Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

காண்டீபன்

 

காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு சிறப்பாக ஆண்டுவந்த பல்லவ மன்னன் அபராஜித வர்மன் (கிபி 870-890), ஒரு ரகசிய ஓலையை அந்நாட்டு ஒற்றனும் சிறந்த குதிரை வீரனுமாகிய இருபத்துநான்கு வயது காண்டீபனிடம் கொடுத்து, அதை பூம்புகாரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டுவரும் சோழ மன்னன் ஆதித்த சோழனிடம் (கிபி 871-907) ரகசியமாக கொடுத்து வரச்சொன்னான்.

ரகசிய ஓலை என்பதால் அதை இரவில் ஒரு கருப்பு குதிரையில் கொண்டு சொல்வது வசதியானது என்று அக்காலத்தில் கருதப்பட்டது.

காண்டீபன் புரவியில் ஆரோகணித்தபோது இரவு மணி பத்து. அப்போது வானம் கரிய மேகங்களின் திரட்சியுடன் இருண்டிருந்தது. கானகத்தினூடே பாதி வழி தாண்டிச் சென்று கொண்டிருந்தபோது மழை வானத்தைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது. மின்னலும் இடியும் தொடர்ந்து பயமுறுத்தியது.

இந்தக் கொட்டும் மழையில் மேற்கொண்டு தன்னால் புரவியில் தொடர்ந்து செல்ல முடியாது என்பதை உணர்ந்த காண்டீபன், புரவியை தூரத்தில் காணப்பட்ட ஒரு குடிசையை நோக்கி மெதுவாகச் செலுத்தினான்.

அங்கு சென்றதும், புரவியிலிருந்து இறங்கி, குடிசையின் கதவை மெல்லத் தட்டினான். உள்ளிருந்து ஒரு பெண்ணின் மெல்லிய முனகல் ஒலி மட்டும் கேட்டது. காண்டீபன் தயக்கத்துடன் கதவைத் தள்ள அது திறந்து கொண்டது. உள்ளே சென்றான். ஒரு காடா விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதனருகே ஒரு கயிற்றுக்கட்டிலில் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருத்தி படுத்தபடி முனகிக் கொண்டிருந்தாள்.

காண்டீபன் தன் கையுறைகளைக் கழட்டிவிட்டு, வலது கையினால் அவள் கழுத்தை தொட்டுப் பார்த்தான். உடம்பு கொதித்தது. ஜுரத்தில் உடம்பு அடிக்கடி தூக்கிப் போட்டது.

அவள் கையை நீட்டிக் காண்பித்த திசையில் உற்றுப் பார்த்தபோது அங்கு குமிட்டி அடுப்பு ஒன்று இருந்தது. அடுப்பினருகே தரையில் தூதுவாளைச் செடிபோல் இலைகளுடன் ஏதோ ஒன்று பறித்து வைக்கப் பட்டிருந்தது.

காண்டீபன் புரிந்துகொண்டு அந்த இலைகளில் வெந்நீர் போட்டு அதை அவளுக்கு அருந்தக் கொடுத்தான். அப்போது மழையும் முற்றிலுமாக நின்றுவிட்டது. அதைக் குடித்த பத்து நிமிடங்களில் அவளுக்கு உடல் ஏராளமாக வியர்த்தது. உடனே அவள் ஜுரம் பறந்துவிட்டது.

அடுத்த கணம் அவள் கட்டிலிலிருந்து துள்ளி எழுந்தாள்.

காண்டீபனின் கைகளைப் பற்றி வாஞ்சையுடன், “என் உயிரைக் காப்பாற்றிய நீ யார்? நீ சிறிது தாமதமாக வந்திருந்தாலும் நான் இறந்திருப்பேன். மழையில் நனைந்தால் நான் இறந்து விடுவேன் என்பது எனக்கு இடப்பட்ட சாபம். அது எனக்குத் தெரியும் என்பதால் மழை ஆரம்பித்தவுடன் குடிசைக்கு ஓடோடி வந்தேன். ஆனால் அதற்குள் முற்றிலுமாக நனைந்து நான் இறப்பதற்கு முன்னோடியாக காய்ச்சலில் வீழ்ந்தேன். நீ வந்து என்னைக் காப்பாற்றி விட்டாய்.”

