மினிசோட்டாவின் கழுகு மலை

 

அமெரிக்காவில் பெரிய ஏரிக்கு அருகே உள்ள மினசோட்டாவுக்கு வேலை நிமித்தம் என் குடும்பதொடு சென்றேன், என் மனைவி மாதங்கி மென் பொருள் போரியியலில் பட்டம் பெற்றவள். எங்களுக்கு விக்னேஷ் மட்டுமே ஒரு பிள்ளை. பத்து வயதான அவனுக்கு சிறு வயது முதல் கொண்டே பறவைகள் என்றல் ஆர்வம். பறவைகள் பார்ப்பது அவனின் பொழுது போக்கு. பறவைகள் பார்ப்பது என்பது வனப்பகுதிகளில் இயற்கையான வாழ்விடங்களில் அல்லது நகர்ப்புறங்களில் அவற்றின் மேம்பட்ட வாழ்விடங்களில், ஒருவேளை சொந்த முற்றத்தில் கூட பார்க்கப்படுவதாகும். பறவைகள் பார்ப்பது பறவைகளை அடையாளம் காண்பது மற்றும் அவற்றின் நடத்தையைப் புரிந்துகொள்வது ஆகியவை அடங்கும். பறவைகளை கவனிக்கும் (Birds Watchig) சங்கத்தில் அவன் அங்கத்தினராக இருந்தான். பறவைகளை பல விதமான ஒலிகளை டேப்பிள் பதிவு செய்து வைத்திருந்தான். நாங்கள் அமெரிக்க போனவுடன் அவன் ஒரு நாள்,

“அப்பா அமெரிக்காவின் தேசீய சின்னம் தங்கக் கழுகு. கூர்மையான பார்வையும் தனியாக உயரப் பறக்கும் பறவை கழுகு. அவை ஏனைய பறவைகளுடன் சேர்ந்து பறக்காது, காரணம் வேறு பறவள் கழுகுகள் உயரத்தில் பறக்க முடியாது. அது புதிதான இரையினையே உண்ணும். எதை உண்பது? எதைத் தெரிவது? எதை விலக்குவது? என்பதில் கழுகுகள் சரியான தெரிவை எடுக்கும்! அந்த கழுகை அமெரிக்காவில் பார்க்க முடியுமா”

அவன் கேட்ட கேள்வி என்னை சிந்திக்க வைத்து ஆண் பிறந்த இடம் தூத்துக்குடி மாவட்டதில் உள்ள புகழ்பெற்ற கழுகுமலை அருகே உலா கிராமத்தில் ஆங்கு வெட்டுவான் கோயில், கழுகுமலை முருகன் கோயில் மற்றும் கழுகுமலை சமணர் படுகைகள் அமைந்துள்ளது. ஆனால் திருக்கழுக்குன்றம் போல் கழுகுகளை காணமுடியாது. என் மகன் கழுகை அமெரிக்காவில் பார்க்க வேண்டும் என்று சொன்ன போது,

அமெரிகாபில் பெரிய ஏரிக்கு (Great Lakes) அருகே உள்ள மினசோட்டாவில் உள்ளது வந்த முதல் ஐரோப்பியர்கள் பிரெஞ்சுக்காரர்கள். 1650 களில் பியர் ராடிசன் மற்றும் மெடார்ட் டெஸ் க்ரோசில்லெர்ஸ் போன்ற ஆய்வாளர்கள் முதன்முதலில் இப்பகுதிக்கு விஜயம் செய்தனர். அமெரிக்காவுக்கு ஐரோப்பியர்கள் பிரெஞ்சுக்காரர்கள் வரமுன் அங்கு இருந்தவர்கள் இனத்தை சேர்ந்த செவிந்தியர்கள்.

