பெத்தாபுர மலர் – அறிமுகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 7,814 
 

மூஷிராபாத் க்ராசிங்கில் புது அடுக்குமாடிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம்.

ஒரு படா கம்பெனியின் உள்ளூர் விற்பனை அதிகாரிகளான நானும் வத்சனும் தற்காலிக ரெட்டை நகர வாசிகள். நேன்ஸ், வெங்கட் இருவரும் மெடிகல் அட்வைசர்ஸ் என்பதால் மாதத்தில் பத்து நாள் தங்குவார்கள். எங்களுடன் தினமும் வீட்டைக் கலக்கும் உள்ளூர் வாசிகளான உமேஷ், விஜய், ரங்கன் மூன்று பேர். எப்போதாவது எங்களுடன் சேர்ந்து கொள்ளும் எங்கள் மேலதிகாரிகள் இருவர்.

தினமும் அரை நாள் மார்கெட் வேலை. மதியம் நாலு மணிக்கு மேல் எங்கள் வீடு தான் எல்லாருக்கும் பார்ட்டி மையம்.

எதிரே தியேடரில் க்ருஷ்ணா ராதா மோகன்பாபு ஸ்ரீதேவி விஜயசாந்தி ஜெயமாலினி என்று ஏதோவொரு ஜில் படம் ஓடிக் கொண்டிருக்கும். சில இரவுக்காட்சிகளில் அத்தகாரு ரகஸ்ய வியவகாரம் என்று இடைச்செருகுவதாக சங்கேத போன் செய்வார்கள். நேன்ஸ் துடிப்பான். நிதானமாகப் போவோம். டிகெட் வேண்டியதில்லை. பக்கத்தில் நிர்மலா ஹோட்டலின் சிக்கன் மற்றும் ஆம்லெட் மணம் மாடியேறி வந்து வாட்டும். வாட்ச்மேனிடம் சொல்லியனுப்பினால் கேரியர் கட்டி வரும். வீட்டில் சிகரெட், பீர், விஸ்கி தவிர சிலநேரம் உச்சப்போதைக்குப் பொடி செடி கொடிவகைகளும் இருக்கும். மூணு சீட்டு எங்கள் ஆஸ்தான விளையாட்டு. ஆயிரக்கணக்கில் பணம் புழங்கும். நலகுந்டா தாரனாகா போன்ற இடங்களிலிருந்துத் தரவழைத்து, சில சமயம் மெஹ்பூப் கி மெகந்தி பாணி உல்லாசமும் நடைபெறும். எங்கள் சட்டைப் பைகளில் எப்பொழுதும் ஐநூறு ரூபாயாவது சில்லறையாக இருக்கும். உலகத்தைக் காலால் உதைத்துக் கைக்குள் அடக்கிய நாட்கள்.

திடீரென்று ஒரு நாள் எங்கள் வட்டத்தில் சேர்ந்தான் முரளி. முதல் வேலை. முதல் நாள். எங்களிடம் பயிற்சிக்கு அனுப்பிவிட்டார்கள். அவனை எங்கள் வீட்டில் பத்து வாரம் தங்க வைத்து எல்லாம் சொல்லிக் கொடுக்கும்படி உத்தரவிட்டுப் போனார்கள் சூபர்வைசர்கள்.

பால் வடியும் முகம் என்பார்களே, அதை அதற்கு முன் நான் பார்த்ததேயில்லை. முரளி தான் முதல் அனுபவம். சிகரெட் கிடையாது. பீர் விஸ்கி பார்க்கவும் மாட்டான். மாமிசம் உவ்வே. பெண்கள் என்றால் தலைகுனிந்துப் பேசுவான். “என்ன இது வரிக்கு வரி ம போட்டு பேசுறீங்க?” என்பான் அதிர்ச்சியுடன். இரண்டு வேளை குளித்து பூஜை செய்யும் ரகம். விளையாட்டாக வீட்டில் சாமிப்படம் மாட்டக் கூடாதென்றதும் அவனுக்கு அழுகை வந்துவிட்டது. இவனை எப்படி எங்கள் வட்டத்தில் சேர்ப்பது? ‘வேறு கோச்சிங் க்ரூப் அனுப்புங்கள்’ என்று சூபர்வைசர்களிடம் சொன்னபோது, தீர்மானமாக மறுத்துவிட்டார்கள். உத்தரவை மீறுவதெல்லாம் நடக்காத செயல். புலம்பிக்கொண்டே முரளிக்கு இடம் கொடுத்தோம்.

