யாரைப் போல் சாப்பிடுவீங்க? – ஒரு பக்க கதை

 

காலை நேரப் பாடங்களை முடித்துக் கொண்டு மதிய உணவிற்குத் தயாராகிக் கொண்டிருந்த சீடர்களைப் பார்த்துக் குரு கேட்டார்,

“நீங்கள் மனிதர்களைப் போல் சாப்பிட விரும்புகிறீர்களா? அல்லது மிருகங்களைப் போலவா?’ என்றார்.

இதென்ன கேள்வி? நாங்கள் மனிதர்கள். விலங்குகளைப் போல் ஏன் சாப்பிட வேண்டும்?

“மனிதர்களைப்போல்தான்!’ என்று பதிலளித்தனர்.

“உங்கள் பதில் தவறு’ என்றார் குரு. சீடர்கள் திகைத்துப் போய் அவரிடமே விளக்கம் கேட்டனர். அதற்கு குரு, “ஒரு மிருகம், சிங்கம் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு மானை வேட்டையாடுகிறது. தனக்கு வேண்டிய அளவு மட்டும் சாப்பிட்டுவிட்டு மீதி இரையை அங்கேயே விட்டு விட்டுப் போய்விடுகிறது.

மறுநாளைக்குக்கூடச் சேமித்து வைப்பதில்லை. அதன் பிறகு ஓநாய், நரி போன்ற விலங்குகள் வந்து சாப்பிடுகின்றன.

ஒவ்வொரு விலங்கும் தன் தேவைக்கு மட்டும் தின்றுவிட்டு மீதியை அப்படியே விட்டுச் செல்கிறது.

கடைசியில் எறும்பு போன்ற பூச்சிகள் மிச்சமுள்ள உணவைப் புசிக்கின்றன.

ஆனால், நாம்? பசியில்லாதபோதும் ருசிக்காகச் சாப்பிடுகிறோம்; வேண்டாதவற்றை வயிற்றில் திணிக்கிறோம்!’ சொல்லி முடித்தார் குரு.

சீடர்கள் உணவை வீணாக்குவது மகாபாவம் என்று உணர்ந்து தெளிவடைந்தனர்.

- கே. நிருபமா, பெங்களூரு (மார்ச் 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
கடவுள்
திடீரென்று ஒரு ஒளிவட்டம். சாட்சாத் திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதியே எதிரில் நின்றார். கண்களைக் கசக்கினேன்... சந்தேகமேயில்லை; அவரேதான். இருந்தாலும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அந்த அதிசயம் நிகழ்ந்தது... "பெருமானே... எனக்கு காட்சி தந்த உங்கள் மாட்சியை என்னென்று சொல்வேன்...' கண்களிலே மளமளவென்று ஆனந்த ஜலம். "போதும், ...
மேலும் கதையை படிக்க...
நூறு ஆண்டுகளுக்கு முன் சென்னையைப் பற்றி வள்ளலார் 'தருமமிகு சென்னை' என்று சொன்னார். அப்போது அப்படி இருந்திருக்குமோ என்னவோ! இப்போது சென்னை என்றதும் பலரையும் பயமுறுத்தும் விஷயம் வியர்வை மழையில் நனைய வைக்கும் பதினோரு மாத வெயில் மட்டுமல்ல. 'கூலான' ஆசாமிகளுக்குக் ...
மேலும் கதையை படிக்க...
இப்போது இருக்கும் ஐபிஎல் / ட்வென்டி ட்வென்டிக்கெல்லாம் முன்னோடி (மாட்ச் ஃபிக்சிங் உட்பட) எண்பதுகளில் காஞ்சீபுரத்தில் நடந்த கிரிக்கெட் லீக் போட்டிகள் தான் சுருக்கமாக கே சி எல் மே மாதம் பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களில் மூன்று முதல் நான்கு வாரங்கள் ...
மேலும் கதையை படிக்க...
புதுச்சேரி-நாகை பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பஞ்சைப் பனாதி... வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை. நாற்பத்தைந்து வயது தோற்றம். எதைஎதையோத் தின்று வெறுப்பேற்றினான். மரியாதை மருந்துக்குக் கூட ''சார்!'' நீட்டவில்லை. எனக்கு, இவன் அநாகரீகத்தை உணர்த்தி முகத்தில் கரி பூச ஆசை. கடலூர் பேருந்து ...
மேலும் கதையை படிக்க...
பக்கத்து வீட்டுக்கு போய்த் திரும்பிய தன் மனைவி உமாவை கவனித்தான் தினேஷ். போகும்போது துள்ளலுடன் போனவள் இப்போ வரும்போது தலையை தொங்க போட்டு கொண்டு ஏன் வருகிறாள்? உமா உனக்கு என்ன ஆச்சு! போறப்போ சந்தோசமா போனே இப்ப ஏன் இப்படி வர்ற? நம்ம வீட்ல ...
மேலும் கதையை படிக்க...
கடவுள்
ஆட்டோ
பீமாஸ்கப்
மனிதன்..!
டேஸ்ட் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)