மெலனி டீச்சர்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 6,262 
 

இலங்கைதீவில், வடக்கே உள்ள வன்னிப் பகுதியில் விவசாயிகள் வாழும் கிராமம் துணுக்காய். யாழ்ப்பாணத்திலிருந்து கண்டிக்குப் போகும் ஏ9 பெரும் பாதையில். தெற்கே, மாங்குளம் என்ற ஊர் அறுபது மைல் தூரத்தில் உள்ளது. மாங்குளத்திலிருந்து மேற்கே பதினொரு மைல் தூரத்தில் துணக்காய் கிராமம் அமைந்துள்ளது. அக்கிராமத்துக்கு அருகே மூன்று மைல் தூரத்தில் சுமார் 6000 மக்களைக் கொண்ட மலாவி கிராமமுண்டு. விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் அப்பகுதி ஒருகாலத்தில் இருந்தது.

விவசாயம் அவ்வூர் மக்களின் பிரதானத் தொழில். அவ்வூர் மக்கள் பழமைவாதிகள். தமிழைத்தவிர பிறமொழிகளை வெறுப்பவர்கள். எவராவது வேறு கிராமங்களிலிருந்து இருந்து தம் ஊருக்க வந்து வாழ்வதை அதிகம் விரும்பமாட்டார்கள். தங்கள் கிராமத்துக் கலாச்சாரம் பாதிக்கப்படலாம் என்ற பயம் அவர்களுக்கு.

தினத்துக்கு மூன்று பஸ்கள் மாங்குளம் ஊடாக துணுக்காயிலிருநது யாழ்ப்பாணம் போய் வரும். சுமார் இரண்டு மணித்தியாலப்பயணம். கிராமத்துப் பாடசாலைகள் பல பின்னடைவுகளை எதிர் நோக்க வேண்டியிருந்தது. அதனால் உயர்கல்வியானது கிராமப் பிள்ளைகளுக்கு கிடைப்பது கடினம். துணக்காய் பாடசாலைக்கு தமிழும் ஆங்கிலமும் நன்கு தெரிந்த ஆசிரியர் ஒருவரை நியமிப்பது ஒரு சவாலாக இருந்தது. காரணம் யாழ்ப்பாணம் , வவனியா, மன்னாரிலிருநது துணக்காயுக்கு மாற்றலாகி ஆசிரியராக வருவதற்கு ஆங்கில ஆசிரியர்கள் மறுப்பதேயாகும். அவாகள் மறுப்பதற்கு பல காரணங்களுண்டு.

கிராமத்து பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம் படிப்பிப்பதென்றால் அதற்கு பொறுமையும் எதையும் தாங்கும் மனநிலையும் தேவை. யாழ்குடாநாட்டில வாழும் எல்லா ஆசிரியர்களும் வன்னிக்கு ஆசிரியராகப் போக விரும்புவதில்லை. அதுவும் ஆங்கிலம் கற்பிக்க போவதென்றால் அது ஒரு சவாலாக அமைகிறது. துணுக்காய் கிராமத்து மக்கள் தமிழப்; பற்று மிக்கவர்;கள். ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்திரிருந்து துணக்காயுக்கு போய் கல்விகற்பிக்க மறுப்பதற்கு முக்கிய காரணம் மலேரியா காய்ச்சல். அதோடு மருத்துவ வசதிகள் குறைவு. ஊர்வாசிகள் வேறு இடங்கலில் இருந்து தங்கள் கிராமத்துக்கு வந்தவர்களோடு சிரித்துப் பழகுவதும் குறைவு.