இரண்டு பெரிய பூர்வீக அமெரிக்க பழங்குடியினர் – டகோட்டா (அல்லது சியோக்ஸ்) மற்றும் ஓஜிப்வா (அனிஷினாபே அல்லது சிப்பேவா) – மினசோட்டா பகுதியில் வாழ்ந்தனர். ஒரு காலத்தில் அங்கு முன்பதிவு நிலம் வைத்திருந்த வின்னேபாகோ உள்ளிட்ட பிற பழங்குடியினரைச் சேர்ந்த சிறு குழுக்களும் இப்போது மாநிலத்தில் வசிக்கின்றனர் இந்த ஆரம்ப ஆய்வாளர்கள் சுப்பீரியர் ஏரியின் கடற்கரையை வரைபடமாக்கி, பிரான்சிற்கான நிலத்தை கோரினர். இது ஒரு வகை ஆக்கிரமிப்பு 1870 களின் நடுப்பகுதியில் மினசோட்டாவிற்கு முதல் சீன குடியேறினார்கள் வந்தனர், கிட்டத்தட்ட அனைவரும் மேற்கு அமெரிக்காவில் ஆசிய எதிர்ப்பு வன்முறையிலிருந்து தப்பிக்கும் ஒற்றை உழைக்கும் ஆண்கள். பெரும்பாலானவர்கள் செயின்ட் பால், மினியாபோலிஸ் மற்றும் துலுத் ஆகிய இடங்களில் குடியேறினர், மீதமுள்ளவர்கள் இரும்புத் தொடர் உட்பட வெளி நகரங்களில் சிதறிக்கிடக்கின்றனர். அவர்களை தொடர்ந்து இந்தியா சோமாலி எதியோபியா, தைவன் போன்ற நாடுகளில் இருந்து மினசோட்டாமாநிலத்துக்கு வந்தவர்கள் பலர்.

என்னுடன் வேலை சியும் ஜான் என்ற ஜோன்சன் என்பவர் மினசோட்டாவில் பிறந்து வளர்ந்து படித்தவர். அவரின் குடும்பம் என் குடும்பத்தை போல் அவரின் மனைவி சேரா மகன் பீட்டர் மட்டுமே. பண்புள்ள குடும்பம்.

ஜான் என் மகனுக்கு மினசோட்டாவில் 2300 அடி உயரமான் பெரும் ஏரிக்கு அருகில் உஆல் காடுகல்லும் இயற்கை வளமும் நிறைந்த இடமான் கழகுமலை பற்றி புகழ்ந்து சொன்னார். அதோடு மினசோட்டா வட நட்சத்திரம் மாநிலம் அல்லது 10,000 ஏரிகளின் நாடு என்பர்.

தலைநகரம் செயின்ட் பால், பெரிய நகரம் மினியாபோலிஸ்.

பரப்பளவிள் அமெரிக்காவில் 12வது மாநிலம் மொத்தம் 87,014 சதுர மைல் அகலம் 250 மைல் (400 கிமீ) நீளம் 400 மைல் (645 கிமீ).

“ஏன் அங்கிள் அந்த மலைக்கு கழுகு மலை என்று பயர் வந்தது?”

“மலை காட்டில் கூடு கட்டி கழுகுகள் கூடு கட்டி குடும்பம் நடத்துவதால் அந்த பெயர் வந்தது, அந்த மலையில் இருந்து பார்த்தல் கனடாவின் தண்டர் பே நகரமும் பெரிய ஏரியும் தெரியும், இந்த மலையின் உச்சி தான் மினசோட்டாவில் மிக உயர்ந்த இடம் அங்கே நடந்து போய் வர சுமார் எட்டு மணித்தியாலம் தேவை. வின்டரில் போவது கஷ்டம். போக வர சுமார் 12 மைல்கள். ஒற்றையடி பாதை என்று முழு விபரம் சொன்னார்.

“போகும் வழியில் மிருகங்கள் உண்டா?” இது என் மகனின் கேள்வி.

“நல்ல கேள்வி விக்னேஷ். காஸ்கின் மலை, புள்ளி மலை (2,230 அடி), உச்சம் (2,266 அடி), லிமா மலை (புரூல் மலை மற்றும் பைன் ஆகியவை அடங்கும். இந்த மலை காட்டில் வனவிலங்குகளுக்கு பெயர் பெற்றது, இதில் மூஸ், நரிகள், லின்க்ஸ் மற்றும் சிறிய வனப்பகுதி உயிரினங்களின் முழு மேலாண்மையும் அடங்கும். கழுகு உற்பட பறவைகள், உயரமான ஓக் மற்றும் மேப்பிள் மரங்களில் லூன்கள், மற்றும் ஆந்தைகள் உண்டு:

“அங்கிள், வருகிற சனிக்கிழமை உங்கள் குடும்பமும் எங்கள் குடும்பமும் இந்த மலை உச்சிக்கு சான்விட்ச் தயாரித்துக் கொண்டு குடிக்க ஆரஞ்சு ஜூஸ்சம் கொண்டு போய் வருவோமா?”

“அதுக்கென்ன உன் டாடி சம்மதித்தால் போவோம்” என்றார் ஜான்.

நான் மாதங்கியை பார்த்தேன்.அவள் மகன் கேட்டது எதையும் மறுக்க மாட்டாள்.

***

பூட்ஸ் அணிந்து சனி காலை எட்டு மணிக்கு எங்கள் நடையை கழுகு மலை பாதையில் நாங்கள் நால்வரும் ஆரம்பித்தோம். பயணத்துக்கு முன் போய் வர மெசினில் பணம் போட்டு ரசீது எடுத்தோம். நாள் காலம மாழை இலை வெப்ப நிலை 21 டிகிரி செண்டிகிறேட் காட்டியது. அடர்ந்த ம்மேப்பில், பீச், ஒக் மரக் காடு. காட்டு பூக்களை பார்த்து ரசித்த படியே நாடந்தோம். அழகிய தோற்றங்களில் காளான்கள் வளர்ந்து இருந்தன. சில மோகல் எங்கள் முன்னே ஓடி மறந்தது, பறவைகளின் ஓசையை விக்னேஷ் பதிவு செய்து கொண்டே நடந்தான். சில பறவைகளை படம் பிடித்தான். திடீர் என்று ஒற்று நரி குறுக்கே ஊட்டி மறைந்தது. மரத்தில் இருந்து வாசம் சுவாசிக்க சுகாமாக இருந்தது.

நான் கழுகு ஒன்றை ஓக் மர உச்சியில் கண்டேன். அந்த காக்கு மர உச்சியில் கூடு கட்டி இரண்டு குஞ்சுல்லோட்டு இருந்தது, அதை விக்னேஷ் படம் பிடித்தான்

“கழுகுகள் கூர்மையான பார்வை உடையன. ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள ஒன்றை அவற்றால் தெளிவாகப் பார்க்க முடியும். கழுகு ஓர் இரையைப் பார்த்ததும், அது தன் பார்வை ஒடுக்கி அதைப் பிடிக்க முயலும். தடைகள் வந்தாலும், அது தன் தன் கவனத்தை திசை திருப்பாது, தன் பார்வையை இரையின்மேல் வைத்திருக்கும்.” என்றான் விக்னேஷ்

”கழுகுகள் புயலை விரும்புகின்றன. புயல் காற்றின் மூலம் அவை மேகங்களின் மேலாக உயர்த்தப்படுகின்றன. இதனால், அவை சிறகினை விரித்து காற்றில் மிதக்கவும், அதன் மூலம் இளைப்பாறவும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. அதே நேரம், மற்றப் பறவைகள் மரக்கிளைகளில் ஒளிந்து கொள்ளும்” என்றார் ஜான்

