புரோக்கர் பொன்னுசாமி!

 

பெரிய அதிர்ஸ்டசாலி என்று சொன்னால் புரோக்கர் பொன்னுசாமியைத்தான் சொல்ல வேண்டும்!

அவன் செல்போனில் தினசரி கோடிக் கணக்கில் பரிசு விழுந்ததாக செய்திகள் எஸ். எம். எஸ். மூலம் வரும்!

பத்திரிகை, டி.வி. எல்லாம் ரியல் எஸ்டேட், கல்யாணம் போன்றவைகளில் அவன் புரோக்கர் தொழிலுக்குப் போட்டிக்கு வந்து விட்டதால், அவன் வருமானம் சுத்தமாக குறைந்து விட்டது!

வருத்ததில் இருந்த அவனுக்கு ஐம்பது லட்சம் பரிசு விழுந்திருப்பதாக ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது! அதைப் பார்த்தவுடன் ஒரே எரிச்சலாக இருந்தது.

அந்த செல்போன் நெம்பரைப் பார்த்து அவனும் கீழ் கண்டவாறு ஒரு எஸ்.எம்.எஸ். தட்டி விட்டான்.

ஐயா,

நானும் உங்களைப் போல் தான்!…என் புரொக்கர் தொழில் முன்பு மாதிரி இல்லை! …..தினசரி பேப்பரைப் பார்க்கும் பொழுது நாட்டில் ஈமுவில் ஆரம்பித்து, இண்டர் நெட் வரை ஏமாந்த பார்ட்டிகள் நிறைய இருப்பார்கள் என்று தான் எனக்கும் படுகிறது!….ஆயிரத்தில் ஒரு நபர் நமக்கு கூட மாட்டினால் போதும். கணிசமான தொகையைத் திரட்டி விடலாம்!…..நான் நல்ல புரோக்கர்…என் அனுபவமும் உங்களுக்குப் பயன் படும்!…என்னையும் உங்கள் தொழில் ஒரு பார்ட்னராக சேர்த்துக் கொள்ளுங்கள்…

- பாக்யா செப்19-25 2014 இதழ் 

தொடர்புடைய சிறுகதைகள்
இடியோசை இன்ப சாகரன் அந்தக்கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட முதல் நிலைப் பேச்சாளர். கிளைக் கழகச் செயலாளர்களும், கட்சி நிர்வாகிகளும் அவர் ‘டேட்ஸ்’ வாங்க படாத பாடு படுவார்கள். காரணம் பிரியாணி கொடுத்து, காசு கொடுத்து, லாரி வாடகை கொடுத்து கூட்டத்திற்கு ஆட்கள் தேட வேண்டியதில்லை. ...
மேலும் கதையை படிக்க...
தமிழ் நடிகர்களிலேயே பத்து கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கும் மிக பிரபலமான நடிகர் அவர்! அவருடைய ஈ.சி.ஆர். ரோடு,.பால வாக்கம் பண்னை வீடுகள், தி.நகர், வேளச்சேரியில் உள்ள பங்களாக்கள், சிட்டியில் உள்ள அவருடைய அனைத்து அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் வருமானத்துறை அதிகாரிகளால் ரெய்டு! சென்னை ...
மேலும் கதையை படிக்க...
தமிழ், ஆங்கிலம் என்று இரு மொழிகளில் ஏழெட்டு தினசரி பத்திரிகைகள் கோவைப்பதிப்புகள் வெளி வருகின்றன. கடந்த நான்கு மாதங்களாக எல்லாப் பத்திரிகைகளிலும் ஏதாவது ஒரு மூலையில் செயின் பறிப்பு செய்திகள் கட்டாயம் இடம் பெறும்! அந்த செயின் பறிப்பு நிகழ்ச்சிகளை புதுப் புது ...
மேலும் கதையை படிக்க...
நீங்க ஒரு பக்கக் கதை, ஒரு நிமிடக்கதைகளில் கூட இதுபோல் படித்திருக்க மாட்டீர்கள்! நேற்று நடந்த உண்மைநிகழ்ச்சி இது! உங்களுக்கு மங்களத்தைத் தெரியாது! எனக்கு பத்துவருஷமாத் தெரியும்! எதிர் வீடு தான்! அந்தம்மாவுக்கு அறுபத்தி ஐந்து வயசுஎன்று யார் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்! பார்க்கும்பொழுது ...
மேலும் கதையை படிக்க...
கோவை திருச்சி ரோட்டில் வேகமாக வந்த ரமேஷ் கூட்டத்தைப் பார்த்து பிரேக் போட்டு, காரை நிறுத்தினான். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூடவா சாலை மறியல்? காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். ரமேஷுக்கு மேற்கொண்டு அந்த சாலை வழியாகப் போவது ...
மேலும் கதையை படிக்க...
நெருக்கம்!
சரியான நேரம்! – ஒரு பக்க கதை
ஏமாற்றம்!
மன அழுத்தம்!
தடை செய்யும் நேரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)