“மெலனி என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் ஜெயமணி டீச்சரின் தந்தை பரமலிங்கம் ஒரு இந்து. அவர் மனைவி நேசமணி கிறிஸ்தவ மதத்தவள்;. இருவரும் யாழ்ப்பாணக் கச்சேரியில் ஒன்றாக வேலை செய்த போது ஏற்பட்ட நட்பு காதலாகி மலர்ந்து திருமணத்தில் போய் முடிந்தது, பரமிலிங்கத்தின் பெற்றோருக்கு, தங்கள் மகன் ஒரு கிறிஸ்தவப் பெண்ணை திருமணம் செய்தது அதிருப்தியைக கொடுத்தது. அவர்கள் எவ்வளவோ தடுத்தும் பரமலிஙகம் அவ்hகளின எதிர்பபை மீறி நேசமணியைத் திருமணம் செய்தார். அதனால் மகனோடு அவர்கள் பேசுவது கிடையாது

உடுவில் கிராமத்தில் பெரும்பாலும் கிறிஸ்தவர்களே வாழ்ந்தார்கள். கிராமத்தில் நேசமணியின் பெற்றோர் சொந்த வீட்டில் வாழ்ந்தவர்கள். நேசமணியின் தாய் பூமணி உடுவில் மகளிh கல்லூரியில் ஆங்கில ஆசிரியையாக கடமையாற்றி ரிட்டையாரனவள். நேசமணியின தந்தை உடுவில்லில் விதாiனாயராக இருந்தவர். அக்கிராமவாசிகள் பலரை அவருக்குத் தெரியும.; தன்னைப் போல் தன் பேத்தியும் ஆங்கில ஆசிரிiயாக வர வேண்டும் என்பது பூமணியின் நோக்கம். பூமணி தான் படிப்பித்த உடுவில் மகளிh கல்லூரியிலேயே மெலனியையும் கல்வி பயில வைத்தாள்.

மெலனிஎல்லாப் பாடங்களையும் விட ஆங்கிலப்பாடத்தில் திறமையான மாணவியாக திகழ்ந்தாள். ஆங்கலப் பேச்சுப் போட்டிகளில் பரிசுகள்; பெற்றவள். ஆங்கிலப் புத்தகம் வாசிப்பதே அவளது பொழுது போக்கு. தன் பேத்திக்கு அவள் விரும்பிக் கேட்ட ஆங்கில நூல்களை வாங்கிக் கொடுக்க பூமணி தயங்கமாட்டாள்.

ஆரம்பத்தில் மல்லாகம் இராமனாதன் கல்லூரியில் ஆசிரியையாக சேர்ந்த மெலனி பலாலி ஆசிரியர் பயற்சி கல்லூhரியில்; ஆங்கில ஆசிரியையாகப் பயி;ற்;சி பெறும் வாய்ப்பு கிட்டியது. இரு வருட பயிற்சிக்குப் பின்னர் தனது பாட்டியார் படிப்பித்த உடுவில் மகளிர் கல்லூரிக்கே அவள் ஆசிரியையாகப் போக விரும்பினாள். ஆனால் அவள் விரும்பியது ஒன்று நடந்தது வேறொண்டு. துணக்காயில் உள்ள ஒரு பாடசாலைக்கு ஆங்கில ஆசிரியையாக நியமனக் கடிதம் கல்வி இலாக்காவில் இருந்து அவளுக்கு வந்திருந்தபோது என்ன செயவது என்று மெலினுக்குத்; தெரியவில்லை. துனுக்காய் கிராமம் எங்கிருக்கிறது என்பதே அவளுக்குத் தெரியாது. யாழ்ப்பாணம் ,வலிகாமம் பகுதிக் கிராமங்களைத் தவிர தெற்கே உள்ள வன்னி மாவட்டதைதைப் பற்றி அவள் அறிந்திருக்கவில்லை. கிளிநொச்சியில இருந்து உடுவிலுக்கு மாற்றலாகி வந்த அசிரியர் ஒருவர் துணக்காய் கிராமத்தைப்பறறி முழு விபரமும் அவளுக்குச் சொன்ன பி;ன்னரே அக்கிராமம் எங்கிருக்கிறது, அவ்வூர் வாசிகள் எப்படிப் பட்டவர்கள் என்பது அவளுக்குத் தெரியவந்தது. தனது பாட்டியாரிடம் துனுக்காயுக்கு ஆசிரியர் பதவியை ஏற்றுப் போவதா இல்லையா என்று ஆலோசனை கேட்டாள் மெலனி.

“மெலனி , நீ ஒரு பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியை. துணக்காய் கிராம மக்கள் தமிழ்பற்று உள்ளவர்கள். ஆங்கில அறிவில் சற்று குறைந்தவர்கள். இந்த நியமனத்தை நீ ஒரு சவாலாக ஏற்று துணக்காயுக்குச் செல்வது தான் நல்லது. சில வருடங்கள் அங்கு வேலை செய்து, பிள்ளைகளுக்குத் தேவையான ஆங்கில அறிவைப்போதித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை ஒரு புனித சேவையாக நீ கருத வேண்டும். மாதம் ஒரு முறை உடுவிலுக்கு நீ வந்து போகலாம். தயங்காமல் நியமனத்தை ஏற்றுக் கொள்” என்றாள் மேலனிஜெயமணிவின் பூமணி பாட்டியார். பாட்டியார் சொன்னபடி நியமனத்தை ஏற்க முடிவுசெய்தாள் மெலினி.

******

கையில் ஒரு சூட்கேசுடன் துணக்காயுக்கு பஸ ஏறினாள் ஜெயமணி என்ற மெலனி. துணக்காயில் எங்கு தங்குவது என்பது அவள் முடிவெடுக்க வில்லை. பாடசாலை தலமை ஆசிரியர் மூலம் அவருக்குத் தெரி;ந்த ஒரு குடும்பத்தின் வீட்டில தங்க திட்டமிட்டிருந்தாள் . பஸ் மாங்குளம் ஊடாகத் துணக்காயுக்கு போய் சேர மூன்றரை மணித்தியாளங்களுக்கு மேல் எடுத்தது. மாஙகுளம் துணக்காய் பாதையின இருபக்கஙகளிலும்; பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகள். இரண்அடாரு குளங்கள். வயலை உழும் விவசாயிகளின் காட்சி அவளுக்குப புதியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வெள்ளை நிற கொக்குகளின்; கூட்டம். கிராமத்து இயறகையின் தோற்றம்; அவளைக் வெகுவாகக் கவர்ந்தது.

பாடசாலை தலமை ஆசிரியர் சிவராசா அதிகம் பேசமாட்டார். இருபத்தைந்து வருடங்கனாக ஆசிரியராக சேவை செய்து வருபவர். வன்னியில பல பாடசாலைகலில் வேலை செய்து இறுதியாக, தன் சொந்த ஊரான துணக்காயுக்கு மாற்றலாகி அவா வநது ;இரு வருடங்கள். தமிழ் பற்று மிக்கவர். அவருக்கு ஆங்கிலம்; ஓரளவுக்குத் தெரி;ந்திருந்தாலும் பேசுவதற்கு பி;ன் வாங்குவார். சுமார் 400 மாணவர்களைக் கொண்ட பாடசாலையில் பெரும்பாலும் துணக்காய், மாலவி கிராமத்;து மாணவர்களே கல்விபயின்றனர். அம்மாணவர்களின் பெற்றோரை அவர் நள்கு தெரிந்து வைத்திருந்தார். வேட்டியும் அரைக்கை வெள்ளை நிற அரைக் கை சேர்ட்டோடும், நெற்றியில் திருநீற்றோடும் தான் அவர் தினமும் செருப்பு அணிந்த வாறு பாடசாலைக்குச் செல்வார். சிவராசா ஒரு நோமையானவர் எளிமையானவர். ஆதிகம் பெசமாட்டார. ஆனால் கண்டிப்பான பேர்வளி.

பத்தாம் வகுப்பு வரை பாடசாலையில் படிக்கும் வசதியிருந்ததால் மாணவ மாணவிகள் உயர் கல்வி கற்கு;ம் வசதி அங்கு கிடையாது. வசதி படைத்த மாணவர்கள் வவுனியாவுக்குகோ, கிளிநொச்சிககோ அல்லது மன்னாருக்கோ சென்று உயர் கல்வி பயின்றனர். மற்றமாணவாகள் தந்தைக்கு உதவியாக விவசாயத்தில ஈடுபட்டனர். தலமை ஆசிரியர் உற்பட பாடசாலையில பத்து ஆசிரியர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் வன்னிப் மாவட்டததைச் சேர்ந்தவர்கள். அதிகம் ஆங்கிலம் பேச மாட்டார்கள். பாடசாலைக்கு ஒரு ஆங்கிலம் படிப்பிக்கும் டீச்சர் உடுவில் இருந்துவருகிறதாகக் கேள்விப்பட்டு, எப்படி அவவோடு தமிழில் பேசி பழகுவது என்று தங்களுகிடையே பேசிக் கொண்டார்கள்.

