யாரை நோக முடியும்?

 

எதிர்த்த வீட்டு பையனை பாரு, அவன் பையன். உன்னைய மாதிரியா, ஸ்கூல் விட்டதும் “டாண்ணு” வீட்டுக்கு வந்துடறான், அவனும் விளையாடத்தானே போறான், போய் ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வந்து படிக்க உட்கார்ந்துடறானுல்ல ! நீயும் இருக்கியே, புக் எடுப்பனான்னு அழிச்சாட்டியம் பண்ணிகிட்டு இரூக்கே.

ராம்குமார் அப்பொழுதுதான் படிக்க உட்கார்ந்திருந்தான். எதிர்த்த வீட்டில் சம்பத்தின் அப்பா அவனை திட்டிக்கொண்டிருப்பது இவன் காதில் நன்கு விழுந்தது. தன் பெயர் அடிபடுகிறதே என்று கொஞ்சம் கவனமாய் காது கொடுத்து கேட்டான். சந்தேகமே இல்லை. அவன் அப்பா இவனைத்தான் பாராட்டி, அவனை மட்டம் தட்டிக்கொண்டிருந்தார்.

இவனுக்கு பாவமாய் இருந்த்து. சம்பத் என்ன செய்வான் படிப்பு ஏற வேண்டுமே, கடனேன்னு ஸ்கூலுக்கு வந்துகிட்டு இருக்கான், அதையும் அவங்கப்பா பேசி பேசியே கெடுத்துடுவாரு. மனசுக்குள் வருத்தப்பட்டாலும், தன்னை பற்றி அவர் பெருமையாக பேசுவதும் மனதுக்குள் ஒரு கர்வத்தை கொடுத்தது.

பள்ளிக்கூடத்திலும் அப்படித்தான் ராம் குமார் பிரில்லியண்ட் ஸ்டூடண்ட், அவன் கூட வர்ற பையன் படிப்புன்னா என்னன்னூ கேப்பான். இது பள்ளியில் வாத்தியார்கள் இவர்களை பார்த்து அடிக்கும் கமெண்ட்.

ராம்குமார் என்னடா உங்கப்பா இராத்திரி உன்னைய அந்த வாங்கு வாங்கிட்டிருந்தாரு, கொஞ்சம் நக்கலாகவும், அக்கறையுடனும் கேட்பது போல கேட்டான் சம்பத்தை பார்த்து.

ச்…..ஒற்றை சொல்லால் அதை ஒதுக்கிவிட்டான். ஏண்டா சலிச்சுக்கறே, மீண்டும் தூண்டினான் ராம்குமார்.

விடறா அந்த ஆளை பத்தி பேசிகிட்டு இருக்காத, வேற விசயம் ஏதாவது இருந்தா பேசு. பேச்சை துண்டித்தான் சம்பத். ராம்குமாரின் அப்பாவும் சும்மா இருப்பதில்லை, சில நேரங்களில் சம்பத்தின் அப்பாவிடம் ராம் குமார் இந்த எக்ஸாம்ல எல்லாத்துலயும் செண்டம், டீச்சர்ஸ் எல்லாம் அவனை மெடிக்கலுக்கு படிக்க சொல்றாங்க, பாக்கலாம், நமக்கு அதுக்கு வசதி வேணுமில்லை, தன் மகனை பற்றி பெருமையாக சொல்லி வைப்பார். சம்பத்தின் அப்பாவுக்கு வாயும் வயிறும் எரியும். பின்ன என்ன? எழுதிய ஆறு பாடத்திலேயும் பெயில் மார்க் வாங்கியிருக்கான். அடுத்த வருசம் இதே ஸ்கூல்ல படிக்க வைப்பாங்கலானே தெரியலை. இதுல வேற இந்த ஆளு தன்னோட பையனை பத்தி நம்ம கிட்டே வந்து பெருமையா பீத்திகிட்டு இருக்காரு. மனசுக்குள் நினைத்தாலும் வெளியில் சிரித்துக்கொள்வார்.

