புத்திசாலித்தனமான கருத்துக்கள்…

 

”குருவே, என் பேச்சை யாரும் கவனிக்க மறுக்கிறார்கள்” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.

“ஏன், என்னாச்சு?”

“என்னுடைய கருத்துக்களை யாரும் பொருட்படுத்துவதே இல்லை. இதற்கு நான் என்ன செய்வது?” என்று கேட்டான்.

அவனுடைய பிரச்சனையை புரிந்துக் கொண்ட குரு அவனுக்கு ஒரு சம்பவத்தை சொன்னார்.

”இரண்டு நண்பர்கள் ஒரு சாலையில் நடந்துப் போய்க்கொண்டிருந்தார்கள். ரொம்ப பரபரப்பான சாலை. பலர் சென்று கொண்டிருந்தார்கள். நண்பர்கள் இருவரும் உற்சாகமாய் பேசி நடந்து கொண்டிருந்தபோது திடிரென்று ஒரு நண்பன் நின்றான். சற்று தொலைவில் இருந்த புதர் பக்கம் போனான். அங்கே ஒரு பூனைக் குட்டி புதருக்குள் சிக்கி ‘மியாவ் மியாவ்’ என்று கத்திக் கொண்டிருந்தது. பூனைக் குட்டி அருகே சென்ற நண்பன், புதரை விலக்கி சிக்கிக் கொண்டிருந்த பூனைக் குட்டியை விடுவித்தான். பூனைக் குட்டி துள்ளிக் குதித்து ஓடிச் சென்றது.

இதைப் பார்த்த மற்ற நண்பனுக்கு ஆச்சர்யம். ‘இத்தனை பேர் இந்தப் பாதையில் நடந்துச் செல்கிறோம், ஆனால் இந்த சந்தடியில் யாருக்குமே பூனைக் குட்டியின் சத்தம் கேட்கவில்லை. உனக்கு மட்டும் கேட்டது எப்படி?’ என்று கேட்டான்.

அந்தக் கேள்வியை கேட்டதும் சிரித்தான் நண்பன். ’என்னது, இந்த சந்தடியில் பூனை சத்தம் கேட்கவில்லையா? அப்படியெல்லாம் இல்லை. இப்போது பார்’ என்று சொல்லி கொஞ்சம் சில்லறை காசுகளை தரையில் போட்டான்.

அந்த சில்லறை சத்தம் கேட்டதும் அங்கே சென்றுக் கொண்டிருந்த அத்தனை மக்களும் திரும்பிப் பார்த்தனர்.

‘இதுதான் உலகம். அவர்கள் கவனிக்க விரும்புவதைதான் கவனிப்பார்கள். மற்றவற்றை கவனிக்காதது போல் கடந்து செல்லுவார்கள்’ என்று பூனைக் குட்டியைக் காப்பாற்றிய நண்பன் சொன்னான். ”

இந்த சம்பவத்தை குரு சொன்னதும் வந்தவனுக்கு தன்னுடைய பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று புரிந்தது.

அப்போது குரு அவனுக்கு சொன்ன WINமொழி: அடுத்தவரை கவரும் விததத்தில் கருத்துக்களை சொல்லுவதுதான் புத்திசாலித்தனம்.

- வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com) 

