லஞ்சம்… வஞ்சம்!

 

சாரதா தனது ஆடிட் டரின் முன்னால் கையைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஆடிட்டரும், அவளது தந்தையின் ஆப்த நண்பருமான வாசுதேவன் பாசம் தொனிக்கப் பேசினார்…

‘‘சொல்லும்மா, என்ன பிரச்னை?’’

‘‘அங்கிள்! யாரோ ஜெய்கிஷன்னு ஒரு இன்கம்டாக்ஸ் ஆபீஸர் நேத்து என்னை செல்லுல கூப்பிட்டார். ஏறக்குறைய அஞ்சு லட்ச ரூபாய் பெறுமானமுள்ள நகைகளை லஞ்சமா கேக்கறாரு அந்தாளு. அப்படிக் கொடுக்கலேன்னா பயங்கரமான விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும்னு மிரட்டினாரு. கூடிய சீக்கிரம் கடையை ரெய்டு பண்ணு வேன்னு கோடி காமிச்சாரு. யோசிக்க எனக்கு ஒரு நாள்டயம் கொடுங்கன்னு சொல்லிட்டு, உங்க கிட்ட வந்திருக்கேன்.’’

‘‘சாரதா, அந்தாளு எங்கேயோ வடக்குலேர்ந்து டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருக்கான். சரியான லஞ்ச நாதன்னு கேள்வி.’’

‘‘அங்கிள்! எனக்குச் சில விஷயங்கள் தெரிஞ்சாகணும். அப்பா மறைவுக்குப் பிறகு, இந்த ஆறு மாசமாதான் நான் இந்தக் கடையை நிர்வாகம் பண்ணிட்டு வரேன். எங்க கடையோட கணக்கை நீங்கதான் பல வருஷங்களா பார்த்துட்டு வரீங்க. உங்களுக்குத்தான் தெரியும். சொல்லுங்க… கணக்கெல்லாம் சுத்தமா இருக்கா, இல்லே உள்ளே ஏதாவது மூடி மறைச்சு…’’

‘‘சாரதா, உங்கப்பாவைப் பத்தி என்ன நினைச்சே? அப்பழுக்கு இல்லாதவர். கடையோட கணக்கை கண்ணாடி மாதிரி பளிச்சுனு வெச்சுட்டுப் போயிருக்கார். கணக்குல வராத பணம்னு ஒத்த ரூபாய்கூடக் கிடையாது.’’

‘‘எனக்கு அது போதும் அங்கிள்! அந்த ஜெய்கிஷனுக்கு நான் யாருன்னு காட்டறேன்!’’

ஒரு திங்கட்கிழமை காலையில், பஜாரின் மத்தியில் இருந்த சாரதாவின் நகைக் கடையை ஆணும் பெண்ணுமாக வருமான வரித்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டனர். ஜெய்கிஷன்தான் ரெய்டுக்குத் தலைமை.

ஒவ்வொருவரும் புகைப்படம் ஒட்டிய தங்கள் அடையாள அட்டையைசாரதா விடம் காட்டிவிட்டுத் தங்கள் வேலையை ஆரம்பித்தார்கள். ஒரு அதிகாரி விற்பனை பில்களைப் பரிசோதிக்க ஆரம்பித்தார். மற்றொருவர் ஒவ்வொரு நகையாகக் காட்டி, அது ஸ்டாக் ரெஜிஸ்டரில் எங்கு பதிவாகி இருக்கிறது என்று கேட்டுக்கொண்டு இருந்தார். இருவர் செலவுக் கணக்கு வவுச்சர்களைச் சரிபார்த்துக்கொண்டு இருந்தார்கள். தலைமை அதிகாரி ஜெய்கிஷன், சாரதாவிடம் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தான்.

இரவு பதினோரு மணி வரை முழு வீச்சில் நடந்த சோதனையில் ஒன்றும் தேறவில்லை.

‘‘ஓ.கே! இன்னும் கால் மணிநேரம்தான் டயம்!’’- சாரதாவை ஓரக்கண்ணால் பார்த்த படியே தனது அதிகாரிகளுக்கு உரக்கக் கட்டளையிட்டான் ஜெய்கிஷன்.

இதுவரை நூற்றுக்கணக்கில் ரெய்டு கள் நடத்தியிருந்த அவனுக்கு, ரெய்டு செய்யப்படுபவர்களின் சைக்காலஜி அத்துப்படி. ரெய்டு முடியப் போகிறது என்று தெரிந்தால், தன்னிச்சையாக அவர்கள் பார்வை, விலையுயர்ந்த பொருட்களை ஒளித்து வைத்திருக்கும் இடத்தின் மீது விழும். அவன் எதிர்பார்த்தது போலவே, சாரதா கடை நடுவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனது பார்வையை ஓடவிட்டாள். இதற்காகவே காத்திருந்த ஜெய்கிஷன் விருட் டென எழுந்து, அந்த இடத்தை நோக்கி ஓடி னான். அங்கு இருந்த கிரானைட் கற்கள் சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்டு, மீண்டும் பொருத்தப்பட்டு இருப்பது தெரிந்தது. ஜெய்கிஷனின் கண்கள் வெற்றிக் களிப்பில் மின்னின.

சில நிமிடங்களில், அதிகாரிகள் அந்தக் கற்களை லாகவமாகப் பேர்த்து எடுக்க, உள்ளே வேலைப்பாடு அமைந்த மரத்தாலான ஒரு சிறிய நகைப்பெட்டி! அதைப் பத்திரமாக வெளியே எடுத்துத் திறந்து பார்த்தபோது, கண்ணைப் பறிக்கும் பளபளப்பில் பாதி கோழிமுட்டை அளவில் ஒரு வைரக்கல்!

சாரதா இப்போது நடுக்கத்துடன் தலையைக் குனிந்துகொண்டு இருக்க, ஜெய்கிஷன் கொக்கரித்துக்கொண்டு இருந்தான்…

‘‘மேடம், எனக்கு நகையைப் பத்தி அதிகம் தெரியாதுன்னாலும், இது மிக விலை உயர்ந்த வைரம் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். இதை உங்கள் ஸ்டாக் ரெஜிஸ்டரில் எங்கே பதிவு செய்திருக்கிறீர்கள் என்று காட்ட முடியுமா? இதை யாரிடம், எவ்வளவு விலை கொடுத்து வாங்கினீர்கள் என்று விவரம் சொல்ல முடியுமா? வாங்கியதற்கான பில்லைக் காண்பிக்க முடியுமா?’’

சாரதா தொண்டையைக் கனைத்துக் கொண்டு, ஈனஸ்வரத்தில் பேசத் தொடங் கினாள்… ‘‘சார், ப்ளீஸ்… இதுக்கும் கடைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க என்னோட பெர்சனல் மேட்டர்.’’

‘‘புரியலை?’’

‘‘அதாவது, இதை எனக்கு கிஃப்டா கொடுத்தது என்னோட பாய் ஃப்ரெண்ட்!’’

இப்போது ஜெய்கிஷனின் குரலில் எகத் தாளமும் சேர்ந்து ஒலித்தது. ‘‘நல்லதாப் போச்சு! அவரோட பேரு, அட்ரஸ், போன் நம்பர் கொடுங்க. அவரை உங்க முன்னாலேயே விசாரணை பண்றோம். சுந்தர், மேடம் சொல்றதை நோட் பண்ணிக்குங்க.’’

‘‘இல்ல சார், அதுல வேற ஒரு பிரச்னை இருக்கு’’ என்று பதறினாள் சாரதா. ‘‘எங்க காதல் அவரோட அப்பாவுக்குத் தெரிஞ்சா வம்பாயிடும். அதனால தயவுசெய்து, இந்த மேட்டரை இதோட விட்ருங்க. அந்தக் கல்லை என்கிட்ட கொடுத்துருங்க, ப்ளீஸ்!’’

ஜெய்கிஷன் அசைந்து கொடுக்கவில்லை. சாரதாவைப் பார்த்துக் கம்பீரமாக முழங் கினான்… ‘‘வருமான வரிச் சட்டத்தின் கீழ் எனக்கிருக்கும் அதிகாரத்தைப் பிரயோகித்து, இந்த விலைமதிப்புள்ள வைரக்கல்லை இந்திய அரசாங்கத்தின் சார்பில் நான் கையகப்படுத்துகிறேன். உங்களுக்கு ஆட்சேபனை ஏதாவது இருந்தால் சொல்லலாம்!’’

சாரதாவுக்குப் பேச்சே வரவில்லை.

‘‘ஓ.கே. சுந்தர், இந்தக் கல்லைஎடை போட்டு ஒரு ரசீது தயார் பண்ணுங்க.’’

‘‘சார்… ட்ரேட் விட்னஸ் வேணுமே? அதாவது, இதே தொழில்ல இருக்கிற சில சாட்சிகள் முன்னாடிதான் நாம இதை மதிப்பீடு பண்ண முடியும். அதானே ரூல்ஸ்?’’

‘‘என்னய்யா பொல்லாத ரூல்ஸ்? மணி பார்த்தியா, பன்னிரண்டு! இந்த நடுராத்திரியில சாட்சியைக் கொண்டான்னா நான் எங்கே போவேன்? சீஃப் கமிஷனர்கிட்ட பேசி ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கிடறேன். நீங்க மார்க்கெட் ரேட்டுக்கு மதிப்பு போடுங்க. வைரம் ஒரு கேரட் என்ன விலைனு தெரியும்ல? தெரியலேன்னா மிஸ். சாரதாகிட்ட கேட்டுக்கங்க.’’

‘95 கிராம் எடையுள்ள ஒரு வைரக் கல்லை இந்திய அரசாங்கத்தின் சார்பாக தான் கையகப்படுத்தியிருப்பதாக’ தயாரிக்கப்பட்ட ரசீதில், பச்சை மையில் கையெழுத்துப் போட்டு, சாரதாவிடம் நீட்டினான் ஜெய்கிஷன். ‘லஞ்சம் தரமாட்டேன். செய்யறதைச் செய்துக்கோ’ன்னு திமிரா சொன்னே யில்லே… இப்ப தெரியுதா, யார் இந்த ஜெய்கிஷன்னு?’ என்கிற கோப வெறி அவன் கண்களில் மின்னியது.

இது நடந்த பதினைந்தாவது நாள்…

சாரதாவின் தனியறையில் அவள் முன் உட்கார்ந்திருந்தான் ஜெய்கிஷன். அவனுக்குப் பயங்கரமாக வியர்த் திருந்தது. பலவீனமான குரலில் பேச ஆரம்பித்தான்…

‘‘என்னை மன்னிச்சிடுங்க மேடம்! உங்ககிட்டேர்ந்து கையகப்படுத்தின அந்தக் கல்லை எங்க டிபார்ட்மென்ட் அப்ரைசரை வெச்சு மதிப்பீடு பண்ணிப் பார்த்தேன். அது ஆயிரம் ரூபாய்கூடப் பெறாத போலிக் கல்லுனு சொல்லிட்டாரு. அதான், அதை உங்ககிட்ட கொடுத்துட்டு, ரசீதைத் திரும்பக் கேட்டு வாங்கிட்டுப் போகலாம்னு…’’

சாரதா கர்ஜித்தாள்… ‘‘மிஸ்டர் ஆபீஸர், என்ன… விளையாடறீங்களா? நீங்க கையகப்படுத்தின வைரக் கல்லோட மார்க்கெட் மதிப்பு முப்பது லட்சம் ரூபாய். அது கணக்குல வராத வைரம்னே வச்சுக்கங்க… அதுக்கான வருமானவரியைக் கட்டிடறேன். அந்த வைரத்தைத் திருப்பித் தர வேண்டியது உங்க டிபார்ட்மென்ட்டோட பொறுப்பு. இல்லேன்னா நான் உங்க மேல கேஸ் போட வேண்டி வரும். எனக்கும் கொஞ்சம் சட்டம் தெரியும், மிஸ்டர் ஜெய்கிஷன். நீங்க போகலாம்!’’

ஜெய்கிஷன் வியர்த்துப் போய், செய் வதறியாமல் எழுந்து போக, இல்லாத காதலனை எண்ணி சாரதாவின் இதழ்களில் ஒரு வெற்றிப் புன்னகை மின்னியது.