பிளஸ் டூ வரும்பொழுது சம்பத் யாரோ நடிகனுக்கு கொடி பிடிப்பதில் ஆர்வமாகி விட்டான். ஏற்கனவே படிப்பில் அவனுக்கில்லாத ஆர்வம், இப்பொழுது சுத்தமாக காணாமல் போய் விட்டது.

ராம்குமார் சம்பத்திடம் டேய் எப்படியாவது பிளஸ் டூ முடிச்சுடுடா, அப்புறம் எப்படியோ சமாளிச்சுக்கலாம் சொல்லிப்பார்த்தான். ஹூஹூம், கேட்க மாட்டேனென்று விட்டான்.

எதிர்பார்த்தது போலவே ராம் குமார் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று விட்டான். சம்பத் சுத்தமாக காலியாகி இருந்தான். ஆனால் அவன் அதற்கெல்லாம் கவலைப்பட்ட மாதிரி எல்லாம் தெரியவில்லை. இப்பொழுது நடிகனின் பின்னால் சுற்றியவன், ஏதோ ஒரு கட்சியிலும் நுழைந்து கொண்டான்.வீட்டுக்கு வருவது என்பது கூட அபூர்வமாகி விட்டது.

ராம்குமாருக்கு நல்ல மதிப்பெண் கிடைத்தாலும் அவன் எதிர்பார்த்த்து போல டாக்டர் சீட் கிடைக்கவில்லை. நொந்து கொண்டான். அடுத்து அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பித்தான் நல்ல மதிப்பெண் இருந்ததால் சீட் கிடைத்து விட்டது.

புதிய கல்லூரி நட்பு, இப்பொழுது சம்பத் தொடர்பு அவ்வளவாக கிடைப்பதில்லை. எங்காவது வழியில் பார்த்தால் கையை ஆட்டுவதோடு சரி, அவனும் சரி இவனும் சரி கண்டு கொள்ளாமல் சென்று விடுவர்.

அப்படி இப்படி என்று பட்டம் வாங்கி,முதுகலை பட்டமும் வாங்கி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான். அவன் அப்பா டீச்சர் வேலைக்கு படி என்று சொன்னார். சரி அதையும் விட வேண்டாம் என்று முடித்தான்.

அடுத்த படலமாக வேலை தேடும் படலம், இவன் போகும் இடமெல்லாம் வாய்ப்பு கிடைக்காமல் விரக்தியாகிவிட்டான்.

அப்பொழுதுதான் சொந்தக்காரர் ஒருவர் யோசனை சொன்னார், நான் ஒரு ஆளை சொல்றேன், அவர்கிட்ட போய் எப்படியாச்சும் ஒரு வேலையில நுழைச்சு விடுங்கன்னு சொல்லிப்பாரு. அவரு மந்திரிக்கு ரொம்ப வேண்டப்பட்டவரு. வீட்டுல எல்லாம் அவரை பாக்க முடியாது. கவர்மெண்ட் கெஸ்ட் ஹவுசுல நாளைக்கு மந்திரியோட வருவாரு, அப்ப சொல்றேன் போய் பாருங்க என்று சொன்னார்,

ராம்குமாரின் அப்பாவும், ராம்குமாரும் கெஸ்ட் ஹவுசில் காத்துக்கொண்டிருந்தனர். மந்திரி வந்து விட்டார் என்று சொன்னார்கள், ஆனால் இவன் பார்க்க சொன்ன ஆள்தான் இன்னும் வரவில்லை. அந்த ஆளுக்காக இவனைப்போல நிறைய பேர் காத்திருப்பதும் தெரிந்தது.

ஒரு வழியாக அவர் வந்தவுடன் கூட்டம் முண்டியடித்து அவரை பார்க்க உள்ளே நுழைந்தது. இவனும் முண்டியடித்து உள்ளே நுழைந்தால் சம்பத் வெள்ளையும் வெளையுமாக கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவனிடம் வந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக பவ்யமாக பதில் சொல்லிக்கொண்டிருந்தனர்.

இவனும் வரிசையில் நின்று தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டு வேலைக்கு ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக்கொண்டான். தெரிந்த முகம் என்பதற்காக மெல்ல முகத்தை விரித்ததோடு சரி மற்றபடி தோரணையாக இவன் சொல்வதை எல்லாம் பக்கத்தில் இருந்த ஆளிடம் குறித்துக்கொள்ள சொல்லி உனக்கு சீக்கிரம் ஏற்பாடு பண்ண சொல்றேன். அடுத்த ஆளை பார்க்க தயாராகி விட்டான்.

கூட வந்த ராம் குமாரின் அப்பா அப்படியே வியப்பாய் சம்பத்தையே பார்த்துக்கொண்டிருந்தவர், ராம் குமார் தோளை தொட்டவுடன்தான் சுயநினைவே பெற்றார்.

வழியில் நடக்கும்போது ராம்குமாரின் அப்பா சொல்லிக்கொண்டு வந்தார்

“நீயும் இருக்கியே” சம்பத் எப்படி முன்னுக்கு வந்துருக்கான் பாரு” நீ இன்னும் எவனாவது வேலை கொடுப்பானான்னு கையேந்திகிட்டு இருக்கே.

அவர் மேலும் பேசிக்கொண்டே நடக்க இவன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான், தன்னுடைய நிலைக்கு யாரை நோக முடியும்? 

