ரகசியம் – ஒரு பக்க கதை

 

கடைப்பையனுக்கு முதலாளியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.கூட்டம் வழக்கம்போல நிரம்பி வழிந்தது. ஒரு இளம் தம்பதி டி.வி.டி பிளேயர் வாங்கினர். உடனே முதலாளி முருகேசன் அவனிடம் சொன்னார்… ”டி.வி.டி&யை அவங்க கார்ல வச்சுட்டு வா…’’

இப்படித்தான் யார் எதை வாங்கினாலும், ‘கார்ல வச்சுட்டு வந்திரு’ என்று சகட்டுமேனிக்குச் சொல்வார். இது அவனுக்குக் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன விஷயம். அவருக்கோ சொல்வதில் சலிப்பு வந்ததே இல்லை.‘‘வேண்டாங்க, நாங்களே எடுத்துட்டுப் போயிடுறோம்…’’ என்றபடி அதைக் கையில் தூக்கிக்கொண்டு நழுவினார்கள் அவர்கள்.

வாடிக்கையாளர் சென்றதும் முதலாளியைப் பார்த்துக் கேட்டே விட்டான்.‘‘அவங்க மொபெட்ல வந்து இறங்கினத நாம மாடியிலேர்ந்து பார்த்தோம். அப்படியிருந்தும் அவங்க கார்ல வந்ததா பாவிச்சு…’’‘‘இதோ பாருப்பா… இப்படிச் சொன்னா, ‘நம்மளப் பார்த்தா கார்ல வர்ற பார்ட்டி மாதிரி தோணுது’ன்னு அவங்க உணர்வாங்க. அதுல எவ்வளவு சந்தோஷப்படுவாங்க தெரியுமா? வாடிக்கையாளருங்க சந்தோஷம்தான் நமக்கு முக்கியம்…’’ என்றார் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.அடிமட்டத்திலிருந்து முதலாளி இந்த அளவுக்கு உயர்ந்திருக்கும் ரகசியம் அவனுக்குப் புரிய ஆரம்பித்தது!

- கே.எம்.சம்சுதீன் (செப்டம்பர் 2010) 

தொடர்புடைய சிறுகதைகள்
கண்ணாடியில் இரண்டு பிம்பங்கள் தெரிந்தபோது ஆசாரிக்கு வியர்த்துவிட்டது. இரண்டில் எது வழமையானது எது புதிதாகத் தோன்றியது என்பதை அவனால் பிரித்தறிய இயலவில்லை. கண்களைக் கசக்கித் துடைத்துக்கொண்டு பார்த்தான். மீண்டும் இரண்டு பிம்பங்கள் தெரிந்தன. கண்ணாடியில் ஏதேனும் கீறல் விழுந்திருந்ததா எனத் தடவினான். ...
மேலும் கதையை படிக்க...
உழவர் சந்தை நிறுத்தத்தில் நகரப் பேருந்து வந்து சல் என்று நின்றது. பேகொண்ட கூட்டம். தாத்தா முண்டியடித்து படிக்கட்டில் கால் வைத்ததுதான் தெரியும்... அப்படியே அத்தாசமாக உள்ளே தள்ளி, சருகைக் காற்று கொண்டுபோவதைப் போல நடூ இடத்தில் கொண்டுபோய் நிறுத்திவைத்துவிட்டது. சுவர் ...
மேலும் கதையை படிக்க...
நெல்லை பிப் 7 நெல்லையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி வேலை வாய்ப்பு முகாம் நடத்திய பெண்கள் ஆறு பேர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மகன் ஆகியோர் கைது நெல்லை பாளை மார்க்கெட்டைச் சேர்ந்த அறிவாளன் மகன் கௌதம் ( 23 ) ...
மேலும் கதையை படிக்க...
அது குறைந்த வருவாய் உள்ள ஒண்டுக்குடித்தனங்கள் நிறைந்த தெரு. அங்கிருக்கும் நிறைய பெண்கள் அருகில் உள்ள பங்களாக்கள், அபார்மெண்ட்களில் வீட்டு வேலைகளுக்கு போய் வருபவர்கள். அங்கு தான் ஆறுமுகமும் குடியிருக்கிறான். பக்கத்தில் உள்ள ஒரு பவுண்டரியில் அவனுக்கு வேலை. வேலை நேரம் போக மீதி நேரம் ...
மேலும் கதையை படிக்க...
புதுச்சேரி-நாகை பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பஞ்சைப் பனாதி... வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை. நாற்பத்தைந்து வயது தோற்றம். எதைஎதையோத் தின்று வெறுப்பேற்றினான். மரியாதை மருந்துக்குக் கூட ''சார்!'' நீட்டவில்லை. எனக்கு, இவன் அநாகரீகத்தை உணர்த்தி முகத்தில் கரி பூச ஆசை. கடலூர் பேருந்து ...
மேலும் கதையை படிக்க...
இரண்டு பிம்பங்களாலான உலகம்
காலம் காலம்
நாளிதழ்
பெருமை!
மனிதன்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)