வேலை…!

 

“இங்க பார்டா அநியாயத்தை….” வியப்பில் முணுமுணுத்து தான் விரித்திருந்த தினசரியைத் தூக்கிக் கொண்டு தலைமை இயக்குனர் அறைக்கு ஓடினார் ஏகாம்பரம். வயது ஐம்பது.

இவரும் அவரும் நிர்மல் – விமல் ஏற்றுமதி இறக்குமதி கம்பெனியின் முதலாளிகள். ஆத்மார்த்த நண்பர்கள். ஒரே வயது.

“இந்த விளம்பரம் பாரு!” சொல்லி தினசரியை அப்படியே அவர் முன் விரித்து எதிரில் அமர்ந்தார் இவர்.

சந்திரசேகரன் கண்களில் விளம்பரம் பட்டது.

சின்னக் கட்டம் போட்ட விளம்பரம். அதில் சிறு அளவு புகைப்படத்தில் அழகு அம்சமாய் ஒரு பெண். கீழே….

“பெயர் : நிர்மலாராணி.

படிப்பு : பி.ஏ. கணனி, தட்டச்சு, சுருக்கெழுத்து.

வயது : 25 விதவை. உறவு சனம் இல்லா ஆதரவற்றவள்.

எந்த வேலையும் செய்யத் தயார்.

வேலை கொடுக்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: 810/ 8 , பாரதியார் வீதி, செயின்ட் ஜோசப் அநாதை இல்லம். காரைக்கால். 609 602. கைபேசி எண் : 98897 78688″

“வேலை கொடுக்கிறவங்கதான் விளம்பரம் கொடுப்பாங்க. இவள் வேலைதேடி வித்தியாசமாய் விளம்பரம் கொடுத்திருக்காள்! வேலை இல்லா திண்டாட்டத்தின் உச்ச கட்ட கொடுமை இது. பரவாயில்லே. புத்திசாலி!!” மெச்சிய சந்திரசேகரன்…..

“ஆமா…இதை ஏன் என்கிட்டே காட்டினே…?” கேட்டு எதிரில் அமர்ந்திருந்த நண்பனைப் பார்த்தார்.

“வேலை கொடுக்க…”

“நம்மகிட்டேயா…? என்ன வேலை…?”

“அதான் யாதும் ஊரே யாவரும் கேளீர் – பாணியில் எந்த வேலையும் செய்யத் தயார்ன்னு சொல்லி இருக்காளே…!” விஷமமாய்ச் சிரித்து கண்ணடித்தார் ஏகாம்பரம்.

சந்திரசேகரனுக்கு அதன் அர்த்தம் புரிய…உடலின் சூடு விர்ரென்று ஏறி 100த் தொட்டது.

“அப்போ உடனே தொடர்பு கொண்டு ஆளை வரவழை!” சொன்னார்.

ஏகாம்பரம் தினசரியை எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றார்.

மறுநாள் காலை மணி 10.00

தள தள மேனி. தக்காளி நிறம். எம்மதமும் சம்மதமான முகமென்பதால் நெற்றியில் திலகம் இல்லாதது பெரிய குறையாய்த் தெரியவில்லை. அது அவள் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் அழகாக இருந்தது. முகத்தில் மெல்லிய சோக இழை மட்டும் இல்லை என்றால் இவள் விதவை என்று யார் சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள்.

எதிரில் வந்து நின்ற அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே அளவெடுத்துவிட்டார் சந்திரசேகரன். அருகில் ஏகாம்பரம்.

“உட்காரும்மா…”சொன்னார்.

அமர்ந்தாள்.

கைநீட்டி கோப்புகள் கொடுத்தாள்.

வாங்கி படிப்புகளைப் பார்த்தவர். முகத்தில் திருப்தி.

அதை அப்படியே அருகிலிருந்த நண்பன் கையில் நகர்த்தினார். பார்த்த அவருக்கும் திருப்தி.

“உன் விளம்பரத்தில் கண்டது போல எந்த வேலையும் செய்யத் தயாரா..?” ஏகாம்பரம் கேட்டார்.

“தயார் சார்..!”

நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“உனக்கு வேலை தர்றோம். அதுக்கு முதல் வேலையாய் உன் இருப்பிடத்தை எங்க குவார்ட்டரசுக்கு மாத்தனும்…”

“சரி சார்!!” நிர்மலாராணியின் முகம் பிரகாசமானது.

‘வேலை கொடுத்தாச்சு. என்ன வேலைன்னு சொல்லனுமே..!’ – சந்திரசேகருக்குள் யோசனை.