தொடர்புடைய சிறுகதைகள்
கந்தசாமி தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டிருந்தான். உள்ளே அவன் மனைவி இவனை அர்ச்சனை செய்து கொண்டே வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தாள். ஒரு வேலை செய்ய துப்பிருக்கா ? எனக்குன்னு வந்து சேர்ந்திருக்கே ! யாராவது ஏதா கேட்டாங்கன்னா துக்கி கொடுத்திக்குடுவாரு, இவரு பெரிய ...
மேலும் கதையை படிக்க...
எங்கள் காலனியில் சுமார் இருநூறுக்கு மேற்பட்ட வீடுகள், அல்லது பங்களாக்கள் கொண்டது. பெரும்பாலும் என்னைப்போல ஓய்வு பெற்றவர்கள்தான் அதிகமாக இருப்பர். எங்கள் தெருவின் ஒரு பகுதியை தவிர, மற்ற பகுதிகள் அமைதியாகத்தான் இருக்கும் எங்கள் காலனியில் படித்தவர்கள் அதிகம். பெரிய பெரிய ...
மேலும் கதையை படிக்க...
“இந்த படம் மட்டும் வெளியில வந்து ஓடிடுச்சுன்னா, முதல்ல இவளை வேலைய விட்டு நிக்க சொல்லிடுவேன்” சொல்லிக்கொண்டிருந்தார் மாமன் முருகேசன் கேட்டுக்கொண்டிருந்த முருகனுக்கு சலிப்பாக இருந்தது. பின்ன என்ன? இதோடு நாற்பதாவது தடவையாக சொல்கிறார். அங்கே இவரின் வைத்திய செலவுக்கு அக்கா யாரிடமெல்லாமோ ...
மேலும் கதையை படிக்க...
இளவரசி அழைத்தார் என்று வெளியே காத்திருந்த அமைச்சர், சிறிது சலிப்புடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். இளவரசி வீட்டு வாயில்காப்போன் அமைச்சரின் சலிப்பான நடையை கண்டு ஒரு வித பயத்துடன் பார்த்து கொண்டிருந்தான். இந்த நாட்டுக்காக என்ன என்னவெல்லாம் செய்ய வேண்டி உள்ளது, ...
மேலும் கதையை படிக்க...
நான் கொஞ்சம் கதைகள் எழுதியிருக்கிறேன், அதை புத்தகமா போடலாமுன்னு நினைக்கிறேன். தாராளமா போடலாம், எவ்வளவு காப்பி வேணுமின்னு நினைக்கிறீங்க? என்கிட்ட பணவசதி அவ்வளவு இல்லை. குறைஞ்சபட்சம் எவ்வளவு காப்பி குறைவான பட்ஜெட்டுல போடமுடியும். முந்நூறுலிருந்து எவ்வளவு வேணுமின்னாலும் போடலாம். எவ்வளவு ஆகும்? அவர் தொகையை சொன்னதும் மலைத்து போகிறான், ...
மேலும் கதையை படிக்க...
இரவு பத்து மணி இருக்கும், கடைசி வேலைக்காரனும் விடைபெற்று சென்று விட்டான், வாசலில் ஒரு கூர்க்கா மட்டுமே நின்று கொண்டிருந்தான், பங்களாவில் புகழ் பெற்றஅறிவியல் விஞ்ஞானி மாதவன் தூங்குவதற்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தார். அப்பொழுது மணிஏறக்குறைய பதினொன்று இருக்கலாம், போன் மணி அடித்தது, அதை ...
மேலும் கதையை படிக்க...
அந்த கடையின் கணக்குப்பிள்ளை ஏகாமபரம் அண்ணாச்சிக்கு இன்னைக்கு கோபமின்னா கோபம் இலேசுப்பட்ட கோபமில்ல, ஒரு பய அவருகிட்ட வாய கொடுக்க வரலை, அப்படி இருந்துச்சு அவர் முகம். யாரு போய் பேசறதுன்னு, பம்மிகிட்டு அந்தா இந்தான்னு மிரளுறானுங்க. என்னாச்சு இந்த அண்ணாச்சிக்கு? விசயம் ...
மேலும் கதையை படிக்க...
இப்பொழுதெல்லாம் பரமசிவத்தை பார்த்தால் அவரின் சகோதர சகோதரிகளுக்கு அனுதாபமே வருகிறது. நம்மால்தானே அண்ணன் இப்படி இருக்கிறார் என்கிற குற்ற மனப்பான்மையாக கூட இருக்கலாம். வயது நாற்பதாகியும் ஒரு பெண் அவருக்கென்று அமையாமல் இருப்பது அவர்களுக்கு பெரிய வருத்தம்தான். இந்த வருத்தத்தை அவரவர்களின் ...
மேலும் கதையை படிக்க...
அலுவலகம் முடிய இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கையில் மழை நன்கு பெய்ய ஆரம்பித்து விட்டது. அப்பொழுதுதான் நாற்காலியை விட்டு எழுந்து முகம் கழுவி விட்டு வரலாம் என்று நினைத்த விமலா சலிப்புடன் “என்ன திடீருன்னு மழை வந்திடுச்சு சொல்லிவிட்டு பொத்தென மீண்டும் ...
மேலும் கதையை படிக்க...
எந்த தவறை செய்தாலும் தப்பித்துக்கொள்பவனை பற்றி நீ என்ன நினைக்கிறாய்? மரத்தில் உட்கர்ந்துகொண்டிருந்த இரு கிளிகளில் ஒரு கிளி கேட்கவும், அப்படி தப்பித்து கொண்டே இருப்பவனுக்கு அதிர்ஷ்டம் கூடவே இருக்கிறது என்பேன்.நீ என்ன சொல்கிறாய்? உண்மைதான், என்று கொஞ்சம் யோசிப்பது போல் தலையை சாய்த்தது ...
மேலும் கதையை படிக்க...
இவர்களின் அன்பு வேறு வகை
சில இடங்களில் கூச்சல்கள் கூட சுகமே
கலை பித்தன்
மந்திரியின் தந்திரம்
முதல் புத்தகம்
கடத்தல்
தனக்கு மட்டும்
அனுதாபம் வயிற்றெறிச்சலான கதை
கொடுத்த வாக்கு
ராம சுப்புவும் அவனது கனவும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)