“சொன்னா புரிஞ்சுக்கடா” கவலையுடன் சொன்னான் என் நண்பன் ஜாக்கி.
“முடியாது, அவளுக்கு முத்தம் கொடுக்கத்தான் போறேன்…”
“நீ மட்டும் அவளுக்கு முத்தம் கொடுத்து பாரு அப்புறம் உன்ன பார்க்க வரவே மாட்டா”
“சே சே அவளுக்கு எம்மேல ஆசை அதிகம்…என்னை காதலிக்கிறது அவ கண்ணுலயே தெரியுதுடா”
“ஒரு பொண்ணு நம்மள பார்த்துட்டா உடனே அவ நம்மள காதலிக்கறான்னு நினைக்கறது தப்புடா” அறிவுரை செய்ய ஆரம்பித்தான் ஜாக்கி.
“நிறுத்துடா, என் செல்லம் மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல மச்சி, என் மேல உயிரையே வச்சிருக்கா”
“சரி இனி உன்னை திருத்த முடியாது, என்ன வேணாலும் செய்” கோபமாக திட்டிவிட்டு எழுந்துபோய் விட்டான் ஜாக்கி.
என் காதலிக்கு நான் முத்தம் கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் இவனுக்கு என்ன? ஒருவேளை இவனுக்கும் அவ மேல ஏதாவது…. சே சே அப்படியெல்லாம் இருக்காது..சரி நாளைக்கு காதலர்தினம், நாளைக்கு முத்தம் கொடுத்தா வாழ்க்கை முழுசும் மறக்கவே மாட்டா என் பியூட்டி…. நினைத்தவாறே உறங்கிவிட்டேன்.
பிப்ரவரி 14, நேரம் காலை 9 மணி.
அதோ வருகிறாள் என் தேவதை…
என்ன கொடுமை இது! யாரோ ஒருவனுடன் வருகிறாளே!…..என்னைக் காண்பித்து ஏதோ சொல்கிறாளே?…இருவரும் சிரித்துக் கொள்கிறார்களே…என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லையே
கூண்டுக்குள் சுருண்டு படுத்துக்கொண்டு அழ ஆரம்பித்தேன்.
மனிதக்குரங்காக பிறந்தால் இப்படித்தான். மனிதர்களின் மொழி புரிவதில்லை.
- Tuesday, February 26, 2008
தொடர்புடைய சிறுகதைகள்
இரவு மணி இரண்டு.
வேகமாய் நடந்துகொண்டிருந்த மகேசுக்கு வியர்த்துக்கொட்டியது .. .அந்த தெருவில் அவனைத் தவிர யாரும் இல்லை..
"சே எங்க அப்பனுக்கு அறிவே கிடையாது" மனசுக்குள் தன் தகப்பனை திட்டியவாறே நடையில் வேகம் கூட்டினான்.
அவனுக்கும் அவன் அப்பாவிற்கும் நடந்த உரையாடல் அவன் மனதில்
நிழலாடியது...
"அப்பா ...
மேலும் கதையை படிக்க...
உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி ஐ.ஐடியில் படித்த தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததை எண்ணி வருந்தினான் ஜேம்ஸ். உலகின் இளம் விஞ்ஞானி என்கிற பட்டமெல்லாம் தனக்கிருந்து என்ன பயன் என்று நொந்துகொண்டே ஹாலில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.
ஜெனி மீது ...
மேலும் கதையை படிக்க...
ஊர் கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக ரயிலில் ஏறி அமர்ந்தவுடன் அப்பாவுக்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தேன். நாளை காலை ரயில் நிலையத்திற்கு வருவதாக சொன்னார். வேறு விஷயங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு தொடர்பை துண்டிக்கும் தருவாயில் அந்த செய்தியை சொன்னார். பத்து நாட்களுக்கு முன் பூனை ...
மேலும் கதையை படிக்க...
புழுதிக்காட்டுல பூவு ஒண்ணு பூத்துச்சு.அத்தவயித்துல அழகா பொறந்தா ஆசமக செம்பருத்தி. செவசெவன்னு இருக்கும் அவ பாதம். இலவம் பஞ்சு மாதிரி மெத்து மெத்துன்னு இருக்கும் அந்த பட்டுப்பாதம்.
ரெண்டு தெருவுக்கு பந்தல் போட்டு நாப்பது கெடா வெட்டி எட்டு ஊருக்கு கறிச்சோறு போட்டு ...
மேலும் கதையை படிக்க...
புதுசாய் பூத்த மல்லிகைப்பூ போல் இருக்கிறாள். யாருக்குத்தான் அவளை பிடிக்காது...
அவள் சுடிதாரில் வந்தாலே தேவதை போல் இருப்பாள்.. நேற்று சேலையில் அவள் வந்த அழகை வர்ணிக்க அடடா தமிழில் வார்த்தைகளே இல்லையா!
பூக்களால் செய்த சிலையோ?...பட்டாம்பூச்சிகள் இருவிழியோ?
இவள் என்ன பச்சைக்கிளி ஜாதியா? ...
மேலும் கதையை படிக்க...
போனோமா வந்தோமான்னு இருக்கணும்
ஒடோகொயிலியஸ் விர்ஜினியனுஸ் (Odocoileus virginianus)