Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

பேரம்!

 

சொகுசுக்காரில் வந்திறங்கியவள் நக்கலாய்ப் பார்த்தாள்.

வித்தியா புன்னகைத்தபடி வரவேற்றாள்.

‘எவ்வளவு?’ ஆங்கிலத்திலேயே கேட்டாள்.

வித்தியாவும் சொன்னாள்.’120 பவுண்ட்’

விலை அதிகம் என்றாள்.

‘இல்லை..நீங்கள் 200க்குள்ள வேணும் எண்டனீங்கள். அதுதான்…’

வித்தியாவை மேலும் கீழும் பார்த்துவிட்டு சொன்னாள்.

‘இது 10 ரூபாயும் பெறாது’

வித்தியாவிற்கு கொஞ்சமாக ஏறியது.காட்டிக்கொள்ளாமல்’ செய் கூலி இல்லாமல், பொருளுக்கு மட்டுமே சொன்னனான்’.

‘பகிடி விடாதையும்…யாவாரிகள் உப்பிடித்தான் கதைப்பினம்..கொள்ளை லாபம் வைக்காமல் இருக்கமாட்டினம்’

கோபத்தை அடக்கிக்கொண்டு’ என்ன சொல்ல வாறியள்?’ கேட்டாள் வித்தியா.

‘எப்படியோ வாங்கின சாமான்கள் முழுக்க பாவிச்சிருக்கமாட்டியள். மிச்சத்தை இன்னொன்று செய்தும் வித்துப்போடுவியள்.. பிறகேன் அறா விலை சொல்லுறியள்’. வந்தவள்தான் கேட்டாள்.

அவளின் காரை பார்த்தாள். விலையுயர்ந்த கார். அங்கும் பேரம் பேசியிருப்பாளோ?

வித்தியா பல்கலைக் கழகக் கல்வியை முடித்தபின்பு ஓய்வான பொழுதில் கேக் செய்து விற்றுவந்தாள். அதில் லாபமும் வந்தது. ஆனாலும் லாபம் கருதிச் செய்யக்கூடாது என்பதில் முடிவாய் இருந்தாள். அதனால் சமயங்கள் இலவசமாகவும் கொடுத்துவந்தாள். இப்போது பணக்காரரின் ஓடர் கிடைத்திருக்கிறது. லாபம் இன்றிச் செய்து கொடுத்தால் நிறைய ஓடர் கிடைக்கும் என்றும் கணக்குப் போட்டாள். அது தப்பாய்ப் போயிற்றே என்றும் வருந்தினாள்.

சிலர் இப்படி பேரம் பேசுவார்கள் தான். இப்படி படாடோபமாய் வந்து பந்தா காட்டமாட்டார்கள். ஓடர் செய்வதற்கு முன்பே எவ்வளவு ஆகும் என்பாள். முடிந்த பிறகும் வட்ஸப்பின் ஊடாகவும் படத்தை எடுத்தும் அனுப்புவாள். பேரம் பேசுவார்கள். அல்லது ஓடர் வேண்டாம் என்பார்கள். ஏமாற்றமாய் இருக்கும்.. கடைகளில் என்றால் விலை நிர்ணயம் செய்திருப்பதால் பேரம் பேசுவது கௌரவப்பிரச்சினை என்று விருப்பமில்லை என மற்றக்கடை நோக்கி நகர்ந்துவிடுவார்கள். ஆனால் வித்தியா..?

தனித்தே சமாளிக்கவேண்டும்.

கேட்டாள்.

‘கடைசியாய் என்ன விலை சொல்லுறியள்?.

’40 தரலாம்..கொஞ்சம் டிசைனையும் மாத்தவேண்டும்… இரண்டு முந்திரி போட்டிருக்கிறியள். ஒற்றைச் சிப்பியும் மேல வச்சிருக்கிறியள். அதுக்கும் காசு போட்டனீங்களே’

வித்தியாவின் கோபம் அதிகரித்தது..

