மாற்றி யோசி..! – ஒரு பக்க கதை

 

கண்ணனின் மெழுகுவர்த்தி வியாபாரம் படுத்து விட்டது.

வெறும் வெள்ளை மெழுவர்த்திதான் பண்ணுகிறான்.

மார்க்கெட்டில் விதவிதமான கலர்களில்தான் மெழுகுவர்த்தி அதிகம் விற்பனை ஆனது. ஆனால் அதற்கு அதிக செலவு ஆகும்.

தன் நண்பன் ராமுவிடம் புலம்பினான் கண்ணன். ராமு உடனே இருபதாயிரம் மெழுகுவர்த்திகளை ஒரு மைதானத்திற்கு கொண்டு வருமாறு சொன்னான்.

கண்ணனுக்கு ஒரே ஆச்சரியம். எனினும் அத்தனை மெழுகுவர்த்திகளையும் எடுத்துக்கொண்டு மைதானத்திற்கு விரைந்தான்.

சில நிமிடங்களிலிலேயே அத்தனையும் விற்பனை ஆனது.

ராமு சொன்னான். ‘ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவது ஒரு விஷயம் நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

முதலில் லஞ்சம். இப்ப பாலியல் பலாத்காரம். நாளை என்னவோ!

பொது மக்கள் வெள்ளை மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இனி உன் வியாபாரம் ஓகோ என்று பறக்கும்.

ஊடகத்தில் பணி புரியும் ராமுவை நன்றியுடன் பார்த்தான் கண்ணன்.

- மன்ஸ் (23-1-13) 

தொடர்புடைய சிறுகதைகள்
ஐயா என் குழந்தையை எப்படியாவது காப்பாற்றுங்க குழந்தை பேச்சி மூச்சில்லாமல் அமைதியாயிட்டான் கொஞ்சம் என்னாச்சுனு பாருங்க ஐயா மருத்தவரும் குழந்தைக்கு என்னாச்சிமா ? இரவு முழுவதும் அழுத்துக் கொண்டே இருந்தான் நானும் அவனுக்கு பால்லுட்டி அமைதியாக்கினேன் கொஞ்ச நேரத்திலேயே குடித்த பாலை வாந்தியெடுத்து விட்டான் ...
மேலும் கதையை படிக்க...
காலை மணி எட்டரையைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கேன் நெற்றியில் வேர்வை வழிய வழிய. பவர் கட்டுத் தொல்லை வேறு ! அது எப்போது வருமோ ? இன்னும் வீட்டு வேலை செய்ய வரும் ஆயிஷா… வரவில்லை.எத்தனை நேரம் ...
மேலும் கதையை படிக்க...
கனகுசுந்தரம் என்கிற கனகு நோயுற்றிருந்தான். தூக்கலான புற அடையாளங்கள் ஏதும் புலப்படாத ஒருவித நுட்பமான நோய் அது. எனவே கனகு நோயுற்றிருந்த விஷயம் அவனைச் சுற்றியிருந்த உறவுகளுக்கோ நண்பர்களுக்கோ தெரிந்திருக்கவில்லை. இது நோய் என்கிற வரையறைக்குள் வைத்து எண்ணப்பட ஏதுவான உடல் ரீதியான குறைபாடுகள் ...
மேலும் கதையை படிக்க...
“தமிழ் இலக்கியத்தின் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் எழுத்தாளர் இளம்புயல் அவர்களுடன் நடக்கப்போகும் இந்த நேர்காணல் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பார்வையாளர்கள் அனைவரும் எங்கள் வணக்கம். முதலில் அவரைப்பற்றிய ஒரு சிறு விளக்கம். பின்னர் அவருடன் வந்திருக்கும் பார்வையாளர்கள் கலந்துரையாடலாம்” என்று அந்த ...
மேலும் கதையை படிக்க...
தொலைக்காட்சி பார்ப்பதைவிட சேனலை மாத்திக் கொண்டே இருப்பதில் தான் எனக்கு சந்தோஷம் அதிகம். ஏதேனும் ஒரு பாடல் இனிமையாக ஒலிக்கும் பட்சத்தில் நிறுத்திக் கேட்பதுண்டு. அநத் ரிமோட்டுக்கு மட்டும் வாய் இருந்திருந்தால் என் மேல் கிரிமினல் வழக்கு பதிவு செய்திருக்கும். ஆழ்ந்து ...
மேலும் கதையை படிக்க...
ஆன்மீகமும் மருத்துவமும்
நியாயப் படுத்தாத தண்டனைகள்..!
குரல்
விலை
நேரக் கொடுமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)