வெட்டுக்குழி

 

வெட்டப்பட்டுக்கிடக்கிறது குழி.நாலடி ஆழமும் இரண்டடி அகலமு மாய் மண் கீறி காட்சிப்பட்ட அதன் மேனி முழுவதும் மண்ணும் புழுதியும் சிறு சிறு சரளைக்கற்களுமாய்/போதாதற்கு ஆங்காங்கே நீட்டிக் கொண்டிருந்த டெலிபோன் கேபிள் வயர்கள் அறுந்து தெரிந்த தாய்/

அரைத்தெடுத்தசட்னியும்,அவித்தெடுத்தஇட்லியும் தட்டில் வைத்துப் பரிமாறப்படும் போது அதன் சுவையும் தன்மையும் மாறிப் போகிற தாய்/

நான்குஇட்லி கொஞ்சமாய்சட்னிஅதில்தோய்த்தெடுத்த விள்ளல்கள் நாவின் சுவையறும்புகளில் பட்டு உள்ளே பயணிக்கையில் பசியாறு பகிற அவர்களின் தனி மனம் எப்போதும் சுவை மிகுந்ததாகவே/

எப்பொழுதுமே அலுவலகத்தில் கொண்டு போய் சாப்பிடுபவன் இன் று வீட்டி லேயே சாப்பிட்டுவிட்டு வந்தான்.காலை எழுந்ததி லிரு ந் து அலுவலகம் கிளம்புவதற்குள்ளாக குடித்து விடுகிற இரண்டு அல்லது மூன்று டம்ளர் தேனீர் காலைச்சாப்பாட்டை சாப்பிட விடுவதில்லை. மீறிச்சாப்பிட்டால்வயிற்றுக்குள் இருந்து கொண்டு வம்பு பண்ணும்.காற்றடித்த பலூனாய் உப்பி விடுகிற வயிற்றை சுமந்து கொண்டு சைக்கிளை மிதித்துக்கொண்டு போக முடிவ தில்லை பஸ்டாப் வரை .

பஸ்டாப் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் மேலிருக்கும்.இரு சக்கர வாகனத்தில்செல்லும்தி னங்களில்பெரியஅளவி ல்தொந்தர வாய் ஏதும்உணர்ந்ததில்லை.50 வயதிற்கான உடல் உபாதை இதுதான் போலும்.அவ்வளவுதான் உடல் தாங்கிற சக்தி என போகவேண்டியதுதான்.

8ஆம்வகுப்போ,ஆறாம் வகுப்போ படிக்கிற போது என்கிறதாகவே நினைவு. இவன் குடிகொண்டிருந்த சீனாத்தானா தெருவிலிருந்து அழகர்சாமி தெரு கடந்து ரயில்வே லைன் தொட்டு ஒன்னாம் நம்பர் பால் டிப்போவில் பால் ஊற்ற வந்திருக்கிறான், பள்ளி தினங்களில் காலை வேளையிலும், பள்ளி அல்லாத தினங்களில்மாலைவேளை களிலுமாய்/

தெருமுக்கு பெரியசாமி கடையில்வாங்குகிற 10பைசாபொரிகடலை அ ல்லது இரண்டு ஆரஞ்சு மிட்டாய்இவை இரண்டும்தான் பால் டிப்போவரைக்குமான அவனதுமூன்று கிலோ மீட்டர் நடையை அலுப்பில்லாமல் செய்திருக்கிறது.

வயிறு பெருத்த உயரமான மாடு ஒன்றும், இன்னும் இரண்டு உருப் படிகளுமாய் இருந்த மூன்றில் அடிவயிற்றில் வெள்ளையையும்,மேல் முதுகெங்கிலும் கருநிறத்தையும், தாங்கியவயிறு பெருத்த மாடு இவனுக்கு எப்போழுதுமே ரொம்பப் பிடிக்கும். மற்ற இரண்டு மாடு கள் தரும் பால் தவிர்த்து பெரிய மாடு தரும் பால் எவ்வளவு என இவனது பள்ளிக்கூட நோட்டில் குறித்து வைத்துக் கொள்வான் தினசரி.

உடல் முழுவதும் புல்லரிப்பில் நட்டுக்கொண்டிருகிற அதன் மென் முடிக ளின் மீதுவீசும் சாணவாசத்தையும்,கோமிய வாசத்தையும் எப்போழுதும் ரசித்தே வந்திருக்கிறான் தொழுவத்தை சுத்தம் செய் கிற தினங்களில்.