“ஆமாம். இப்படியொரு விளம்பரம் குடுத்திருக்கிறீயே..! இது யார் கொடுத்த யோசனை…?” ஏகாம்பரம் நாசூக்காக பேச்சை ஆரம்பித்தார்.

“வேலை தேடி அலுத்துப்போன விரக்த்தியில் நானே இப்படி கொடுத்தேன் சார்.”

“புத்திசாலித்தனமா யோசனை. ஆனா…”

“என்ன சார்…?”

“எங்களை மாதிரி நல்லவர்கள் கண்ணில் பட்டதால் இது மாதிரி உட்கார்ந்து பேசுறே. கெட்டவர்கள் கண்ணில் பட்டிருந்தால்..?”

‘ஏகாம்பரம் கோத்து வாங்கி ஆளை வழிக்குக் கொண்டு வரப் பார்த்து சேதியைச் சொல்லப்போகிறார்!’ – சந்திரசேகருக்குத் தெளிவாகத் தெரிந்தது.

நிர்மலாராணி யோசனையாய்ப் பார்த்தாள்.

“நேர்முகத் தேர்விற்குன்னு உன்னை இப்படி அழைச்சி தொட்டிழுத்தான்னா…?!” ஏகாம்பரம் கொக்கியைப் போட்டார்.

“வெட்டிடுவேன் சார்!” ராணி சடக்கென்று பதில் சொன்னாள்.

கேட்ட இருவருமே துணுக்குற்றார்கள்.

‘படுப்பேன் சார்ன்னு சாதகமான பதில் வரும் என்று எதிர்பார்த்தால்…!’ – சந்திரசேகரன் சமாளித்துக்கொண்டு…

“என்ன! இப்படி எதிர்பார்த்து கையில் கத்தி கபடா தயாரா எடுத்து வந்திருக்கியா ..?” கேட்டார்.

“இல்லே சார்!”

“பின்னே..?”

“கராத்தே தெரியும். சின்ன வயசுலேயே கத்திருக்கேன். தொட்ட அடுத்த வினாடியே அவனுக்கு மரண அடி!” சொன்னாள்.

இருவரும் அரண்டார்கள். உள்ளுக்குள் வேர்த்தார்கள்.

‘ஆளைத் தொடமுடியாது. அந்த தைரியத்தில்தான் இவள் துணிந்து இப்படியொரு விளம்பரம் கொடுத்திருக்காள். வேலை தருகிறேன் என்று சொல்லி இப்போது இல்லை என்று சொல்லி அனுப்புவது சரி இல்லை!’ அவர்கள் மனதில் ஓட…

“என்ன வேலை சார்..?” ராணியே அவர்களைப் பார்த்துக் கேட்டாள்.

“கணனி ஆப்ரேட்டர் வேலை!” ஏகாம்பரம், சந்திரசேகரன் இருவரும் ஏககாலத்தில் சொன்னார்கள்!! 