விஜய் தொடங்கி வைத்தான். “முரளி, பொண்ணைத் தொட்டிருக்கியா?”

“சீ..”

“உன்னையாவது எப்பனா தொட்டிருக்கியா?”

“சீ..”

“blue film? சீ..னு சொன்னே, மவனே பேத்துருவேன்..”

முரளி எதுவும் சொல்லவில்லை.

உமேஷ் வீட்டில் 16mm புரொஜெக்டர் வைத்திருந்தான். ரெட்டைபாதின் பெரிய ஹோட்டல்கள் அவர்கள் குடும்பத்துக்குச் சொந்தம். செல்வந்தன். அவன் வீட்டில் நீலப்படம் காட்டினோம். மாமிசம், மது எதையும் தொட மறுத்த முரளி, படத்தை மட்டும் எங்கள் தொந்தரவின் பெயரில் பார்த்தான். நாங்கள் இருவரும் அவனுக்கு ஒருவகையில் “மேலதிகாரி” என்பதால், மிரட்டி உட்கார வைத்தோம். விஜய் அவனுக்குத் தெரிந்த உஸ்மானியா கல்லூரிப் பெண்கள் இருவரை அழைத்து வந்திருந்தான். முரளி வெட்கப்படுவதைப் பார்த்து, உள்ளாடை எதுவும் அணியாமல் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள். “இதர் பைடோ.. நஸ்தீக் மே.. அரே.. கய்கோ..” என்று அவனைத் தொட்டார்கள். முரளி அதிர்ந்து விலகினான்.

“ஏண்டா, உனக்கு இருபது வயசாவுது.. இது கூடவா தெரியாது? நாகரீகமே இல்லையே?” என்று வத்சன் மிகக் கோபமாக இரைந்தான். வத்சனுக்குக் கோபம் வந்தால் வையம் தாங்காது. “உன்னை மாதிரி ஆளுங்களால தான் உலகம் பின்னோக்கிப் போயிட்டிருக்குடா” என்றான். முரளியை இழுத்துப் பிடித்து இரண்டு பெண்களுக்கும் நடுவில் உட்கார வைத்தோம்.

முரளி மிரண்டான். முரண்டான். “பொம்மார்த்தா உனோன்..” என்று வத்சனைப் பூச்சாண்டியாக்கி, குழந்தை போல முரளியை அமைதிப்படுத்தினான் உமேஷ். “சொல் பேச்சு சுனோ”.

படம் பார்த்தபடி ஏதோ பேசிக்கொண்டிருந்த போது, திடீரென்று வத்சன் குறுக்கிட்டான். “முரளிக்கு என்னா செய்யணும்னு தெரிஞ்சு போச்சு” என்றான்.

“டேய்.. சோமாறி.. நவருடா.. படத்தை மறைச்சுக்கிட்டு நிக்கறான்.. இப்பத்தான் அவ சாமானை வாயில..” என்று இரைந்தான் நேன்ஸ். முக்கியக் காட்சிகளில் கவனம் பிசகினால் அவனுக்குப் பிடிக்காது.

“இருங்கடா.. முரளி இஸ் நாட் எஞ்சாயிங்.. அவனுக்கு எல்லாம் கத்துக் கொடுக்கச் சொல்லியிருக்காரு பாஸ்” என்றான் வத்சன் விடாமல்.

“சரி.. விஷயத்தை சொல்லிமுடி தடியா”

“அடுத்த வாரம் ராஜமுந்த்ரி, காகினாடா மார்கெட் கவர் பண்றோமில்லே? பெத்தாபுரம் போவலாம். முரளிக்கு அரங்கேற்றம்” என்றான்.

ஏதோ சொல்ல வந்த முரளியை, “டேய்.. சொல்றபடி கேக்கலின்னா.. தேறமாட்டே” என்று ஒரேயடியாக அடக்கிவிட்டோம்.

பெத்தாபுரம் பயணத்தில் நாங்கள் புரிந்து கொண்டது இது தான்: சில மனங்கள் இரும்பினாலானவை, சில மலர்களினாலானவை.

முரளியின் மனம் கசங்கியது எங்களில் யாருக்குமே தெரியாமல் போனது, குற்ற உணர்வாக இன்றுவரை உறுத்துகிறது. இது முரளியின் கதை. பெத்தாபுரத்தில் பூத்த மொட்டு.

பிறிதொரு நாள் கசங்கும்.

– 2012/06/25

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *