வேலை – ஒரு பக்க கதை

 

‘’காய்கறி கடைக்கெல்லம் போக மாட்டேன்னா போகமாட்டந்தான். மார்க்கெட்ல என் ஃப்ரெண்ட்ஸ் பார்த்தா என்ன நினைப்பாங்க?’’

இந்த வேலையெல்லாம் இனிமே எங்கிட்டே சொல்ற வேளையே வச்சுக்காதே. எத்தனை தடவை சொல்றது….ச்சே’’

‘’அப்போ, சாப்பாட்டுக்கு ஊறுகாதான்’’

‘’அதை அப்பாவுக்கு வை. நான் ஹோட்டல்லே சாப்பிடுறேன்’’

‘’ம்..தலையெழுத்து. வீட்டைப் பார்த்துக்கோ….நான் போய் வர்றேன்!’’ தலையில் அடித்துக்கொண்டு தாய் கடைக்குப் புறப்பட்டாள்.

மகன் கல்லூரிப் படிப்பு முடித்lதும் கேட்டரிங் டிப்ளமா முடித்தான். ஒரு ஸ்டார் ஹோட்டலில் வேலை கிடைத்தது. அப்பாயின்மெண்ட ஆர்டரோடு வீட்டில் நுழைந்தான்.

மார்க்கெட்டிங் வேலை. அன்றாடம் சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை வாங்கிக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு அவனுடையது..!

- புதுகை சந்திரஹரி (திசெம்பர் 2010) 

தொடர்புடைய சிறுகதைகள்
நீலகண்ட பாகவதர் தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தார். ஸ ஸ நி ஸா! ஸா நீ ஸா! கம்பீரமான குரல் வளம், நன்றாக ஸ்வரம் பாடும் திறமை எல்லாம் இருந்தும் அவர் பிரபலமாகாததற்குக் காரணம் தஞ்சாவூரை விட்டு அவர் வர மறுத்தது ...
மேலும் கதையை படிக்க...
“தயவுசெய்து என்னைச் சுதந்திரமாக இருக்க விடுங்கள்…” மடக்கிப் போட்ட இரண்டு வரி விளம்பரத்தை தினசரிகளுக்கு வழங்கியிருந்தான் அச்சுதன். கீழே பெயரோடு சரி. முகவரி கொடுக்கவில்லை. அட்ரஸ் இல்லாம எப்டி சார்? என்றார்கள் பத்திரிகை ஆபீஸில். என் முகவரியை தர்றேன்ல அத்தோட விடுங்க…என்றான். எதற்காக இப்படிச் ...
மேலும் கதையை படிக்க...
தினசரி வேலைத் தளத்தில் நரசய்யா பற்றிய புகார்கள் பெருகிக் கொண்டிருந்தன. தனபாலுக்கு அவனை என்ன செய்வதென்றே புரியவில்லை. என்னதான் கண்டித்தாலும், புத்தி சொன்னாலும் அமைதியாக பாவம் போல் பார்த்துக் கொண்டு நிற்பவனை என்னதான் செய்வது? கடந்த மூன்று தினங்களாக அவன் வேலைக்கும் வரவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
மூலக்குறிப்பேட்டிலிருந்து.......... அப்ப காங்கிரசிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாறின நேரம். மதுரையில எம்.எஸ்.ஓன்னு மாணவர் சங்கம் ஆரம்பித்திருப்பதாகவும், உதவிக்கு தோழர்கள் தேவைப்படுவதாகவும் ஜில்லா கமிட்டித் தோழர் சொல்லியிருந்தாராம். நான் போனால் நல்லது என்று உள்ளுர் கமிட்டித் தோழர் சொன்னார். ‘நானோ நாலாங் கிளாஸ் தாண்டாதவன். படிப்பை ...
மேலும் கதையை படிக்க...
வேதாந்தம்
பாரில் நின் பாதமல்லால் பற்றிலேன் பரம மூர்த்தி - தொண்டரடிப்பொடி ஒரு காலகட்டத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் (சாஸ்திரி, பக்தவத்சலம்) இருக்கும்போது இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது தமிழகத்தில். துப்பாக்கிச் சூடு, கடையடைப்பு, ராணுவம் வந்து ரகளை எல்லாம் இருந்தது. ஸ்ரீரங்கத்திலும் ...
மேலும் கதையை படிக்க...
நிஸ நிஸ…
த்ரில்…!
துரத்தும் நிழல்
காலச் செரிமாணம்
வேதாந்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)