ஊரிலிருந்து வந்திருந்தான் ரகு.
ரகுவின் அக்காவை மணந்திருப்பவன் சேகர்.
இருவருமே மளிகைக்கடை வைத்திருப்பவர்கள்.
“என்ன ரகு, ரொம்ப சோகமா இருக்க.’
“கடையில வியாபாரம் ரொம்ப கம்மியாபோகுது மாமா. ரொம்ப கவலையா இருக்கு.’
“அப்படியா. நீ இன்னைக்கு ஒருநாள் என்கூட கடைக்கு வந்துபாரு.’
“சரி மாமா.’ இருவரும் கடைக்கு கிளம்பினார்கள்.
கடையில் பத்து ரூபாய்க்கும் குறைவாக சில்லறை கொடுப்பதுபோல் இருந்தால் நோட்டில் குறித்துக் கொண்டு அடுத்தமுறை வாங்கிக் கொள்ளுமாறு பணிவுடன் கூறினான் சேகர்.
“என்ன மாமா, சில்லறைதான் இருக்கே, கொடுத்துட வேண்டியதுதானே.’
“கொடுத்துடலாம் ரகு. ஆனால், அப்படிக் கொடுத்துட்டோம்னா அவங்களுக்கும் நமக்கும் உறவு முறிந்தமாதிரி ஆயிடுது. அடுத்தமுறை வேற கடையில கூட வாங்கிக்க முடியும். ஆனால் சில்லறை பாக்கி இருந்தா அதை கழிக்க கண்டிப்பா வருவாங்க. வரும்போது அவங்களுக்குத் தேவையானதை வாங்கவும் செய்வாங்க. அப்ப நம்ம வியாபாரமும் நல்லா நடக்கும், கஸ்டமரும் கையவிட்டுப் போகமாட்டாங்க.’
“அருமையான ஐடியா மாமா. கண்டிப்பா நானும் கடைப்பிடிக்கிறேன்.’
- ஆர். பாலகிருஷ்ணன் (டிசம்பர் 2012)
தொடர்புடைய சிறுகதைகள்
ரயிலைப் பற்றிய இவ்விவாதத்தில் நீங்கள் அவசியம் பங்கேற்கவேண்டும். குறைந்தபட்சம் கவனிக்கவாவது முயற்சிக்கவும். இல்லையானால் எட்டாம் அத்தியாயத்தில் இந்த ரயிலை நான் எரிக்கும்போது நீங்கள் தேவையற்ற பதட்டத்திற்கு ஆளாக நேரிடும்.
அதோ கேட்கும் அந்த ஹாரன் சத்தம் ஒரு ரயிலுக்குரியதான கம்பீரத்தோடும் நளினத்தோடும் ஒலிக்கவில்லை ...
மேலும் கதையை படிக்க...
கலைச்செல்வன் தனக்கு முன்னால் அமர்ந்திருந்த கூட்டத்தை வியப்பாகப் பார்த்தார். அந்தத் தலைமை அலுவலகத்தில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று பிரிவுபச்சார நிகழ்வுகள் சாதாரணம். ஆனால் இதுவரை கான்ஃபரன்ஸ் ஹால் நிரம்பியதில்லை. இருபுறமும் ஊழியர்கள் ஆர்வமாக நின்றிருந்ததில்லை.
பல்வேறு துறைகளிலிருந்தும் சகாக்கள் திரண்டிருந்தார்கள். திண்டுக்கல் ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு இப்போதும் நன்றாக நினைவில் உள்ளது, ஒரு மரணம் அதன் அர்த்தங்களுடன் என்னுள் பதிந்த நாள்!
எனக்கு அப்போது ஆறு வயது. இலங்கை ராணுவத்தின் வாகன ரோந்து அணியினரால் சுடப்பட்டு, வீதியில் கிடந்த அம்பி மாமாவை அப்பாவும் இன்னும் சிலருமாக வீட்டுக்குக் கொண்டுவந்தனர். ...
மேலும் கதையை படிக்க...
செவத்தி...
யார் இவள்?
தத்தம் கணவன்மார்களை கடலுக்கு மீன்பிடிக்க அனுப்பிவிட்டு, அவர்களின் வருகைக்காக நெஞ்சில் ஏக்கங்களை சுமந்து கொண்டும் கண்களில் உயிரை ஏந்திக்கொண்டும், பசியால் அழும் கைக்குழந்தையின் வாயினை தங்கள் பசையற்ற மார்பகங்களில் திணித்துக் கொண்டும் காத்திருக்கும் பல ஆயிரக்கணக்கான மீனவப் பெண்களில் இவளும் ...
மேலும் கதையை படிக்க...
சாருமதி (என் காதல் மனைவி) குசினிக்குள் இருந்துகொண்டு நேற்றே வெதுப்பிவைத்த கேக்கை அழகாக ஐசிங் செய்வதற்காகச் செதுக்கியபடி மூன்றாவதுதடவையாக வாக்குறுதி தந்தாள்
“இன்னும் ஐந்து நிமிஷத்திலே கோப்பிவரும்.”
அடுத்த தடவையும் கண்ணம்மா வாக்குத்தவறுவாளாயின் பியரிடமே தஞ்சம் புகுவதென்று தீர்மானித்தபடி அன்றைய மாலைப்பத்திரிகையை எடுத்துப் புரட்டினேன்.
முழுப்பக்கக் ...
மேலும் கதையை படிக்க...