“பேசுவது தப்பா குருவே” என்று வேகமாய் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“ஏன் கேட்கிறாய்? உனக்கு என்ன பிரச்சனை?” என்றார் குரு.
“நான் ரொம்பப் பேசுகிறேன் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். பேசுவது தப்பா?”
“பேசுவது தப்பல்ல, ஆனால் அதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும்” என்று சொன்ன குரு, அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
“ஒரு குழாய் ரிப்பேர்காரன் இருந்தான். வேலையில் கெட்டிக்காரன். நாணயமானவன். ஒருநாள் அவனுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அவன் வழக்கமான வாடிக்கையாளர்தான் பேசினார். அவர் வீட்டு குழாயில் ஏதோ பிரச்சனை, உடனே சரி செய்ய வேண்டும் என்றார். ஆனால் அவரது வீட்டில் யாருமில்லை. ‘நீயே கதவைத் திறந்துக் கொண்டு போ, வீட்டு சாவி முன்பக்க ரோஜா தொட்டிக்கு கீழே இருக்கிறது’ என்றார். அவனுக்குத் தயக்கம். காரணம் அவர் வீட்டில் ஒரு பெரிய சைஸ் அல்சேஷன் நாய் இருப்பதை பார்த்திருக்கிறான். ‘சார், உங்க வீட்டுல ஒரு நாய் இருக்குமே’ என்று சந்தேகத்தை கிளப்பினான். அதற்கு அவர், ‘அது ஒண்ணும் பண்ணாது. அது பாட்டுக்கு வீட்டுக்குள்ள இருக்கும். ஆனா ஒரு விஷயம் வீட்டுல ஒரு கிளி இருக்கு. அது பேசும், ஆனா பேச்சுக் கொடுத்துராதே. குழாயை மட்டும் ரிப்பேர் பண்ணிட்டு கிளம்பிடு’ என்றார்.
அவனுக்கு தயக்கம்தான், இருந்தாலும் வாடிக்கையாளர் வீடே என்று அங்கு போனான். சொன்னது போலவே பூந்தொட்டிக்கு கீழ் சாவி இருந்தது. வீட்டுக்குள் சென்றதும் அல்சேஷன் அவனை முறைத்துப் பார்த்தது. ஆனால் ஒன்று செய்யவில்லை. இவன் ஒழுகிக் கொண்டிருந்த குழாயை சரி செய்யத் துவங்கினான். எல்லாம் நன்றாகதான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் கிளியின் தொல்லைதான் தாங்க முடியவில்லை. அவனை கிண்டலடித்து பேசியது. விதவிதமாய் திட்டியது. அவனால் தாங்க முடியவில்லை. கிளம்பும் போது பார்த்துக் கொள்வோம் என்று அமைதி காத்தான். வேலை முடிந்தது. அப்போதும் கிளி நிறுத்தவில்லை. இவனுக்கு கோபம் தலைக்கேறியது. வாடிக்கையாளர் சொன்ன அறிவுரையையும் மீறி, ‘அட முட்டாள் கிளியே, அறிவில்லையா, இப்படி தொந்திரவு செய்றியே’ என்று கிளியை நோக்கி கத்தினான்.
அதுவரை அவனிடம் பேசிக் கொண்டிருந்த கிளி, சட்டென்று அல்சேஷன் பக்கம் திரும்பி, ‘ டைகர், அவனை விடாதே கடி’ என்றது. உடனே அல்சேஷனும் ரிப்பேர்க்காரனை நோக்கிப் பாய்ந்து கடித்தது. அதனிடமிருந்து தப்பித்து போவதற்கு அவன் பட்ட பாடு அவனுக்குதான் தெரியும்” என்று இந்த வேடிக்கை கதையை சொன்னதும் தேவையில்லாமல் பேசுவதால் வந்த பிரச்சனையை புரிந்துக் கொண்டான்.
அப்போது குரு அவனுக்கு சொன்ன Winமொழி: பேசக் கூடாத இடத்தில் பேசுவது அழிவைத் தரும்
- வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)
தொடர்புடைய சிறுகதைகள்
“எனக்கு ஆபீஸ்ல ரொம்ப பிரச்னை. எல்லா வேலையும் என் தலைலதான் விழுது. ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“ஏன், மத்தவங்க யாரும் உங்க ஆபீஸ்ல இல்லையா?”
“இருக்காங்க குரு. ஆனா அவங்க யாரும் என்னளவு வேலை செய்ய மாட்டாங்க. ...
மேலும் கதையை படிக்க...