- வெளியான தேதி: 28 மே 2006 

தொடர்புடைய சிறுகதைகள்
பாலியல் தொழிலாளி!
"எப்படி இந்த விஷயத்தைக் கணவனிடம் சொல்லப் போகிறோம்...' என்று, திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள், சப்-இன்ஸ்பெக்டர் மாலதி. காவல் துறையில், இடமாற்ற உத்தரவு வாங்குவது, அவ்வளவு சுலபம் இல்லை; அதற்கு, பல லட்ச ரூபாய் செலவாகும் என்று அவளுக்கு தெரியும். மதுரையில், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ...
மேலும் கதையை படிக்க...
தோழியா, காதலியா?
""எனக்கு இன்னிக்கு, ராசிபலன்ல அதிர்ச்சின்னு போட்டிருந்தான். ஆனா, அது, இந்த மாதிரி, ஒரு இன்ப அதிர்ச்சியா இருக்கும்ன்னு, நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கல... வா தீபிகா... வெல்கம். இன்னும் பத்து நாள்ல, நான் தாலி கட்டப் போற தேவதை, சொல்லாமக் கொள்ளாம முன்னால ...
மேலும் கதையை படிக்க...
தாயில்லாமல் நானில்லை
""டேய் நம்ம ஜெயிச்சிட்டோம்டா... மினிஸ்டர் பொண்ணு கல்யாணத்துக்கு பூ அலங்காரம் முழுசும் நமக்குதான். மூணு லட்ச ரூபாய் கான்ட்ராக்ட்... கல்யாணத் தேதிய இப்பத்தான் சொன்னாங்க...'' ""கையக் கொடுரா... இதுக்கெல்லாம் காரணம் நீதாண்டா,'' எட்வர்டின் கைகளைப் பற்றி முரட்டுத்தனமாக குலுக்கினான் ஜான். ""கல்யாணம் என்னிக்கு?'' ""பிப்ரவரி 15.'' ""பிப்ரவரி ...
மேலும் கதையை படிக்க...
ஒரு விபத்து – ஒரு விசாரணை
அந்த டெம்போ டிராவலர் வேனில் இருந்த எல்லாரும் பதட்டமாக இருந்தனர். டிரைவரின் கைகள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தன. டிரைவருக்குப் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த வாசுவின் முகம் வியர்த்திருந்தது. யாரும் எதுவும் பேசவில்லை. பின்னால் உட்கார்ந்திருந்த வாசுவின் மனைவி, மவுனத்தைக் கலைத்தாள். ""ஏங்க... அந்த பையனோட ...
மேலும் கதையை படிக்க...
‘‘டாக்டர், நான் ரகு பேசறேன்... நீங்க இப்பவே என் வீட்டுக்கு வர முடியுமா? ரொம்ப அவசரம், ப்ளீஸ்!’’ ‘‘என்ன ரகு... ஏதாவது எமர்ஜென்சியா? உனக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லையே?’’ ‘‘எனக்கு ஒண்ணும் இல்லை டாக்டர்! ஆனா, நான் சொன்னா நம்ப மாட்டேன்னீங்களே, அந்த செக்ஸ் ...
மேலும் கதையை படிக்க...
‘‘என்னங்க... இப்படிஇடிஞ்சு போய், பித்துப் பிடிச்ச மாதிரி உக்காந்துட்டு இருந்தா எப்படி? உங்க ஆபீஸ் பிரச்னை எப்பத்தான் தீரும், சொல்லுங்க? எப்போ என்கொயரி முடியுமாம்? இன்னும் எவ்வளவு நாளைக்குதான் சஸ்பெண்ட் பண்ணி வெச்சிருப்பாங்-களாம்?’’ மாலதிக்கு என்ன பதில் சொல்-வது என்று தெரிய-வில்லை. மொத்தத்தில் ...
மேலும் கதையை படிக்க...
''என்னங்க...'' ''என்ன, சொல்லு?'' டி.வியில் மூழ்கியிருந்த வாசுவின் குரலில் தெரிந்த எரிச்சல், மாலதியைச் சுட்டது. இருந்தாலும், ஆக வேண்டிய காரியத்தை மனதில்கொண்டு, மிகவும் குழைவாகப் பேசினாள் மாலதி. ''என்னங்க, எனக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுங்களேன்... ப்ளீஸ்!'' ''உனக்கு எதுக்கு செல்போன்? வீட்லதான் லேண்ட்லைன் இருக்கில்ல... அப்புறம் ...
மேலும் கதையை படிக்க...
தோழனா நீ காதலனா?
''ரிஷி, அஞ்சாம் தேதி நான் லண்டன் போறேன். நாலு நாள் ஸ்டே இருக்கும். இந்தியாவிலேயே செல்போன் தயாரிக்கிற ஃபேக்டரி ஆரம்பிக்கப் போறேன்னு சொல்லிட்டு இருந்தேன்ல... அதுக்கான ஒப்பந்தத்துல கையெழுத்துப் போடப் போறேன்.'' ''கங்கிராட்ஸ் சந்தியா, உன்கூட யாரு வர்றா?'' ''யாரும் வரல. அப்பாவுக்கு உடம்பு ...
மேலும் கதையை படிக்க...
இதயத்தில் நுழைந்த வைரஸ்!
""மிஸ்டர் செந்தில்?'' ""நான் தான் பேசறேன்.'' "" நான் சங்கரி பேசறேன்.'' ""சொல்லுங்க மேடம்.'' ""என் கம்ப்யூட்டர்ல திடீர் திடீர்ன்னு பைல் காணாமப் போகுது. பாதி வேல பாத்துக்கிட்டிருக்கும் போதே ஆப் ஆயிருது. திடீர் திடீர்ன்னு ஏதோ படம் முன்னால வருது. எனக்கு பயமா இருக்கு செந்தில்.'' ""உங்க ...
மேலும் கதையை படிக்க...
கால் சென்டர் காதலி
'இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்... இதுதான் எங்கள் உலகம்' என்ற கவிஞரின் சொற்களை மெய்ப்படுத்துவதாக அந்த கால் சென்டர் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. மணி இரவு 11.45. பெங்களூரு நகருக்குச் சற்று வெளியே அந்தக் குட்டி வளாகத்தில் ஆண்களும் பெண்களுமாக 680 ...
மேலும் கதையை படிக்க...
பாலியல் தொழிலாளி!
தோழியா, காதலியா?
தாயில்லாமல் நானில்லை
ஒரு விபத்து – ஒரு விசாரணை
வெறி
பெரிய இடத்து உத்தரவு!
எஃப்.எம். ரேடியோவும் செல்போனும்..!
தோழனா நீ காதலனா?
இதயத்தில் நுழைந்த வைரஸ்!
கால் சென்டர் காதலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)