ரீடேக்! – ஒரு பக்க கதை

 

டைரக்டர் ரமேஷ், நந்திதாவிடம், “இங்கப்பாருங்க மேடம்! இந்தக்காட்சிப்படிநீங்க ரெண்டு நாள் சாப்பாடு கிடைக்காமப் பட்டினியா இருக்கீங்க.

அதுக்குப்பிறகு தப்பிச்சு வந்து இங்க இவங்க கொடுக்கிற சாப்பாட்டை சாப்பிடுறீங்க…அந்த ரெண்டு நாள் பசியோடு இருக்கிறவ எப்படி சாப்பிடுவாளோ அதேமாதிரி சாப்பிடுங்க.

நீங்க சாப்பிடுற சீனை குளோஸ்-அப் ஷாட்ல எடுக்கணும். பசியோட ஏக்கம் உங்க கண்ல நல்லாத் தெரியணும். நீங்க சாப்பிடுறதப் பாத்தா, பசியோட சாப்பிடுற மாதிரி தெரியல! ஏதோ சும்மா கொறிக்கிற மாதிரி இருக்கு!

அடுத்த ஷாட்டாவது சரியா பண்ணுங்க மேடம்! ‘ கெஞ்சல் பாதியும், கோபம் பாதியுமாக கலந்து சொல்ல, அடுத்த டேக்கில் ஷூட் ஓ.கே. ஆனது.

“இந்த சித்தி, சாப்பிட்டால் உடம்பு ஏறிடும் என்று தினமும் வேக வைச்ச காய்கறியையும், ஏதாவது ஜூஸையும் சாப்பிடக் கொடுக்குது!

இன்னைக்கு முத ஷாட்லேயே நல்லா நடிச்சிருந்தா, அடுத்த தடவை சாப்பாடு கிடைச்சிருக்காது. அதுதான் வேணும்னே ரெண்டு சீன்ல சொதப்பினேன்.

யப்பா… ! ரொம்ப நாள் கழிச்சு வயிறு நிறைய நமக்கு பிடிச்ச கருவாட்டுக் கொழம்பை ஒரு வெட்டு வெட்டியாச்சு’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்,

ஒரு படத்திற்கு பலகோடி சம்பளம் வாங்கினாலும், சித்தியிடம் மாட்டிக்கொண்டு சாப்பிட முடியாமல் தவிக்கும் நடிகை நந்திதா.

- எஸ்.செல்வசுந்தரி (மார்ச் 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
' இந்தக் கூடையில் உள்ள வெள்ளரிப் பிஞ்சுகள் இரு நூறு ரூபாய்க்குத் தேறுமா. .? ' - என்று நினைத்து கண்களாலேயே அளந்து பார்த்தான் சிங்காரு. ' தேறும் ! ' என்று மனசு சொல்லியது. ' இதை இரு நூறு ரூபாய்க்கு விற்றால் ...
மேலும் கதையை படிக்க...
வாசலில் ஏதோ சத்தம் கேட்டது போல இருந்ததும் சட்டென்று முழிப்பு வந்தது அவனுக்கு. கட்டிலைவிட்டு தடக்கென்று எழுந்ததில் தலையணை அடியில் வைத்திருந்த கத்தி கீழே விழுந்தது. கைலியைத் தேடினான், போர்வையுடன் சுருண்டு கிடந்தது. எடுத்து தலை வழியாக உள்ளே நுழைத்து, சாத்தியிருந்த ...
மேலும் கதையை படிக்க...
மாலா மூன்றாவது முறையாக தொலை காட்சியில் அலைவரிசையை மாற்றி னாள். "ஒன்றுமே சரியாகயில்லை" சலிப்பாக வந்தது. காலையிலிருந்து துணி துவைத்தாகி விட்டது. செய்தித்தாள் படித்தாகி விட்டது. வாரத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் வருகிற தமிழ் வானொலி கேட்டாகி விட்டது. எங்கேயோ ...
மேலும் கதையை படிக்க...
“என்ன சேர், உங்க ஃபிரெண்ட்ஸ் இரண்டு பேர் ஒரே மாசத்துல இப்படி ஆயிடிச்சே?” அவன் கணேஷின் உதவி இயக்குனராக இருந்து பலநாள் பழகியிருப்பினும் தயக்கத்துடன் வினவினான். “யெஸ், அவங்க அவங்க விதி இல்லையா?” “யெஸ் சேர் பட் நீங்க கொஞ்சம் வருத்தப்படுவீங்க என்டு நினைச்சேன் ...
மேலும் கதையை படிக்க...
இரவு பத்து மணியிருக்கும். கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, யாராக இருக்கும் என யோசித்துக் கொண்டே கதவை திறந்த பார்வதிக்கு, அஞ்சலை அந்த நேரத்தில் வந்தது ஆச்சரியமாக இருந்தது. வீட்டு வேலைகளை முடித்து மதியவாக்கில் போனால் அடுத்தநாள் காலைதான் வருவாள். ...
மேலும் கதையை படிக்க...
பிஞ்சு..!
ஊஞ்சல் விழுது
பழக்கம்
செலக்சன் – ஒரு பக்க கதை
அஞ்சலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)