“எ…என்னது சாபமா?”

“ஆமாம் அது ஒரு பெரிய கதை. அதை பிறகு சொல்கிறேன். நான் இப்போதைக்கு ஒரு சூனியக்காரி. ஆனால் என் சூனியத்தால் நல்லவைகள்தான் நடக்கும்.”

காண்டீபன் முற்றிலுமாக அதிர்ந்தான். திகைத்து நின்றான்.

“என் உயிரைக் காப்பற்றியவன் நீ. உனக்கு என்ன வரம் வேண்டுமென்று கேள். அதை என்னால் நிறைவேற்ற முடியும்.”

“நான் மிகவும் ஏழை. பல்லவ நாட்டின் ஒரு சாதாரண ஒற்றன் நான். என் அப்பா ஒரு போரில் இறந்துவிட்டார். அம்மாவும் மூன்று சகோதரிகளும் என்னுடன் உள்ளனர். எனக்கு சொந்தமாக ஒரு வீடு வேண்டும். பிறகு என் சகோதரிகளுக்கு சிறப்பாக கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும். இவைகள் அனைத்தும் உன்னால் நடந்தால் என் வாழ்நாள் முழுவதும் உனக்கு அடிமையாக நான் சேவை செய்கிறேன்.”

“உன் ஆசைகள் அனைத்தையும் என்னால் அடுத்த மூன்று மாதத்தில் நிறைவேற்றி வைக்க முடியும். எனக்கு இன்னமும் திருமணம் நடக்கவில்லையே என்கிற ஏக்கம் எனக்குள் அதிகம். உன் ஆசைகள் என்னால் படிப்படியாக முற்றிலும் நிறைவேறியதும், அதற்கு கைமாறாக என்னை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும். செய்து கொள்வாயா? யோசித்து பதில் சொல்….ஆனால் சொன்னசொல் மாறக்கூடாது.”

காண்டீபன் உடனே அவள் கையைப் பற்றிக்கொண்டு “என் ஆசைகள் நிறைவேறினால், உன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். இது சத்தியம்” என்றான்.

அவள் கண்டீபனை ஆசையுடன் அணைத்துக்கொண்டு, ”யம்மாடி இம்மாதிரி ஒரு வீரனின் தினவெடுத்த தோள்களில் சாய்ந்து கொள்ள இத்தனைநாள் நான் ஏங்கியது வீணாகவில்லை” என்றாள்.

மறுநாள் சூரியன் உதித்ததும், காண்டீபன் விடைபெற்று புரவியில் கிளம்பிச் சென்றான். காலை வெயிலின் இதத்தில் வெளியே நின்று கொண்டிருந்த அந்த ஆறு அடி உயரக் குதிரையின்மீது காண்டீபன் வெகு அலட்சியமாக துள்ளி ஏறி அமர்ந்த கம்பீரத்தை, கண்களில் காதல் மின்ன அவள் ஆசையுடன் பார்த்தாள்.

பூம்புகாரில் காண்டீபன் தந்த ஓலையைப் படித்த மன்னன் ஆதித்த சோழன், அதில் இருந்த செய்தியினால் சந்தோஷத்தில் துள்ளினான். செய்தி கொண்டுவந்த காண்டீபனுக்கு மரியாதை செய்தான். அந்த மரியாதையின் ஒரு பகுதியாக அவனுக்கு ஒரு பெரிய வீடு பரிசளித்தான். காண்டீபன், சூனியக்காரி தன் வேலையை ஆரம்பித்து விட்டாள் என்று நினைத்துக் கொண்டான்.

சந்தோஷத்துடன் காஞ்சீபுரம் திரும்பினான். திரும்பும் வழியல் சூனியக்காரியை மறக்காமல் சென்று பார்த்தான். அப்போது பாண்டிய மன்னன் மூலமாக அவனுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருப்பதாக அவள் சொன்னாள்

அடுத்த வாரம், மதுரையிலிருந்த பாண்டிய மன்னன் பராந்தகப் பாண்டியன் (கிபி 880-900) தன் மனைவியும், நாட்டின் அரசியுமான வானவன் மாதேவிக்கு* அவள் மனதில் என்னவென்று புரியாத ஏதோ ஒரு பெரிய குறை இருப்பதாகவும் அந்தக் குறையை கண்டுபிடித்து சொல்பவருக்கு தன்னால் மிகப் பெரிய மரியாதை செய்யப்படும் எனவும் தண்டோரா போட்டு அறிவித்தான்.

தண்டோராவைப் பற்றிக் கேள்விப்பட்ட காண்டீபன் உடனடியாக மதுரை சென்று பராந்தகப் பாண்டிய மன்னனைப் பார்த்து, “தன்னால் கண்டிப்பாக மஹாராணி வானவன் மாதேவியின் குறையைப் போக்க முடியும்” என்று உறுதியளித்தான்.

தண்டோரா போட்ட பிறகு, மஹாராணியை சந்திக்கும் அறுபதாவது நபர் காண்டீபன். இருப்பினும் ஒரு நம்பிக்கையுடன், அவன் உடனடியாக மஹாராணியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மஹாராணி காண்டீபனை கனிவுடன் பார்த்து, “தனக்கு அனைத்து மரியாதைகளும், செல்வங்களும் இருந்தாலும், ஏதோவொன்று தன் மனதை அரித்துக் கொண்டிருப்பதாகவும்…. ஆனால் அது எதனால் என்று தெரியவில்லை என்றும்” புலம்பினாள்.

காண்டீபன் மரியாதையுடன், “ஆம் மஹாராணி, அரசர் தங்களிடம் அபரிதமான பாசத்துடன் இருந்தாலும் மிகப் பெரும்பாலான சமயங்களில் தங்கள் விருப்பம் எது என்று அறிந்துகொள்ள முயற்சிக்காமல், தங்களின் புரிதலை எதிர்பார்க்காது தானே முடிவெடுத்து தன் இஷ்டப்படி செயல்படுகிறார், அது நாட்டின் கல்விக் கொள்கையானாலும் சரி அல்லது தங்களுடன் கலவிக்கு தயாரானாலும் சரி. இதுதான் உங்கள் மனதை வாட்டுகிறது…. நான் சொன்னது சரியா?” என்றான்.

மஹாராணி குரலில் மகிழ்ச்சி பொங்க, “அசுவமேத வீரனே, மிகச் சரியாக சொன்னீர்கள்….மஹாபிரபு, உடனே சற்று வாருங்கள்” என்று கணவரை உற்சாகத்துடன் அழைத்தாள். மன்னர் பராந்தகப் பாண்டியர் உடனே விரைந்து வந்தார்.

மஹாராணி வானவ மாதேவியின் மேலான ஒப்புதலோடு, அடுத்த வாரமே பராந்தகப் பாண்டியரின் ஆஸ்தான ஆலோசகராக காண்டீபன் பதவி ஏற்றுக் கொண்டான். அந்த நிகழ்ச்சிக்கு பல்லவ மன்னன் அபராஜித வர்மனும் நேரில் வந்து சிறப்பித்தான். ஆனால் காண்டீபன் சூனியக்காரிக்கு தான் செய்து கொடுத்த சத்தியத்தை மறக்கவில்லை.

பராந்தகப் பாண்டியர் அனைத்தையும் காண்டீபனின் ஆலோசனைப்படிதான் செய்தார். காண்டீபன் புகழின் உச்சிக்கு சென்றான். பராந்தகப் பாண்டியரின் அரசவை மந்திரிகளில் மூவர் காண்டீபனின் மூன்று சகோதரிகளையும் அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்டனர்.

அன்று இரவு எட்டு மணி. கிருஷ்ணபட்சத்து நிலவு பாலென பொழிந்து கொண்டிருந்தது. காண்டீபன் தன்னுடையை வெள்ளைப் புரவியில் ஏறி ஒருவருக்கும் தெரியாமல் சூனியக்காரியை பார்க்கச் சென்றான்.

அவள் உற்சாகத்துடன், “வருக வருக என் பிராணநாதா, அனைத்தையும் நான் அறிவேன்….தங்கள் புகழ் இனி திக்கெட்டும் பரவும்.” என்றாள்.

“நான் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றவே இங்கு வந்துள்ளேன்.

நாம் எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் ?”

“நம் திருமணத்திற்கு முன் நான் என்னைப்பற்றிய அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடுகிறேன். என்னுடைய உண்மையான வயது இருபது. இரண்டு வருடங்களுக்கு முன், ஒரு முனிவர் என்னை அவருடைய ஆசைக்கு இணங்கத் தூண்டினார். நான் மறுத்ததால் என் தோற்றத்தை வயதானவளாக மாற்றிவிட்டு, என்னை ஒரு தேர்ந்த சூனியக்காரியாக செயல்பட வைத்தார். மழையில் நான் நனைந்தால் மழைக் காய்ச்சலில் இறந்து விடுவேன் என்கிற சாபமும் கொடுத்தார். அதுதவிர, என்று என் அல்குல் மீது ஒரு ஆண்மகனின் சுக்கிலம் பட்டு ஈரமாகிறதோ அன்றே நான் பழையபடி நிரந்தரமாக குமரியாக மாற வாய்ப்புண்டு என்கிற சாபவிமோசனமும் கொடுத்தார். உடனே நான் பயந்து அவரிடமே அதை யாசித்து விமோசனம் பெறுவேன் என்று எதிர்பார்த்தார் போலும்.”

“………………..?”

ஆனால் அந்த ஆண்மகன் என்னை மணந்து கொள்பவனாகத்தான் இருக்கவேண்டும் என்பது என் உறுதியான முடிவு. கண்டிப்பாக நம் திருமணம் இனிதே நடக்கும். ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் உள்ளது. என்னால் தற்போதைக்கு என் சூனிய சக்தியால் மிகச் சில மணிநேரங்கள் மட்டும் குமரியாக மாற முடியும். ஒருவேளை நம் திருமணத்திற்கு பின்பும் முனிவரின் சாபவிமோசனம் பலிக்காவிட்டால், பகலில் நான் உன்னுடன் வெளியே வரும்போது இப்போது உள்ளதுபோல் வயதானவளாக காணப்படுவேன். எனில் இரவில் உன்னுடன் சல்லாபிக்கும்போது அழகிய குமரியாக இருப்பேன். அல்லது நீ விருப்பப் பட்டால் பகலில் அழகிய குமரியாகவும் இரவில் உன்னுடன் படுக்கும்போது வயதானவளாகவும் இருப்பேன். இவற்றில் உனக்கு எது வேண்டும்? இப்போதே சொல்.”

“எனக்கு எதுவும் சரிதான். இதில் உங்களுடைய விருப்பம்தான் என்னுடைய விருப்பமும்.”

அவள் உற்சாகம் கொப்புளிக்க, “நாதா தாங்கள் உண்மையிலேயே பெண்களின் மென்மையான உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து அவர்களின் மனம் கோணாமல் பாசத்துடன் நடந்து கொள்ளும் உத்தம புருஷர்தான்…. உங்களின் இந்த நல்ல குணத்திற்காகவே நம் கலவிக்கு பிறகு எனக்கு நிரந்தர விமோசனம் கிடைக்கும். நம் திருமணத்தின்போது என் சூனிய சக்தியால் நான் குமரியாக காணப்படுவேன், கவலைப்படாதீர்கள்” என்றாள்.

காண்டீபனின் வெள்ளைப் புரவி, அந்த நடுநிசியில் அவர்கள் இருவரையும் சுமந்துகொண்டு மதுரைக்கு விரைந்தது.

அடுத்த வாரம் ஒரு நல்ல முகூர்த்தநாளில் மஹாராணி வனவமாதேவி தாலிக்கொடி எடுத்து கொடுக்க காண்டீபன் திருமணம் சிறப்பாக நடந்தது. மன்னர்கள் அபராஜிதவர்மன், பராந்தகப் பாண்டியன், ஆதித்த சோழன் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

ஆனால் திகைக்க வைக்கும் இப்பேர்ப்பட்ட பேரழகியை காண்டீபன் எங்கிருந்து கவர்ந்து வந்தான் என்று அனைவரும் வியந்தனர்.

அன்று முதலிரவு….

