Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வேதாந்தா இல்லம்

 

ஒரு காலத்தில் சமஸ்கியா என்ற ஊர் இருந்தது அதில் 28 கிராமங்கள் .அதில் ஒரு கிராமம் பெயர் அமிழ்தம் 30 பஞ்சாயத்துகளை கொண்டது.அமிழ்தமில் இரு வேறு நாட்டாமைகள் மாறி மாறி ஆட்சி செய்வர் ஆனால் யாரும் நல்லது செய்ததில்லை.அதில் ஒரு பஞ்சாயத்தின் பெயர் இருடிசோளம் கடற்கரையால் சூழ்ந்தது.அந்த ஊரில் புகழ் பெற்ற குடும்பத்தின் பெயர் வேதாந்தா இல்லம்.பெரிய கூட்டு குடும்பம் அது அதன் குடும்ப தலைவி சுசிதா 67 வயதாகிறது.இவரின் மகன்கள் ஜெயராம் கிளாஸ்டின் சண்முகம் ஆண்டனி செல்வராஜ் வினிதா.வினிதாவின் கணவர் இறந்துவிட்டார் ஒரே மகள் வெனிஸ்டா மட்டும்தா புத்திசாலியான 14 வயது சிறுமி.ஆண்டனியின் மகன் தமிழரசன் 25 வயது இளைஞன்.கிளாஸ்டின் மகன் மணிராஜ.; இவர்கள்தான் இப்போது வேதாந்தா இல்லத்தில் இருந்தனர்.சுசிதாவின் பேரன் பேத்தி பலர் வெளியூரில் வேலை செய்துக்கொண்டிருக்கின்றனர். ;.அந்த பஞ்சாயத்து ஒரு விவசாய நிலத்தை தன்வசம் வைத்திருந்தது.அது அனைவருக்கும் சொந்தமானது கடலுக்கு செல்லும் மீனவர் உட்பட. வேதாந்தா குடும்பமே அதை மேலாண்மை செய்கிறது ஏனெனில் வயலும் வேதாந்த இல்லமும் அருகருகே இருக்கிறது.

இவர்கள்; குடும்பம்தான் மகிழ்ச்சி என்னும் தாயின் மடியில் தழுவும் நிரந்தர செல்ல மகள்.

வெனிஸ்டா 14 வயதானாலும் குழந்தை மனம் மாறாதவள். பாட்டிக்கும் அம்மாவிற்கு தெரியாமல் பண்ணையில் உள்ள பசுக்களின் பாலை கன்று போல் பசுவின் மடியிலிருந்தே குடிப்பாள்.பசுவும் அவள் தாயே.இம் முறை அப்படி குடித்துகொண்டே இருந்த போது அம்மா குச்சியை தூக்கி கொண்டு ஒடி வந்தாள்.வினிதாவை பார்த்து வெனிஸ்டாவும் ஒட ஆரம்பித்தாள்.வீட்டை சுற்றி சுற்றி ஒடினாள் வெனிஸ்டா. எப்போதும் இதுதான் பழக்கம் பாட்டியோ அம்மாவோ துரத்தினால் வெனிஸ்டா வீட்டை சுற்றி ஒடிக்கொண்டே இருப்பாள் அவர்களாலும் பிடிக்க முடியாது களைத்துபோய் அமர்ந்து விடுவர்.அப்போதும் அவள் வீட்டை சுற்றி ஒடிக்கொண்டிருப்பாள்.இம்முறை சுதாரித்து கொண்ட வினிதா அப்படியே நின்று விட்டாள் எப்படி சுத்தி ஒடினாலும் இப்படிதான வரணும் என்று சுவரோரம் ஒளிந்து கொண்டால் ஒரு நிமிடம் ஆகியும் வரவில்லை சுவரோரத்தில் இருந்தபடியே எட்டிபார்த்தாள் வயலருகே நின்றுக்கொண்டு கொக்கானி காட்டிக்கொண்டு ஒடினாள் வெனிஸ்டா.தாயும் மகளும் வயலில் ஒடிபுடிச்சு விளையாடினர்.ஒடிக்கொண்டு இருக்கும்போது வெனிஸ்டா கால் இடறி கீழே விழுந்தாள்.வினிதா பதறி போய் வெனிஸ்டாவை தூக்கி தன் மடியில் கிடத்தி எங்க அடிபட்டுச்சு எங்க அடிபட்டுச்சு என பதறி போய் கேட்டாள்.வெனிஸ்டா ஒன்னுமில்லை என கூறி சிரித்தாள் வினிதாவும் சிரித்தாள்.இதை பார்த்த ஊர்க்காரர்களும் புன்முறுவல் பூத்தனர்.

