மிச்சம் – ஒரு பக்க கதை

 

உப்பிலிபாளையம் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார் கூத்தபிரான்.

உக்கடம் செல்ல வேண்டும்.

தேர்வுத்தாள் திருத்தும் பணி இன்றோடு முடிந்து, இத்தனை நாட்களுக்கான சம்பளமாக ரூபாய் பத்தாயிரம் கையில் இருந்தது.

சரியாக சொகுசுப் பேருந்து ஒன்று வந்தது. ஏறலாம் என்று ஓடிய போது, இது ஒன்பது ரூபா பஸ். கொஞ்ச நேரத்துல மூணு ரூபா பஸ் வந்துடும் என்றார் சக பயணி.

ஒன்பது ரூபாய், எட்டு ரூபாய், ஆறு ரூபாய், மூன்று ரூபாய் என ஒவ்வொரு பஸ்ஸூக்கும் விதவிதமான கட்டணங்கள் இருக்கும் விநோதத்தைப்பற்றி யோசித்தபடியே, வீட்டுக்குப் போக என்ன அவசரம். சாதாரண கட்டண பஸ் வரட்டுமே என்று நின்று விட்டார் கூத்தபிரான்.

சில நிமிடங்களில் அந்தப் பேருந்து வந்தது. சரியான கூட்டம். சிரம்பபட்டு ஏறி, பின்புறம் சென்றுவிட்டார்.

நெரிசலில் நசுங்கி, கால்கள் மிதிபட்டு நெளிந்தார். வியர்வை நாற்றமும், சாராய நெடியும் வேறு வியிற்றைக் கலக்கியது.

எப்படியோ உக்கடம் வந்தாயிற்று. வேகமாக கீழே இறங்கியவர் ஒரு டீக்கடையில் டீ சொல்லிவிட்டு பாக்கெட்டில் கையை விட்டால், அது கிழிபட்டிருந்தது. பர்ஸைக் காணவில்லை.

கூட்டமான பஸ்ல பணத்தோட வரக்கூடாது சார், வந்தா இப்படித்தான் என்றான் டீக்கடைக்காரன்.

6 ரூபாய் மிச்சப்படுத்தப் போய் 10 ஆயிரத்தைப் பறிகொடுது விட்டு தொங்கிய முகத்தோடு வீட்டுக்கு நடந்தார் அவர்.

- த.வாசுதேவன் (மார்ச் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
சாவு சாலையோரத்தில் ஒரு மாமரம். மாமரத்தடியில் ஒரு குளம். குளக்கரையில் ஒருவன் விழுந்து இறந்து கிடந்தான். வியாதியில்லை, வெக்கையில்லை. கைகள் முஷ்டித்திருந்தன. சாவைத் திடீரென்று சந்தித்த பயங்கரத்தில், கண்கள் ஆகாயத்தை அண்ணாந்து நிலைகுத்திப் போயிருந்தன. வாழ்க்கையின் முழு நம்பிக்கையை அந்த வாழ்க்கையின் முடிவு ...
மேலும் கதையை படிக்க...
தொலைதூரம் நடந்த களைப்பில் நெஞ்சுக்கூடு மேலும் கீழும் இறங்கியது. சற்று நிதானித்துச் சுவாசத்தைச் சீராக்கிக் கொண்டார். நுதல் மலர்ந்த வியர்வையைத் தட்டி விட்டு அந்த மூதாட்டி முதுமை தின்ற யாக்கையை இழுத்துக் கொண்டு அரண்மணை நோக்கி மெல்ல அடி எடுத்தாள். இன்னும் சில ...
மேலும் கதையை படிக்க...
ரங்கசாமி ஆற்றாமை தாங்காமல் பக்கத்து வீட்டு தியாகராஜனைக் கேட்டே விட்டார். ‘ஏன் சார், தீபாவளிக்கு எதுக்கு இத்தனை தடபுடல், இவ்வளவு செலவு? நீங்க செலவு பண்ணுன காசுக்கு ரெண்டு பவுன் நகை வாங்கி வச்சுட்டாக்கூட பிற்காலத்துக்கு உதவியா இருக்குமே? கேட்ட ரங்கசாமியை கையமர்த்தி ...
மேலும் கதையை படிக்க...
தம்பீ, என்னாலே முடியலைனுதான் உன்கிட்டே கொடுக்கின்றேன்.இந்த லிஸ்ட்டில் உள்ளபடி பேப்பரை எல்லாம் போடணும், யார்கிட்டேந்தும் எந்த குறையும் வரக்கூடாது. பேப்பர்களுக்கான காசைக் கூட நீ வாங்க கூடாது. மாதாமாதம் நான் போய் வாங்கிக்கொள்கிறேன். என ரவியிடம் பல கண்டிப்புகளைப் போட்டுத்தான் பேப்பர்போடும் ...
மேலும் கதையை படிக்க...
' பிரபல சினிமா தயாரிப்பாளர் சின்னான் குத்திக் கொலை ! ' தினசரிகளை புரட்டிய சினிமா வட்டாரமே அதிர்ந்து. ரொம்பத் தங்கமான ஆள். முதல் படத்திலேயே சூப்பர், டூப்பர் கொடுத்து பணத்தை ஒன்றுக்குப் பத்தாக அள்ளி குறுகிய காலத்திலேயே பெரிய தாயாரிப்பாளராக வளர்ந்தவர். அவருக்கு ...
மேலும் கதையை படிக்க...
மஹாபலி
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
சந்தோஷம் – ஒரு பக்க கதை
வாய்ப்புதான் வாழ்க்கையே!
யாருப்பா அது? – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)