முதலாளி – ஒரு பக்க கதை

 

தேதி பதினைந்து ஆகியும் தன்னிடம் வேலை பார்க்கும் ராஜாவிற்கு சம்பளம் தராமலிருந்தார் மளிகை கடை முதலாளியான அன்பரசு.

இது குறித்து அன்பரசுவின் மனைவியிடம் ராஜா பேச அவள் கணவனிடம் கேட்டாள்.

‘ஏங்க ராஜாவுக்கு சம்பளம் தரலை..?

ஒரு சின்ன ட்ரீட்மென்ட் தான்! இப்பல்லாம் அவன் நைட் கடை மூட லேட்டாயிட்டா கோபத்தோட வேலை செய்யறான்! அது எனக்குப் பிடிக்கலை. நாம தர்ற சம்பளத்தை வெச்சித்தான் அவன் பொழப்பு ஓடுது…

இதை அவனுக்குப் புரிய வைக்கணும். ‘சம்பளமில்லாமல் பிழைக்கறது கஷ்டம்’ங்கிற நினைப்பை ஏற்படுத்தணும்னுதான் இத்தனை நாள் இழுத்தடிச்சேன்! இனிமேல் அவன் வாலைச் சுருட்டிக்கிட்டு வேலை செய்வான் பாரு.

நாளைக்கு சம்பளத்தைக் கொடுத்துடறேன்’’’ என்றான் அன்பரசு.

மறுநாள் சம்பளம் வாங்கிய ராஜா அடுத்த நாள் வேலைக்குச் செல்லவில்லை.

‘ஏங்க இன்னைக்கு வேலைக்குப் போகல..? எனக் கேட்டாள் அவனது மனைவி.

முதலாளி என்னை ரொம்ப சாதாரணமாவனா நெனைக்கிறார்!

உழைக்கறதுக்கான கூலியை சரியான நேரத்துல கொடுக்கணுங்கிற நல்லெண்ணத்தை தொலைச்சிகிட்டிருக்கார்! நான் இல்லேன்னா எவ்வளவு கஷ்டம்னு அவருக்குப் புரியவைக்கணும்…!

இன்னும் மூணு நாளைக்கு லீவ் போடப்போறேன்’ என்றான் ராஜா

- வீ.விஷ்ணுகுமார் (நவம்பர் 2010) 

தொடர்புடைய சிறுகதைகள்
அரசு மருத்துவமனை. வெள்ளை நிறத்தில் மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. படுக்கையில் காலில் கட்டுடன் மூர்த்தி படுத்திருந்தான். சவரம் செய்யாத முகம். கண்களில் களையே இல்லை. கலைந்திருந்த தலை அவன் பல நாட்களாக இங்குதான் இருக்கிறான் என்பதைச் சொன்னது. கையில் பச்சை குத்தியிருந்த “லட்சுமி” என்ற ...
மேலும் கதையை படிக்க...
அறைக்குள் நுழைந்தபோது அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். புதிய முகங்கள் – முன்பின் அறிந்திராத நபர்கள், நான்கு பேர். நடுத்தர வயது. நல்ல ஆகிருதி. உட்கார்ந்திருக்கும்போதே உயரம் தெரிந்தது. தாடை இறுகிய சதுர முகம். தணல் போல் சிவப்பு, விழியோரம். அனந்த் வந்ததும் ...
மேலும் கதையை படிக்க...
“ஆர்டர் கொடுத்து, இருபது நிமிடங்கள் ஆவுது. சர்வர் இன்னும் நான் கேட்டதைக் கொண்டு வரவில்லை. இந்த மாதிரி சின்னப் பையன்களை வச்சுக்கிட்டு ஓட்டல் நடத்தினால் வர்றவங்க பட்டினியால் சாக வேண்டியதுதான்’ என்று முதலாளியிடம் கோபமாக கத்திவிட்டு எழுந்தார் சக்கரபாணி. “ஏண்டா சோம்பேறி! அவருக்குப் பின்னாடி ஆர்டர் ...
மேலும் கதையை படிக்க...
அதிகாலையில் அந்த மரணச் செய்தியோடு விழிக்க நேர்ந்தது. ‘அவர்’ இறந்து விட்டார். 'அவர்' என்றால், அவன் வீடிருக்கும் அந்த தெருவில் "வசிக்கும்" அல்லது "வசித்த" தெருவாசி தான் அவர். மனிதனே இறந்து விட்ட பிறகு அவரின் பெயர் அவ்வளவு முக்கியமில்லை தானே? ...
மேலும் கதையை படிக்க...
நாங்கள் கோபியை அடித்துப் பிடித்து இழுத்து வந்தபோது அவன் எங்கள் கண்ணுக்குப் புலப்படாத முள்ளம்பன்றிகளை கவனித்துக்கொண்டிருந்தான். பிரபாதான் அவன் மண்டையில் ஒன்று போட்டான் “என்னலே அங்க முறச்சு முறச்சு பாக்க?” கோபி திகைத்து வேறு உலகிலிருந்து இறங்கி வந்தவன் போல ...
மேலும் கதையை படிக்க...
முரண்
அடிமைகள்
சர்வர் – ஒரு பக்க கதை
அவர்
நாங்கள் கோபியை மிரட்டினோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)