நாகப்பன் எழுந்து நின்று மிமிக்கிரி செய்தான். சக ஊழியர்கள் கைகளைத் தட்டி ‘ஒன்ஸ் மோர்’ என்றார்கள். எல்லோரும் சிரிப்பில் மிதந்து கொண்டிருக்க ஓரமாக அமர்ந்திருந்த சீனு மட்டும் சிரிக்கவில்லை. எப்படி சிரிப்பான், சீனுவின் வாரத்தை உச்சரிப்பை வைத்துதானே கிண்டல் நடந்து கொண்டிருந்தது.
வடை என்பதை வதையென்றும், பழத்தை பதம் என்றும் சீனு உச்சரிப்பான்.
அன்றும் வழக்கம் போல, அரட்டைக் கச்சேரியை எதிர்பார்த்து ஊழியர்கள் கூடினார்கள். நாகப்பன்தான் வரவில்லை. தொடர்ந்து பத்து நாளாக அவன் பணிக்கு வரவில்லை. பத்து நாள் கழித்து அலுவலகம் வந்த நாகப்பனிடம் பெரும் மாறுதல் காணப்பட்டது. மிமிக்கரி செய்வதை நிறுத்திவிட்டான்.
அவன் கடும் காய்ச்சலினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கையில் ஊழியர்களில் சீனு மட்டுமே பழங்கள் வாங்கிச் சென்று பார்த்து ஆறுதலான வாரத்தைகளால் தேற்றி வந்தான்.
கண்களில் நீர் வழிய, மனதுக்குள் பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டான் நாகப்பன்.
- ஆள்வநேரி சாலமன் (27-10-10)
தொடர்புடைய சிறுகதைகள்
கோவிந்தனுக்குக் குமாரலிங்கத்தை நினைக்கக் கோபம் கோபமாக வந்தது.
தான் அரசு அலுவலகம் ஒன்றில் தினக்கூலி என்றாலும் அதிகாரியிலிருந்து அத்தனை ஊழியர்களும்.....
'இவன் அமைச்சருக்கு நெருங்கிய உறவு, சொந்தக்காரன். அவர் சிபாரிசில் வேலையில் சேர்ந்தவன். ஆளைத் தொட்டால் ஆபத்து !' - என்று பயந்து விலகிப் ...
மேலும் கதையை படிக்க...
எங்களுடைய உயர் அதிகாரி எங்களை பாலக்காடிற்கு போகச் சொல்லி விட்டார். அங்கே தோனி (தோனி என்றால் உங்களுக்கு இந்திய கிரிக்கெட் கேப்டன் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல) என்றொரு இடம். அதற்கு பக்கத்தில் இருக்கும் ரயில்வே டிவிசன் ஆபீசுக்கு செல்ல வேண்டும். ...
மேலும் கதையை படிக்க...
‘’காய்கறி கடைக்கெல்லம் போக மாட்டேன்னா போகமாட்டந்தான். மார்க்கெட்ல என் ஃப்ரெண்ட்ஸ் பார்த்தா என்ன நினைப்பாங்க?’’
இந்த வேலையெல்லாம் இனிமே எங்கிட்டே சொல்ற வேளையே வச்சுக்காதே. எத்தனை தடவை சொல்றது….ச்சே’’
‘’அப்போ, சாப்பாட்டுக்கு ஊறுகாதான்’’
‘’அதை அப்பாவுக்கு வை. நான் ஹோட்டல்லே சாப்பிடுறேன்’’
‘’ம்..தலையெழுத்து. வீட்டைப் பார்த்துக்கோ….நான் போய் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன்
[ 1 ]
என் அப்பா மரணப்படுக்கையில் கிடந்தபோதுதான் நான் நெய்யூர் ஆஸ்பத்திரிக்கு முதன்முதலாகச் சென்றேன். எனக்கு அந்த ஆஸ்பத்திரி அப்போது ஒரு மாபெரும் ஆச்சரியம். வெள்ளைவெளேரென்று இரட்டைப்பனைகளைப்போல எழுந்த தூண்கள் கொண்ட உயரமான கட்டிடத்தை பிரமித்துப்போய் அண்ணாந்து பார்த்துக்கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
வசந்த் ஃபேக்டரிக்கு புறப்படும் நேரம் தடாலென ஒரு சத்தம் கேட்டது. வசந்த் உள்ளே ஓடினான்!
பெட்ரூமில் தாரிணி உறங்கிக் கொண்டிருந்தாள்!
சத்தம் எங்கேயிருந்து?
சமையல் கட்டுக்குள் நுழைய அம்மா கீழே கிடந்தாள்!
"அம்மா என்னாச்சு?'
கீழே உட்கார்ந்து உலுக்கினான்! அம்மா மயக்க மடைந்திருந்தாள்! கீழே விழுந்ததில் தலை தரையில் ...
மேலும் கதையை படிக்க...