மிக அவசரம்!

 

அவிநாசி ரோடு லட்சுமி மில் சிக்னல். மஞ்சள் விளக்கு மாறி சிவப்பு விளக்கு விழ இரண்டு நொடிப் பொழுது தான் இருக்கும்

வேகமாக வந்த ராஜேஸின் பைக் அதே வேகத்தில் பறந்தது. எல்.ஐ.சி. சிக்னல் வந்து கொண்டே இருந்தது. சிவப்பு விளக்கு மாறிய அதே நொடியில் ராஜேஸ் சிக்னலைக் கடந்து விட்டான். ஆனல் பச்சை விளக்கு வரும் அதே நொடியில் பார்க் பக்கம் இருந்து வேகமாக வந்த கார், ‘சடர்ன் பிரேக்’ போட்டதால், ஒரு விபத்து தவிர்க்கப்பட்டது!

ராஜேஸுக்கு அதை எல்லாம் கவனிக்க நேரம் ஏது?..அவன் அதை கண்டு கொள்ளவே இல்லை! அவனுக்கு என்ன அவசரமோ? தலை போகும் காரியமாக எங்கு அப்படி பறந்து போகிறானோ?

உப்பிலி பாளையம் சந்திப்பு. ராஜேஸின் பைக் சிக்னலை நெருங்கு முன்பே சிவப்பு விளக்கு விழுந்து விட்டது!. பச்சை விளக்கைப் பார்த்து மேம்பாலத்துப் பக்கம் இருந்து வரும் வண்டிகளுக்கு முன்பாகப் போய் விட முடியும் என்ற நம்பிக்கையில் வேகமாக சிக்னலை கடக்க முயற்சி செய்தான்!

ராஜேஸைப் போல, ஒரு மாதேஸ் பாலத்திற்குப் பக்கமிருந்து பச்சை விளக்கு விழும் முன்பே பறந்து வந்தான்!

“ டமார்! ”

போக்குவரத்து ஸ்தம்பித்தது! …….இரண்டு டூவீலர்களையும் அப்புறப் படுத்த சிறிது நேரம் ஆனது!……அதற்குள் 108 வந்து விட்டது! அடிபட்டவர்களை அள்ளிப் போட்டுக் கொண்டு அரசு மருத்துவமனைக்குப் போனது!

அங்கு கூட ‘மிக அவசரம்’ பகுதிக்குத் தான் ராஜேஸைக் கொண்டு போனார்கள்.!

டவுன் ஹால் திரை அரங்கில் அன்று ராஜேஸ் வருகையைப் பற்றி கவலைப்படாமலேயே அவனுடைய அபிமான ஹீரோ வின் திரைப் படம் அன்று ரீலீஸ் ஆனது! 

தொடர்புடைய சிறுகதைகள்
சிவராமன் நியூ ஜெர்ஸிக்குப் போய் கிட்டத்தட்ட முப்பது வருஷங்களாகி விட்டன. இன்று சிவராமனும் அவர் மகன் ஶ்ரீதரும் அமெரிக்காவில் புகழ் பெற்ற டாக்டர்கள். சிவராமனின் மகன் ஶ்ரீதர் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் அமெரிக்காவில் தான்! சிவராமனுக்கு தன் மருமகள் தமிழ்நாட்டுப் பெண்ணாக இருக்க ...
மேலும் கதையை படிக்க...
கோவை திருச்சி ரோட்டில் வேகமாக வந்த ரமேஷ் கூட்டத்தைப் பார்த்து பிரேக் போட்டு, காரை நிறுத்தினான். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூடவா சாலை மறியல்? காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். ரமேஷுக்கு மேற்கொண்டு அந்த சாலை வழியாகப் போவது ...
மேலும் கதையை படிக்க...
“ சித்தப்பா!..வரவர உங்க போக்கே சரியில்லே!...நாங்க சொன்னக் கேட்டிட்டு பேசாம இருக்கனும்!.....உங்க இஷ்டத்திற்கு எதையும் செய்யக் கூடாது!...உங்களுக்கு எங்களை விட்டா யார் கொள்ளி போடுவாங்க?..” என்று அண்ணனின் மூத்த மகன் செல்வ மணி சத்தம் போட்டான். “ சித்தப்பா!...இந்த வயசிலே கோயில், குளம், ...
மேலும் கதையை படிக்க...
இரவு 8-50 டவுனுக்கு வந்த சேகர், பைக்கில் இரவு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தான். சுங்கம் சிக்னலில் சிவப்பு விளக்கு விழுந்து விட்டதால் பைக்கை நிறுத்தினான். பின்னால் வேகமாக வந்த ஒரு கார் பைக் மேல் இடித்து விட்டு நின்றது. சேகர் இறங்கி, “ ஏய்!...உனக்கு கொஞ்சமாவது ...
மேலும் கதையை படிக்க...
காலை ஆறு மணியிலிருந்து பரமசிவத்தின் வீட்டுப் போனும், கைபேசியும் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தன. பரமசிவமும் விடாமல் எடுத்து நன்றி சொல்லிக் கொண்டே இருந்தார். காலை ஒன்பது மணி வரை அவருக்கு அதே வேலையாக இருந்தது. போன் மணி ஓய்ந்தவுடன், கம்பியூட்டரில் உட்கார்ந்து ...
மேலும் கதையை படிக்க...
தமிழ் பெண்!
தடை செய்யும் நேரம்!
கொள்ளி!
கோபம்!
உண்மை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)