மணிராஜும் தமிழும் ஒன்றாகவே சுற்றுவர்.கடந்த சில காலமாக மணி எங்கோ நழுவிக்கொண்டே இருந்தான்.தமிழ் அவன் நடவடிக்கையை கூர்ந்து கவனித்தான்.ஒரு முறை கபடி விளையாண்டு முடித்து கோயில் தெரு வழியே நடந்து கொண்டிருந்தனர் .அப்போது “டே தமிழு என்னோட இத விட்டுட்டு வந்துட்டன்டா” என சொன்னான் மணி “எத விட்டுட்டு வந்த” என சூசகமாய் கேட்டான் தமிழ். “இல்ல நீ முன்னாடி போ நா வரேன்” என்று கூறி ஓட ஆரம்பித்தான். “பத்தரமா போய்டு வா” என கத்தினான் தமிழ்.

கோயில் தெருவின் கிழக்குபுறம் கயல் சைக்கிளை மெதுவாக உருட்டிக்கொண்டு வந்தாள் யாரையோ அவள் தேடுவது அவள் கண்களில் தெரிந்தது. “என்னயா தேடுற” என முன் வந்து நின்னான் மணி. “இல்ல உன்ன எல்லா யார் தேடுவா நாய்தா தேடும்” என சிரித்துக்கொண்டே வேகமாக சைக்கிளை உருட்டினாள் கயல். “ஆதா நீ தேடுற” என மணி சொன்னவுடன். கயல் முகத்தில் சிரிப்பு கலந்த கோபம். “நா நாய நீதான்டா நாயி குரங்கு” என திட்டினாள் கயல். “ஏ நா நாய குரங்கா சொல்ட்டு போ” என்று கயலை பின்தொடர்ந்து சென்றான் மணி “கழட்டி அடிச்சுரவ” என கூறிக்கொண்டே போனாள். “சொல்லு சொல்லு” என பின்தொடர மணியை ஒரு கை இழுத்தது. அது தமிழ்தான் “டே இப்பதா தெரியுது ஆமை ஏ புழுக்க போடுதுன்னு” என கலாய்த்தான் தமிழ். “டே கண்டுபுடுச்சிட்டியா” என சிரித்துக்கொண்டே கேட்டான் “டே நீ யார் பின்னாடி சுத்தர தெரியுமா”

“யார் பின்னாடி”

“டே அது நம்ம சொந்தம் உனக்கு கூட தங்…..”

“டே தங்கச்சின்னு மட்டும் சொல்லிராதடா”

“சும்மா சொன்ன நம்ம அத்த பொண்ணு எந்த வழியில தெரியுமா…”

“எந்த வழியா இருந்தா என்ன அத்த பொண்ணுதான”

“ஆமாடா நம்ம அத்த பொண்ணுதா”

“நமக்கு கிடையாது எனக்கு”

ஏன கூறி சிரித்தான் மணி தமிழும் சிரித்தான்.

இந்நிலையில் சமஸ்கியா ஊர் இலவச வணிகத்தை அறிமுகப்படுத்தியது.அதன் படி யார் வேணாலும் எந்த ஊரில் இருந்து வந்தும் எங்கள் நிலத்தை பயன்படுத்தி தொழிற்சாலை வணிகம் தொடங்கலாம் என அறிவித்தது.மறக்க வேண்டாம் சமஸ்கியாவில் ஊழல் லஞ்சம் பெருகி இருந்தது பாதுகாப்பு துறை(காவல் துறை) உட்பட.

வினிதாதான் மதியம் குடும்பத்தில் உள்ள 15 பேருக்கும் சமைப்பாள்.அண்ணிகள் காலை இரவோடு சரி.வினிதாவிற்கு 36 வயதாகிறது திருமணமான 3 வது வருடத்திலேயே கணவன் இறந்துவிட்டார்.அவள் சமைத்துக்கொண்டிருக்கும்போது ஜெயராம் வந்தார்.அவள் கைகளில் முகத்தில் கரி ஊதாங்குழலால் அடுப்பை மூட்டும் போது ஏற்பட்ட கரி ஏனோ கரிக்கு மட்டும்தான் அவளை பிடித்தது போல ஜெயராம் வினிதாவின் நிலமை கண்டு பரிதாப பட்டார் இந்நேரம் இரு குழந்தையை பெற்றெடுத்து கணவனுடன் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டியவள் என்று.அவளிடம் சென்று “அம்மா நீ எந்திரி” என்று கூறினார். “இல்லனா சமைக்கனும்” “நீ எந்திரிம்மா” என்றார் வினிதாவும் எழ அவளை அழைத்து சென்று வீட்டில் கட்டிவிடப்பட்ட ஊஞ்சலில் அமர்த்தினார்.

அடுப்பருகே சென்று காய்கறிகளை வெட்ட ஆரம்பித்தார் ஜெயராம்.கிளாஸ்டின் உள் நுழைந்து என்ன பண்ணிட்டு இருக்கீங்க என கேட்டார்.தங்கச்சிக்கு சமைச்சிட்டு இருக்கன் என்றார்.என்;ணண்ண என்ன கூப்டு இருக்கலாம்ல என்று காய்கறிகளை வெட்ட ஆரம்பித்தார்.இரு கைகள் உதவிக்கு வந்தது சண்முகமும் ஆண்டணியும் அண்ணன்கள் சேர்ந்து தங்கைக்கு சமைத்தனர். வினிதா வை முக்காலியில் அமர வைத்து இலையை விரித்தனர் வினிதா கண்கள் கலங்கியது சண்முகம் வழிந்த கண்ணீரை துடைத்தார்.வெனிஸ்டாவும் எனக்கு இழை என்று அருகில் வந்து அமர்ந்தாள்.போய் எடுத்துட்டு வா என்று சொல்லி முடிப்பதற்குள் வினிதாவின் அண்ணிகள் இழையுடன் வந்து நின்றனர்.அண்ணிகளும் அண்ணன்மார்களும் தங்கைக்கு உணவு பரிமாறுவதை கண்டு பெருமை பட்டார் சுசிதா ம்மா.

தமிழரசனுக்கு ஒரு கெட்ட பழக்கம் கள்ளு குடிப்பது.ஒரு முறை கடற்கரை அருகே தென்னை மர தோட்டத்தினுள் உள்ள கள்ளு கடையில் நுழைவதை கிளாஸ்டின் பார்த்துவிட்டார் அவரும் அதுக்குதான் வந்தார் என்பது வேறு விசயம்.நம் மகன் இப்படி செய்கிறானே என வேதனைப்பட்டார் இது ஆண்டனிக்கு தெரிய வேண்டாம் என்றும் நினைத்தார்.கிளாஸ்டன் இதை தன் மனைவி சரஸ்வதியிடம் கூறினார் யாரிடமும் சொல்லாதே என்றும் கூறினார். சண்முகம் மனைவி பாத்திமா ஏதச்சையாக சரஸ்வதியிடம் பேச சரஸ்வதியும் உண்மையை உடைத்தார் அண்ணி பாத்திமாவிடம்.அதே கள்ளுக்கடையில் ஜெயராஜ் தமிழ் நுழையும்போது பார்த்துவிட்டார் ஜெயராஜ் வேதனைப்பட்டார். கள்ளுகடையில் இருந்து வெளிவரும்போது சண்முகம் பார்த்துவிட்டார்.இருவரும் அவரவர் தம் மனைவியிடம் கூறினர்.எல்லோர்க்கும் தமிழ் பற்றி தெரியும் ஆனால் எல்லாருக்கும் தெரியும் என்பது யாருக்கும் தெரியாது.தமிழ் வீட்டிற்கு வந்து தன் அறையினுள் நுழைந்தான்.சட்iடெயல்லாம் வியர்வையால் நினைந்திருக்க புது சட்டை யெடுக்க பெட்டியை திறந்தான் உள்ளே ஒரு கள்ளு பானை.அதை ஆச்சர்யத்துடன் எடுத்தான் அதன் கீழ் ஒர் சிறு கடிதம்

நீ கள்ளு குடிப்பது தெரியும் இன்று நான் பார்த்தேன் உன் தந்தை பார்த்திருந்தால் என்னவாகும் நீ குடிப்பது தவறில்லை ஆனால் வீட்டிலே குடி.
இப்படிக்கு ஜெயராஜ் அப்பா

என எழுதியிருந்தது.தமிழ் கண்கள் கலங்கியது கதவை சாத்தினான் வலது கதவை சாத்தினான் கதவின் இடுக்கில் ஒரு கள்ளு பானை அதனுடன் ஒர் கடிதம்.
நீ கள்ளு குடிப்பது தெரியும்.நீ படிக்கிற பையன் நீ ரொம்ப நல்லவன் நீ வெளியே போய் குடிச்சா உன்னதா தப்பா நினைப்பாங்க அதா வீட்ல வாங்கி வச்சுருக்கன்.
இப்படிக்கு கிளாஸ்டன் அப்பா

தமிழ் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது.வெளிய செல்ல எத்தனிக்கையில் வெனிஸ்டா மாமா அம்மா கொடுத்தாங்க இனி குடிக்காதிங்க என்று ஒரு பானையை கொடுத்தாள்.குடிச்சு உடம்ப கெடுத்துகாதிங்க என்று சொன்னாள் “போய் வீட்ல இருக்கர எல்லாரையும் கூப்டு” என்று கண்கலங்கியவாறே சொன்னான்.
ஏல்லாரும் முற்றத்தில் வந்து நின்றவுடன் தமிழ் பானைகளை முற்றத்தில் உடைத்தான் அப்பா நீங்க ரொம்ப கொடுத்துவச்சவங்க நா கள்ளு மட்டும் இல்ல சாரயமும் குடிக்கிற இனிமே பண்ணமாட்ட என அனைவர் காலிலும் விழுந்தான்.அவனை எழுப்பினர் அந்தோணி கைகூப்பி நன்றி சொன்னார் தம்பிகளிடம். “எண்ணன்ன நம்ம பையன்தான அப்றோம் என்ன அடுத்து கல்யாணம்தா” என்றாள் வினிதா.அனைவர் முகத்திலும் சிரிப்பு.

சமஸ்கியா இலவச வணிகத்தை அறிவித்ததால் இருடிசோளத்தில் செம்பு தாயாரிக்கும் நிறுவனம் ஒன்று தொடங்க முடிவு செய்தனர்.அதற்கு இடமாக அந்த விவசாய நிலம் அறிவிக்கப்பட்டது.இன்று அனைத்து ஊர்களும் தொழிற்சாலையையே நம்பி உள்ளன விவசாயம் இன்று பயன் தராது இந்த நிலத்தில் கட்டப்படும் தொழிற்சாலையால் அதிக வேலை அதிக பணம் விவசாயத்தை விட கிடைக்கும் என்று ஊர்த்தலைவர் சொன்னதால் மக்களும் சம்மதிக்க வேண்டியதாயிற்று.வறுமை யும் மக்கள் சம்மதிக்க முக்கிய காரணம்.

சிறிய நிலமாயினும் அறுவடை நாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. வேதாந்தா இல்லம் அனைவர்க்கும் எணவு பரிமாறும் பொறுப்பை ஏற்றது. சுந்தோசமாக அந்நாளை ஊரே விமர்சையாக கொண்டாடியது.எங்கும் சிரிப்பு சத்தம் இரவு பாட்டு கச்சேரி ஊரே நாட்டுபுற இசையால் நனைந்திருந்தது. இப்படிதான் வேதாந்தா இல்லமும் இருடிசோளமும் மகிழ்ச்சியாக இருந்தது அதுவரை.

