முதலாளி – ஒரு பக்க கதை

 

டேய், மத நல்லிணக்கத்துக்கு ஒரு வாழும் உதாரணம் நம்ம முதலாளி தாண்டா! தன் நண்பன் சுந்தரிடம், ஷேக்முகம்மது கூறினான்.

எதை வச்சுடா அப்படிச் சொல்லுற? நண்பனிடம் எதிர்க்கேள்வி கேட்டான் சுந்தர்.

பின்ன என்னடா நம்ம கம்பெனியில கிட்டத்தட்ட நூறு பேர் வேலை பார்க்கிறாங்க. ஒரு இந்துவா இருக்கிற முதலாளி எண்பது சதவீதம் தொழிலாளிகளை கிறிஸ்துவர்களாகவும், முஸ்லிம்களாகவும் வச்சிருந்தா அதுக்கு காரணம் மத நல்லிணக்கம் தானே?

டேய் ஷேக் நீ நம்ம முதலாளியை பற்றிசரியா புரிஞ்சுக்காம பேசுற. அவருக்கு 365 நாளும் கம்பெனியை இயக்கனும். இந்துக்களுக்கு ஏகப்பட்ட விடுமுறை வரும். அதுவும் இல்லாம கோயில் கொடை அது இதுன்னு ஏகப்பட்ட லீவு வேற எடுப்பாங்க. ஆனா, முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்கு லிமிட்டாத்தான் பண்டிகைகள் வரும். லீவும் கம்மியாத்தான் எடுப்பாங்க. இப்ப புரியுதா, நம்ம முதலாளியோட மத நல்லிணக்கம்?

சோழியன் குடுமி சும்ம ஆடலைனு சொல்லு. என்று நண்பனிடம் கூறினான் ஷேக்முகம்மது.

- வி.சகிதா முருகன் (அக்டோபர் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
''ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க... முதல் போணியாகட்டும்' என்று பீடாக்கடை கோபாலகிருஷ்ணா சொன்னான். ''ஏன்... என்னுதே முதல் போணியா இருக்கட்டுமே?'' என கடைக் கண்ணாடி அலமாரி மீது ஒரு ரூபாயை எடுத்துவைத்தார் வெங்கையா. இரண்டு ஸ்பெஷல் பீடாக்களை ஒரு காகிதத் துண்டில் பொட்டலம் கட்டி ...
மேலும் கதையை படிக்க...
எனது நண்பன் வில்லியம்ஸ் அசகாய சூரன். இப்போது நாங்களிருவரும் தினசரி எஸ். எம். எஸ் / சாட் / மெயில் எப்போதாவ்து போன் என்ற தூரத்த்தில் இருந்தாலும் சின்ன வயசில் ஒன்றாகவே இருந்தோம். என்னைவிட நாலு வயசு பெரியவன். கையெழுத்துப் பத்திரிக்கை; பின்னர் ...
மேலும் கதையை படிக்க...
நோபல் பரிசு பெற்ற கதை! இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரண அவஸ்தையை அனுபவித்துக்கொண்டு இருந்தார். உடல் தளர்ந்துபோய் மூச்சுவிடவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவரின் உயிர் பிரியும் நேரம் நெருங்கிவிட்டது. சிலுவையின் அருகில் அன்னை மரியாளும் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட சிலரும் மட்டுமே ...
மேலும் கதையை படிக்க...
அடால்ப் ஹிட்லர் ஒரு மன நோயாளி என்ற உண்மை, நாஜி ஜெர்மனி வீழ்ச்சியுற்ற பிறகுதான் உலகுக்குத் தெரிய வந்தது. யூதர்களையும், ஜிப்ஸிகளையும், கம்யூனிஸ்டுகளையும்- ஏன், ஜெர்மானியர்கள் அல்லாத அனைவரையுமே நர வேட்டையாடி, மலை மலையாய்ப் பிணக் குவியல்களைக் குவித்த நாஜி ராணுவமே ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு நீண்ட மினி ஹால் மாதிரியான அறை.. உள்ளே நுழைந்தவுடன் ஜிவ்வென்று கவ்வும் ஏ.ஸி.யின் குளிர்…அதையுந்தாண்டி மூக்கில் உறைக்கும் சேவ்லான் நெடி.வரிசையாய் கட்டில்களில் பல நிலைகளில் அபாய கட்டங்களில் நோயாளிகள். சிலர் ஆக்ஸிஜன் மாஸ்க் வைத்த பின்பும் மூச்சுத் திணறலுடன் ...
மேலும் கதையை படிக்க...
பாண்டிபஜார் பீடா
MAN OF THE MATCH
அன்பின் வழி
ஒரு பக்தர்
சாலையோரத்து மரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)