காய்கறி அங்காடியிலிருந்து வேணியும் செல்வாவும் இரண்டு சக்கர வாகனத்தில் வெளிப்பட்டனர். எதிரில் நடந்து வந்துகொண்டு இருந்த அறுபது வயதுப் பெரியவர் ஒருவரைக் கண்டதும், வண்டியை அவர் அருகில் கொண்டு நிறுத்தி, உற்சாகக் குரலில் அவருக்கு ‘வணக்கம்!’ சொன்னான் செல்வா. ”எப்படி சார் இருக்கீங்க?” என்றான். அந்த மனிதர் ஏனோ சற்றே நெளிந்து, அசடு வழிந்து பதில் வணக்கம் செய்தார்.
பின்பு அவரிடமிருந்து விடைபெற்று, வாகனம் பிரதான சாலையில் சீறியது. ”விழுந்து சேவிக்காத குறையா வணக்கம் சொன்னீங்களே, யாருங்க அது?” என்றாள் வேணி.
”அவர் சங்கரன். எனது பிரிவின் மேலதிகாரியாக இருந்து, போன வருடம் ஓய்வு பெற்றவர்!”
”அவர் பதவியில் இருக்கும்போது, உங்களிடம் மிகவும் கரிசனமாக நடந்துகொள்வாரோ? இத்தனைப் பணிவாக வணங்குகிறீர்களே?”
”அதுதான் இல்லை. அவர் ஒரு அதிகார வெறியர்! குழுமனப்பான்மை உடையவர். தன் கீழ் பணிபுரிபவர்களைப் பல வழிகளில் நசுக்கிக் குரூர திருப்தி காணும் சாடிஸ்ட்! யாரையும் அவருக்குப் பிடிக்காது. குறிப்பாக என்னை! பிடிக்கிறதோ பிடிக்கலையோ, என்னைத் தவிர, மற்ற எல்லோரும் தினமும் அவருக்குக் குறைந்தபட்சம் பத்து வணக்க மாவது போட்டுவிடுவார்கள்!”
”நீங்கள் வணக்கம் வைக்க மாட்டீர்களா, ஏன்?”
”அவரின் பிரிவில் நான் பணியில் சேர்ந்த முதல் நாள், மரியாதை நிமித்தம் அவருக்கு ‘வணக்கம்’ கூறினேன். அவர் அதை மதித்து பதில் வணக்கம் செய்யவில்லை. இறுமாப்புடன் தலையை அசைத்துவிட்டுப் போனார். மரியாதை செலுத்துதல் ஒருவழிப்பாதையல்லவே? அன்பைச் செலுத்தி அன்பைப் பெறுதலே மாண்பு. எனவே, அவர் ஓய்வு பெறும் வரை அவருக்கு நான் வணக்கம் செலுத்தியதே இல்லை!”
”பின் இப்போது மட்டும் எதற்காக வணக்கம் கூறினீர்களாம்?”
”ஆள் பலம், அதிகார பலம் போன பின் அவருக்கு அவர் நிழல்கூட வணக்கம் செலுத்துவதில்லை. ஆள் கூனிக் குறுகி, அவமானத்தால் சிறுத்துவிட்டார். என்னதான் இருந் தாலும், அவர் எங்கள் நிறுவனத்தில் 38 வருடம் பணி செய்திருக்கிறார். அந்த மரியாதைக்காக, ஒரு மூத்த குடிமகனைக் கண்ணியப்படுத்தும் விதமாக, இன்று மட்டுமல்ல, நான் அவரைப் பார்க்கும்போதெல்லாம் வணக்கம் செலுத்தி வருகிறேன். மற்றவர்கள் சலுகைகள் பெறவே அன்று அவருக்கு வணக்கம் சொன்னார்கள். நானோ அவருடைய தன் முனைப்பைத் திருப்திப்படுத்த இன்று வணக்கம் கூறுகிறேன். நான் மற்றவர்கள் போல் இல்லை. பெருந்தன்மை என் பிறவிக்குணம்!”