2 வருடத்திற்கு பிறகு

ஒரு கட்டத்தில் இருடிசோளத்தில் பலர் நோய்வாய்ப்பட்டு இறக்க ஆரம்பித்தனர். காரணம் தெரியாமல் அனைவரும் இறந்தனர்.வெனிஸ்டா மாமா மணிராஜுடம் “மாமா இத்தன நாள் நல்லா இருந்த நம்ம ஊரு ஏதனால இப்படி பிரச்சனைய சந்திக்குது”

“தெரியல”

“சரி முன்னாடி இருந்த நம்ம கிராமத்துக்கும் இப்ப இருக்குற நம்ம கிராமத்துக்கும் என்ன வித்தியாசம்”

“ஸ்டார் லார்ட் கம்பெனி”

“ஏ அது வந்ததுக்கு அப்பறம்தான நம்ம நிறையா சம்பாதிக்கறம்”

“நிறையா சம்பாதிச்சாலும் அது நிகரா செலவாகுது உன்கிட்ட சேமிப்பு இருக்கா முதல்லா உணவை அறுவடை செஞ்சு உணவை சேமிச்சோம் இப்ப உணவ கூட காசு குடுத்துதான வாங்கறோம்”

“ஸ்டார் லார்ட்க்கும் இப்ப வர நோய்க்கும் என்ன சம்பந்தம்”

“அது வெளியிடுற நச்சு புகை நச்சு நீர்”

வெனிஸ்டா சொன்னது உண்மையானது மணிராஜும் வெனிஸ்டா தமிழரசன் ஊர் முழுவதும் பிரச்சாரம் செய்தனர்.கிளாஸ்டன் ஜெயராஜ் பஞ்சாயத்தில் ஸ்டார் லார்ட் நிறுவனம் மீது குற்றசாட்டு வைத்தனர்.அந்தோணி சண்முகம் ஸ்டார் லார்ட் நிறுவனம் மீது கோபம் அடைந்ததால் சில ஊர் மக்களை கூட்டி கொண்டு நிறுவனத்தில் அத்து மீறி நுழைந்ததால் பாதுகாப்பு துறை அவர்களை கைது செய்தது.

ஊர்மக்களை விடுவிக்க கோரி சுசிதா அம்மா தலைமையில் அறவழிப்போராட்டம் செய்தனர்.சுசிதாம்மா உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
ஸ்டார்லார்ட் நிறுவனம் தங்கள் நிறுவன பங்குகள் மற்ற ஊரில் குறைந்துவிடக் கூடாது என்பதால் ஊர் தலைவர் நாட்டாமைகளுக்கு லஞ்சம் கொடுத்தது.எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்பதற்காக.

14 நாள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்தார் சுசிதாம்மா ஊர் மக்கள் வேண்டாம் என்று தடுத்தும் கேட்கவில்லை வெனிஸ்டா வினிதா மண்டியிட்டு கேட்டு பார்த்தனர்.நான் போராட்டம் செய்தால் என்னை மட்டும்தான் இழப்பீர் இந்த நிறுவனம் இருந்தால் நம் ஊரே சுடுகாடாகும் என்று தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்தார் உடல் நலம் குன்றி இறந்து போனார் சுசிதாம்மா. சுசிதாம்மா இறப்பால் வாடிப்போன ஊர்மக்கள் நியாயம் கேட்டு பஞ்சாயத்து நிர்வாகி அலுவலக்கத்திற்கு படையெடுத்தனர்.மக்களின் கோவத்தை குறைக்க கைது செய்த ஊர்மக்களை விடுவித்தனர்.

விடுதலையான ஊர்மக்களுக்கு சுசிதாம்மா இறப்பு செய்தி கிடைத்தது அதனால் மேலும் எரிச்சல்லடைந்த மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை கொழுத்தினர்.
பாதுகாப்பு துறை வரவழைக்கப்பட்டது.மக்களை நோக்கி முதலில் கண்ணீர் குண்டுகள் வீசினர்.போராட்டம் அடங்கவில்லை .

ஸ்டார்லார்ட் நிறுவனம் ஊர்த்தலைவருடன் பேச்சு வார்த்தை நடத்தியது.

“உங்களுக்கு எவ்வளவு காசு கொடுக்கறது மாதி” என்று நிறுவன உரிமையாளர் சமஸ்கியா ஊர்த்தலைவரை மிரட்டினர்.

“சாரி சார் இனிமே இப்படி நடக்காது”

“இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னு எங்க ஊரான காட் உங்கள நாசம் பண்ணிரும்”

“இனிமே இப்படி நடக்காது சார்”

“அப்ப இப்ப நடக்கறது”

“என்ன பண்றதுன்னு தெரியல சார்”

“உருவாக்குனவங்கல அழிச்சுரு பின்னாடி வந்தவங்க தான போய்டுவாங்க அதுக்கப்பறம் கொஞ்ச நாளுக்கு தகவல் தொடர்ப துண்டிச்சுரு”

இருடிசோளம் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.குறிப்பாக வேதாந்தா குடும்பத்தின் மீது 16 வயது சிறுமி என்றும் பாராமல் வெனிஸ்டாவையும் சுட்டனர் மற்றவரை கொடூரமான முறையில் கொன்றனர் அப்பாவி மக்கள் பலரையும் சுட்டனர்.பாதுகாக்க வேண்டிய பாதுகாப்பு துறையும் நாட்டாமைகளும் விலைபோன துரோகிகளாக மாறினர்.இருடிசோளம் எங்கும் இரத்தம் எங்கும் சடலம்.மக்களை அடக்கி அவரவர் வீட்டினுள் சிறை பிடித்தனர்.வேதாந்தா இல்ல குடும்பத்தினர் அனைவரும் இறந்தனர்.

“துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது என்னவோ நெஞ்சில்தான் மக்களுக்கு மட்டுமே தெரியும் உண்மையில் அவை புறமுதுகில் குத்தப்பட்ட வாள் என்று….” 

தொடர்புடைய சிறுகதைகள்
2006 ஜூன் ஒரு 10ம் வகுப்பு மாணவன் ஆணோ பெண்ணோ உடலாலும் உள்ளத்தாலும் பல மாற்றங்களை சந்திப்பர். விடலை பருவத்தில் பொதுவாக அனைவரையும் எரிச்சலூட்டிய வார்த்தை “நீ வர வர சரியில்லை” “நீ மாறிட்ட” என்பவை. பெற்றோர்கள் பேச்சை தட்டி கழிப்பதில் இருந்து இந்த ...
மேலும் கதையை படிக்க...
இன்று. சி.எப்.எல் விளக்கு அணைக்கப்பட்டது. நைட் லாம்ப் மட்டும் மின்னி மின்னி எரிய அவள் தன்னவனை எண்ணிக் கொண்டிருக்க அவளை தானாக ஒரு கரம் பற்றியது. அவள் அதை எதிர்பார்த்தாள் போலும். அவள் தானாக சோபாவில் கிடத்தப்பட்டாள். அவளால் நகர முடியவில்லை. அவள் ...
மேலும் கதையை படிக்க...
கல்யாண அவசரத்தில் அந்த மண்டபம் உழன்றுக்கொண்டிருக்க மாப்பிள்ளை உதய் மட்டும் வடக்கு கிழக்காக நடந்து புழம்பிக்கொண்டிருந்தான்;. “எல்லோரும் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி லவ் ங்கற பேருல என்னன்னமோ பண்றாங்க நம்ம சைட் மட்டும்தா அடிச்சுருக்கும் இவனுக வேற உசுப்பேத்திட்டு போறாங்க ஆ..அ……. ...
மேலும் கதையை படிக்க...
மையல் விழி காதல்
என்னுள் நீ எப்படி……?
ஒரு முத்தம் வேணும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)