மதுரையிலிருந்து சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து திருச்சியைத் தாண்டி சென்று கொண்டிருந்தது
இருள் சூழ…இரவு உணவிற்காக ஒரு ரோட்டோர ஓட்டலின் முன்பு பேருந்து நிறுத்தப்ப்பட்டது
ஓட்டவில் இலவசமாக வழங்கப்பட்ட கிடாக்கறி பிரியாணியையும், நாட்டுக் கோழி புரோட்டாவையும் பீஃப் வறுவலையும் ஒரு வெட்டு வெட்டிய பேருந்தின் ஓட்டுநர் உலகநாதன் பேருந்தில் தனது சீட்டில் வந்து அமர்ந்தார்.
பயணிகள் அனைவரும் சாப்பாட்டை முடித்துக் கொண்டு பேருந்துக்குள் வர, பேருந்தின் இன்ஜினை ஸ்டார்ட் செய்தபடி ஓட்டுநர் உலகநாதன், கண்டக்டரிடம், ‘மாரியப்பா, வண்டியை எடுக்கப் போறேன். பஸ்ஸூக்கு அடியிலே நாய் எதுவும் படுத்திருக்கான்னு பாரு. இருந்தா விரட்டி விடு. பாவம் அடிகிடி பட்டுடப் போவுது’ என்றார் பெரிதாக ஏப்பம் விட்டபடி.
அவரது ஏப்பத்தில், கிடா, பீப், கோழி அயிட்டங்களின் வாசனை தூக்கலாக இருந்தது.
- ஜி.ராதா (11-1-12)
தொடர்புடைய சிறுகதைகள்
சினுவா அச்சிபி
தமிழில்: கே. முரளிதரன்
“மேடம், இந்தப் பக்கம் வாருங்கள்” என்றாள் அந்த சூப்பர் மார்க்கெட்டில் வரிசையாக இருந்த கேஷ் கவுண்டர்களில் ஒன்றைக் கவனித்துக்கொண்டிருந்த துறுதுறுப்பான அந்தப் பெண். திருமதி எமெனிகே தனது ட்ராலியை அந்தப் பெண்ணின் பக்கம் லேசாகத் திருப்பினாள்.
“மேடம், நீங்கள் ...
மேலும் கதையை படிக்க...
(நாம் இரு நூற்றாண்டுகள் பின்னோக்கி கி.பி.1774 க்கு போவோம்)
லண்டன் மாநகரில் பிரபல மருத்துவ மனை ஒன்றில் !.
"கிளைவ்" நீங்கள் இப்பொழுது குணமாகிவிட்டீர்கள், உங்கள் மனதை போட்டு அலட்டிக்கொள்ளாதீர்கள், தயவு செய்து அமைதியாக இருங்கள், நீங்கள் அமைதியாகிவிட்டால் இன்றே கூட உங்களை வீட்டுக்கு ...
மேலும் கதையை படிக்க...
மாநில அரசாங்கத்தின் அந்த வாரியத்தில் அவனுக்கு இளநிலை எழுத்தர் வேலைக்கான ஆர்டர் வந்ததும் அவன் மிகவும் மகிழ்ந்து போனான். நிரந்தரமான வேலை. மேற் கொண்டு படித்து அலுவலகத் தேர்வுகள் எழுதினால் மேல்நிலை எழுத்தர், கண்காணிப்பாளர், மேலாளர் என்ற நிலைக்கு ...
மேலும் கதையை படிக்க...
""ஏப்புள்ள நேசம்...நேசம்...எங்க நிக்க, சீக்கிரம் வாயேன்'' எனப் பொண்டாட்டியை அவசர அவசரமாக கூப்பிட்டுக் கொண்டிருந்தார் முத்து.
""எதுக்கியா இப்படி கத்துதிய, தெருவே வீட்டுல என்னமோ நடக்குதுன்னு கூடிறாம, நானு மாட்டுச் சாவடியில நிக்கது ஒங்க கண்ணுக்கு தெரியலியாங்கும்'' என மாட்டுச் சாணியை பனைமட்டையால் ...
மேலும் கதையை படிக்க...
காலில் இருந்து உச்சந்தலை வரை எலும்பின் அதிர்வை உணர்ந்திருக்கிறீர்களா? டேவிட் உணர்ந்திருக்கிறான். ஒரு நொடி அல்லது நிமிடம் அல்ல. நேற்று இரவு முதல்… உடலெலும்பு அனைத்தும் அதிர்ந்துகொண்டேயிருந்தன.
கியரை மாற்றும் இடது கை மணிக்கட்டில் வலி பின்னியெடுத்தது. டேவிட்டுக்கு இருப்பு கொள்ளவில்லை. காலை ...
மேலும் கதையை படிக்க...
பாவத்தின் சம்பளம் மரணம்(!?)