Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

வேலியே பயிரை மேய்ந்தாற் போல – ஒரு பக்க கதை

 

ஒரு நகரத்தில் ”மிஸ்டர் விக்னேஷ்” என்ற ஒருவர் இருந்தார். அவர் மின்சாரத் துறையில் அலுவலராக பணிபுரிகிறார். குடும்பத்தலைவர். இரு பெண் பிள்ளைகளைப் பெற்றவர். வயது 45 ஆக இருக்கும்.

இவரை அவர் தெருக்கார்கள் எல்லாம், மிஸ்டர், சார், என்றே அழைப்பார். அவர் பார்ப்பதற்க்கு பெரிய தொழில் நுட்ப முதலாலி போல் இருப்பவர். ஏனென்றால், தன் ஆடைகள் அவ்வாறு நேர்த்தியாக இருக்கும்.

ஒருநாள் இவர் மூத்த மகள் கல்லூரி படிப்பிற்காக பணம் தேவைப்பட்டது. வெளியே இவர் கடன் ஏதும் வாங்கி பழக்கம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் ஒரே குழப்பமாக இருந்தார்.

இதனால் தினமும் வீட்டில் சண்டை ஏற்பட்டுக்கொண்டே இருந்தது.

இவர் அதனை நினைத்தப்படியே அலுவலகத்தில் வேலைசெய்து கொண்டு இருந்தார்.

மறுநாள் ‘மிஸ்டர் விக்னேஷ்’ வேலைக்கு செல்லும் போது, தன் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் சிதம்பரம், அவர் அருகே வந்தார்.

சிதம்பரம் “நாங்கள் குடும்பத்துடன் வெளியூருக்குச் செல்கிறோம். வருவதற்கு ஒரு வாரம் ஆகும். அதனால் எங்க வீட்டு கரண்டு பில் நீங்க கட்டிருங்க சார்” ன்னு சொல்லி பணமும் ,புக்யும் கொடுத்தனர்.

இவர் அதை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது அவர் யோசித்தப்படியே பணத்தை வைத்து இருந்தார்.

மதியம் ஆனது, கட்டலாமா? வேண்டமா? என்று அவர் மனதில் ஒரே குழப்பம்.

“வீட்டில வேற மூத்த புள்ளைக்கு காலேஜ் பீஸ் கட்டணும், சிதம்பரம் வர ஒரு வாரம் இருக்கு அதுக்குள்ள நாம கரண்டு பில் கட்டிரலாம். என்று யோசித்தப்படி அவர் அந்த பணத்தைத் தன் பேண்ட் பாக்டை விட்டு எடுக்கவே இல்லை.

மாலை வரை ஒரே பதற்றடத்துடனும், பயத்துடனும் இருந்தார்.

ஒருவேலையாக அலுவலகம் முடிந்தது.

வீட்டிற்கு மிக வேகமாக தன் ஸ்கூட்டர் வண்டியை எடுத்துக்கொண்டு சென்று கொண்டு இருந்தார்.

மனதில் மகளுக்கு பணம் கொடுத்து விடலாம். என்ற சந்தோஷம் ஒரு புறத்தில் இருக்க, “இந்த பணம் ஏது என்று பொண்டாடி கேட்ட என்ன சொல்லறது” என்று யோசித்தப்படி வண்டியை ஓட்டினார்.

அவர் வீட்டிற்கு வந்தவுடன் தான் வைத்திருந்த பணத்தை எடுத்து தன் மனைவியிடம் தந்தார்.

மனைவி, “ஏதுங்க உங்களுக்கு இந்த பணம்” என்று கேள்வி கேட்க தொடங்கினாள்.

மிஸ்டர் விக்னேஷ், “உனக்கு அது எல்லா எதுக்கு டி, இந்த பணத்தை வைத்து மூத்த மக கல்லூரிக்கு பணம் கொடுத்துரு” என்று அதட்டினார் .