விஜி அக்கா கூட வைவாள்.அட விடுறா கிறுக்கா, அதப் போயி இவ்வளவு லயிச்சிப்போயி செய்யாட்டி என்ன?அப்படியே விட்டுட்டு வா ஏங்கூட, மிச்சத்த அம்மா பாத்துக்குவாங்க,வா இந்த சாணத்தக் கொண்டுபோயி சாணி தட்டீட்டு வருவோம் என்பாள்.அவளது சொல் லுக்குக் கட்டுப் பட்டவனாய் அவளது பின்னால் சாணிக்கூடை சுமந்து மாடிப்படி ஏணியில் ஏறிச் செல் லும் போதும் அவள் கேனில் பாலை ஊற்றி ஒன்னாம் நம்பர் பால்டிப் போவுக்கு கொண்டு போவத ற்காய் கொடுத்தனுப்புகிற வேலைகளிலும் மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கிறான்.

அன்றலர்ந்த பூவாய் இவனுள் புதைந்திருந்த அவளது முகம் எப்பொ ழுதுமே இவனுக்கு மிகவும் பிடித்ததாய்.பேச்சு,சிரிப்பு வீட்டு வேலை படிப்பு என நகரும் பூச்செடியாய் அவளது அன்றாட நகர்வுடன் இவன து நகர்வும் பிணைந்தே இருக்கும் பெரும்பாலுமாய்/அவள் படிக்கிற வேளையில் அவளுடன்இவனும்படித்துக்கொண்டிருப்பான். அவன் மாவாட்டுகிற சமயங்களில் இவன் கை உதவிக்கு சேர்ந்திருக்கும். அவள் துணி துவைக்கிற பொழுதுகளில் அடுப்படியில் நிற்கும் பொழுது, தொழுவத்தில் மாட்டுக்கருகில் நிற்கிற பொழுது என இதர இதர பொழுதுக ளிலெல்லாம் இவனது கரம் அவள் செய்யும் வேலை களில் உதவிக்கு நீளும், அல்லது இணைந்தே காணப்படும்.

அப்படியான கலப்பும் ,உதவியும் மூன்று கிலோ மீட்டர் பால் கேன் சுமந்து நடந்த நடையும் இந்த ஐம்பதில் கொஞ்சம் பின் வாங்குவதா யும்,தயங்குவதாயும்/

சென்ற வாரத்தின் இறுதி நாளொன்றின் மாலை பொக்லைன் இயந்தி ரம் கொண்டு தோண்டப்பட்டுக்கொண்டிருந்த குழி இங்கிருந்து நீண்டு சாத்தூர் வரை செல்கிறது என்கிறார்கள். நெடுகச் செல்லும் ஊர்களைத்தாண்டி ஓடும் ஆறு போல/ என்கிறார்,அழகுமலை அண்ணன்/

மூணு நாளாச்சு சார்,இன்னையோட குழிதோண்டிப்போட்டு/ இப்பிடிக் கெடந்தா நான் எப்பிடி ஆடு குட்டிகள கொட்டடியிலயிருந்து பத்தீட்டு ப் போறது. என்கிறார்.

அழகுமலையண்ணன்வெள்ளாடும்,செம்மறியாடுமாக20உருப்படிகள்வைத்தி ருக்கிறார்.அதுதான் அவரது சொத்து. இருபதில் முறைப்படி மாதம் வைத்தும் இடைவெளி விட்டுமாய் ஐந்தைந்தாக கருத்தரித் துகொண்டிருக்கும்.அது இவர் செய்து வைக்கிற ஏற்பாடா இல்லை தானாக நடக்கிறதா என்கிற ஆச்சரியம் இவனுள் எப்பொழுதுமே இருக்கும்.

இவன் இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு வருகிற தினங்களில் பெரும் பாலுமாய் அழகுமலையண்ணனை பார்த்து விடுவான். அவ ரும் அவருடன் சேர்ந்து வெளியூர்க்காரர் ஒருவரும் ஆடு மேய் க்க வருவார். அவருடைய உருப்படிகளும் பத்துக்குக்குக் குறையாமல் இருக்கும்.எல்லாமே வெள்ளாடுகள். அழகு மலையண்ணனும் அவ ரும் சிறுவயதில் ஒன்றாகப்படித்தவர்களாம்.

அன்றுஅழகுமலையண்ணன் அவருக்குத்தந்த சோறும்,அவர் அழகு மலைய ண்ணனுக்குத்தந்த வெஞ்சனமும் இன்று வரை ஆடு மேய்க் கிறதளங்களில் மணத்துக்கிடப்பதாக எனச்சொல்வார் அழகு மலைய ண்ணன்/

என்ன சார் ஏதாவது கொஞ்சம் மழை தண்ணி பேய்ஞ்சா எங்கள மாதிரி ஆட் டுக்காரங்களுக்கு ரெண்டு பயிர் பச்ச கெடைக்கும்,ஆடுக குடிக்க ரெண்டு தண்ணி கெடைக்கும்.என்பார்.கண்மாய்க்கரை ஓரக் கொட்டடியிலிருந்துகரிசல்காடுகளின்ஓடைகள்தான்அவர்களதுமேய்ச்சல்தளமாய்இருந்திருக்கிறது.

மழைகாலங்களில்சாலையின் இருபக்க ஓரங்களிலும் உயரம் காட்டி வளர்ந்து அடர்ந்து கிடக்கிற கோரைப்புல்லும் முழங்கால் ஊயரத் திற்கு மேலே வளர்ந்து தெரிகிற பச்சையும் இன்னும் பிற செடிகளு மாய் பச்சை காட்டி ஓடை நிரம்பித் தெரியும்/

கடித்துத்தின்னவும்வாய்நிறையவைத்துஅசைபோடவும்நுனிவாயால்தொட்டுப் பார்த்து கடித்துதின்கிற ஆடுகள் அழகுமலையண்ணன் மற்றும் அவரது சொல்லுக்குக்கட்டுப்பட்டே/

காலை9.45ஜெயவிலாஸிற்குவந்துஇறங்கும்போதுதான்பிரச்சனையின் தீவிர த்தைஉணர முடிந்தது. பஸ்ஸை விட்டி கீழே கால் வைக்க முடியவில்லை. தோண்டப்பட்ட குழியின்அருகில்தான்பஸ்போய் நின்றது.ஒரு மாதிரி தாவிக் குதித்திறங்கித்தான்போக வேண்டியவ னாய்/

அதுஎன்னவெனத்தெரியவில்லை.அப்படியாகவேபழகிப்போனான்.பழக்கத்தி ற்கு அடிமைப்பட்ட மனது அதிலிருந்து மீள மறுக்கிறது அல்லது நாளெடுத்துக்கொள்கிறது.

பஸ்ஸைவிட்டுஇறங்கியதும் டீக்குடித்தே ஆக வேண்டும் இவனு க்கு/ அப்படியானால்தான் அன்றைய அலுவலகப்பணி சுறுசுறுப்பு கொள்வதாய் நினைப்பவனுக்கு/

குழி தாண்டி போவதற்கு பலகை போட்டு வைத்திருந்தார் டீக்கடைக் காரர். கள்ளிச்சக்கையில் அகலம் காட்டி அடிக்கப்பட்டிருந்த பல கைகளின்மீது ஆங்கிலத்தில்ஏதேதோஎழுத்துக்கள் அச்சடிக்கப்பட்டு த் தெரிந்ததாக/

கருப்புக்கலரில்இருந்த அந்த எழுத்துக்களில் மண்ணும்,தூசியும் பட் டு அழுக் காய்/கருப்புக்கலரின் மீது லேசான் தூசி பட்டாலே பளிச் சென வெளி தெரிந்து விடுகிறதாய்/இவன்போட்டிருந்த கறுப்புக்கலர் பேண்ட்டும், வெள்ளைக் கலர்டீசர்ட்டும் நன்றாகத் தெரிகிறதாகவே/கடையோரம் சுவரை ஒட்டி முளை த்து நிற்கிற மஞ்சள் அரளிச்செடி மீது தனி அக்கறை இருந்ததுண்டு கடைக்காரருக்கு/

நல்லவேலையாககுழி தோண்டும் பொழுது அந்தச் செடிக்கு ஒன்றும் ஆக வில்லை.அதுவரை சந்தோஷம் அவருக்கு.அவர் கடைக்கு சேவு முறுக்கு தண்ணீர் பாக்கெட் வாங்க வருகிறவர்களின் கண் படுகிற வேளை இன்னும் நன்றாகத்தெரிந்திருக்கிறது செடி.

பார்க்கப்பார்க்கதானே அழகு செடிக்கு என்பார் கடைக்காரர். பார்க் கவும் பூக்கவும்தானே சார் பூச்செடி என்கிறார், ரெண்டு பிள்ளைகளி ல் முதலாவதை நான்காம் வகுப்பிற்கும்,இரண்டாவதை ஒன்றாம் வகுப்பிற்குமாய் அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிற அவர்.என்ன சார் இன்னும் என்ன வயசா இருக்கு, இப்ப சம்பாதிச்சாதான சார், இனிம போயி ஒருத்தர் கிட்ட கைகட்டீட்டு வேலைக்கு நிக்க முடியுமா என்ன,யேவாரமும் அந்த அளவுக்குத்தான் இருக்கு சார். என்கிற அந்தப்பக்கம் சென்றாலே வம்படியாகப்பிடித்து டீயை வாயில் ஊற்றி விடுவார்.சரிண்ணே,வர்ரேண்ணே என சொல்கிற போது கூட கேட்காமல்/

அவரது அந்த செய்கையில் தெரிகிற பிரியத்தை விட டீ விற்கிற நோக்கமேபிரதானமாய்இருக்கும்என்கிறசொல்தாண்டிஅவர்தருகிற டீயின்ருசி அலுவகலகம் முடிகிற வரி வாயின் பக்கச்சுவர்களில் மணத்துக்கிடப்பதாகவே/

டீக்கடைக்காரருக்கும்,டெய்லருக்கும் இருக்கிற உறவு என்னவெனத் தெரியா விட்டாலும் கூட இவனுக்குத் தெரிந்து அவர்களிருவரும் மாமன்,மாப்பிள்ளை எனத்தான் பேசிப்பழகி இருக்கிறார்கள்.என்ன மாப்ள,ஓங்கட டீயக்குடிக்கிறத விடவும் பேசாம இருந்துறலாம் போல இருக்கு என்பார் கேலியாக/

ஏய் போ மாமா பேசா அங்கிட்டு,இது டீ இல்ல அமிர்தம் என்பார். டீக்கடைக் காரர் பதிலுக்கு,இப்படியாய் பதில் சொல்லவும்,கேள்வி கேட்கவும்,கேலி பேசவுமாய் அவர்களுக்கு நேரம் இருக்கிறபோது அவர்கள்குடும்பத்தார்கள் இருவருக்கும்நெருங்கிப்பழகபெரிய மனம் இருந்தது என்றே சொல்லலாம்.

மாயவரம்பக்கத்திலிருந்துபிழைப்புதேடிவந்ததுடெய்லர் குடும்பம் என்பார்கள். டீக்கடைக்காரர் இந்த ஊரையே பூர்வீகமாகக் கொண்ட வர்.பிழைக்க வந்த இடத்தில்தன்னை ஆழமாக ஊன்றிக் கொண் டவர், அந்த ஊன்றலே இன்று வரைஊரிலிருக்கிறஎ ல்லோருடனும் மாமன்,மச்சான்,அண்ணன் தம்பி, முறைவைத்துபழகவைக்கவும், அவரை இந்த ஊரில் வேர்விடவுமாய் வைத்திருக்கி றது.அந்த வேர் விடலே இன்று கண்மாய்க்கரை ஓரம் அவரை கடை போடச்செ ய்து ஆழ ஊன்ற வைத்திருக்கிறது.

அந்தஆழ ஊன்றலின் வேர் டீக்கடை வரையும் டீக்கடைக்கார் போன் றோர் மீதும்,அழகுமலையண்ணன் மாதிரியானவர்கள் மீதும் அன்பு கொள்ள வைக்கிறது.

அப்படியான அன்பும் ,பாசமும் வாஞ்சையுமே இன்றுவரை அவர்க ளைஅவ்வூரில்வாஞ்சைமிகுந்தவர்களாய் காட்டிகொண்டிருக்கிறது. அவர்தான் சொன்னார்,சார் குழி வெட்டும்போது பொக்லைன் மிஷின் வச்சி தோண் டுனதால டெலிபோன் கேபிளெல்லாம் அறுந்து போச்சு சார்.இப்ப கேபிள் வய ரெல்லாம்சரிபண்ணிக்குடுத்தாத் தான்குழிய மூடவிடுவாங்கன்னுடெலிபோன்காரங்க சொல்லியிருக்காங்க.இ ப்ப அந்தத்தகராறுல குழிய மூடாம வச்சிருக்காங்க,இதுல பாதிக்கப்ப டுறது என்னய மாதிரி ஆள்கதான் என்றார்,

அவரது கடையும்,அழகுமலையண்ணன் ஆடு அடைக்கும் கொட்ட டியும், டெய்லரின் கடையும் அடுத்தடுதுத்தும் இடை வெளி விட்டுமா ய் அமைந்தி ருந்த கண்மாய்க்கரையின் ஓரமாய் இருந்த கடை யில் டீயைக்குடித்து விட்டு கடையைவிட்டுகடக்கையில் வெட்டப்பட்டு நீண்டிருந்த குழியில் டீக்கடைக் காரரின் முகமும்,டெய்லரின் முகமும், அழகு மலையண்ணனின் முகமும் மாறி,மாறித் தெரிய வந்துகொண்டிருக்கிறவனாகிறான். 

தொடர்புடைய சிறுகதைகள்
போய் விட்டதா பேருந்து எனக்கேட்க நினைத்த கணத்தில் வந்து நிற்கிறது பேருந்து இளம் செவ்வந்துப்பூ நிறம் காட்டி, புழுதி படர்ந்த சாலைகளில் இது போலான கலர்களில் பேருந்து ஓட்ட தனி தைரியம் வேண்டும்தான்,அது அவர்களுக்கு இருந்தது போலும் என்கிற எண்ணத்துடன் பேருந்தில் ஏறுகிறான், வரட்டுமா ...
மேலும் கதையை படிக்க...
மதயானை கடையில்தான் சோப்பு வாங்கினான், மகன் யானை என்பதே மறுவி மதயானை ஆகிபோனது என்று சொல்வார்கள் கடைக்காரைப்பற்றி அந்த ஊர்க்காரர்களிடம் கேட்கிற போது,அவர் பிறந்த போது பிரசவம் பார்த்த தாதி உன் மகன் யானை ஓங்குதாங்காக வருவான், மகன் இனி யானை போல ...
மேலும் கதையை படிக்க...
பஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தது கரிசல் காட்டு வேப்பமரத்தில் தூக்கிட்டு இறந்து போன சுப்புராமின் மகள் கஸ்தூரியக்காவைப் போலவே தெரிந்தது.மஞ்சள்க்கலர் சேலை,கட்டி அதற்கு மேட்சாய் ஜாக்கெட் அணிந்து தலைநிறைந்த மல்லிகைப் பூவுடனுமாய்த் தெரிந்தாள். வட்ட வட்டமா ய் சக்கரம் தாங்கியோ, உதிராமல் நின்ற ...
மேலும் கதையை படிக்க...
இப்படிஇலக்கிலாமல்சைக்கிளில்சுற்றித்திரிவதும்,நினைத்தஇடத்தில்நின்றுநினைத்த கடையில் டீசாப்பிடுவதும் நன்றாகத்தான் இருக்கிறது. காலை 6.00 டூ 7.15 முகூர்த்தம்.குளிர் நேரம் எழுந்து கிளம்புவது கொஞ்சமாய் சிரமப் படுத்தி னாலும் கூட கிளம்பி விடுகிறான்.6.15ற்கெல்லாம் மண்டபம் போய் விட்டான். இவன்வீடு இருக்கிறஏரியாவிலிருந்துமண்டபம்இரண்டுகிலோமீட்டர் தூரங்களாவது இருக்கும். உழவர் சந்தைக்குஎதிர்த்தாற்ப்போல் என பத்திரிக்கையில்போட்டிருந்தார்கள். நேற்றுஇரவே ...
மேலும் கதையை படிக்க...
பரமக்குடியிலேயே இறங்கிவிட்டேன். அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியும் என்கிற இல்லை எனக்கு. வழியெங்கும் நினைத்துக்கொண்டுதான் வந்தேன்.இறங்குவதற்கு ஏதுவான இடம் எதுவாய் இருக்க முடியும் என,,,,,,,,,,,,, நீண்டு விரிந்திருந்த பஸ்,அதில் சற்று நிதானமாகவும், அவசரமான மனோ நிலையிலும்அமர்ந்திருந்தமனிதர்கள்,கலர்,கலரான உடைகளிலும், அலங்காரத்திலும்,பெண்களும்,சிறுவர்களுமாய் தனித்துத்தெரிந்தார்கள். டிக்கெட் மிசினை சரிபார்த்துக்கொண்டிருந்த கண்டக்டர் ஓட்டுனரிடம் ஏதோ ...
மேலும் கதையை படிக்க...
சிந்தித்தெள்ளிய…
சோப்பிடலின் உருதாங்கி…
கரிசத்தரை…
கிளியாஞ்சட்டி…
பதிவிறக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)