ரிஷி மூலம்

 

அவன் அந்த பார்க்கில் மரத்தடியில் அமர்ந்திருந்தான்.

காலையிலிருந்து, பார்க் பூட்டும் நேரமான இரவு வரை அப்படியே அதே நிலையில் அவனைப் பார்த்த வாச்மேன் அவ்விடம் விட்டு போகும்படி கூறவும் அவன் எழுந்துகொண்டான்.

அவன், கைசெயின்,கழுத்தில் செயின், வாச், எல்லாம் அணிந்திருந்தான். எங்கே போகப்போகிறாய் ? என்று வாச்மேன் முத்து கேட்க அவன் தெரியாது எனக்கூறவே, ஐயோ பாவம் என நினைத்த முத்து,தன் வீட்டிற்கு அழைத்துப்போனார்.

வீட்டில் முத்துவின் மனைவி இரக்கப்பட்டு சோறு போட்டாள். நன்றாக சாப்பிட்டான்.

எதைக்கேட்டாலும் பதிலே பேசாமலிருந்த அவன், மறுநாள் முத்து வேலைக்குப்புறப்பட்டபோது அவர் கூடவே புறப்பட்டு பார்க் வந்தான். அதே இடத்தில் அமர்ந்துகொண்டான். அதே கதை தினமும் தொடர்ந்தது.

முத்து தனக்கென எடுத்துவந்த சாப்பாட்டை அவனுடன்பகிர்ந்துகொள்வார், ஒரு நாள் அங்கு நடமாடிய இரண்டு முரடர்களை அவனுக்கு காட்டி உன் செயின் மற்றது எல்லாம் பத்திரம் என்று முத்து எச்சரித்தார். உடனேயே அவன் அவற்றை எல்லாம் கழற்றி முத்துவிடம் கொடுத்துவிட்டான்.

இப்படியாக, சாமி, முத்துவின் குடும்ப உறுப்பினன் ஆனான். முத்து எப்போதோ ஐயப்பன் மலைக்கு போனபோது கட்டிக்கொண்டு போன ஐய்யப்ப வேஷ்டி சாமிக்குத் தரப்பட்டது. முத்துவோடு சாப்பிட்டான். முத்துவோடு வேலைக்கு வருவது போல வந்து அதே மரத்தடியில் உட்கார்ந்து கொள்வான்.

ஓரிருமுறை அங்கு அவனைப்பார்த்த பெண்கள், சாமியார் போலும் என நினைத்து விழுந்து கும்பிட்டார்கள். எதையும் கண்டுகொள்ளாமலிருந்த அவன், ஒரு முறை தன் கால்களைக் கட்டிக்கொண்டு அழுத பெண்ணிற்கு இரங்கி “எல்லாம் நன்றாக நடக்கும் போ” என்று சொல்ல; “பார்க் சாமியார் ” என ஊரில் பேசப்பட்டார். அவன் என்று பேசப்பட்டவர் சாமியார் என மரியாதையுடன் அழைக்கப்பட்டார்.

தினம் பார்க்கில் நடைப்பயிற்சிக்கு வரும் அடுத்த தெரு தனவந்தர், சாமியிடம் ஏதோ கேட்க சாமியும், தன்னை விட்டால் போதும் என வாய்க்கு வந்ததை சொல்லி வைக்க அதுவே நடந்ததில் அந்த செல்வந்தர் மகிழ்ந்து போனார். அவர் டி.வி யில் ஆன்மீக விஷயங்களைப் பேசுகையில் பார்க் சாமியார் பற்றி குறிப்பிடவே மற்ற டீ.வி சானல்களிலிருந்தும் சாமியை பேட்டி எடுத்துப்போக வந்தனர். சாமி எதற்கும் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தார்.

பூர்வத்தில் சாமியாரின் தந்தையாகப்பட்டவர் டிவியில், அவரைப்பார்த்துவிட்டு, அவரைத் தேடி பார்க் வந்துவிட்டார்.

என்ன கூப்பிட்டும் தந்தையுடன் போக மறுத்ததுடன், மறுநாளே சாமி காணாமல் போய்விட்டார்.

பிற்பாடு கேரளாவில் அடர்ந்த காட்டுக்குள் ஒரு நதிக்கரையில் அமர்ந்திருந்த அவரை அங்கிருந்த பழங்குடியினர் ரிஷி என அழைத்தனர் அவர்களுக்கு அந்த ஓடும் நதிமூலமும் தெரியாது. இந்த ரிஷி மூலமும் தெரியாது.

