோதிரம் நிறைந்த விரல்களும்ää கம்பீர நடையும்ää நெடும்பனை உயரமும் கொண்டää அந்த கிராமத்து மக்களால் அதிகம் நேசிக்கப்படுகின்ற மனிதன்தான் சின்ராசா. அவனுடைய பெயருக்கு பொருத்தம்போல் அவன் ஒரு ‘’சின்ன’’ராசாவாகத்தான் ஒருகாலத்தில் இருந்தான். விடுவலை வள்ளத்திலும் ஒருதரும் அவனை குறைசொல்வது கிடையாது. தொழிலை நடத்துவதே அவனது தனித் திறமையால்தான்.

இப்போது சின்ராசா என்ன செய்வதென்ற புரியாத நிலமையில்… மெலிந்துபோன உடல் தோற்றமும்ää கிழிந்து போன வலையைப் போல் அவனது உடலை ஒட்டிக் கொண்டிருக்கும் பெனியனும் முகமே வெண்மை வேளாண்மை விதைத்தது போல். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற ஏக்கப் பெருமூச்சோடு காற்று காவிவரும் கொடுமையை கன்னத்தில் இரு கைகளையும் ‘’மரக்கினுக்கா’’ முண்டு கொடுத்தபடி உதட்டில் ஒட்டு பீடியை குடித்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான்.

“இந்த மனுசனுக்கு சொன்னாலும் கேக்காது…. காலையிலிருந்து சொல்லிக் கொண்டுதான் இருக்கிறன் அவங்களுக்கு ஆக்கள் இல்லையென்டதற்காக இந்தாலை பிடிச்ச பிடியாக நிற்கிறாங்க….. என்னன ஜயா சொல்லனன நான் வரமாட்டேனென்டு” சின்ராசாவைப் பார்த்தபடி இளைய மகள் சொன்னாள்.

“எல்லாமே போய்ச்சுது உயிரத்தானும் காக்க சாப்பிவேண்டாமா…….? நேற்றுக் குடித்த தேத்தண்ணீயோடு நீயும் குழந்ததைகளும் நான்தான் கட்டையிலே பொறவன் இந்தப் பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செய்ததுகள் இப்படி உத்தரிப்பதற்கு……”என்றான் சின்ராசா.

சின்ராசாவுக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் முத்துமணியை கரைய10ரில் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டான். இளையவள் சின்னமணியை ஊரோடு மாப்பிளையாக இருக்க வேண்டுமென்பதற்காக யோசேப்பின்ர மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தான்.

சின்ராசாவின் மனைவி இறந்த நாளிலிருந்து சின்னமணியோடுதான் சாப்பாடும் இருப்பும். தொழிலுக்கு போவதும் பேரப் பிள்ளைகளோடு விளையாடுவதிலும் நேரம் போய்விடும். சின்னமணியின் மூத்த மகன் ஏழாம் வகுப்பு படிக்கிறான். இரண்டு வருடங்களுக்கு முன்தான் தன் கணவனை இழந்தாள் சின்னமணி. வறுமையில் அனுபவிக்கிற வேதனையை விட அவளுடைய கணவனை இழந்த துயர்தான் அவளுக்கு இன்னும் மறக்க முடியாமல் இருக்கிறது. அவள் கண்முன்னே அவன் நினைவு தோன்றியது. மனசு ஒரு கணம் சஞ்சலப்பட்டது. மனசை சரி செய்து ஒரு நிலைக்குக் கொணடு;வர முடியாமல் அவன் நினைவே மீண்டும் மீண்டும் வந்தது.நெஞ்சு சோகத்தால் முட்டியது. கண் முன்னே அவன் தோன்றினான்.

ஒரு நாள் கடலுக்கு போயற்று வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் மூத்தவனின் அழுகைச் சத்தம் கேட்டது.

“என்னடி சின்னமணி புள்ளே ஏன் அழுகுதென்டு கேளன்” என்றான்.