"குருவே, என் பாச மகள் என் பேச்சை கேட்க மறுக்கிறாள். அவள் மீது அத்தனை அன்பாய் இருக்கிறேன் ஆனால் அவள் விலகிப் போகிறாள்” என்று வருத்ததோடு சொன்னான் ஒருவன்.
“அப்படியா, என்னாச்சு” என்று அமைதியாக வினவினார் குரு.
“என்னால் அவளைப் பிரி்ந்து சிறிது நேரம் ...
மேலும் கதையை படிக்க...
“குருவே எனக்கு எந்த வேலையும் சரிப்பட்டு வர மாட்டேன்கிறது. எதை ஆரம்பித்தாலும் அது நஷ்டத்தில் முடிகிறது” என்று கவலையோடு சொன்னவனிடம் ஆறுதலாய் பேசத் துவங்கினார் குரு.
“ஏன், உன் வேலைகளில் என்ன பிரச்சனை வருது?” என்ற குருவின் கேள்விக்கு வந்தவன் செய்த தொழில்களை ...
மேலும் கதையை படிக்க...
”குருவே வணக்கம். எனக்கு ஒரு பிரச்சனை. நான் எது செய்தாலும் மற்றவர்கள் கிண்டலடிக்கிறார்கள்” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“அதனாலென்ன? நீ அவர்களைப் பொருட்படுத்தாமல் காரியங்களை செய்ய வேண்டியதுதானே” என்றார் குரு.
“என்னால் அப்படி இருக்க முடியவில்லை குருவே” என்று சொன்னவனுக்கு குரு ...
மேலும் கதையை படிக்க...
தன் முன் வந்து நின்றவனைப் பார்த்தார் குரு. “வாழ்க்கையே வெறுப்பாய் இருக்கிறது, குரு” “ஏன்? என்னாச்சு? நல்லாதானே இருந்த? சாஃப்ட்வேர் கம்பெனில நல்ல வேலை, நிறைய சம்பளம், அமெரிக்கா, இங்கிலாந்துனு பறந்துட்டு இருந்தியே!”
“எல்லாம் நல்லா போறா மாதிரிதான் இருந்துச்சு குரு. ஆனா ...
மேலும் கதையை படிக்க...
குருவே, என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை.’’ என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“வருத்தப்படாதே, என்ன பிரச்னை?’’ என்று கேட்டார் குரு.
”என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை’’ என்றான் வந்தவன்.
வந்தவனின் பிரச்னை ...
மேலும் கதையை படிக்க...
”குருவே, எனக்கு உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரிடமும் பிரச்சனைகள் வந்துக் கொண்டே இருக்கின்றன” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“அப்படியா, என்ன பிரச்சனைகள் வருகின்றன?”
“அவர்கள் யாருமே உண்மையாக இருக்கவில்லை. எல்லோரிடமும் எதாவது கெட்ட குணம் இருக்கு. என்னால யார் கிட்டயுமே சரியா ...
மேலும் கதையை படிக்க...
குருவே, எனக்கு எதுவுமே சரிப்பட மாட்டேன்கிறது என்று சொன்னவனை பார்த்தார் குரு. என்ன பிரச்னை? என்றார். எல்லாமே எனக்கு எதிராக இருக்கிறது. என்னால் சமாளிக்க சிரமமாக இருக்கிறது என்றான் வந்தவன்.
குரு சற்று சிந்தித்தார். அவனின் பிரச்னை அவருக்கு புரிந்ததது. அவனுக்கு ஒரு ...
மேலும் கதையை படிக்க...
”குருவே, என்னை எல்லோரும் ஏமாளி என்கிறார்கள்” என்று வருத்தத்தோடு கூறியவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“என்ன பிரச்சனை?”
“என்னை எல்லோரும் எளிதில் ஏமாற்றிவிடுகிறார்கள். நான் ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் இளைஞன்.
அவனின் பிரச்சனை குருவுக்கு புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை ...
மேலும் கதையை படிக்க...
“குருவே பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்று தெரியவில்லை’ என்ற கவலையுடன் ஒருவன் குரு முன் வந்து நின்றான்.
“என்னாச்சு?’
“பல பிரச்னைகளுக்குத் தீர்வு தேட இயலவில்லை. என் செய்வதென்று புரியவில்லை’ என்று அவன் சொன்னதும் அவனுடைய பிரச்னைகள் என்னவென்று குருவுக்குத் தெரிந்தது. அவனுக்கு ஒரு ...
மேலும் கதையை படிக்க...
பகிர்ந்து செய்தால் பளு குறையும்!
இலக்கு மாறினால் வெற்றி கிடைக்காது
அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி
புத்தியை பயன்படுத்தினால்…
சிந்திக்காமல் செயலில் இறங்கினால்…
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது!