தன் இளம் மனைவியை அழைத்துக் கொண்டு வெளிநாடு சுற்றுப்பயணம் போனான் ஒருவன். அவர்கள் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தார்கள்.
அத்தனை அழகான அற்புதமான இயற்கைச் சூழல் நிறைந்த இடங்கள்.
ஒவ்வொரு இடத்தையும் வெகுவாய் ரசித்தாள் மனைவி.கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஊர் சுற்றினார்கள்.
வீடு திரும்பும்போது விமானத்தில் அவன் மனைவி அவனிடத்தில், ‘இவ்வளவு பார்த்தோமே இதுல உங்களுக்கு ரொம்ப பிடிச்சது எது?’ என்று கேட்டாள்.
அவனுக்கு நிறைய விஷயங்கள் தோன்றின. அவன் பார்த்த அழகழான கட்டடங்கள், அருவிகள், இயற்கை காட்சிகள் என்று பல காட்சிகள் அவன் மனதில் ஓடின.
அவன் அவற்றையெல்லாம் சொல்லவில்லை. அவன் தந்த பதிலில் மனைவி சொக்கிப் போனாள்.
அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா..?
”இவ்வனைத்திலும் எனக்குப்பிடிச்சது நீதான்..!”
நீதி: பேச்சில் சாமர்த்தியம் வேண்டும்
- 28-6-2004
தொடர்புடைய சிறுகதைகள்
“குருவே என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை’ என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“ஏன்? என்ன பிரச்னை?’ என்று கேட்டார் குரு.
“என்னிடம் நிறைய குறைகள் இருக்கின்றன. மற்றவர்கள் என்னைவிட திறமைசாலிகளாக தெரிகிறார்கள்’ என்று சொன்ன இளைஞனின் பிரச்னை குருவுக்குப் ...
மேலும் கதையை படிக்க...
“எனக்கு ஒரு பிரச்னை’ என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
வந்தவன் ஒரு இளம் தொழிலதிபன்.
“என்ன பிரச்னை, என்னாச்சு?’ என்று வினவினார் குரு.
“என்னிடம் வேலை பார்க்க நல்ல வேலையாட்கள் கிடைப்பதில்லை. வேலைக்கு வருபவர்களும் நீடித்து இருப்பதில்லை. ஏதாவது பிரச்னையில் வேலையை விட்டுப் போய்விடுகிறார்கள்’ ...
மேலும் கதையை படிக்க...
”வேகமாக வெற்றி கிடைக்க எவ்வளவு உழைக்க வேண்டும்?” என்ரு கேட்ட இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“ஏன்? என்னாயிற்றூ?”
“நான் தொழில் துவங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது.ஆனால் இன்னும் என்னால் நான் நினைத்த இலக்கை அடைய முடியவில்லை” என்று படபடபாய் சொன்ன இளைஞனின் பிரச்சனை ...
மேலும் கதையை படிக்க...
குருவே, எனக்கு எதுவுமே சரிப்பட மாட்டேன்கிறது என்று சொன்னவனை பார்த்தார் குரு. என்ன பிரச்னை? என்றார். எல்லாமே எனக்கு எதிராக இருக்கிறது. என்னால் சமாளிக்க சிரமமாக இருக்கிறது என்றான் வந்தவன்.
குரு சற்று சிந்தித்தார். அவனின் பிரச்னை அவருக்கு புரிந்ததது. அவனுக்கு ஒரு ...
மேலும் கதையை படிக்க...
குருவே, என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை.’’ என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“வருத்தப்படாதே, என்ன பிரச்னை?’’ என்று கேட்டார் குரு.
”என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை’’ என்றான் வந்தவன்.
வந்தவனின் பிரச்னை ...
மேலும் கதையை படிக்க...
குறைகளைவிட குணங்களைப் பார்ப்பது நல்லது..!
தண்டித்தலைவிட தட்டிக் கொடு…
அவசரப்பட்டால் காரியம் ஆகாது
புத்தியை பயன்படுத்தினால்…