“இன்டைக்கு காலையிலே பள்ளிக் கூடத்திலே ‘’தமிழ்ப் புத்தகம்’’ வாங்கிக் கொண்டு வரலேயென்டு அடிச்சிட்டாராம் வாத்தி அதான் அழுது கொண்டு நிற்கிறான். நான் சொன்னாலும் கேட்கிறான் இல்லை”

“அழ வேண்டாமென்டு சொல்லு. நான் சாப்பிட்டுப்போட்டு ரவுனுக்கு போய் வாங்கிக் கொண்டு வாறன்….” என்றான். சாப்பிட்டது அரையும் குறையுமாக கடல் வெக்கையோடு ப10பாலசிங்கம் புத்தகசாலைக்கு போனவன்தான் இன்றுவரை வீடு திரும்பவில்லை. யாரோ அவனை மறித்து மினிவானில் ஏற்றிக் கொண்டு போனவங்களாம் அவளும் இன்றுவரை அவனுக்காக கசிந்துää உருகி… கடலுக்குள் கரைந்து போன மீனவனுக்காக எங்க ஊர்ப் பெண்கள் காத்திருப்பது போல் காத்திருக்கிறாள்.

சின்னமணி கடவுள் பக்தி அதிகம் உள்ளவள.; அகதி வாழ்வில் கூடுதலான நேரத்தை கோயிலுக்குள்ளேயே செலவு செய்வாள். ஓவ்வொரு செவ்வாயும் பாசையர் அந்தோனியார் கோயிலுக்கு தவறாமல் போய் வருவாள். இப்ப எப்படித்தான் அவளால் போக முடியும்…..?
கந்தப்பு சம்மாட்டியும் சின்ராசாவை விட்டபாடில்லை.

“சின்ராசா மேவலைக்கு ஒருத்தர்தான் குறையுது நீ வந்தால் சரியாய் போய்விடும்” என்றான.; சின்ராசாவின் குடும்பத்தின் மேலுள்ள அன்பினால் அல்ல தன்னுடைய தொழிலை நன்றாக நடத்தக் கூடியவன் என்ற ஒரே நோக்கத்திற்காகவே

“நாங்கள் பாஸ் எடுக்க எவ்வளவு பாடுப்படனாங்கள் தெரியுமோ சின்ராசா….? மூன்று மணித்தியாளங்கள் தந்தவங்க….அதுவும் கொண்டிசனோட…. முனங்குக்கு அங்காலே கொட்டடி பக்கம் போகாமலும் இங்கால காக்கை தீவுப்பக்கமும் போகாமல் துறைக்குள்ளேயே விடு வலையை வைக்க வேண்டுமாம்…… ஐஞ்சு ரூபா பங்குக்கு கிடைச்சாலும் ஆருதரப் போறாங்க…..”கெஞ்சும் குரலில் சம்மாட்டி கேட்டான். சின்ராசாவிற்கு கோபம் கலந்த பெருமூச்சை விட்டுக் கொண்டு

“இவங்கள ஆரு வரச்சொன்னது….. எங்கட சனத்தை ஏன் சுட வேண்டும்….?” கந்தையா குறுக்கிட்டு

“எங்கட பொடியன்கள் சுட்டதால்;த்தான் அவங்களும் சுடத் தொடங்கினாங்க….” என்றான்.

“ம்.. அதற்கு சுட்டவங்கள பார்த்து சுடவேண்டியதுதானே…. அப்பாவிச் சனங்கள் என்ன செய்ததுகள்…? அவையட நாட்டிலேயே இமயம் முதல் குமரிவரை ஆயிரத்தெட்டு பிரச்சனை அந்தப் பிரச்சனைகளை தீர்க்க வழியக்காணல….இங்க வந்திருக்கினமாம் எங்கட பிரச்சினை தீர்க்க….”என்று சொல்லிக் கொண்டே இடுப்பில் செருகி வைத்திருந்த மடிப்பெட்டியை எடுத்தான் சின்ராசா.

சம்மாட்டி சரியென்று ஏற்றுக் கொள்வதுபோல் மௌனமாக நின்றான்.

“சின்ராசாவின் விசர்க் கதையை பாரேன்… அங்காலே அவங்க நிற்கிறான்கள் கேட்டாலும் கொண்டாலும்”என்றாள் கந்தையாவின் மனைவி. இவர்கள் கதைத்துக் கொண்டிருந்தவை எல்லாவற்றையும் கோயிலி;ன் முகப்பை சுற்றி போடப்பட்டிருந்த கம்பியை பிடித்துக் கொண்டிருந்த ஆனந்தன் அவதானமாக கேட்டுக் கொண்டிருந்தான்.இந்த விவாதங்கள்சூடுதணிய எல்லோரும் கடலுக்கு போவதற்கு ஆயத்தமானர்கள்.

சின்ராசாவின் மடுப்பெட்டிக்குள் வெ;றிலைää பாக்குää சுண்ணாம்புää புகையிலைää ஆர்.வி.ஜி பீடி போன்றவற்றை வைத்து கடல் தண்ணீரில் நனையாதவாறு பொலித்தீன் பையினால் மூடி வைத்திருப்பது வழக்கம்.ஆயினும் இப்போது பீடியைத் தவிர வேறு ஒன்றுமில்லை. பீடியை எடுத்து வாயில் வைத்தபடி….

“கந்தையாண்ணே கடலுக்கு போவமா?” என்றான் சின்ராசா.

‘அம்மையா’ என்று அழுதபடி சின்னமணியின் இளையவள் ஓடிவந்தாள். சின்ராசா தன் உடலோடு அனைத்து இரண்டு கன்னத்திலுமிருந்து வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு அவளது கன்னத்தில் மெல்ல முத்தமிட்டான். அவளது அழுகை நின்றுவிட்டது.

குண்டுகள் துளைக்காதபடி கடல் தொழிலாளர் வள்ளத்தை கடலுக்குள் அமுக்கி விட்டிருந்தார்கள்.விடுவலைக்கு பெரிய வள்ளம் ஒன்றும் தொடுவைக்கென்று சிறிய வள்ளமும் பாவிப்பது வழக்கம். பெரிய வள்ளத்திற்குள் நிறைந்து கிடந்த தண்ணீரை பட்டையாலும்ää வாளியாலும் அள்ளி ஊத்திக் கொண்டிருந்தார்கள்.சின்ன வள்ளத்தையும் தாட்டு வைத்திருந்ததால் அதற்குள் கிடந்த தண்ணீரை ஏற்கனவே இறைத்து விட்டார்கள்.

கந்தையாவும்ää சின்ராசாவும் கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
அரைமணித்தியாலத்திற்குள் எல்லாவற்றையும் விரைவாக முடித்துக் கொண்டு ஏலேலோ பாடலோடு தோணிகள் தொழிலாளர்களை சுமந்து கொண்டு காற்றின் எதிராய் கடல் அலைகயைக் கிழித்துக் கொண்டு நகர@ உவர்நீர் வெண்நுரை கக்கியது.

எம் சொந்தகங்களின் செங்குருதிகள் இக்கடலோடு தானே கரைந்துபோனது அல்லவா….? காற்றினில் கறை சேற்றினில் பிணம் ஆயினும் மீனவன் வாழ்வின் மீது தீராத காதல் கொள்வான். நலிந்த வாழ்விலும் நெஞ்சினில் நளைய வாழ்வுக்கான நம்பிகை விதை… கடற்கரை வெளியில் கனவுகள் விரியும். அவனது விழிகளின் உயிர்ப்பெல்லாம் கடல்தான்.

தொழிலாளர்களை அனுப்பிவிட்டு கடலையே பார்த்துக் கொண்டிருந்த கந்தப்பு தொடுவை வள்ளத்திற்குள் நின்றவர்கள் ஓலைக் கயிற்றை வளைத்த வேகத்தை கண்டு ஏதோ வள்ளத்தில் நின்றவர்களுக்கு நடந்ததுபோல் உணர்ந்தான். பதட்ட நிலையில் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தான். விழிகள் பிதுங்கியது. கொஞச நேரம்கூட நிதானமாக நிக்க முடியாத நிலை அவனுக்கு.. சில நிமிடங்களுக்குள் கோயிலில் நின்றவர்களுக்கு சம்பவ் காற்றாய்ப் பறந்தது.

ஆலமரத்திற்கும் சிறுவர் பாடசாலைக்கும் இடையில் இருக்கும் கல்லறை ஆண்டவர் சுருபத்திற்கு முன்னாள் முழந்தாலில் இருந்து கொண்டு சின்னணி,

“ஆண்டவனே ஏன் எங்களுக்கென்று இந்தச் சிலுவையை தந்தாய் மண்ணில் மனிதனாய் பிறந்து தெங்வமானாய். வேதனை நிநை;த துயர நாட்களை ஏன் தொடரவிடுகிறாய். இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே வாழ்வது?” சின்னமணியின் விழிகளில் இருந்து கண்ணீர் கசிந்தது. வேர்த்துக் களைக்க வந்த கந்தையாவின் மனைவி,

“அடியே சின்னமணி உங்கட ஐயாவுக்கு விடுவலை வள்ளத்தில ஏதோ நடந்திட்டாமென்னு எல்லோரும் கடக்கரைக்கு ஓடியினம். நீயென்ன இதிலே இருந்து அழுது கொண்டிருக்கிறாய்” சின்னமணி விக்கித்துப் போனாள். கடைசிப் பிள்ளையை கையில் தூக்கி கொண்டு ஓட்டமும் நடையுமாக கடற்கரையை நோக்கி போனாள்.

கடல் பெருக்கில்லாததால் மெல்லிய அலைகள் மட்டுமே கரையில் வந்து மோதிக் கொண்டிருந்தன. யுத்தகால அனர்த்தங்களை கடற்கரை கவ்வியிருந்தது. ஊதல் காற்றும் ஓயாது வீசிக் கொண்டிருந்தது. கடற்கரையை ஒட்டியிருந்த வீடுகள் சிதைவடைந்தும் ஓலைக் குடிசைள் எரிந்த குறையிலும் காணப்பட்டன. தென்னை மரங்கள் கூடஷெல் பட்டு சோகமே உருவாகி நின்றன.

வள்ளம் வந்த வேகத்தில் அணியத்தின் முன்பகுதி கரைக்கு மேலே ஏறிவிட்டது. யப்பான் மீன்ää கெழுறுகளின் சலசலப்பு தண்ணீரில்.சேற்றினில் புதையுண்டுபோன கால்களோடு வள்ளத்தைச் சுற்றி அழுத விழிகயோடு சிலர் நெஞ்சில் அடித்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். சின்னமணி வள்ளத்திற்கு அருகே சென்று தலையை கீழே குனிந்து நடுப்பலகைக்கு பக்கமாக கிடந்த உடலை பார்த்தாள் கண்டதும் ஒ வென்று கத்தினாள்.

“ஐயா இவ்வளவு தெதியிலே விட்டிட்டு போயிட்டுங்களே….”அலை ஓசையையும் மீறி விண்ணைத் தொட்டது அழுகை ஒலி. சின்னமணியின் சிறு விழிகள் சிவந்து விட்டன. ஆனந்தன் ஆட்களின் நெரிசலுக்கிடையில் நுழைந்து வள்ளத்தை எட்டிப்பார்த்தான் விக்கித்துப் போனான் அவனுள் ஒரு வித வைராக்கியம் மனதில் எழுந்தது. இழந்ததற்கான தேடல் கண்களில்;…. மறுகணமே இடத்தை விட்டு விலகி விட்டான்.

ஐம்பது வயது நிரம்பிய மனிதர் அன்றாடம் ஜீவனுக்காக அயராது போராடுகின்ற ஏலோலோ பாடகன் எதற்காக செப்புக் குண்டுக்கு இரையானான்? மரக்கோல் பிடித்து மரத்துபோன கைகள் உப்புக் கரைசலில் ஊறித் திரண்ட உடல் அந்நிய மிருக வெறிக்கு இரையாகி கோவணத்துணியோடு கிடக்கிறது. கூட்டத்தில் நின்றவர்களில் ஒருவன் “கோயிலடியில் நின்ற சீக்கியன் போகச் சொல்லிப்போட்டு காக்கை தீவில் நின்றவன் சுட்டுப்போட்டான் என்றான். வள்ளம் முழுவதும் இரத்தக் கட்டிகளாய்… உடலிருந்து பெருக்கெடுக்கும் இரத்தத்தை கட்டுப்படுத்த நாலு முழு வேட்டியால் இறுகக் கட்டினார்கள். நின்றவர்களில் ஐந்து பேர் சேர்ந்து தூக்கினார்கள். உடலிலிருந்து இரத்தத் துளிகளாய் வழிந்தது. சின்னமணியின் வீட்டிற்கு தூக்கிக் கொண்டு போனார்கள். இன்று சின்னமணியின் வீட்டில் மட்டுமல்ல ஒப்பாரி ஓலம்.எமது தெருவெல்லாம்தான்.

அன்று முழுவதும் அழுகைகளோடும் அடக்கம் செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டு இருந்தவர்கள் ஆனந்தனை மறந்து விட்டார்கள். இரவு எட்டு மணியாகியும் ஆனந்தன் வீட்டிற்கு வரவில்லை. சின்னமணி ஆனந்தனை தேடத் தொடங்கினாள்.. 

தொடர்புடைய சிறுகதைகள்
சற்று முன்புதான் திருந்தாசி மணியடித்து ஓய்ந்தது.முன்பெல்லாம் நள்ளிரவு மூன்றோ நான்கோ மணிக்கெல்லாம் விழித்து தொழிலுக்கு போவதுதான் தொழிலார்களின் வழக்கம்.அந்தோணியும் இதற்கு விதிவிலக்கல்ல.இப்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை.திருந்தாசி மணி ஆறு மணிக்கு கோயிலிருந்து அடித்த பின்னர்தான் தொழிக்கு போக வேண்டிய கட்டாய சூழ்நிலை. இந்திய ...
மேலும் கதையை படிக்க...
கொழும்பில் நான் தங்கியிருந்த காலத்தில் ஒரு சிங்கள வீட்டில் தான் நானும் வரதனும் ரமேசும் சாப்பாடு எடுத்து சாப்பிடுவது வழக்கம். இன ஐக்கியத்தை ஏற்படுத்தவது அல்ல எங்கள் நோக்கம். அல்லது சாப்பாடு சிங்களவர்கள் ருசியாக சமைப்பார்கள் என்பதற்காக அல்ல. 'கிராண்பாஷ்' வீதியில் ...
மேலும் கதையை படிக்க...
நள்ளிரவு இரண்டு மணியைக் கடந்தும் தூக்கம் வராமல் தூரத்தே செல்ல@ என் கால கநர்வில் கடந்து சென்ற ஐந்தாண்களுக்கு முன் முற்றுப்பெற்று விட்ட அந்த மனிதத்தின் நினைவு எனக்குள் ஓடத்தொடங்கியது.வயதெல்லை தாண்டி வார்த்தைகள் வலுவிழந்து மானிடமே ஒவ்வொரு கணமும் மரணித்துக் கொண்டும் ...
மேலும் கதையை படிக்க...
வானம் கறுத்து திரட்சியாய் இருண்டு கிடந்தது .வீதியில் மின் விளக்கு ஒளியிழந்து போய் பல மாதங்களாகி விட்டன சில வீடுகளில் மண்ணெண்ணைய் விளக்கிளிலிருந்து ஒளி தெறித்துக் கொண்டிருந்தன.நான் இன்று எப்படியும் எங்களுடைய வீட்டை பார்க்க வேணும் எண்டு அம்மாவிடம் விடாப்பிடியாக காலையில் ...
மேலும் கதையை படிக்க...
வானம் இலவம் பஞ்சுக் கூட்டத்தால் நிறைந்து கிடந்தது. சுற்றிலும் ஆள் அரவமற்ற தனிமையின் சூழலை உணர்ந்தேன். மனம் ஒரு நிலையற்றுத் தாவித்தாவி அலைந்தது. ஏனோ என் நினைவுகள் எங்க ஊர் கடற்கரையை நோக்கி நகர்ந்தது. கொடியில் காயப்போட்ட ஆச்சியின் சேலையைப்போல் பரவைக்கடல் ...
மேலும் கதையை படிக்க...
விடிகாலை ஏழுமணிக்கு நான் எழுந்து வேலைக்குப் போனால் எப்பிடியும் வீடுவர பின்னேரம் ஆறுமணியாகிவிடும். சில வேளையில் பிசியில்லையென்றால் நேரத்தோடு அனுப்பி விடுவார்கள்.நான் இருக்கும் இந்த வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகிவிட்டன. வீடு இருக்கும் வீதி தமிழர்களால் நிறைந்திருக்கும். யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற ...
மேலும் கதையை படிக்க...
“ஏனுங்க விடிய எழும்பி வேலைக்கும் போகாமல் அழுதுகொண்டு இருக்கிறியள்" அழுதுகொண்டு இருந்த சாந்தனைப் பார்த்து கனிமொழி மெல்லிய குரலில் கேட்டாள். அப்போது தான் கனிமொழியும் பிள்ளையும் எழும்பியதைக் கண்டான். "ஒன்றுமில்லை கனிமொழி" என்றான். "இப்படித்தான் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று எத்தனை நாளைக்குத் தான் இந்த அரியண்டத்துள் ...
மேலும் கதையை படிக்க...
ஜீவன் மெலிந்து போயிருந்தான். அவன் பெரிய மொத்தமானவன் என்று சொல்லமுடியாது. அதே வேளை ஒல்லியானவன் என்றும் சொல்ல முடியாத இடைப்பட்ட நிலையிலிருந்தவன்;. கடந்த ஒரு வாரமாகத்தான் அவனுடைய உடல் என்றுமில்லாதவாறு மிகவும் மெலிந்திருந்தது. கண்களில் துயர் இழைந்து கன்னம் உள்ளொடுங்கி தோல் ...
மேலும் கதையை படிக்க...
வெறும் கூடு
நெய்தல் நிலத்துக்காரி
திரேசா
உன் பாதை…
மேரி
குட்டான்
வாழ முற்படுதல்…….
பெண் துறவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)