வலைத்தளம் – ஒரு பக்க கதை

 

வலையை மேய்ந்துகொண்டு இருந்த ஸ்டாலினின் முகம் முழுக்க கவலை ரேகைகள்…

எப்படி? எதனால்? … கேள்விகள் மனதை குடைந்துகொண்டு இருந்தன….

ஏய் மாமூ … என்னடா ஆச்சு ? ….ஆனந்த் கேட்டான் …

மச்சி …. எவனோ ஏன் நெட்ல கைவரிசை காடிட்டாண்டா !…

நீதானே நேத்து கடைசியா use பண்ணிருப்ப?…

ஆமாம் …ஆனா,அவசரமா போன் வந்ததுனால, அப்படியே விட்டுட்டுப் போய்டேன் ….

காலையில பார்த்தா எவனோ பொறம்போக்கு damage பண்ணிவெச்சிருக்கான்!…..

பழையபடி set பண்ணிட்டியா?……

செட்டிங் பண்ணா சரியா வர மாட்டேங்குது !….

தள்ளு நான் பார்க்குறேன் … பார்த்துவிட்டு உதடு பிதுக்கினான் …….

வேற வழி இல்லை புது வலைதான் வாங்கணும் … இன்னிக்கு நீ மீன் பிடிக்க முடியாதுடா மாமூ … இனிமே இப்படி அசால்ட்டா வலையை வெளியே காயப் போடதே !.. 

தொடர்புடைய சிறுகதைகள்
பள்ளிக்கு இரண்டு நாளில் சி.இ.ஓ. இன்ஸ்பெக்‌ஷன் இருக்கிறது என்ற செய்தி வந்த போது, அது பியூலாராணியை அவ்வளவாக பாதிக்கவில்லை. “வரட்டுமே; அதனால் என்ன!” என்றாள் மிகச் சாதாரணமாய். சி.இ.ஓ. வையும் அவருடன் வருகிற ஆசிரிய பட்டாளத்தையும் சமாளிப்பது அப்படி ஒன்றும் சிரம்மான ...
மேலும் கதையை படிக்க...
ஏசி அறை! வெயிட்டிங்க் ஹாலில் நண்பர்கள் பெருமாளும், சரவணனும், தொழிலதிபர் சிவக்கொழுந்தை காண காத்திருந்தனர்.இருவருக்கும், ஏறக்குறைய வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும், செகரட்டரி இவர்களை இன்னும் ஐந்து நிமிடத்தில் கூப்பிடுவதாக சொல்லியிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இந்த அறையின் அலங்காரங்களும், தோரணையும் பெரும் ...
மேலும் கதையை படிக்க...
ஊற்று வற்றாத மண்
பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் கோவை ரயிலில் தன் பெற்றோருடன் ஏறி இருக்கையில் அமர்ந்த ராஜேஷ், தனது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்தான். மெஜஸ்டிக் ரயில் நிலையத்திலேயே ஏறி அமர்ந்திருப்பார் போலும். தழையத் தழைய வேட்டி கட்டிய, ஏறக்குறைய முப்பது வயதுக்கு ...
மேலும் கதையை படிக்க...
அந்த பிரம்மாண்ட ஜவுளிக்கடையின் முதலாளி ராமமூர்த்தி, தன் ஏ.ஸி.அறையில் அமர்ந்து வரப் போகும் தீபாவளி விற்பனைக்கான புதுச் சரக்குகள் குறித்த விலைப் பட்டியலை ஆராய்ந்து கொண்டிருந்த போது அறையின் கதவு லேசாகத் தட்டப்பட, நிமிர்ந்து பார்த்தார். மேனேஜர் பாலு நின்றிருந்தார். 'ம்….உள்ளார வாங்க ...
மேலும் கதையை படிக்க...
அவசர கால பிரகடனமாக ஐ.நாவில் சைனா மற்றும் இந்தியாவின் சார்பில் ஸ்ரீனியும், செந்திலும் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார்கள். அவை, உங்களின் விழிப்புணர்வுக்காக இங்கே பதிவிடப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக இந்தியாவிலும் சைனாவிலும் இருந்த நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற சட்ட ...
மேலும் கதையை படிக்க...
கதைகளற்றுக் கடந்து போகும் பால்ய காலங்கள்
புனிதன்
ஊற்று வற்றாத மண்
முதலாளியோட செலக்சன்
புரட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)