தலமை ஆசிரியரின் அறைக்கதவை “ உள்ளே வரலாமா சேர்” என்ற நல்ல தமிழ்; உச்சரிப்போடு தட்டினாள் மெலனி.

“தாராளமாய வரலாம் என்று பதில் அளித்தார் சிவராசா மாஸ்டர். அவருக்கு சுமார் ஐம்பது வயதிருக்கும். தலை சற்று நரைத்து இருந்தது. அறைக்குள் ஒரு கையில சூட்கேசும் மறுகையில காணட்பாக்குமாக நுலைந்த மெலனியைப் பாரத்து மேலும்கீழுமாக ஒரு கண்ணோட்டம் விட்டார் சிவராசா. அவர் எதிhபார்த்த தோற்றம் வேறு. ஆங்கில ஆசிரியை என்ற படியால் பறங்கிப் பெண்ணைப்போல் கவுன் போட்டிருப்பாள் என்று நினைத்த அவருக்கு, இளம் சிவப்பு நிற கறுப்பு கரை வைத்த பருத்திச் சேலை அணிந்து, நீண்ட பின்னலோடு ஒரு அசல் தமிழ் பெண்ணைப் போல் மெலனி தொற்றமளித்தது அவருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

“அமருங்கள் டீச்சர் என்று தனக்குள் முன் இருந்து கதிரையைக் காட்டினார் சிவராசா.

“நன்றி சேர். இதோ எனக்கு கல்வி இலாக்காவில் இருந்து வந்த நிமனக் கடிதம்” என்று அப்பொயினட்மென்ட் கடிதத்தைக் கொடுத்தபடி பனிவோடு சூட்கேசைத் தன்னருகே வைத்தவாறு கதிரையில் மேலனி அவர் முன் அமர்ந்தாள்.

“டீச்சர் உங்கள் முழுபெயர் என்ன?” சிவராசா கேட்டார்.

“பரமலிங்கம் ஜெயமணி. மெலனி என்று என்னை பெற்றோர்கள் செல்லமாக அழைப்பார்கள். எனது தாயரின் அம்மா உடுவில் மகளிர் கல்லூரியில் ஆங்கிலம் படிப்பித்து ரிட்;டயரான பூமணி டீச்சர். என்னை நீங்கள் மலனி என்றே கூப்பிடலாம்.”

“நீங்கள் நல்லாகப்; பாடக் கூடிய பூமணி டீச்சரின் பேத்தியா? எனக்கு அவவை நான் முல்லைத்தீவில் படிப்பித்த போது தெரியும். அது சரி எப்படி பஸ் பயணம் இருந்தது. காலை போசனம் சாப்பிட்டீர்களா” கரிசனையோடு சிவராசா கேட்டார்.

“யாழ்ப்பாணத்திருந்து வர சுமார் இரண்டரை மணித்தியாலம் எடுத்தது. கிளிநொச்சியில்; அரைமணி நேரம் காலை உணுவுக்காக பஸ் நின்றது”

“அப்போ உங்கள் காலை உணவு கிளிநொச்சியிலா?”

“இல்லை சேர். என் அம்மா காலை உணவு செய்து தந்தவ. கடைகளிலை சாப்பிடக் கூடாது என்று சொன்னவ” என்றாள் மெலனி.

“அது நல்லது. துணக்காயில் நீர் எங்கு தங்கப் போவதாக உத்தேசம்?. உமக்குத் தெரிந்தவர்கள எவராவது இருக்கிறார்களா “?

“இல்லை சேர். ஊங்களைத்hன் உதவி கேட்கயிருக்கிறன்” பதில் சொன்னாள் மலினி.

“ஒன்றுக்கும் யோசிக்காதையும்;. நீர் இங்கு மாற்றலாகி வருவதைத் தெரிந்து, நீர் தங்குவதற்கு என் சகோதரி வீட்டில் ஒரு அறை ஒழுங்கு செய்திருக்கிறன். அவவுடைய வீட்டில் நீர் தங்கலாம். அவவி;ன் கணவர் ஒருவருடத்துக்கு முன்பே இறந்துவிட்டார். என் அக்கா ஆசிரியையாக பல வருடங்கள் வேலை செய்தவ. இப்போ ரிட்யைராகிவிட்டா. பென்சனோடு டியூசன் கொடுத்து வரும் வரும்படி அவவுக்குப் போதுமானது. அவவுடைய வீடு இரண்டு அறைகளைக்கொண்டது. பாடசாலையில் இருந்து வீடு வேகு தூரத்தில இல்லை. அவ வீட்டுககு இங்கிருந்து நடந்தே போகலாம். நான் அவவோடு ஏற்கனவே நீர் அங்கு தங்குவதைப் பற்றிப் பேசிவிட்டேன்” என்றார் சிவராசா.

“ஐயோ பாவம். அவவுக்கு பிள்ளைகள் இல்லையா சேர்?. :

“இல்லை. என் மூன்று பிள்ளைகளும,; என் குடும்பமும் தான் அவவவுக்கு எல்லாம். சொல்ல மறந்திட்டன். உங்கள உணவை அவவுடைய வீட்டில் வைத்துக் கொள்ளலாம். என்ன சொல்லுகிறீர் மெலனி,”

தலமை ஆசிரியர் தனக்கு முன்கூட்டியே தங்குவதற்கும், தனது உணவுக்கும் தேவையான ஒழுங்குகள் செய்வார் என்று மெலினி எதிர்பார்த்திருக்வில்லை.

“ உங்களிண்டை பெரிய உதவிககு மிகவும் நன்றி சேர். எவ்வளவு பணம் நான் மாதம் மாதம் அவவுக்கு கொடுக்கவேண்டும?” மெலினி; கேட்டாள்.

“முதலிலை அவவைச் சந்தியும் மெலினி , அதன் பிறகு அவ கேட்கும் தொகையை வாடகையகவும் உணவுக்காகவும் கொடும். என் அக்கா அதிக பணம் கேட்க மாட்டா. அவவுக்கும் வீட்டுத்;; துணைக்கு ஒருபெண்தேவை” என்றார் சிவராசா.

“அவவுடைய பெயரை சொல்ல மறந்திட்டியளே. சேர்”

“அவவை கமலா அக்கா என்றுதான் நான் கூப்பிடுவன். அவவுடைய முழுபெயர் கமலாதேவி. முதலில் என்னோடு வாரும், மற்றைய டீச்சர்களை அறிமுகப் படுத்துகிறன். இப்பாடசாலையில் என்னைத் தவிர பத்து டீச்சர்கள் இருக்கிறார்கள். அதில் ஆறு பெண் டீச்சர்கள். அவர்கள் எல்லோருக்கும் ஆங்கிலம் அவ்வளவுக்குப் பேச வராது. அவர்களோடு ஆங்கிலத்தில் பேசாதையும். நீர் நல்லாய் தமிழ் பேசுகிறீரே. அது போதும்” சிவராசா மாஸடர் சிரித்தபடி சொன்னார். அவரது சிரிப்பு அவருக்கு மெலனி டீச்சரை வெகுவாக பிடித்துக் கொண்டது என்பதைக்காட்டியது. சிவராசா மாஸ்டரும், மெலனியை மற்றைய டீச்சர்மார்ளுக்கு அறிமுகப் படுத்த அழைத்துச் சென்றார்.

******

மேலினி ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியையாக கடமையாற்றித் தொட்கிய இரு மாதத்துக்குள் வெல்கம், எக்ஸ்கியூஸ் மீ , பிளீஸ் , தங்கியூ, ஐ ஆம் சொரி , டோன்ட் மென்சன் பிளீPஸ், கான் ஐ ஹெல்ப் யூ பிளீஸ் போன்ற கண்ணியமான ஆங்கில வார்த்தைகளை மாணவர்களுக்குப் பேசக் கற்றுககொடுத்தாள்; மெலனி. மானவாகளுக்கு ஆஙகிலப்புத்தங்களை வாசிக்கும் ஆவலைத் தூணடுவதறகாக தன் செலாவில் ஆங்கில கொமிக்ஸ் புத்தகங்களை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தினாள். படிப்படியாக மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலப் கதைப்புத்தகங்கள் வாசிக்கவேண்டும் என்ற ஆசை ஊருவாகியது. தலமை ஆசிரியரோடு கலந்தலோசித்து ஒரு ஆங்கில, தமிழ் நூல்களைக் கொண்ட வாசக சாலை பாடசாலையில உருவாக்கினாள். அதற்கு பொறுப்பாக பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை நியமித்தாள். உடுவிலில் தன்னிடம் இருந்த ஆங்கில நூல்களை வாசகசாலைக்கு இனாமாகக் கொடுத்தாள். மறறைய ஆசிரியர்களும் அதற்கு ஆதரவு அளித்தனர். ஒரு வருடத்துக்குள். “எனது கிராமம்” என்ற தலைப்பில ஒரு ஆங்கிலக் கடடுரைப் போட்டியொன்றை வைத்தாள். மெலனியின் ஆர்வததைக் கண்ட் தலமை ஆசிரியர் சிவராசாவும் மற்;றைய ஆசிரியர்களும முதல் மூன்று பரிசுகளுக்காக நதி உதவி செய்ய முன்வந்தனர். மாணவர்கள் தமிழ் ஆங்கில டிக்சனெரியை பாவிக்கும் முறையைச்; சொல்லிக் கொடுத்தாள்.; ஒருவருடத்துக்குள் மெலனியின வருகையால் மாணவர்களும் ஆசரியர்களும் கூச்சமின்றி ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டனர். மாவாகளின் பெற்Nhருக்கு தங்கள் பிளைகளில் ஏறபட்ட மாற்றம் அதிசயப்படவைத்தது. நாளடைவில் ஆங்கில டீச்சா மெலனி ஜெயமணியின் பெயர் துணக்காய் கிராமவாசிகளின் மனதில் ஒரு இடத்தைப்பிடித்துக் கொண்டது. மாலை நேரங்களில வயல் வெளிகளில உலாவி வருவாள். சில மாணவர்கள் வயலில் தந்தைமாரோடு ஏர் பிடித’து வேலை செய்வதைக் கண்டு பெருமைப்பட்டாள். ஆரம்பத்தில் மிஸ்ஸியம்மா என்று மெலனியை கேலியாக அழைத்த அழைத்த சில மாணவர்கள் மகனம் மாறி மரியாதையாக “ மெலனி டீச்சர்” என்று அன்போடு அழைக்கத் தொடங்கினார்கள். எப்போதும் ஒரு ஆங்கிலப் புத்தகததை தன் கைபையுக்குள் மெலனி எடுத்துச்செலவது வழக்கம். நேரம் கிடைத்த போது அப்புத்தகம் தான் அவுளுக்குத் துணை. சிவராசாவின் அக்கா கமலாவுக்கு மெலனியை வெகுவாக பிடித்துக்கொண்டது. தனது ரேடியோவை பாவிப்பதற்கு அனுமதித்தாள். மெலனிக்கு விரும்பிய உணவை சமைத்துக்கொடுத்தாள். நேரம் கிடைத்த போதெல்லாம் கமலாவுக்கு சமையலறையில் மெலனி உதவி செய்தாள்.

******

ஒரு நாள கல்வி இலாக்காவில அருநது அமைச்சு செயலளரும் இன்னும் இரு அதிகாரிகளும் பாடசாலையின் தேவைகளை கண்டறிய வரபடபோவதாக தலமை ஆசரியர் சிவராசா மெலனியை அழைத்துச் சொன்னார்.

“டீச்சர் வரும் அதிகாரிகள் மூவரும் சிங்களவாகள். அவர்களுக்கு சிங்களமும் ஆஙகிலமும் மட்டுமே பேசத் தெரியும். தமிழ் தெரியாது. அதனால் அவர்களோடு ஆங்கிலத்தில் உரையாடி எமத பாடசாலையின் தேவைகளை; எடுத்துச்சொல்ல உமது உதவி தேவை” என்றார் சிவராசா..

“இந்த உதவியை நான் பாடசாலை முன்னேற அவசியம் செய்வேன் என்று சிவராசாவுக்கு வாக்குறுதி அளித்தாள் மெலனி டீச்சர்.

“உமக்கு சிஙகளமும் ஓரளவக்கு விளங்கும். அதுவும் உதவியாக இருக்கும் டீச்சர்”

“சிங்களம் அவ்வளவுக்கு பேச மாட்டேன் ஆனால் சொல்வது விளங்கும்” என்றாள் மெலி;னி

கல்வியிலாக்கா அதிகாரிகள் பாடசாலைக்கு வந்தபோது சிவராசா அவர்களுக்கு மெலனியை பாடசாலையில் ஆங்கலம் படிப்பிக்கும் ஆசரியையென அறிமுகப்படுத்தி வைத்தார். அதிகாரிகள் உரையாடியபோது மெலனியின அடக்கமான பேச்சும் ஆங்கில உச்சரிப்பும் அவார்கனை வெகுவாக கவர்ந்தது, பாடவாலையின் தரத்தை உயாத்தி உயர் வகுப்புகளை; நடத்தவும்; லப்போரட்டரி ஒனறை ஸ்தாபிக்கவும், முன்று கொம்பியூட்டர்களை மாணவர்களுக்கு பாவிப்பதற்கு தேவையெனவும் வேண்டுகோளை அதிகாரிகளுக்கு விடுத்தாள் மெலனி.

கொம்பியூட்டர் பாடசாலைக்கு தந்தால் அதை பாவிகும்; முறையைக் காட்டிக் கொடுக்க ஒரு ஆசரியர் தேவை. ஆதற்கு அதிக பணம் செலவாகுமே: என்றார் வநதிருநத அமைச்சின் செயலாளர்

“கவலைபடபடாதையுங்கோ சேர். நான டிரயினிங் கொலேஜ்ஜில படிக்கும் போது கொம்பியூட்டரைப் பாவிப்பது எப்படி என்று பழகிவிட்டேன். அதனால் மாணர்ளுக்கு சொல்லிக கொடுக்கத் தயார். “ என்றாள் மெலனி நம்பிககையேபடு .

மேலனியின் ஆர்வத்தைக் கண்டு செயலாளர் சநதோஷப்பட்டார்.

“என்னால இயன்றளவுக்கு பாடசாலை முன்னேற நீர்கேட்ட தேவைகளை அமைச்சரோடு பேசி தர முயலுகிறேன்” என்றார் செயலாளர்.

கல்வி அமைச்சு அதிகரி வாக்குறுதி கொடுத்த படி இரு மாதங்களில் மூன்று கொம்பியூட்டாகள் பாடசாலைக்க கிடைத்ததையிட்டு மாணவாகளும் ஆசரியர்களும் மெலனியின் கெட்டித்தனததை மெச்சியனர். மாதம் ஒரு முறை சனி ஞாயிறு தினங்களில் உடுவிலுக்குப் போவதை குறைத்துக் கொட்டாள். மாணவாகளுக்கு கொம்பியூட்டரை பாவிக்கும் முறையைக் கற்றுக்கொடுதாள். சுpல ஆசரியாகளும் மாணவர்களோடு சேர்ந்து கற்றனர். ஒருவருடத்துககுள் பாடசாலையல உயாதர வகு;குவரை தரம் உயர்த்தப்பட்டு இரு ஆசிரியரகள் விஞ்னானப பாடங்களும் உயர் கணிதமும் சொல்லிக் கொடுக்க நியமிக்கப்பட்டனர். மெலனியன் நான்கு வருட துணுக்காய் பாடசாலை சேவை காலத்துக்குள் இருமாணவர்கள் யாழப்பாணம் பல்கலைக்ழக்த்தில் பொறியியல் துறைக்கும் விஞ்ஞான பட்டதாரி துறைக்கு தெரிந்தெடுக்கபட்டனர். ஆனால் அது மலனிக்கு பூரண திருப்தியை கொடுக்கவில்லை. எப்படியும் ஒரு மாணவனாவது மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே அவளது குறிக்கோள். அவள் விரும்பியபடி ஒரு மாணவன் வைத்தித்துறைக்கு கொழும்பு மருத்துவக் கல்லூரிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டான். தலமை ஆசிரியருக்கோ கட்டுக்கடங்காத சந்தோஷம்.

