Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

முன்னேற்றம்

 

அது ஒரு அரசு பள்ளி. மாணவர்களின் படிப்பு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

அந்த பகுதியை சுற்றியுள்ள பல ஊர் மாணவர்களுக்கு அது தான் ஒரே பள்ளி.

பெருமாளும், முருகனும் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர் . அவர்களுக்கு அன்று அது கடைசி வகுப்பு. விளையாட்டு வகுப்பு.

இருவர் மட்டும் தனியாக விளையாடி கொண்டிருந்தனர். மற்ற மாணவர்கள் அனைவரும் கை பந்து விளையாடி கொண்டிருந்தனர்.

முருகன் சற்று உயரம் குறைவு. பெருமாள் நல்ல உயரம். கைபந்து விளையாட இரு அணியாக பிரித்தபோது பெருமாளை மட்டும் சேர்த்தனர். உயரம் குறைவு என்பதால் முருகனை சேர்க்கவில்லை. ஆனால் பெருமாள், முருகனை சேர்க்காததால் தானும் விளையாடவில்லை. அதனால் இருவரும் தனியாக விளையாடினர். என்ன விளையாட்டு என்று தெரியவில்லை. ஆனால் மிகமிக மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்களின் மகிழ்ச்சி அந்த பள்ளிகூடத்தையே நிறைத்தது.

மணியடித்தது. கடைசி மணியானதால் நீண்ட நேரம் அடித்தார்கள்.

மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு போகும் உற்சாகத்துடன் புத்தக பையை தூக்கிக்கொண்டு பள்ளியை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

பெருமாள், முருகன் இருவரும் வீட்டுக்கு கிளம்பினர். அப்போதும் அவர்கள் ஆட்டம் குறையவில்லை.

ஏதேதோ விளையாடியபடியே சென்றனர்.

இப்போது இவர்கள் ஊர் தென்பட்டது.

ஊரே அங்கு கூடியிருந்தது. மண்ணாங்கட்டியின் குடும்பம் கைகட்டி நின்றிருந்தது. மக்கள் இரு பிரிவாக தங்களுக்குள் பேசியபடியே நின்றிருந்தனர்.

ஊர் பெரிசுகள் அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் போடப்பட்டிருந்த நீண்ட மர இருக்கையில் அமர்ந்திருந்தனர்

அவர்களில் ஒருவர் பேசினார். அவருக்கு நடுத்தர வயது. ஆனால் அவர் பேச ஆரம்பித்தவுடன் அனைவரும் அமைதி ஆகிவிட்டனர்.

இந்த ஊர்ல இது மாதிரி ஒன்னு நடந்தது இல்ல. தாயும் புள்ளையும் ஒன்னுனாலும் வாயும், வயிறும் வேறனு சொல்வாங்க. இந்த ஊர்ல எல்லா சாதிக்காரங்களும் ஒண்ணா சண்டையில்லாம இதுநாள் வரைக்கும் வாழ்ந்துட்டு வறோம். எப்படி? அவங்கவங்க பழக்க வழக்கம் அவங்கவகளுக்கு. ஒருத்தர் மத்தவங்களோட வழக்கத்துல தலையிடக்கூடாது, அப்படிங்கற ஊர்க்கட்டுபாட்டுக்கு அடங்கி நடந்ததாலதான்.

மண்ணாங்கட்டி அத மீறிட்டான். இந்த ஊர்ல அவங்களுக்குன்னு இருக்குற காலனிகாரங்களோட கிணத்துல தண்ணீ எடுக்காம, ஊர்காரங்களோட கிணத்துல தண்ணீ எடுத்திருக்கான். கேட்டா காலனி கிணத்துல தண்ணீ இல்லன்னு சொல்றான். அதை எப்படி ஏத்துக்க முடியும்?. இப்படியே ஒவ்வோர் கட்டுப்பாடா மீறிட்டே இருந்தா, சாதி சண்டையால ஊரே நாசமா போக வேண்டியது தான். அதனால

மண்ணாங்கட்டி குடும்பத்த இந்த ஊற விட்டே ஒதுக்கி வெக்கிறேன்.

முருகனின் அப்பா மண்ணாங்கட்டி எவ்வளவோ மன்றாடியும், ஊர் பெரியவரான பெருமாளின் தந்தை. தன் தீர்ப்பை மாற்றவில்லை.

கலைந்து சென்ற ஊர் மக்களில் சிலர் இப்படியே ஒவ்வொருத்தரா தள்ளி வெச்சா ஊர்ல எவனுமே மிஞ்ச மாட்டான், என்று முணுமுணுத்தனர்.

சிவந்திருந்த வானம் இப்போது நீல வானமாக மாறியது.

நிறுத்துங்க. என்றவுடன் கார் நின்றது. கீழே இறங்கிய முருகனுக்கு இது தானா அந்த இடம் என்று சந்தேகமாக இருந்தது. வண்டியோட்டியிடம் விசாரிக்க சொன்னான். இல்லை சொன்னார். ஆம் இப்போது முருகன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்தாலே பெரிய படிப்பு படித்தவன், நல்ல வேளையில் இருப்பவன் போல் தெரிந்தது.

வண்டியோட்டி விசாரித்தபோது “ஊர அழிச்சி உல்லாசபுரி கட்றாங்களே அத்தானே, கொஞ்சதூரம் முன்னால போனா எடது பக்கம் ஒரு புது ரோடு போட்டிருக்கும். அதுல போனா வந்துரும். என்றார் டீக்கடையில் நின்ற ஒருவர்.