முதலிரவின் கிளர்ச்சியில் அவள் அல்குல் புடைத்து பெருத்து அதன்மீது குதிரைவீரன் காண்டீபனின் சுக்கிலம் தெறித்தவுடன், அவள் பிரமிக்கத்தக்க அழகில் நிரந்தர குமரியானாள். சூனிய சக்தியும் அவளிடமிருந்து மறைந்து இயல்பான வாழ்க்கையை சந்தோஷத்துடன் தொடங்கினாள். .

*** சேரமன்னன் ஒருவனின் மகளான வானவன் மாதேவியின் பெயரால் உருவான ஊர்தான் சேரன்மாதேவி. இன்றளவும் அந்த ஊர் திருநெல்வேலிக்கு அருகில் பிரசித்தியுடன் விளங்குகிறது. 

தொடர்புடைய சிறுகதைகள்
பல வருடங்களுக்கு முன் நான் டைட்டான் வாட்சஸ் கம்பெனியின் பெங்களூர் தலைமையகத்தில் வேலை செய்தபோது என்னுடைய  மேனஜராக லெப்டினன்ட் கேனல் ராஜேந்திர குமார் இருந்தார். அவர் கடைசியாக ராணுவத்தில் லே என்கிற உயரமான இடத்தில் பணியாற்றி வாலன்டரி ஓய்வுபெற்று; அதன்பின் டைட்டான் வாட்சஸ் ...
மேலும் கதையை படிக்க...
தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவில் நடிகர் பிஸ்வஜித்தை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. அவர்தான் தமிழகத்தின் தற்போதைய உச்ச நடிகர். மிகவும் பண்பானவர். கோடி கோடியாக சம்பாத்தித்தாலும், திரைப்படத் துறையில் உள்ள ஏழை எளிய தொழிலாளர்களுக்கு நிறைய வீடு கட்டிக் கொடுத்து அவர்கள் நலம்பெற வாழ ...
மேலும் கதையை படிக்க...
அபிதாவுக்கு சம்யுக்தா அக்காதான் எல்லாமே. அவளுடைய அப்பா ஸ்ரீரங்கம் போஸ்டல் டிபார்ட்மெண்ட்டில் நாற்பது வருடங்களாக அதே வேலையைச் திரும்பச் திரும்பச் செய்து ரிடையர்ட் ஆனவர். அதன்பிறகு தற்போது அனைவரும் சென்னை வாசம். அவர் செய்தது அம்மாவுடன் ஒழுங்காக குடித்தனம் நடத்தி நான்கு பெண்களைப் ...
மேலும் கதையை படிக்க...
என் பெயர் திவ்யா. நான் சாதாரண திவ்யா இல்லை. அழகி திவ்யா. பார்ப்பதற்கு செக்கச் செவேலென்று வளப்பமாக இருப்பேன். என்னுடைய எண்ணங்கள் நிஜமான சுதந்திரமானவை. நான் எனக்காக மட்டுமே வாழ்கிறேன். எந்தச் சமூக மதிப்பீட்டு அளவைகளிலும் எனக்கு மரியாதை கிடையாது. எனக்கு கவலைகள் இல்லை. ...
மேலும் கதையை படிக்க...
அன்று காலை செய்தித்தாளின் முதல் பக்கத்தில், 'காதம்பரி இன்டஸ்ட்றீஸ் சேர்மேன் அன்ட் மானேஜிங் டைரக்டர் சுகுமார் மாரடைப்பால் மரணம்' என்ற செய்தியைப் படித்த டாக்டர் வத்சலா அதிர்ந்து போனாள். உடம்பு பதறியது. சுகன்யாவின் நிலமையை எண்ணி கலக்கமுற்றாள். சுகன்யா... டாக்டர் வத்சலாவின் க்ளினிக் பெங்களூரில் ...
மேலும் கதையை படிக்க...
கைகள்
எழுச்சி
முனைப்பு
நாம் நாமாகவே இருப்போம்
வாடகைத் தாய்

காண்டீபன் மீது ஒரு கருத்து

  1. நிலா says:

    வரலாறு படிக்கும் போது வர்ர சுகமே தனி தான் வரலாறு ஒரு போதை. படிக்க படிக்க அடிமையாக்கிடுது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)