தொடர்புடைய சிறுகதைகள்
“குருவே, எனக்கு ஒரு பிரச்னை’ என்று வந்தவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “என்ன பிரச்னை?’ “நான் ஒரு நிறுவனம் வைத்திருக்கிறேன். ஆரம்பித்தில் நிறைய வேலை கிடைத்தது, ஆனால் இப்போது வேலை வருவது குறைந்துவிட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை’ என்று அவன் சொன்னதும், குருவுக்கு அவனுடைய ...
மேலும் கதையை படிக்க...
“குருவே என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை’ என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “ஏன்? என்ன பிரச்னை?’ என்று கேட்டார் குரு. “என்னிடம் நிறைய குறைகள் இருக்கின்றன. மற்றவர்கள் என்னைவிட திறமைசாலிகளாக தெரிகிறார்கள்’ என்று சொன்ன இளைஞனின் பிரச்னை குருவுக்குப் ...
மேலும் கதையை படிக்க...
“குருவே நான் அடிக்கடி பதட்டமாகிவிடுகிறேன். அதனால் நிறைய பிரச்னைகள் வருகின்றன” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. அப்படியா?” ஆமாம் குருவே பதட்டத்தில் நான் செய்யும் காரியங்கள் எல்லாம் தப்பாக முடிகிறது” என்று சொன்னம் அவனுடைய பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு ...
மேலும் கதையை படிக்க...
"குருவே, நான் செய்யும் எதிலும் வெற்றியே கிடைப்பதில்லை. வெற்றி கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று பதட்டமாய் கேட்டவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “ அப்படியா?” என்றார் குரு. “ஆமாம். நானும் நிறைய தொழில் செய்துப் பார்த்துவிட்டேன்” என்று சொன்னதும் குருவுக்கு அவன் ...
மேலும் கதையை படிக்க...
தன் முன் வந்து நின்றவனைப் பார்த்தார் குரு. “வாழ்க்கையே வெறுப்பாய் இருக்கிறது, குரு” “ஏன்? என்னாச்சு? நல்லாதானே இருந்த? சாஃப்ட்வேர் கம்பெனில நல்ல வேலை, நிறைய சம்பளம், அமெரிக்கா, இங்கிலாந்துனு பறந்துட்டு இருந்தியே!” “எல்லாம் நல்லா போறா மாதிரிதான் இருந்துச்சு குரு. ஆனா ...
மேலும் கதையை படிக்க...
”குருவே வணக்கம். எனக்கு ஒரு பிரச்சனை. நான் எது செய்தாலும் மற்றவர்கள் கிண்டலடிக்கிறார்கள்” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “அதனாலென்ன? நீ அவர்களைப் பொருட்படுத்தாமல் காரியங்களை செய்ய வேண்டியதுதானே” என்றார் குரு. “என்னால் அப்படி இருக்க முடியவில்லை குருவே” என்று சொன்னவனுக்கு குரு ...
மேலும் கதையை படிக்க...
“குருவே பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்று தெரியவில்லை’ என்ற கவலையுடன் ஒருவன் குரு முன் வந்து நின்றான். “என்னாச்சு?’ “பல பிரச்னைகளுக்குத் தீர்வு தேட இயலவில்லை. என் செய்வதென்று புரியவில்லை’ என்று அவன் சொன்னதும் அவனுடைய பிரச்னைகள் என்னவென்று குருவுக்குத் தெரிந்தது. அவனுக்கு ஒரு ...
மேலும் கதையை படிக்க...
”எனக்கு ஒரு பிரச்சனை” என்று வந்து நின்ற இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “சொல்லுப்பா, என்ன ஆச்சு?” “என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. நான் எப்போதும் குறை கூறிக் கொண்டே இருக்கிறேனாம். குறையிருந்தால் அதை சுட்டிக் காட்டுவதில் என்ன தப்பு?” என்று கோபமாய் கேட்டான் இளைஞன். அவன் ...
மேலும் கதையை படிக்க...
“குருவே எனக்கு எந்த வேலையும் சரிப்பட்டு வர மாட்டேன்கிறது. எதை ஆரம்பித்தாலும் அது நஷ்டத்தில் முடிகிறது” என்று கவலையோடு சொன்னவனிடம் ஆறுதலாய் பேசத் துவங்கினார் குரு. “ஏன், உன் வேலைகளில் என்ன பிரச்சனை வருது?” என்ற குருவின் கேள்விக்கு வந்தவன் செய்த தொழில்களை ...
மேலும் கதையை படிக்க...
தன் இளம் மனைவியை அழைத்துக் கொண்டு வெளிநாடு சுற்றுப்பயணம் போனான் ஒருவன். அவர்கள் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தார்கள். அத்தனை அழகான அற்புதமான இயற்கைச் சூழல் நிறைந்த இடங்கள். ஒவ்வொரு இடத்தையும் வெகுவாய் ரசித்தாள் மனைவி.கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஊர் சுற்றினார்கள். வீடு திரும்பும்போது விமானத்தில் ...
மேலும் கதையை படிக்க...
வேலையை எப்படி செய்கிறீர்கள்…
குறைகளைவிட குணங்களைப் பார்ப்பது நல்லது..!
பதறாமல் செய்யும் காரியம் சிதறாது!
அவசரப்பட்டால் வெற்றி கிடைக்காது
நண்பர்கள் வேண்டும்
அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது!
குறைகளையே பெரிதுப்படுத்தினால்…
இலக்கு மாறினால் வெற்றி கிடைக்காது
ரொம்ப பிடிச்சது..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)