வெற்றி

 

அமீர் மஹால் கரவொலியின் சத்தத்தில் அரங்கமே அதிர்ந்தது. சுரேந்தர்க்கும் அவன் மனைவிக்கும் கண்களில் நீர் அருவி போல் கொட்டியது. மனதில் கடவுளுக்கு நன்றி செலுத்தினர். அதைக் கண்ட அவன் நண்பர் தீபக் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரத்தில் ஏன் இந்த கண்ணீர் உங்களுக்கு என்றார்.

இந்த வெற்றி சாதரணமானது இல்லை, எங்கள் மகனின் உணர்வுகளையும் திறமைகளையும் தூண்டிய வெற்றி.

ஒன்றும் புரியவில்லை சுரேந்தர் நீ இந்த விழா முடிந்ததும் விளக்கமாக சொல்லு. இப்போது விழா மேடைக்கு உங்களை அழைக்கின்றார்கள் செல்லுங்கள் என்றார்.

மேடையில் சுரேந்தர் மகன் சாலமனுக்கு நல்ல பாடகர் என்ற விருது வழங்கப்பட்டது. பரிசுத் தொகையாக ரூபாய் ஐந்து லட்சமும் சொகுசு வீடும் வழங்கப்பட்டு விழாவும் கோலாகலமாக முடிந்தது. விழா முடிந்து வீட்டில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சிறிய விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

வினோத் நண்பர்கள் அவனை தூக்கிக் கொண்டாடினார்கள் நீ சாதித்துவிட்டாயடா என்று உரக்க கத்தினார்கள்.

இதையெல்லாம் கண்ட சகாயத்திற்கு ஒன்றும் புரியவில்லை பாடல் போட்டியில் கலந்து கொள்வது இப்போது சாதரணமாக ஆகிவிட்டதே இவர்கள் ஏன் பெரிதாக கருதுகின்றார்கள் என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.

தீபக் என்ன கனவு கண்டு கொண்டிருக்கிறாய் என்றான் சுரேந்தர்.

கனவு இல்லை சுரேந்தர் இங்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை அதான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

உன் குழப்பத்திற்கு அதுதான் காரணமா வா தீபக் அப்படி போய் உட்கார்ந்து பேசுவோம்.

வினோத்க்கு பார்வை இல்லை என்பது உனக்கு நன்றாக தெரியும். அவனை நாங்கள் அந்த குறை தெரியாமல் அவனை வளர்த்தவிதம் உனக்கு நன்றாக தெரியும் இல்லையா….

ஆமாம் இது அவன் பிறந்ததிலிருந்தே நான் பார்த்துக் கொண்டிருப்பதுதானே.

அவனுக்கு நல்ல குரல் வளம் இருப்பதால் பாடல்கள் பாடுவதில் அவன் விருப்பம் காட்டினான். அவனுக்கு முறையான பயிற்சி இல்லையென்றாலும் கேட்பதை வைத்து மிக அருமையாக பாடுவான்.

என்னடா இதெல்லாம் எனக்கு தெரிந்ததுதானே நீ புதியதாக சொல்கிறாய்.

இருடா பொறுமையாக கேள் அவன் கல்லூரியிலும் அதே போல் பல நிகழ்ச்சிகளில் பாடினான். அவன் நண்பர்கள் அவனுக்கு பக்கபலமாக இருந்தனர். அப்பொழுது தேசிய அளவில் நடந்த பாடல் போட்டியில் கலந்து கொள்ள இவர்கள் கல்லூரி சென்றது. பாடல் குழுவில் உள்ள அனைவரின் பெயரும் இருந்தது வினோத் பெயர் மட்டும் இல்லை.

வினோத்தும் அவனது நண்பர்களும் கல்லூரி முதல்வரிடம் கேட்டனர். அதற்கு அவர் சாலமன்க்கு பார்வையில்லை அதனால் அவனை டெல்லி கூட்டிச் செல்ல இயலாது என்றார்.

அதற்கு அவனது நண்பர்கள் அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் அவனுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றனர்.

ஆனால் அவர் வினோத் முறைப்படி எந்த பயிற்சியும் எடுக்கவில்லை அதனால் அவனை நாங்கள் தேர்வு செய்யமுடியாது என்றார்.

வினோத் நண்பர்கள் எவ்வளவோ கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை.

பிறகு வினோத் வீட்டிற்கு வந்து அவனுக்கு பார்வை இல்லை என்பதை நினைத்து முதல் முறையாக அழுதான். அவன் அழுவதை கண்டு அவன் நண்பர்களும் அழுதனர். அவர்கள் அழுவதைக் கண்டு நானும் என் மனைவியும் ஒரு முடிவுக்கு வந்தோம்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் பாடல் போட்டியில் சாலமனை கலந்து கொள்ள செய்வதென்று அதன்படி அதற்கு விண்ணப்பித்தோம். அவனை நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள செய்தோம்.

அப்போது தேர்வாளராக இருந்த பிரபல பாடகர் வினோத் குரல்வளத்தைக் கண்டு எங்களிடம் பேசினார். வினோத்துக்கு நல்ல குரல்வளம் இருக்கிறது அதனால் அவன் முறையாக இசையை கற்றுக் கொண்டு இந்த போட்டியில் கலந்து கொண்டால் வெற்றி சாலமனுக்குதான் அவனுக்கு இசையை நான் கற்றுக் கொடுக்கிறேன் என்றார்.

