விசித்திர உருளைch2008

 

“அரசே உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி கொண்டுவந்துள்ளேன்” நந்தவனத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அரசர் வீரவர்மனிடம் பவ்யமாகச் சொன்னான் தளபதி நரசிம்மன்.

“சொல் நரசிம்மா”

“நம் தேசத்தின் வடக்கு பகுதியில் இன்று திடீரென்று ஒரு மாபெரும் சத்தம் கேட்டது, அங்கே காவற்பணியில்
ஈடுபட்டிருந்த நம் சேவகர்கள் ஓடிச்சென்று பார்த்த போது ஒரு விசித்திர காட்சி தென்பட்டது அரசே!”

“அதென்ன விசித்திர காட்சி நரசிம்மா?” ஆர்வமுடன் கேட்டார் அரசர்.

“இரும்பினால் செய்யப்பட்ட ஒரு பெரும் உருளை விண்ணிலிருந்து பெரும் சத்தத்துடன் விழுந்திருக்கிறது அரசே, நம் வீரர்கள் அருகில் சென்று பார்த்த பொழுது ஒரு சவம் அந்த உருளையின் உள்ளே
கிடந்திருக்கிறது”

“நான் உடனே அந்த உருளையை காண வேண்டும்,நாம் இப்பொழுதே புறப்படுகிறோம்,ரதத்தினை தயார் செய்யுங்கள்”

“உத்தரவு அரசே”

அரண்மனையில் இருந்து புறப்பட்ட ரதம் வடக்குப் பகுதிக்கு சூரிய அஸ்தமணத்திற்கு பின் வந்து சேர்ந்தது.

“அரசே நீங்கள் அருகில் செல்ல வேண்டாம்,என் உள்ளுணர்வு இதில் ஏதோ விஷமம் இருப்பதாக சொல்கிறது” கவலையுடன் சொன்னான் நரசிம்மன்.

“எதிரிகள் என் பெயர்கேட்டாலே காத தூரம் ஓடுவார்கள் என்பதை மறந்துவிட்டாயா நரசிம்மா? இந்த உருளை என்னை என்ன செய்துவிடப்போகிறது, நீயும் என்னோடு வா, உள்ளே என்ன இருக்கிறது என்று ஆராய்ந்துவிடுவோம்”

அரசரும்,நரசிம்மனும் மிகுந்த ஜாக்கிரதையோடு உள்சென்றனர்..

“இதென்ன அரசே நிறைய எண்களும் சில கைப்பிடிகளும் இருக்கின்றன?” வியப்புடன் கேட்டான் நரசிம்மன்.

“விந்தையாக இருக்கிறது நரசிம்மா! இங்கே பார் சிகப்பு வண்ணத்தில் நெருப்பென ஜொலிக்கிறது ஒரு விளக்கு!”

“ஆம் அரசே என் உடைவாளால் அதைக் கீறிப்பார்த்துவிடுகிறேன்” என்றவாறே தன் உடைவாளால் ch2008 என்கிற குறியீடு பொறிக்கப்பட்ட
சிகப்பு விளக்கை தொட்டான் நரசிம்மன்..

பெருத்த சத்தத்துடன் விண்ணில் சிறுபுள்ளியென மறைந்தது
அந்த விசித்திர உருளை.

“தோ பாரு மச்சி டிராமாலேர்ந்து கோமாளி பசங்க நேரா தெருவுக்கு வந்துட்டானுங்க”

தங்களை பரிகாசம் செய்கின்ற சென்னைத் தமிழ்மக்களை கண்டு
திகைத்து நின்றனர் அரசரும், நரசிம்மனும்.

2008ம் ஆண்டு புது வருட கொண்டாட்டத்தில் களைகட்டி இருந்தது
சென்னை.

- Thursday, December 13, 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
சப்தங்களால் காயப்படாத இரவொன்றில் கடற்கரையில் கடல்பார்த்து அமர்ந்திருந்தபோதுதான் அந்த அலைபேசி அழைப்பு வந்தது. அலையுடன் பேசுவதை நிறுத்திவிட்டு அலைபேசியை எடுத்தேன். அப்போதுதான் காவ்யா நீ என்னிடம் முதன்முதலாய் பேசினாய். என் கவிதைகள் படித்திருப்பதாக சொன்னாய். கவிதையுலகிற்குள் கைகோர்த்து நடக்க ஆரம்பித்தோம். எழுதுகின்ற கவிதைக்கெல்லாம் முதல் ...
மேலும் கதையை படிக்க...
இவனை நம்பி வந்திருக்க கூடாதோ? அடச்சே ஏன் இப்படி எல்லாம் மனசு நினைக்குது? அவன் ரொம்ப நல்லவன்... மனசுக்குள் வினோத்தை பற்றி பலவாறாக எண்ணியபடியே நகம் கடித்துக்கொண்டிருந்தேன் இரவு மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது.. பத்து மணிக்கே வர்றேன்னு சொன்ன‌வ‌ன் இன்னும் வ‌ர‌லை. ...
மேலும் கதையை படிக்க...
மெரினா கடற்கரை: "இந்தக் கடல்மேல சத்தியமா சொல்லு நந்தினி நீ என்னை காதலிக்கவே இல்லையா?" கண்ணில் நீர்துளிக்க கேட்டான் பாலா. "இல்ல பாலா...உன் புரிதலில்தான் தப்பு இருக்கு. எனக்கு உன்னை பிடிக்கும், உன்கூட சினிமா,டிஸ்கோன்னு நான் சுத்தினதும் உண்மை, எனக்கு ஊர்சுத்துறது ரொம்ப பிடிக்கும்,அதுக்கு ஒரு ஆள் ...
மேலும் கதையை படிக்க...
மும்பை,அந்தேரி ரயில்நிலையம். கடந்து செல்லும் மின்சார ரயிலின் வேகமும்,கால்மீது நடந்து செல்லும் மனிதர்களின் வேகமும் அவசர வாழ்க்கையை எடுத்துரைத்தது. வினோத் அமைதியாக சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். எரிமலையாக வெடித்துக்கொண்டிருந்தாள், வித்யா. "மொதல்ல என் பிரண்ட் சொன்னப்போ நான் நம்பலை, என் வினோத்தை பத்தி எனக்குத் தெரியும் நீ ...
மேலும் கதையை படிக்க...
பழைய சோற்றை தின்றுகொண்டிருந்த மணி பெரும் சத்தம் கேட்ட திசையை நோக்கி குரைக்க ஆரம்பித்த போது அடுப்பங்கரையில் சமைத்துக்கொண்டிருந்த அம்மாவும், பழைய செய்தித்தாள்களை எடைக்கு போடுவதற்குகட்டிக்கொண்டிருந்த அப்பாவும் வேகமாக பின்வாசலுக்கு ஓடினர். பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்த என் காதுகளை கிழித்துவிடுவதாய் இருந்தது அந்த ...
மேலும் கதையை படிக்க...
ப்ரியம்வதா!
கறுப்பு வானவில்
மணல்வீடுகள்..
சிகப்பு ரோஜா
சங்க மித்திரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)