அவள் மனைவி திரும்ப திரும்ப கேள்வி கேட்டதால், அவர் உண்மையைக் கூறிகிறார்.

மிஸ்டர் விக்னேஷ், “இந்த பணம் சிதம்பரத்தோடது, அவர் கரண்ட் பில் கட்ட தந்தாரு, ஆனா அவரு வெளியூருக்கு போயிட்டு வர நாள் ஆகும் ன்னு சொன்னாரு, அத நா அப்றோம் கட்டிக்கலாம் ன்னு அந்தப் பணத்த உங்கிட்ட கொடுத்த, என்கிறார்.

மனைவி, “இது உங்களுக்கே நியாமா இருக்கா, வேலியே பயிரை மேய்ந்தாற் போல இருக்கு நீங்க பண்ணுனது, உங்கல நம்பி தந்தாரு இப்படி செய்யறது, நியாமா, அந்த பணமே வேண்டாங்க, நா வீட்டு செலவுக்கு வைச்சு இருக்கற பணத்த மூத்த மக காலேஜ்க்கு தந்தற, நீங்க இத உங்க ஆபிஸ்ல கட்டிருங்க” என்று, அவர் திருந்தும் படி புத்திமதி சொல்கிறாள்.

மிஸ்டர் விக்னேஷ் திருந்தினார்.

மறுநாள் முதல் வேலையாக ஆபிஸ்க்கு சென்று, சிதம்பரத்தோட பணத்தைக் கட்டினார்.

இதில் அவருக்கு ஒரு ஆனந்தம் கிடைத்தது. பயமில்லாமல் தன் பணியைத் தொடர்ந்தார்.

நீதி: வளரும் சமுதாயத்தில், இம்மாதிரியான நிகழ்வுகள் நடைப்பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. பொறுப்புள்ளவர்கள் அவர் கடமையில் சரியாக (ஊழல், திருட்டு, பொய் இல்லாமல்) நடந்தால், அனைவருக்கும் நன்மையே நடக்கும். 

தொடர்புடைய சிறுகதைகள்
ஜூன் 6 தேதியைக் கிழிக்கிறான் வளவன். அழகான பெயர் ,பெயர்க்கு ஏற்றவாறே அழகும், அறிவும் கொண்டவன். அவனுக்கு இன்று முதல் நாள் கல்லூரி. ‘’அம்மா போய்ட்டு வரேன்’’ ,என்று சொல்லி எழுதாத புதுநோட் மட்டும் எடுத்துச் சென்றான்.. “டேய் நில்லுடா”……………. அம்மா வாசலில் வந்து ...
மேலும் கதையை படிக்க...
மூன்று வருடங்கள் கழித்து கலைவாணி கல்லூரி படிப்பை முடித்து விட்டு, தன் ஊரான மேட்டுப்பாளையம் வருகிறாள். அதனால் அவள் அப்பா ரயில்வே ஸ்டேசன்லில் காத்திருக்கிறார். கோயம்புத்தூர் ரயில் சற்று நேரத்தில் மேட்டுப்பாளைத்திற்கு வரும் என்று அறிவித்தனர். அங்கு இருந்த டிவியில், “சாமூத்திரிக்காப் பட்டு சர்வ ...
மேலும் கதையை படிக்க...
“அண்ணா, அண்ணா” ஸ்கூலுக்கு டைம் ஆச்சு போலய்யா? என்று கனிமொழி அண்ணாவை எழுப்பினாள். அன்பான தங்கை நன்றாகப் படிப்பவள், பத்தாவது படிக்கிறாள். அமைதியான பெண். அண்ணன் மீது பயமும் அன்பும் வைத்திருப்பாள். ஒழுக்கமான பெண். ஆனால், அண்ணன் கதிர் அப்படி இல்லை, அவளுக்கு நேர்மாறாக ...
மேலும் கதையை படிக்க...
“அப்பா, அப்பா இன்னைக்கு நம்ம தாத்தா, பாட்டியைப் பார்க்க போறாமா? அவங்க ஊர் எப்படி இருக்கும் அப்பா? சொல்லுங்க பா? சொல்லுங்க? என்று வினாவினாள், ஐந்து வயது சிறுமி ஊர்மிளா. “அதுவா, நம்ம அங்க தான, போறோம் நீயே பாப்ப! என்று அவளை ...
மேலும் கதையை படிக்க...
“மை டியர் மச்சா, நீ மனசு வைச்சா”..... என்று பாடல் வீட்டு டிவியில் ஓடிக்கொண்டு இருந்தது. அதை ரசித்தப்படியே கண்ணாடியில் தலைசீவிக் கொண்டிருந்தான் அசோக். டிபன்பாக்ஸில் தக்காளிசாதம் போட்டு மூடிக் கொடுத்தாள் அவன் அம்மா பார்வதி. அவன் பேக்யை மாட்டிக்கொண்டு சீப்பு ...
மேலும் கதையை படிக்க...
(சங்க இலக்கிய பாடலில் சிறுகதை) “வள்ளி, என் மகள் தாமரையைப் பாத்தியா” என்ற கேள்வி கேட்டப்படியே தாமரையைத் தேடி செல்கிறாள் சித்தி துளசியம்மாள். இவள் யாரு எதற்கு தாமரையைத் தேடிகிறாள். தாமரை யாரு? அவளுக்கு என்ன ஆச்சு? என்பதைக் இக்கதையில் காண்போம். துளசியம்மாள், கூலி வேலைக்காரி, ...
மேலும் கதையை படிக்க...
(சங்க இலக்கிய பாடலில் சிறுகதை) கொராணா வைரஸ் சமீக காலத்தில் அதிகம் பரவி வருகிறது. அதனால் அதிக மக்கள் உயிரிழந்தனர். ஆகையால் அரசு உள்ளிருப்பு சட்டம் கொண்டு வந்தது. இதனால் மக்கள் அனைவரும் வெளியே வராமல் வீட்டிற்குள் அடைந்து கிடந்தனர். கல்லூரி விடுமுறை ஏப்ரல் ...
மேலும் கதையை படிக்க...
எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறாள் செல்வி. நன்றாக படிப்பவள். அவளுக்கு வீட்டில் சில பிரச்சனைகள், அவள் தந்தை மது அறுந்துபவர். அதைத் தவிற அவளிடம் தவறாகவும் நடந்து கொள்ளக் கூடியவர். அவள் அம்மா வீட்டு வேலைக்கு செல்பவள். அவள் அம்மா தான் ...
மேலும் கதையை படிக்க...
விக்னேஷ், என்ற ஒரு சிறு வயது சுட்டிப் பையன் ஒருவன் இருந்தான். அவனை எல்லோரும் விக்கி என்று அழைப்பார்கள். அவனுக்கு செல்லப் பிராணிகள் என்றால் ரொம்ப பிடிக்கும். நாய் பூனை எதுவாக இருந்தாலும் எடுத்து வளர்த்துவான். அவனுக்கு வீட்டிலும் தடை இல்லை. ஒருநாள், ...
மேலும் கதையை படிக்க...
அரசபுரம் என்ற ஊரில் பசுமையான வயல்களும், செல்வ செழிப்போடும் மக்கள் அனைவரும் வாழ்ந்து வந்தனர். அவ்வூரில் உள்ள பெரிய குளத்தில் என்றுமே மீன்கள் நிறைந்து இருக்கும். அந்நாட்டு அரசன் ஒரு நாள் அந்த குளக்கரைக்கு வந்தான். சோர்வு மிகுதியால், அக்குளத்திற்கு சென்று ...
மேலும் கதையை படிக்க...
முதல் நாள்
காதல் – சாதல்
கண்ணோட்டம்
எண்ணம்
மூன்று மாசம்
சித்தியின் தேடல்
நிலைமை
இப்படியும் ஒரு தந்தை
கினிம்மா – ஒரு பக்க கதை
தங்க மீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)