தன் அறைக்குள் மெலனியை அழைத்து பாராட்டினர் சிவராசா..

“மெலனி நீர் இந்த ஐந்து வருட காலத்துக்குள் செயத சாதனை பாராட்டுக்குரியது. இனி அதிக மாணவாகள் அக்கிராமத்மருத்துவக்ல் இருந்து கல்லிமான்களாக வரக்கூடிய சந்தாப்பத்தை ஏற்படுத்திக கொடுத்திருக்கிறீர். இக்கிராம மக்கள் உமது சேவையை ஒரு போதும் மறக்க மாட்டார்கள். ஆனால் ஒரு செய்தியை உமக்கு சொல்ல விரும்புகிறேன்” என்றார் கண கலங்க.

சிவராசா கண் கலங்குவதை மெலனி கவனித்துவிட்டாள்.

“ஏன் சேர் கண் கலங்குகிறர்கள்” மெலனி கேட்டாள்.

“உமக்கு உடுவில் மகளிர் கல்லூரிக்கு டிரான்ஸபர் ஓடர் வசதிருக்கு. அடுத்தமாதம் முதற் கொண்டு உமக்கு அந்தக் கல்லூரியில் ஆங்கிலம் படிப்பிக்கும் ஆசிரிiயாக வேலை” என்றார் பேச்சு தழும்ப.

“எனக்கு உடுவிலுக்கு டிரான்ஸ்பரா?. இந்தப் பாடசாலையையும, மாணவர்களையும், துணக்காய் கிராமத்தைiயும் விட்டு நான் எப்படி உடுவிலுக்குப் போக முடியும்? எனக்கு டிரான்ஸ்பால் உடுவிலுக்குப் போக விருபமில்லை” என்றாள் மெலனி.

“மெலனி எனக்குத் தெரியும் நீர் துணக்காய் கிராம மக்களேபடு ஒரு பலமான உறவை உருவாக்கிவிட்டீர் ஆனால் நீர் இனி; உமது வருங்காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்;டும். சொந்த ஊருக்கு நீர் போனால் உமக்கு திருமணசெயது வைத்து நல்ல குடும்ப வாழக்கையை உமது பெற்றோரும் உமது பாட்டி; பூமணி டீச்சரும் ஒழுங்கு செய்து கொடுக்கமுடியும். மறுக்காமல் டிரான்ஸபர் ஓடரைப் பெற்றுக் கொள்ளும் என்று ஓடரை மெலனியின் கையில் கொடுதார் தலமை ஆசிரியர் சிவராசா. கண்களில் கண்ணீர் மல்க கடிதத்தை சிவராசாவிடமிருந்து வாங்கிக் கொண்டாள் மெலனி. எநத கிராமத்துக்கு மாற்றலாகி வர அவள் ஆரம்பத்தில் வர விருப்பப்படவில்லையோ அக்கிராமத்தை விட்டுப் பிரிய அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.

Print Friendly, PDF & Email

1 thought on “மெலனி டீச்சர்

  1. துணுக்காயில் மெலனி ரீச்சரட்ட படிசசது பேல ஒரு உணர்வு. நான் சிறுகதை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் தேடியபோது உங்கள் படைப்பை படிக்க முடிந்தது.. மகிழ்ச்சி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *