வேலை – ஒரு பக்க கதை

 

அழுக்கேறிய பேண்ட், கிழிந்த சட்டை, பரட்டைத் தலை, நீண்ட தாடி என்று பார்க்கவே அருவருப்பாக இருந்தவனை காரில் உட்கார்ந்தபடியே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் மனோகர்.

காரின் அருகில் வந்து நின்றவனுக்கு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து அவனுக்கு கொடுக்கும்படி தன் டிரைவரிடம் கொடுத்தான்.

டிரைவர் கொடுத்த ரூபாய் நோட்டை வாங்கியவன் அதில் சில வாசகங்கள் எழுதி டிரைவரிடம் திருப்பிக் கொடுத்தான். ஆச்சரியத்துடன் வாங்கிய டிரைவர் அதை மனோகரிடம் கொடுத்தான்.

அதில், “நான் தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற பட்டதாரி. எனக்கொரு வேலை தாருங்கள்’ என்று எழுதியிருந்ததைப் படித்த மனோகர் கனத்த மனதோடு தன் விசிட்டிங் கார்டை கொடுத்து ஆபிசில் வந்து பார்க்கும்படி கூறினார்.

பைத்தியக்காரனுக்கு வேலை கொடுக்கப் போகும் முதலாளியை நினைத்து சிரித்தான் டிரைவர். தாடிக்கார தமிழ்ப் பட்டதாரியும், தன் முதலாளியும் ஒன்றாகப் படித்தவர்கள் என்பதை அறியாமல்!

– கே.எஸ். சம்பத்குமார் (ஜூலை 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
மாலை வெய்யில் அவள் முகத்தில் விழுந்து அவளின் வருத்தத்தை எதிரில் இருக்கும் வாலிபனுக்கு காண்பித்தது இப்பொழுது ஏன் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறாய்? ஒன்றை புரிந்து கொள், வீரனுக்கு மனைவியாக வேண்டுமென்றால் தைரியமான பெண்ணாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள். போருக்கு போவதை வீரம் என்று ஒத்துக்கொள்கிறேன், ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: புதுமைப்பித்தன். டெலிபோன் மணி காதை அறுத்தது. ஸ்ரீமான் சுந்தரம்பிள்ளை பம்பாய் சர்க்கார் மின்சாரத்திட்ட அறிக்கையில் மூன்றாவது பக்கத்தில் நான்காவது பாராவை மொழி பெயர்த்து எழுதி, 'இருக்கிறது' என்று போட்டு முடித்தார். டெலிபோன் மணி விடவில்லை. காதை அறுத்துக் கொண்டிருந்தது. மேஜையிலிருந்து எழுதின கடுதாசிகளைக் கம்போஸிங் ரூமுக்கு எடுத்துச் ...
மேலும் கதையை படிக்க...
காலை நேரப் பாடங்களை முடித்துக் கொண்டு மதிய உணவிற்குத் தயாராகிக் கொண்டிருந்த சீடர்களைப் பார்த்துக் குரு கேட்டார், “நீங்கள் மனிதர்களைப் போல் சாப்பிட விரும்புகிறீர்களா? அல்லது மிருகங்களைப் போலவா?’ என்றார். இதென்ன கேள்வி? நாங்கள் மனிதர்கள். விலங்குகளைப் போல் ஏன் சாப்பிட வேண்டும்? “மனிதர்களைப்போல்தான்!’ என்று ...
மேலும் கதையை படிக்க...
பரிசும் தரிசும்!
வாழைத்தோப்பு, மிக்க குளுமையுடன் நாத முனியை வரவேற்றது. நெருக்கமான வாழைகள், தன் காலுக்குக் கீழே, ஏகப்பட்ட குட்டி வாழைகளுக்கு இடம் கொடுத்து, வாழையடி வாழையாக பல்கிப் பெருகி நிற்கும் வாழைப் பரம்பரை. தன் இலை, கனி, காய், பூ, நார், மடல் என்று, சகலத்தையும் ...
மேலும் கதையை படிக்க...
அன்று வங்கியில் நல்ல கூட்டம். ”சார்…! கீழே பாருங்க… ஐநூறு ரூபா நோட்டு ஒன்றைத் தவற விட்டுட்டீங்களே…” பென்சன் பணம் இருபதாயிரத்தை எண்ணிக்கொண்டிருந்த சந்திரசேகர், உடனே பரபரப்பு தோன்றினாலும், சட்டென சுதாரித்துத் திரும்பி அவனை ஏறிட்டார். மனதிற்குள்… ”இப்படி எத்தனை பேரை பற்றிக் கேள்விப்பட்டிருப்பேன்… ஒரு ...
மேலும் கதையை படிக்க...
வெளியில் வராத பெண்களின் சுதந்திர போர்
கருச்சிதைவு
யாரைப் போல் சாப்பிடுவீங்க? – ஒரு பக்க கதை
பரிசும் தரிசும்!
ஐநூறு ரூபாய் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)