‘கடையில என்டா உப்பிடிக்கேப்பியளே.. நான் உங்கட மகளின்ர வயசும் இருப்பனோ தெரியாது… படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கும் மட்டும் இதை செய்யுறன்.. வாற போற எல்லாரும் இரக்கமேயில்லாம பேரம் பேசினா நாங்கள் வாழ என்ன செய்யுறது? நீங்க என்ன விட அதிகம்படிச்சிருக்கலாம்.. பணக்காரராயும் இருந்துட்டுப்போங்கோ.. கவலையில்லை.. மற்றவேன்ர உழைப்புக்கு மரியாதை தாங்கோ….’

‘இதை யாரும் வாங்க்காட்டி குப்பையிலதானே போடப்போறியள்.. அதை நான் கேட்ட விலைக்கே தரலாம்தானே’

கோபத்தில் கொதித்தாள் வித்தியா..

‘போடிப்..’ கேக்கைத் தட்டிவிட்டாள். கேக் சிதறி நிலத்தில் விழுந்தது.ஓவென்று அழவேண்டும் போலிருந்தது. வந்தவள் வெளியேபோய் காரை இயக்கினாள்.

வித்தியா நிலத்திலேயே தொப்பென்று குந்தினாள்.

‘மனிதர்கள் வாழ விடமாட்டார்கள்.’

கண்ணீரில் கரைந்தாள் வித்தியா. 

தொடர்புடைய சிறுகதைகள்
அவசரமாக நிலக்கீழ் தொடரூந்திலிருந்து இறங்கி படைகளில் ஏறினேன். 'பின்னேரம் வேலைக்கும் போகவேணும்' 'அதுக்குள்ள எத்தனை அலைபேசி வந்திருக்குமோ தெரியாது'. சனக்கூட்டம் அதிகமாக இருந்தது. எல்லோரின் முகத்திலும் அதே அவசரம்... சிலர் கைகளில் அன்றைய தினசரி...புத்தகம்,சிறிய அல்லது பெரிய கைப்பை..அதை விட அலைபேசியை நோண்டியபடி வருவதும் போவதுமாய் இருந்தனர். இரண்டு மூன்று ...
மேலும் கதையை படிக்க...
'அப்பா!' கூப்பிட்ட தொனி கோபமா அல்லது அப்பாவின் இயலாமை மீதான கழிவிரக்கமா? மௌனமாக திரும்பினேன். விழிகளை அகலத்திறந்து அவளைப் பார்க்கையில்.. என் கேள்வியின் அர்த்தம் பார்வையில் தெரிந்திருக்கவேண்டும். சொன்னாள். 'ஏனப்பா..உங்களைப் போல நானும் எழுத வேண்டும்..என்னை என் பாட்டில் விட்டுவிடுங்களேன்' அதற்கு..? அருகில் வந்து அமர்ந்தேன்.அவள் ஏதோ சொல்ல நினைக்கிறாள். சொல்லட்டுமே. அவளின் ...
மேலும் கதையை படிக்க...
தூக்கம் வராமல் எழுந்து உட்கார்ந்தான். சுற்றும் முற்றும் விழிகளை சுழல விட்டான். மங்கிய இருளில் ஆங்காங்கே சிலர் படுத்திருந்தனர். சிறு துவாரத்தின் வழி வருகின்ற மின்விளக்கின் வெளிச்சத்தில் முகங்களை சரியாக தெரியவில்லை. இவன் நிமலன்.... அவன் பார்த்திபன்.... அந்த மூலையில் கிடப்பவன் திலகன். வந்த ...
மேலும் கதையை படிக்க...
சும்மா இருந்திருக்கலாம்.இன்றெனப்ப்பார்த்து மனைவி புத்தகங்களைக் கலைத்து மீள அடுக்கத்தொடங்கினாள்.எதிர்பார்க்கவில்லை.காலையிலேயே தேநீருடன் வருபவள் இன்று காணவில்லையேயென இறங்கிவந்தேன்.கடைசிப்படியில் ஒரியோ படுத்திருந்தது.ஒரியோ எங்களது செல்லப்பூனை.வந்து இரண்டுவருடமாகிறது.பிள்ளைகளுக்கு பரீட்சையில் சித்தியடைந்தால் வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தேன்.இப்போது பிள்ளைகளுள் ஒன்றாகிவிட்டது.நாய்க்குட்டி ஒன்றிருந்தால் நன்றாக இருக்குமே என்கிறாள் கடைசிப்பெண்.முன்பென்றால் துணிந்து ...
மேலும் கதையை படிக்க...
அன்று திங்கட்கிழமை. இரண்டுமணிக்குபிறகு போனால் முதலாளி நிற்பார்..போய் கேட்கலாம்... நீ எழுத்தாளனெண்டா கொம்பு முளைச்சிருக்கோ? விற்கக் கொடுத்த புத்தகத்தைப் பற்றிக் கேட்கப்போய்..கடைசியில கடைக்காறன் இப்படிக்கேட்டுவிட்டான். செத்துவிடலாம் போலிருந்தது. கொஞ்சமாய் சில சமயம் கனக்க கர்வம் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் இருக்கும். எம்மை அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக கட்டி எழுப்பப்பட்ட பிம்பத்தை யாரோ ...
மேலும் கதையை படிக்க...
இருள் சூரியனை இழுத்து தன்னுள் அமுக்கிக் கொண்டது. அப்பா சொல்லி வைத்தது போல சின்னமணியும் தனது சிறிய லொறியுடன் வந்திருந்தான். ‘ஏன் வீட்டுக்காரர் வரேல்லையே?’ அப்பா கேட்டார். ‘இல்லை அண்ணை நாளை வீரபத்திரர் கோயில் கொடியேறுது, அதான்..’ சின்னமணி இழுத்தான். அப்பா வீட்டுக்குள் வந்து பார்த்தார். ‘என்ன இன்னும் ...
மேலும் கதையை படிக்க...
அப்பா என்றில்லை..யாவர்க்கும் பொதுவான குணம்தான்.அப்பா என்பதினால் அதிகமாய் கவனத்தில் கொள்கிறோம். அவ்வளவே. காலை, மாலை, இரவு என மாறுகின்ற பொழுதுகளுடன் நாமும் நகர்ந்துகொண்டிருக்கிறோம். தன்னம்பிக்கை மிக்கவர் அப்பா.வாழ்வின் சகல அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து தன்னைத்தானே வடிவமைத்துக் கொண்டவர். ஒருநாள் மாலைநேரம் இரத்தம் சொட்டச் சொட்ட பரிதவித்துவந்தது ...
மேலும் கதையை படிக்க...
அப்பாவின் முகத்தில் எப்படி முழிப்பது? பயத்தினால் கண்கள் இருண்டது. 'இண்டைக்கும் அடிவிழப்போகுது' மாமி முந்தி அடிவிழாமல் தடுத்தவ.அவவும் உயிரோட இல்லை.அம்மா பாவம்..அப்பாவின் கோபத்திற்கு முன்னால் அவளால் ஒன்றும் செய்யமுடியாது. அப்பாவும் கோபம் வந்தால் சப்பாத்துக் காலால்,தன் இடுப்பு பெல்ட்டைக் கழற்றி அதுவும் இல்லாட்டி கிடைக்கிற பொருளால் ஓங்கி ...
மேலும் கதையை படிக்க...
முற்றத்து நாவல் மரத்தடியில் தன் பழைய ரலி சைக்கிளை சாத்தியபடி உள்ளே யாராவது வருகிறார்களா என்று பார்த்தபடி குரல்கொடுக்கிறார்... 'தம்பி' குரலில் குழையும் கருணை,அன்பு,வாஞ்சை ... வெயில் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழுந்துகொண்டிருந்தது. அப்பா உள்ளேயிருந்து வந்தபடி, 'வாரும்..வாரும்..'அழைத்தார். கையைக் குலுக்கியபடி உள்ளே வந்து உடகார்ந்தார் ஹாசிம் நானா. அம்மா புன்னகைத்தபடி தேநீருடன் ...
மேலும் கதையை படிக்க...
அகதி
போலி வாழ்க்கை
நிலவு முளைத்தது
என்னைப் பேசச் சொன்னால்…
உறவே! உயிரே!!
(ஆ)சாமி வரம்
அப்பாவின் முகம் பார்க்கும் கண்ணாடி
சலனங்களும் கனவுகளும்
நட்பு என்பதே தெய்வமானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)