ஆடு மேய்க்கும் சிறுவர்கள் எப்போதாவது தரும்பழங்களை ஏற்றுக்கொள்வார். இங்கு,ரிஷி பேரானந்தத்தில் திளைதுக்கொண்டிருக்க; மக்கள் கூட்டம் அங்கும் கொஞ்சம் கொஞ்சமாக சேரத்தொடங்கியது. அவர்களுக்கு அவர் போதிக்கத்தொடங்கினார்.

ஒருநாள் அவரது போதனை “யாரையும் வெறுக்கக்கூடாது என்பது பற்றியும் எல்லாம் அவன் செயல்” என்பது பற்றியுமான போதனையாக இருந்தது.”சூட்சுமத்தில் எல்லாம் நடந்துவிட்டபிறகே உண்மை உலகில் அதுவே நடைபெறுகிறது. அவரவர் கர்மாவினால்தான் அவரவர் செயல்கள் நடைபெறுகிறது. ஒருவனால் ஒருவன் கொலை செய்யப்படுகிறான் என்றால் கொலையாளியும் கொலை செய்யப்படுபவனும் கர்மாவினால்தான் செயலாற்றுகிறார்கள்…. என்று சொல்லிக்கொண்டிருந்தபோது போலீஸ் அவரை சுற்றி வளைத்து கைது பண்ணி அழைத்துப்போனது.

ம்ம்ம்.அவரது கர்மவினை. அவர் செய்த கொலைக்காக கைது பண்ணப்பட்டார். 

தொடர்புடைய சிறுகதைகள்
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பார்களே அது மீனாவின் வாழ்க்கையில் உண்மையாகி விட்டது. பெரும் பணக்காரர் மஹாலிங்கத்தின் ஒரே வாரிசு; மீனா; பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர இருந்த அந்த தருவாயில் விதி, அவளை வீதிக்கு கொண்டு வந்ததை சின்னஞ்சிறு பெண்ணான ...
மேலும் கதையை படிக்க...
இயல்; அப்பா! அப்பா! என்று கூப்பிட்டுக்கொண்டே மாடிப்படிகளில் ஏறி ஒடிவந்தாள். என்னம்மா. இப்படி ஓடிவராதே என்று உனக்கு எத்தனை தடவை சொல்வது? சந்தானம், செல்லமாக கடிந்துகொண்டான். பக்கதிலிருந்த மல்லிகா, “ம்க்கும். கழுதை வயதாகிறது. இன்னமும் செல்லம்” கழுத்தை நொடித்தாள். “சுளுக்கிக்கப் போகிறது ...
மேலும் கதையை படிக்க...
இதமான காற்று, கொஞ்சமாக குளிர். மயிலுக்குப்பிடித்த சீதோஷ்ணம். தோகை இருந்தால் விரித்தாடி மகிழிந்திருப்பாள் மஹா. கஜா நடைப்பயிற்சிக்கு வரமாட்டேன் என்று சொன்னதால் இத்தனை அழகையும் ரசிக்க கொடுத்து வைக்கவில்லை அவளுக்கு.பாவம். மஹாவின் எண்ண ஓட்டம் இவ்வாறு இருந்தது. அன்று பின்னிரவு மூன்று மணிக்குத்தான் கஜா ...
மேலும் கதையை படிக்க...
ஒடைக்காடு என்ற ஊரில் இன்ஸ்பெக்டர் மாதவனுக்கு டூட்டி போட்டிருந்தார்கள். ஒடைக்காடு என்ற பெயருக்கு ஏற்ப பச்சைப்பசேல் என்றிருந்த காட்டினுள் அழகிய ஓடை ஒன்று சலசலத்து ஓடும் அந்த காட்டிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டதால்தான் மாதவன் மஃப்டியில் வந்து அங்கு தங்கும்படி மேலிடத்து உத்தரவு. ...
மேலும் கதையை படிக்க...
சாரதா, குழந்தை அரவிந்தைத் தூக்கிக்கொண்டு மூச்சிரைக்க ஓடிக் கொண்டிருந்தாள். அவனைக் காப்பாற்றிவிட வேண்டும் என்பது மட்டுமே அவளது எண்ணமாக இருந்தது. பின்னால் அடிக்கடித் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடியவள்; ஒருவரும் தன்னைப் பின்தொடரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சிறிதே நிதானித்தாள். அருகில் ...
மேலும் கதையை படிக்க...
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?
இயல் இசை
புயலுக்குப் பின்னே
கொல்லி மலையின் வசந்தம் ஹோட்டல்
சங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)