யாருடைய நாள் இது?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 37,818 
 

காலையில் எழுந்ததும், பால் பாக்கெட் வாங்க நான் போகும் போதெல்லாம் முதலில் தட்டுப்படுவது இவன்தான். தெரு திரும்பியதும் முனிசிபல் குப்பைத் தொட்டியில் துழாவிக்கொண்டு இருப்பான்.

அவனுக்கு வேண்டியது கழிவுத் தாள்கள், காலியான பால்பாக்கெட் டுகள், அட்டைப்பெட்டிகள் இப்படி. எவ்வளவுக்குக் கிடைக்கிறதோ அன் றைக்கு அதிர்ஷ்டமான நாள் அவனுக்கு. குடிக்கவும் உண்ணவும் போதும்!

பேச மாட்டான். ஊமை இல்லை. கையேந்த மாட்டான்; பிச்சைக் காரன் இல்லை.

45 வயசுக்குள் இப்படியாகிவிட் டானாம். பார்த்தவுடன் ஒரு நிமிஷம் அய்யோ என்றிருக்கும். பைத்தியம் முற்றியவர்களும் ஜாதிக் குடிகாரர்களும் தான் இப்படி குடும்பத்திலிருந்து அந்நியப்பட்டுத் தெருவுக்கு வந்துவிடு கிறார்கள்.

ஒருநாள், நகரத்துக்குப் போய்விட்டு லாஸ்பேட்டை திரும்பிக்கொண்டு இருந்தபோது, எதிரே ஒரு ‘பெரும் பயணம்’ வந்துகொண்டு இருந்தது. வருகிறவரத்தைப் பார்த்தால், யாரோ ஒரு மகாபிரபு பூம்பல்லக்கில் வருகிறார் போல! வாத்தியங்களும் அதிர்வேட்டு களும் முழங்க, ஆட்டமும் கொண் டாட்டமுமாக வருகிறார். போலீஸ்காரர் கள் அணிந்த தொப்பிகளைக் கையில் எடுக்கிறார்கள். இரு சக்கர வாகனங்களில் வருகிறவர்கள் இறங்கி மரியாதை செய்கிறார்கள். ஊர்கோலம் மெதுவாக எங்களைக் கடக்கிறது. விலை உயர்ந்த அந்தப் பூம்பல்லக்கில் இருக்கும் மகானு பாவன் யார் என்று கவனித்தபோதுதான் தெரிந்தது… அட, நம்ம முனிசிபல் குப்பாண்டித் தொட்டியார்!

‘அநாதையாக விடப்பட்ட ஒருவ னுக்கு வந்த வாழ்வைப் பாரடா, மனுசா!’ என்று என்னையே கேட்டுக் கொண்டேன். பூம்பல்லக்கு அரிச்சந்திர மகாராஜனுடைய கோயிலைக் கடந்து மயான பூமிக்குள் நுழைகிறது. அந்த மயான நுழைவாயில் சுவரில் இப்படி எழுதியிருக்கிறார்கள்…

இன்று இவர்; நாளை நீ!

வாசகத்தில் ஒரு திருத்தம் வேண்டும் என்று தோன்றியது

இன்று இவர்; நாளை நாம்!

– 24th ஜனவரி 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *