பெருசுகள்….

 

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்தப் பேருந்து நிலைத்தில் பதினாறாம் எண் பேருந்து வந்து நிற்பதற்குள் கூட்டம் வெள்ளமென திரண்டு ஏறினர். இறங்க வேண்டியவர்கள் இறங்குவதற்குள் ஏறுபவர்கள் இருக்கையில் இடம்பிடிக்க தன் கைகளில் இருந்தவற்றை சன்னல் வழியே இருக்கை நோக்கி வீசினர். ஒருவழியாக இறங்குபவர்கள் போக ஏறியவர்கள் இருக்கையில் அமர்ந்ததும் பலர் இடைவெளியிலும் நின்றனர்.

இருக்கையில் அமர்ந்தவர்கள் யாரையும் காணாதது போல் சன்னல் வழியே எதையோ பார்த்துக்கொண்டு இருந்தனர். தெரிந்தவர்கள் நின்றால் உட்கார சொல்லனுமே….

பேருந்து புறப்பட தயாரானது. நடத்துனர் பயணச்சீட்டு வழங்கிக்கொண்டு இருந்தார். சன்னலோர சீமான்களையும் பயணச்சீட்டு வாங்க வேண்டிக்கொண்டார்.

நெரிசலில் உட்கார வழியின்றி தவித்துக்கொண்டிருந்த முதியவரை பலரும் பார்க்காதது போலிருந்தனர். முதியோருக்கான இருக்கையையும் இளம பெண்கள் இருவர் ஆக்கிரமித்துக் கொண்டனர். இருக்கையில் வயது ஐம்பதுக்கும் குறைவானவர்கள்தான் அமர்ந்து இருந்தனர்.

” ஏய்யா….பெரிசு…. அடுத்த பஸ்ல வரக் கூடாதா….” நெரிசலில் சலித்துக் கொண்டார் நடத்துனர்.

” கெழடுக வீட்ல கெடந்தாதானே….. ” இளசுகளின் பேச்சு அவரின் காதுகளை பரிசோதித்தன.

நிறுத்தங்கள் நான்கு கடந்தன.

” பெரியவரே… அவுங்கள எந்திக்க சொல்லிட்டு உட்கார வேண்டியதுதானே….” பயணச்சீட்டு பரிசோதகரின் பேச்சு ஆறுதலாக இருந்தபோதும் பயனில்லை.

” விடுங்க சாமி…. சாகப்போற கட்டைக்கு உட்கார்ந்தா என்ன…. நின்னா என்ன….. இளசுக உட்கார்ந்து வரட்டுமே….” சொல்லிக் கொண்டே அடுத்த நிறுத்தத்தில் இறங்கினார் அந்த எழுபது வயது இளைஞர்.

அந்த எழுபது வயது இளைஞரின் மன வலிமையும் பெருந்தன்மையும் அப்போதுதான் உணர்ந்தனர்…… இருக்கையில் அமர்ந்திருந்த ஐம்பதைக் கடக்காத முதுகு வளைந்த பெருசுகள்….. 

தொடர்புடைய சிறுகதைகள்
கருவேலாங்காட்டு ஒத்தயடிப் பாதையில் பசுவும் கன்றுக்குட்டியும் போவது போல தன் ஐந்துவயது குழந்தை மீனாவைக் கூட்டிக்கொண்டு முனுமுனுத்துக் கொண்டே பேருந்து நிறுத்தத்துக்கு வந்தாள் செல்லம்மாள். "எவ்வளவு தான் இருந்தாலும் பொறந்த மண்ணுக்கு வந்த மகள் எல்லாம் சந்தோசமா திரும்புவாங்கனு பேரு, ...
மேலும் கதையை படிக்க...
கல்யாணத்துக்குப் பிறகு படிக்க வைப்பதாகச் சொல்லித்தான் கமலாவை திருமணம் செய்து கொண்டான் சுந்தர். இருவருக்கும் ஏழு ஆண்டுகள் வித்தியாசம். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுந்தருக்கு போதுமான வருமானம் கிடைத்தது. கமலா ஆசைப்படி தொழிற்கல்வி டிப்ளமோ படிப்பில் சேர்த்துவிட்டான். வயது இருபதை கடந்ய அவளுக்கு படிக்க ...
மேலும் கதையை படிக்க...
''மனுசனுக்கு வேதனையப் பாரு.. யாருக்கும் தொல்லையா இல்ல. வம்பு தும்புக்கு போகாத ஆளு, அவனுக்கா இப்படி....?" ''தான் உண்டுனு ஏதாவது எழுதிக்கிட்டுதான் இருப்பான். வழியக்க பேசாட்டியும் மத்தவங்க பேச்சுக்கு மரியாதக் கொடுப்பான்...'' ''பாவம்யா... பொண்ணுக்கு கல்யாணத்த முடிச்சுட்டு பையனுக்கும் அடுத்த முகூர்த்தத்துலேயே முடிச்சர்றதா எங்கிட்டயே ...
மேலும் கதையை படிக்க...
காலை நாலரை மணிக்கு தொழுகையில் ஈடுபட்டுவிட்டு தேர்வுக்கு படித்துக் கொண்டு இருந்தான். பிஸ்மில்லா பானு கூப்பிடுவது கூட கேட்கவில்லை. படிப்பதிலேயே ஆர்வமாக இருந்தான் அக்கிம். நோய்வாய்ப்பட்டு நார்க்கட்டிலில் படுத்த படுக்கையாகவே இருந்தாள் பிஸ்மில்லா பானு. இருமல்,சளி பலத்த சத்தத்துடன் காரித்து ஒரு மண் ...
மேலும் கதையை படிக்க...
மரத்திலிருந்த இலைகள் சருகுசருகாய் காய்ந்து விழுந்துகொண்டிருந்தன. பலநாள் உழைத்த களைப்பால் நாய்கள் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு எலப்பு வாங்கின. வாகனங்கள் '' டர் டர்'' என்ற சத்தத்துடன் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தன. இரைச்சலுக்கு மத்தியில் பதினெட்டாம் நம்பர் பேருந்து அண்ணாநகர் பஸ் ...
மேலும் கதையை படிக்க...
மாற்றம்
வார்த்தைகளால் ஒரு கோடு
ரெண்டாவது ரகம்
உச்சிப் பொழுதில் அவள்
நஞ்சு போன பிஞ்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)