அவர் சொன்னது போலவே தினமும் வீட்டிற்கே வந்து சாலமனுக்கு கற்றுக் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் இசை பற்றிய தேர்வையும் எழுத வைத்தார். அதில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றான். மூன்று வருடங்கள் கடுமையான பயிற்சி எடுத்தான்.

அதே போல் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் பாடல் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசையும் பெற்றான். அது மட்டுமில்லை பிரபல மூன்று இசையமைப்பாளர்கள் அவர்கள் இசையமைக்கும் படங்களில் பாட ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்த வெற்றியைதான் இன்று இவ்வாறு கொண்டாடுகின்றார்கள் தீபக்.

ஓ! இவ்வளவு நடந்துள்ளதா நான் இல்லாத இந்த மூன்று வருடத்தில். சரி சுரேந்தர் கல்லூரி முதல்வருக்கு இந்த விழாவிற்கு அழைப்புவிடுக்கவில்லையா?

அவனது நண்பர்களே அவருக்கு அழைப்புவிடுத்துள்ளனர். ஆனால் அவர் வரவில்லை.

ஆனால் தீபக் அவரை பார்க்க வேண்டுமென்று மறுநாள் கல்லூரிக்கு சென்றார். அங்கு முதல்வரிடம் தன்னை யாரென்று அறிமுகபடுத்திக் கொண்டு அவரிடம் நான் உங்களிடம் ஒரே ஒரு வார்த்தை பேசிவிட்டு சென்றுவிடுகிறேன் என்றார்.

ஒரு மாணவனின் விருப்பங்களையும், உணர்வுகளையும் மற்றும் திறமைகளையும் புரிந்து கொள்ளமுடியாத நீங்கள், இந்த கல்லூரியில் படிக்கும் நான்காயிரம் மாணவர்களின் விருப்பங்களுக்கும் உணர்வுகளுக்கு எவ்வாறு மதிப்பளிப்பீர்கள்? நீங்கள் இந்த கல்லூரிக்கு முதல்வராக இருப்பது தகுமா? என்று கேட்டுவிட்டு, வருகிறேன் என்று சென்றுவிட்டார்.

செல்லும் வழியில் கோயிலுக்குச் சென்று வினோத் பெயருக்கு அர்ச்சனை செய்துவிட்டு, கடவுளுக்கும் நன்றி செலுத்திவிட்டு சென்றார்.

நமது அருகில் இருப்பவர்களையும் நாம் சில நேரங்களில் உதாசீனப் படுத்துகின்றோம். அவர்களுக்கும் உணர்வுகள் ஆசைகள் இருக்குமென்று மறந்துவிடுகின்றோம். அவ்வாறு செய்யாமல் மற்றவர்களுக்கும் மதிப்பு கொடுக்க முயற்சிப்போம். 

தொடர்புடைய சிறுகதைகள்
கடம்பன், “கோயிலுக்குத் தங்கைகள் இருவரையும் கூட்டிச் செல்கிறேன்” என்று தன் தாய் வள்ளியிடம் கூறினான். “சரி பத்திரமாக கூட்டிட்டு போ சின்ன பிள்ளைகள் கவனமா இரு, நீ வர எவ்வளவு நேரமாகும்” என்றாள் வள்ளி. “அம்மா போக ஒரு மணி நேரம், வர ஒரு ...
மேலும் கதையை படிக்க...
ஆர்தி அலுவலகத்தில் வேலையில் கவனமாக இருந்தாள். வேலை அதிகம் என்பதால் சோர்வாக இருந்தது போலிருந்தது ஒரு காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே..... கிஷோர் காபி குடித்து வரலாமா கயல் என்று கேட்டான். அவனுடன் செல்ல பிடிக்கவில்லை என்றாலும் ...
மேலும் கதையை படிக்க...
“அமுதா நம்ம வனஜாவோட அப்பா, நேற்று இரவு நெஞ்சுவலியில் இறந்துவிட்டாராம். நாளை காலை பத்து மணிக்கு அடக்கம் எடுக்காங்களாம், உன் நாத்தனார் அகல்யாவுக்கு, வனஜா தோழிதானே அதனால் அவளுக்கும் சொல்லிடு” “வள்ளி என்ன சொல்றே நல்லாதானே இருந்தார், எப்படி நெஞ்சுவலி வந்தது” “அவருக்கு குடிக்கும் ...
மேலும் கதையை படிக்க...
அஸ்வின் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் அப்பா, அம்மா, அண்ணன் என்று அந்த வீட்டின் செல்ல பிள்ளையாக வளர்ந்து வருபவன். சென்னையில் தனியார் கல்லூரியில் பிஏ வரலாறு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறான். அஸ்வின் கல்லூரியின் முதலாமாண்டு காலடி எடுத்து வைத்த அன்றே, காதல் ...
மேலும் கதையை படிக்க...
நாகராஜன் வழக்கம் போல் செல்லும் ஆசிரமத்துக்கு, காலையில் வருபவர் அன்று மதியம் வந்திருந்தார். மாதம் தவறாமல் ஆசிரமத்திற்கு வந்து கொடுக்கும் பணம் பத்தாயிரத்தையும், ஆசிரம நிர்வாகியிடம் கொடுத்தார். அவர் கொடுத்துவிட்டு, எப்போதும் ஆசிரமத்திலுள்ள குழந்தைகளிடமும், முதியோர்களிடம் உரையாடி விட்டுதான் செல்வார். அன்றும் ...
மேலும் கதையை படிக்க...
காணவில்லை!
இணையதளக் காதல்
கண்ணீர்
காதல் சொல்லப் போறேன்
உதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)