வெள்ளிக் கிழமை லீவு வேண்டும்!

 

இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் நிறைய திரைப் படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

போன வெள்ளிக் கிழமை நாலு புதுப் படம் ரிலீஸ். நானும் என் மனைவியும் ரிலீஸ் அன்று ஒரு படத்தின் காலைக் காட்சிக்குப் போயிருந்தோம்! அன்று தான் படம் ரிலீஸ் என்பதால் சற்று இளைஞர் கூட்டம் அதிகமாகவே இருந்தது!

பெண்கள் பகுதியில் இரண்டே இளம் பெண்கள் தான் நின்று கொண்டிருந்தார்கள்.

என் மனைவி அங்கு போய் எங்களுக்கு முதல் வகுப்பு டிக்கெட் எடுக்க அந்த இரண்டு பெண்களுக்குப் பின்னால் நின்றாள். நான் சற்று தள்ளி நின்று கவனித்துக் கொண்டிருந்தேன்.

என் மனைவிக்கு முன்னால் நின்ற இரண்டு இளம் பெண்களுமே ஆளுக்கு பதினான்கு டிக்கெட் எடுத்தார்கள்! எனக்குப் புரியவில்லை!

அவர்கள் எல்லாம் யாருக்காக டிக்கெட் வாங்கினார்கள் என்பது தியேட்டருக்குள் போய் நாங்கள் உட்கார்ந்தவுடன், தெரிந்தது!

எங்களுக்கு முன் இருந்த இரண்டு வரிசைகளிலும் அந்த ஆளுக்கு பதினாலு டிக்கெட் வாங்கிய இரண்டு பெண்களும் நின்று கொண்டு, வரிசையாக இருபத்தி எட்டு சீட்டுகளுக்கும் தங்கள் நண்பர்களை உட்கார வைத்தார்கள்!

எனக்கு முன்னால் வந்து வரிசையாக உட்காந்தவர்களைப் பார்த்தவுடன் எனக்கு வியப்பாக இருந்தது!

ஒரு பெண் ஒரு ஆண், ஒரு பெண், ஒரு ஆண் என்று மாற்றி மாற்றி வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள்!

அவர்கள் பேசிக் கொண்டதிலிருந்து அவர்கள் எல்லோருமே கல்லூரி மாணவ மாணவிகள் என்று தெரிந்தது. அவர்கள் தங்களிடமிருந்த விலை உயர்ந்த செல் போன்களில் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு ‘செல்பி’ வேறு எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு அடுத்தவர் பார்ப்பார்கள் என்ற கூச்சமோ, பயமோ சிறிதும் இல்லை! அந்தக் காலைக் காட்சிக்கு தியேட்டர் முழுவதும் இப்படி மாணவ மாணவி கூட்டத்தால் நிறைந்து விட்டது! வந்திருந்த எல்லோருமே கல்லூரி மாணவ மாணவிகளே!

தனியாகப் போய் அவர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டதால் எங்களுக்குத் தான் வெட்கமாக இருந்தது!

ஒரு புதுபடம் வெள்ளிக் கிழமை ரிலீஸ் ஆனா, முதல் காலை காட்சிக்கு வயசானவங்க போய் தயவு செய்து எங்களைப் போல் மாணவ செல்வங்களுக்குத் தொல்லை கொடுக்காதீங்கோ!

அரசு அலுவலகம் எல்லாம் இப்ப இரண்டாவது சனிக்கிழமை. நான்காவது சனிக்கிழமை எல்லாம் லீவு விடறாங்க!

போகிற போக்கைப் பார்த்தா வருங்காலத்தில் இந்த மாணவச் செல்வங்கள் ரிலீஸ் படம் பார்க்க வெள்ளிக் கிழமை லீவு விடச் சொல்லுவார்கள்!…

அப்படி ஒரு கோரிக்கை அவர்கள் வைத்தாலும் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை!

- மக்கள் குரல் 10-7-2018 

தொடர்புடைய சிறுகதைகள்
விஷ்ணு காந்த் சிங்கத்தின் வாயை கைளால் பிளப்பது போன்ற பதினாறு அடி கட் அவுட்டுகள் நாற்சந்தி, முச்சந்தியில் நின்று நாட்டு மக்கள் அனைவரையும் ஆவலோடு எதிர் பார்க்க வைத்த படம் ‘அடலேறு!’ அதன் ஹீரோ விஷ்ணு காந்தே தயாரிப்பாளரும் கூட. விஷ்னு காந்த்க்காக ...
மேலும் கதையை படிக்க...
இடியோசை இன்ப சாகரன் அந்தக்கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட முதல் நிலைப் பேச்சாளர். கிளைக் கழகச் செயலாளர்களும், கட்சி நிர்வாகிகளும் அவர் ‘டேட்ஸ்’ வாங்க படாத பாடு படுவார்கள். காரணம் பிரியாணி கொடுத்து, காசு கொடுத்து, லாரி வாடகை கொடுத்து கூட்டத்திற்கு ஆட்கள் தேட வேண்டியதில்லை. ...
மேலும் கதையை படிக்க...
பிரபல வாரப் பத்திரிகையின் நிருபர், காவல் துறை தேடிக் கொண்டிருந்த மோசடிக் கம்பெனி விளம்பரங்களில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும்படி பல டி.வி. விளம்பரங்களில் நடித்த அந்த நடிகையிடம் பேட்டி எடுத்தார். “ மேடம்!...கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாயை பொது மக்களிடம் ஏமாற்றி மோசடி ...
மேலும் கதையை படிக்க...
கதிரேசனுக்கு எழுபது வயசு பூர்த்தியாகி விட்டது. வயசானவர் என்பதற்கு அடையாளமாக சுகர், பிரஸர், மூட்டு வலி எல்லாம் நிரந்தரமாக வந்து விட்டது. அதனால் முன்பு மாதிரி எதற்கெடுத்தாலும் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியில் போவதை நிறுத்திக் கொண்டார். முடிந்த வரை பூஜை, புனஸ்காரம் ...
மேலும் கதையை படிக்க...
அந்த நகரத்தில் மேயர் தேர்தலில் இரண்டு முக்கிய கட்சிகள் நேரிடையாக மோதல்! எங்கும் ஒரே பரபரப்பு! கொடிகட்டிய வேன்களும் கார்களும் சந்து பொந்தெல்லாம் ஸ்பீக்கர் கட்டிக் கொண்டு நுழைந்து ஆரவாரம் செய்தன. அரவிந்தன் மாநிலத்திலேயே மிகச் சிறந்த பேச்சாளன். ஒரு நல்ல எழுத்தாளன். ...
மேலும் கதையை படிக்க...
விஷ்ணு காந்த் அழைக்கிறார்! – ஒரு பக்க கதை
நெருக்கம்!
நடிகையின் கோபம்!
பிரியம்!
மேயர் தேர்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)