”யார் சொன்னது? நீங்கள் அவரை வித்தியாசமாகப் பழிவாங்கு கிறீர்கள்!” என்றாள் வேணி.
”என்ன சொல்கிறாய்?”
”’எனக்குப் பலவிதமா தொந்தரவு குடுத்த நீ, பதவி ஓய்வுக்குப் பிறகு தோலுரிக்கப்பட்ட இராலாக சுருண்டு நிற்கிறே. யாருமே மதிக்காத உன்னை இப்ப நான் மன்னிச்சு வணக்கம் சொல்றேன் பாரு’ன்னு சொல்லாம சொல்றீங்க! நீங்க ஒவ்வொரு தடவை வணக்கம் சொல்லும்போதும் அந்தக் குற்ற உணர்ச்சியால் சங்கரன் இதயம் தத்தளிக்கும். அதைக் கண்டு உங்கள் இதயம் குளிரும். பலே, மிகச் சிறந்த பழிவாங்கும் உபாயம்!”
மறுக்க வாயெடுத்த செல்வா ஒரு நொடி மௌனித்து, ”இருக் கலாம்! யார் கண்டது?” என்று புன்னகைத்தான்.
- 16th ஜூலை 2008
தொடர்புடைய சிறுகதைகள்
நைட்டி அணிந்து, சமையற்கட்டு மேடையில் அமர்ந்திருந்தாள் இந்துமதி. சராசரி உயரத்துக்குப் பொருந்தாத நீள் கூந்தல், குறும்புக் கண்கள், கூர்ப்பான மூக்கு, சதா பேசும் பாசக்கார வாய்.
கைலாசநாதன் - பூர்ணகலா தம்பதிக்கு, ஒரு மகன், ஒரு மகள். மகன் ஆனந்ததீர்த்தன்; மகள் சிவசங்கரி.
ஆனந்ததீர்த்தனுக்கு ...
மேலும் கதையை படிக்க...
மணிமேகலைப் பல்கலைக்கழகம். துணைவேந்தர் மாளிகை, வரவேற்பறையில் காத்திருந்தேன். மக்கள் தொடர்பு அதிகாரி எட்டினார்...
""துணைவேந்தர் அழைக்கிறார்; போங்கள்!''
வணங்கியபடி உள்ளே போனேன்.
துணைவேந்தர் பதில் வணக்கம் செய்து, ஒரு நீள்கவரை நீட்டினார்...
""உங்க மகனுக்கான பல் மருத்துவ சேர்க்கை கடிதம் இதோ... வாழ்த்துக்கள்!''
""நன்றி,'' என்று கவரை வாங்கி, ...
மேலும் கதையை படிக்க...
கல்யாணின் மடிகணினித் திரையில் ஒரு பறவை நின்றிருந்தது. எடை, 5 கிலோ. கழுகு போல் கூரிய மூக்கு. கண்களில் அசாதாரணமான கொலை வெறி மின்னியது. அலகு நுனியில் ரத்தம் ஈஷியிருந்தது. அழகிய குஞ்சமாய் வால் பகுதி.
அழிந்துபோன மிருகங்களை ஆராயும் கிரிப் டோஜிவாலஜிஸ்ட் ...
மேலும் கதையை படிக்க...
செல்லாத்தா தேநீர் விடுதி. கல்லாப் பெட்டியில் அமர்ந்திருந்தார் உரிமையாளர்; தேநீர் ஆற்றிக் கொண்டிருந்தார் மாஸ்டர். அவரின் அருகில் தட்டுக்களில் சுடச்சுட ஆமைவடை, உளுந்து வடை, சமோசாக்கள் குவிந்திருந்தன.
மேஜை இழுப்பறையைத் திறந்து, ஒரு சீட்டை எடுத்தார் உரிமையாளர். அதில், "கிளவுட் பைவ் புரொடக்ஷன்ஸ்' ...
மேலும் கதையை படிக்க...
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளானதால், மணி, 7:00 ஆகியும் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை, செல்வனும், கவிதாவும்!
தாலுகா அலுவலகத்தில், கிளார்க்காக பணிபுரிகிறான் செல்வன். அவன் மனைவி கவிதா, கிறிஸ்துவ மேனிலைப் பள்ளியில், பிளஸ் 2 ஆசிரியையாக பணிபுரிகிறாள்.
இருவருக்கும் இடையே படுத்திருந்த அவர்களின், ஐந்து வயது ...
மேலும் கதையை படிக்க...
தொலைக்காட்சிப் பெட்டியின் எதிரே சந்துருவும், ராகினியும் அமர்ந்திருந்தனர். இருவரின் காலடியில் அவர்களது இரு மகள்கள் அமர்ந்திருந்தனர். மூத்தவள் தேவிகா, பிளஸ் 2 படிப்பவள்; இரண்டாமவள் பூர்ணா, பத்தாம் வகுப்பு படிப்பவள்.சந்துரு மகா கண்டிப்பான தந்தை. மூத்த மகளை ஐ.ஏ.எஸ்.,சும், இளையவளை ஐ.எப்.எஸ்.,சும் ...
மேலும் கதையை படிக்க...
திருச்சி நோக்கி எடிட்டர் சங்கரலிங்கத்தின் கறுப்பு பி.எம்.டபிள்யூ., கார் பறந்தது. ஸ்டியரிங்கை கையாண்டபடி, என்னிடம் திரும்பினார்.
""நவாப்... திருச்சி மாநகரத்துக்குள்ள எப்ப பிரவேசித்தாலும், பசுமை நிறைந்த பால்ய நினைவுகள் என்னை வெட்டுக்கிளி படையெடுப்பாய் தாக்கும். திருச்சி மலைக் கோட்டை, கல்லணை, ஸ்ரீரங்கம் முதலியன ...
மேலும் கதையை படிக்க...
தூர்ந்து போயிருந்த ஏரிக்கரையை ஆக்ரமித்து, பல குடிசைகள் முளைத்திருந்தன. குடிசைகளை, கருவேலம் மரங்கள் சூழ்ந்திருந்தன. குடிசைகளின் பின்னிருந்து கிளம்பிய கழிவுநீர் சாக்கடைகள், குட்டை குட்டைகளாக தேங்கியிருந்தன. தேங்கியிருந்த கழிவுநீரில், பன்றிகள் குட்டிகளுடன் புரண்டு கொண்டிருந்தன. புரளும் சுகத்தில் அவை, "பர்க் பர்க்...' ...
மேலும் கதையை படிக்க...
தரகர் கொடுத்து விட்டு போன மாப்பிள்ளைகளின் புகைப்படங்களும், வாழ்க்கைக் குறிப்புகளும், மேஜையில் சிதறிக் கிடந்தன.
மெலாமைன் கோப்பையில் நிறைந்திருந்த தேநீரை உறிஞ்சியவாறே, புகைப்படங்களை வெறித்தேன். எனக்கு பின் நின்று, என்னை நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள் என் மனைவி.
இந்த புகைப்படங்களில் உள்ள மாப்பிள்ளைகளில், யார் என் ...
மேலும் கதையை படிக்க...
"நிலா' பத்திரிகையின், சேலம் பதிப்பு அலுவலக வளாகத்திற்குள் பிரவேசித்தது, எடிட்டர் சங்கரலிங்கத்தின், கறுப்பு நிற பிஎம்டபிள்யூ கார்.
ஒட்டுனர் கதவைத் திறந்து கொண்டு சங்கரலிங்கம் இறங்க, நானும் இறங்கினேன். வயர்லெஸ் செட்டையும், இரு கைபேசிகளையும் எடுத்துக் கொண்டு நடந்தார். அலுவலக உதவியாளன், அவரது ...
மேலும் கதையை படிக்க...
மாமா என்றால் அப்பாவாக்கும்!
நிறைய அலுவலகங்களில் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களை சமாளிப்பதற்கு தனித்திறமை வேண்டும். ஐஸ் கத்தியால் குத்தினாலும் காயம்தான். நன்று