“அது மட்டுமல்ல பெண் கழுகு ஓர் ஆண் கழுகை சந்தித்து உறவு கொள்ளு முன், அது ஆண் கழுகுடன் நிலத்திற்குச் சென்று சிறு தடி போன்ற குச்சியை எடுக்கும். பின்பு மேலே ஆணுடன் உயரத்திற்குப் பறந்து சென்று அந்தக் குச்சியினைக் கீழே போட்டுவிட்டு அவதானித்துக் கொண்டிருக்கும். நிலத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் குச்சியை ஆண் கழுகு விரட்டிச் சென்று, அது நிலத்தில் விழு முன் பிடித்து, அதை உயரப் பறக்கும் பெண் கழுகிடம் சேர்ப்பிக்கும். பெண் கழுகு மீண்டும் குச்சியைக் கீழே போட்டுவிடும். ஆண் கழுகு பிடிப்பதற்காக கீழே செல்லும். இவ்வாறு குச்சியை வீழ்த்துவதும், எடுத்து வருவதுமாக பல மணித்தியாலங்களுக்கு பரீட்சை நடைபெறும். பெண் கழுகு ஆண் கழுகிடமுள்ள பொறுப்புணர்வை நிச்சயப்படுத்திக் கொண்டதும் அது உறவு கொள்ள இடமளிக்கும். உறவை ஏற்படுத்திக் கொள்ள முன் பொறுப்புணர்வு சோதனைக்கு உள்ளாக்கபடுகின்றது!” என்றரர் ஜான்.

“என்ன ஜான் உமக்கு கழுகுகள் குணம் பற்றி அதிகம் தெரிகிறது போல் தெரிகிறது” நான் சொன்னேன்.

“நானும் உங்கள் மகன் போல் பொழுது போக்குக்கு கழுகுகள் வாழும் முறைகளை அவதானிப்பவன். அதனால் தனிமையில் இங்கு வந்து ழுகுகளை ரசிப்பேன்”

“மேலே சொலும் ஜான். கேட்க சுவர்சியமாக இருக்கு” மாதங்கி சொன்னாள்.

“முட்டையிடத் தயாரானதும், ஆணும் பெண்ணும் மலையின் உச்சியிலுள்ள, ஏனைய உயிரிணங்கள் இலகுவில் வந்தடைய முடியாத இடத்தினைத் தேர்வு செய்யும். ஆண் முட்களைக் கொண்டு வந்து பாறைப் பிளவில் கூட்டினை அமைக்க ஆரம்பிக்கும். அதன் பின் குச்சிகளையும், அதன் மேல் முட்களையும் வைத்துக் கட்டும். அதன்மேல் மிருதுவான புற்களை அடுக்கி முதலாவது அடுக்கினை முடிக்கும். அதன் பின் முட்களைப் பரப்பி, அதன் மேல் புற்களைப் பரப்பும். அதற்கு மேலாக தன் இறகுகளைப் பரப்பி, கூட்டினைக் கட்டி முடித்துவிடும். கூட்டின் வெளியேயுள்ள முட்டைகள் வெளியேயிருந்து எதுவும் கூட்டிற்குள் வருவதைத் தடுக்கும். பெண் கழுகு முட்டையிட்டு பாதுகாக்க, ஆண் கழுகு இரையை வேட்டையாடும்.

குஞ்சுசுகளைப் பயிற்றுவிக்க பெண் கழுகு அவற்றை கூட்டிற்கு வெளியே எடுத்துவிடும். பயந்த குஞ்சுகள் கூட்டிற்குள் தாவி வந்துவிடும். ஆகவே, குஞ்சுகளை கூட்டிற்கு வெளியே எடுத்துவிட்டதும், கூட்டிலுள்ள இறகுகளை வெளியேற்றி முட்களுடன் கூட்டை விட்டுவிடும். பயந்த குஞ்சுகள் மீண்டும் கூட்டிலுள் தாவியதும், அங்குள்ள முட்கள் அவற்றைக் குத்திவிடும். இதனால் குஞ்சுகள் கூட்டைவிட்டு வெளியேறும்.

அடுத்து, மலை உச்சியிலிருந்து குஞ்சுகளை தாய்க் கழுகு கீழே தள்ளிவிடும். பயத்தால் அவை கீச்சிட்டு, கீழே விழுமுன் ஆண் கழுகு அவற்றைப் பிடித்து தன் மேல் வைத்துக் கொண்டு மலை உச்சிற்கு கொண்டு வரும். குச்சுகள் இறக்கை அடிக்கத் தொடங்கும் வரை, இவ்வாறு நடைபெறும். குஞ்சுகளின் பறக்கும் பயத்தை போக்க குஞ்சுகளுக்கு இந்த டிரெனிங் தாய் கழுகு நடத்தும்.

குடும்பம் இருவரின் பங்குபற்றலாலும் வெற்றி பெறும். முட்கள் குத்துப்போது, வாழ்வு அனுபவப்படாமல், முன்னேறாமல், கற்றுக் கொள்ளமல் அதிக வசதியாக இடத்தில் இருப்பதை உணர்த்துகின்றது. வாழ்விலுள்ள முட்கள் வளர வேண்டும், கூட்டை விட்டு வெளியேறி வாழ வேண்டும் என்பதை கற்பிக்கின்றன.

ஓரு கழுகு வயதாகியதும், அதன் இறக்கை பலவீனமாகி, அது பறக்க வேண்டிய வேகத்தில் பறக்க ஒத்துழைக்காது. அது சாகும் அளவிற்கு பலவீனப்பட்டுள்ளதாக உணர்ந்ததும், மலையிலிருந்து நீண்ட தூரத்திற்கு ஓய்விற்காகச் சென்றுவிடும். அங்கிருந்து, தன் உடலிலுள்ள அத்தனை இறகுகளையும் மொட்டையாக வரும்வரை நீக்கிவிடும். அந்த மறைவான இடத்தில் புது இறகுகள் முளைக்கும் வரை தங்கியிருந்து, பின் வெளியே வரும்”.

“கழுகில் இருந்து மனிதன் கற்க வேண்டிய பாடங்கள் பல இருக்கு” ஜானின் மனைவி சொன்னாள்.

நால்வரும் மலை உச்சியில் இருந்து இயற்கையை ரசித்தனர். வெகு தூரத்தில் கனேடிய நகரம் தண்டர் பே தெரிந்தது.

மாலை ஐந்து மணிக்கு மலை அடிவாரத்தை வந்து அடைந்தனர். 

தொடர்புடைய சிறுகதைகள்
பறக்கும் தட்டில் பூமிக்கு பிற கிரக வாசிகள் வந்ததாகப் பல கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் எவ்வித தோற்றம் உள்ளவர்கள் எனக் கற்பனையில் சிருஷ்டித்துப் பல இடி (ET) போன்ற படங்கள் எடுத்திருக்கிறார்கள். பிற கிரக வாசிகள் பூமிக்கு வந்ததாக போதிய ஆதாரங்கள் ...
மேலும் கதையை படிக்க...
முகவுரை பெண்கள் பலவிதம் . கோபம் கர்வம், அசடு, புத்திசாலி சுயநலம் போன்ற நீண்ட குண பtட்டியல்அவர்களுக்கு உண்டு அதில் தொட்டால் அல்லது உரத்து பேசினால் துவளும் உள்ள குணம் சில பெண்களுக்கு அனிச்சமலரைப் போல் உண்டு அந்த குணம் உள்ள அன்னிச்சியின் ...
மேலும் கதையை படிக்க...
எனக்கென்று கார் இருந்தும் ஆபிசுக்கு பஸ்சில் நான் போய் வருவது தான் வழக்கம். ஒன்று காரில் போனால் போய் வர பெற்றோலுக்கான பணச்; செலவு இருக்கும். இரண்டாவது டிரபிக்கில் கார் ஓட்டுவதென்றால் பொறுமையும,; கவனமும் வேண்டும். அதுமட்டுமல்ல ஆபிசுக்கு அருகே கார்பார்க் ...
மேலும் கதையை படிக்க...
கொழும்பில், டாக்டர் சோமசுந்தரம் முதியோர்களிடையே பிரபல்யமான வைத்தியர். டாக்டர் சோமரிடம் போனால் வியாதிகள் எல்லாம் சுகமாகிவிடும் என்பது பல முதியோரின் நம்;பிக்கை. மனிதனுக்கு வயது ஏறும் போது நோய்களும் எங்கிருந்தோ வந்து உடம்பில் உறவாடத் தொடங்கும். இது இயற்கை. இருதய நோய், சிறு ...
மேலும் கதையை படிக்க...
முன்னுரை : காதல் இளம் வயதினருக்கு மட்டுமல்ல வயது வந்த முதியோருக்கும் வரலாம்.. இளம் வயதில் எதை இழந்தார்களோ அதை மரணத்துக்கு முன் எதிர்பார்ப்பதில் என்ன தவறு ? இந்த கதை சற்று வித்தியாசமான பார்வையில் எழுதப்பட்டது சோமர் என்ற சோமசுந்தரம் கொழும்பில் போலீஸ் ...
மேலும் கதையை படிக்க...
முன்னுரை ஒரு சிறுமி 10 and 14 வயதுக்கு முன் மொட்டாக இருந்து பின் மலர்ந்து பல வாலிபர்களின் மனதைக் கவரும் பூத்த மலராகிறாள். இது இயற்கை. சில ஆபிரிக்கநாட்டுசிறுமிகள் 10 வயதுக்கு முன்பே பூத்து விடுவார்கள். இந்த சிறு கதை பல காலம் ...
மேலும் கதையை படிக்க...
சென்னையில் புலன் ஆய்வுத் துறைக்கு பொறுப்பான போலீஸ் அதிகாரியான சீனியர் அத்தியட்சகர் (Senior Superintendent) சாம்பசிவம் பலரால் கண்டுபிடிக்க முடியாத மர்மம் நிறைந்த கொலை கேசுகளை தனது தொழில் நுட்ப அறிவை பாவித்து உதவியாளன் இன்ஸ்பெக்டர் ராஜனின் உதவியோடு கண்டு பிடித்தவர். ...
மேலும் கதையை படிக்க...
இலங்கையில் யால , வில்பத்து, மதுறு ஓயா, உடவளவ, சிங்கராஜ, போன்ற பல தேசீய வனங்கள் உண்டு , அவைற்றை கவனிக்க வன இலாக்கா உண்டு. அவ் வனங்களில் உள்ள வனவிலங்கள் தாவரங்கள். நதிகள் . குன்றுகள் . குளங்கள் நாட்டின் ...
மேலும் கதையை படிக்க...
முகவுரை தேவ தாசிகள் என்ற கோவிலில் நடனமாடும் தொழில் புரியும் குலத்தினர் கோயில்களிலே குறிப்பாக, திருவிழாக் காலங்களிலே நிகழ்த்தி வந்த ஆடற்கலையே ‘சின்னமேளம்’ என்று மக்கள் அழைத்ததாக அறிய முடிகின்றது. அரசவைக் களங்களிலும், சில ஆண்டவன் சந்நிதிகளிலும் ஆடப்பட்டு கால ஓட்டத்தில் எல்லாக் ...
மேலும் கதையை படிக்க...
எதிர்பாராத சந்திப்புகள் காதலில் போய் முடிவதுண்டு அதே மாதிரி தான் சாந்தி, ராம் என்ற ராமசாமியின் சந்திப்பும் . சாந்தி பிறந்தது வன்னியில் ஈழத்துப் போர் நடந்த முள்ளிவாய்க்கால் அருகே உள்ள உள்ள முல்லைத்தீவில். இராமசாமி பிறந்த ஊர் மலையகத்தில் உள்ள ...
மேலும் கதையை படிக்க...
கிரகவாசி வருகை
துவண்டு விடும் சிறுமி அனிச்சி
தெருச் சிறுவன் தர்மசேனா
மறதி நோய் ஆராச்சி
ஒரு முதியவரின் காதல்
மொட்டு
கொசு செய்த கொலை
சேருவில சிறுத்தைகள்
சதிராட்டக்காரி சந்திரவதனி
ஊர் பெயர் தெரியாத உறவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)