தொடர்புடைய சிறுகதைகள்
காலை முகூர்த்தத்திற்கு மண்டபம் சந்தடியின்றி இயங்கிக்கொண்டிருந்தது. மணமகள் அறையில் மணப்பெண் மல்லிகா மட்டும் நிலைகொள்ளாமல் தவித்தாள். இவள் கண்களுக்குப் படுகிறமாதிரி சுவர் ஓரம் சேகர் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான். அவனை அப்படிப் பார்க்கப் பார்க்க இவளுக்குள் ஏகத்துக்கும் எரிச்சல், கோபம் ! ' தன்னை, இவன் பலி பீடத்தில் ...
மேலும் கதையை படிக்க...
குற்றமுள்ள நெஞ்சு... சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, சந்திரன் மேசை மேலிருந்த புது பென்சிலை இயல்பாக எடுத்து பாக்கெட்டில் வைத்தான். நேற்றுதான் வேலைக்கென்று மேசைக்கு ஆறு பென்சில்கள் நிர்வாகம் கொடுத்தது. அதில் ஒன்று... இப்போது சுவாகா ! 'அப்பாடா!' - என்று நிமிர்ந்து பார்க்கும்போது சிவா ...
மேலும் கதையை படிக்க...
1 இரவு மணி 10.00. கட்டிலில் நீண்டு மல்லாந்து படுத்திருந்த நிர்மல் வயது 45. இப்போதுதான் ஒரு தெளிவு, தீர்க்கமான முடிவிற்கு வந்து அருகில் படுத்திருந்த மனைவி நித்யாவைப் பார்த்தான். அவள் கருமமே கண்ணாய்ப் புத்தகத்தில் மூழ்கி இருந்தாள். எலுமிச்சை நிறம். அழகான வட்ட ...
மேலும் கதையை படிக்க...
"வடிவேலு ! உனக்குப் பொம்பளைப் புள்ள பொறந்திருக்காம்...! சேதி வந்திருக்கு..."தாய் வள்ளிக்கண்ணு கைபேசியை அணைத்து விட்டு வந்து மகிழ்ச்சியாய்ச் சொல்ல... மூன்று சக்கர வண்டியில் அமர்ந்து ராட்டை உருட்டிக்கொண்டிருந்த அவனுக்குத் திக்கென்றது. "இரு. நான் போய் பார்த்துட்டு வர்றேன் ! "அவள் இவன் ...
மேலும் கதையை படிக்க...
கோட்டுச்சேரியையும் நெடுங்காட்டையும் இணைக்கும் ஆறு கிலோ மீட்டர் சாலை... காவிரியின் கிளை நதியான நாட்டார் வாய்க்கால் என்னும் ஆற்றை ஒட்டியது. ஆற்றைப் போலவே வளைந்து நெளிந்து செல்வது. அந்த சாலையின் இருபுறங்களிலும் கட்டி அணைக்க முடியாத அளவிலான பெரிய புளிய மரங்கள். எல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
கதிர்வேலுவிற்குச் சங்கடமாக இருந்தது. எப்படி யோசித்தும் மனம் சமாதானமாகவில்லை. மனதளவில் நிறையவே நினைத்து நொந்தான். அலுவலகம் விட்டு முகம் தொங்கி, வாடி, வதங்கி... வீடு திரும்பினான். மாலாவிற்கு கணவனைப் பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. ஒருநாள் கூட இப்படி சோர்ந்து, சோம்பி, துவண்டு ஆள் வீடு திரும்பியதில்லை. "என்னங்க...?"பதறி துடித்து ...
மேலும் கதையை படிக்க...
மடியில் ஐந்து மாத பெண் குழந்தையுடன் கூனிக் குறுகி அந்த காவல் நிலையத்தின் மூலையில் அமர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் பத்மினி. எல்லாம் விதி. ஒரு பாவமும் அறியாத அவளை.....விடுதி சோதனைக்கு வந்த காவலர்கள்...'தப்பானவள்'என்று கருதி இழுத்து வந்து விட்டார்கள். லாட்ஜ் பொறுப்பாளரும் அறை ...
மேலும் கதையை படிக்க...
கைபேசி அலறியது. எடுத்துப் பார்த்த சேகர் முகத்தில் பிரகாசம். மாலதி.! தலைப் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குச் சென்றவள். வீட்டை விட்டு வெளியே வந்து.... ''சொல்லு மாலதி ? '' குசுகுசுத்தான். ''உன் பிள்ளை வயித்தை விட்டு சீக்கிரம் வெளியே வர பாடாய்ப் படுத்துது.'' ''சந்தோசம். உன் புருசன் வந்து ...
மேலும் கதையை படிக்க...
வினிதா வீட்டில் துடைத்து வைத்தாற்போல் நாதிகள் இல்லை. நானும் அவளும் வெகு அருகில் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். சில பல வருடங்களுக்குப் பிறகு.... சற்று முன் இப்போதுதான் நானும் வினிதாவும் எதிர்பாராத விதமாக கடைத்தெருவில் சந்தித்தோம். இருவரும் தனித்தனி ஆளாக நின்றதால் அறிமுகப் புன்னகை. '' நலமா..? '' ...
மேலும் கதையை படிக்க...
சண்டை போட்டா வீட்டுக்காரியைச் சரி படுத்தத் தெரியனும்.! இல்லேன்னா வில்லங்கம், விவகாரம், விவாகரத்து ! - இதுக்குப் பயந்துக்கிட்டுத்தான் இத்தினி காலமா பொண்டாட்டியோட சண்டை போடாமல் இருந்தேன். ஆனாலும் எத்தினி காலத்துக்குத்தான் இப்படி இருக்க முடியும்..? நேத்திக்கு முதல் நாள். முந்தாநேத்து. எனக்கும் என் ...
மேலும் கதையை படிக்க...
முறை மாமன்..!
ஒரு ஆரம்பம் இப்படி…
அப்பாவைத் தேடி…
பயம்
ரகுபதி..!
தப்பு!
மதிக்காததற்கு மரியாதை..!
கண்டிப்பு..!! – ஒரு பக்க கதை
நேற்றைய தவறுகள்… இன்றையத் திருத்தங்கள்
மனைவியை நைஸ் பண்ணத் தெரியனும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)