அவர்கள் சொன்ன பாதையில் போனபோது சற்று நேரத்தில் பெரிய கட்டிடங்களுடன் அந்த இடம் தெரிந்தது. முருகனுக்கு நடக்க வேண்டும் போல் இருந்தது. வண்டியை நிறுத்த சொல்லி இறங்கி கொண்டு காரை முன்னால் போக சொல்லிவிட்டு நடந்தான்.

நாம்ம ஊரா இப்படி மாறிவிட்டது. ஊர்காரர்கள் யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்தான். யாருமில்லை. எப்படி இருப்பார்கள்? special economic zone -என்று அந்த பகுதியின் பத்து ஊர்களுக்கு மேல் சேர்த்து மாற்றிவிட்டனர். முருகனின் ஊரில் தான் நுழைவாயில் அமைத்திருந்தது.

நில்லுங்க. என்று ஒரு குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்த முருகன் நின்றான்.

ஒரு பெரியவர் காவலாளி உடையில் நின்றிருந்தார். இதுக்கப்புறம் நீங்க போக முடியாது. இது தனியார் எடம், என்றார்.

அவரை சற்று நேரம் பார்த்துவிட்டு,

அந்த இடத்துக்கு தான் நானும் போகணும். எனக்கும் அங்க ஒரு பிசினஸ் ஆபீஸ் இருக்கு. என்றான் முருகன்.

இதை கேட்ட அந்த பெரியவர், நான் உங்கள பாத்தப்போவே நெனச்சேன். மன்னிச்சிகோங்க சார். இந்த எடத்துக்கு வர்ற யாரும் நடந்து வர மாட்டாங்க. அதனால தான் நிறுத்தினேன். சற்று துரத்தில் தெரிந்த நுழைவு வாயிலை காட்டி, அங்க போனீங்கன்னா செக்யூரிட்டி ஆபிஸ்ல உங்க அடையாள அட்டை கேப்பாங்க, காட்டிட்டு நீங்க போலாம். என்று பவ்யமாக கூறினார்.

முருகன் நன்றி கூறிவிட்டு, வாயிலை நோக்கி நடந்தான். அவனுக்கு அந்த பெரியவரை எங்கோ பார்த்த ஞாபகம். ஒருமுறை திரும்பி அவரை மிண்டும் பார்த்தான். அவரும் இவனை எதோ சிந்தனையுடன் பார்த்துகொண்டிருந்தார்.

முருகனுக்கு ஞாபகம் வந்தது. அவர் பெருமாளின் தந்தை. 

தொடர்புடைய சிறுகதைகள்
வடிவேல் - திருடன், ராதாரவி அரசியவாதி என அமைத்து கொண்டு நான் எழுதிய அரசியல் நையாண்டி கதை. நம்ம ஹீரோ ஒரு சின்ன திருடன். உண்மை என்னன்னா இது வரைக்கும் அவன் திருடி மட்டினதே இல்ல. ஆமா. திருட்றதுக்கு முன்னயே மாட்டிப்பான். போலிஸ்தான் அவனை அப்பப்போ petti ...
மேலும் கதையை படிக்க...
ஜான் காலை தன் அலுவலகத்திற்கு வந்தான். ஷீலாவை அழைத்து அன்றைய நிகழ்சிகளை பற்றி கேட்டான். இன்னைக்கு எதுவும் முக்கிய சந்திப்புகள் இல்லை, என்றாள் அவள். ஜெம் motorக்கு- நம்ம அனுப்புன கொட்டேஷன் என்ன ஆச்சு? இப்பொது ஷீலா இவனை பார்த்து கேலியாக ...
மேலும் கதையை படிக்க...
நடராஜ் அவரை பார்க்க சென்ற போது அவர் கொல்லைபுறத்தில் இருப்பதாக தெரிந்தது. அங்கு சென்ற போது அவர் இடுப்பில் ஒரு துண்டை கட்டிக்கொண்டு துடைபத்தால் குப்பையை கூட்டிகொண்டிருந்தார். இவனை பார்த்ததும், ஆச்சிரியமயிருக்கே எப்பிடியோ வந்துட்டியே. வா வா வா, என்று மிகவும் அன்புடன் ...
மேலும் கதையை படிக்க...
முகுந்தனும் அவன் நண்பர்களும் சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தனர். அவர்கள் பள்ளியில் கட்டாயம் கண்காட்சிக்கு செல்லவேண்டும், சென்றதற்கு அடையாளமாக நுழைவு சிட்டை வகுப்பாசிரியரிடம் காட்டவேண்டும் என்று அறிவித்திருந்தனர். அதனால் அவ்வளவாக விருப்பம் இல்லாவிட்டாலும் வந்திருந்தனர். முகுந்தனின் குடும்பம் குடிசை வீட்டில் இருந்து தளம் ...
மேலும் கதையை படிக்க...
காலையில் அருண் வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தான். மோகனா எதோ அவனை பற்றி முணு முணுத்கொண்டிருந்தாள். தினமும் நடப்பது தான். இதை பார்த்துக்கொண்டிருந்த மாமியார் கோமளதிற்கு சற்றே கோபம் வந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. ரெண்டுபேர்க்கு நடுவில நீ ஏன் வர? அருண் கோபிப்பான். அருண் - மோகனாவிற்கு ...
மேலும் கதையை படிக்க...
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
வணிகன்
பெரியவர்
கண்ணதாசனின் கல்லறை
விரதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)