பிரயோஜனம் – ஒரு பக்க கதை

 

கடற்கரையிலிருந்த ஒருவர், மணலிலிருந்து எதையோ எடுத்துக் கடலினுள் எறிந்தவாறு இருந்தது என் கவனத்தைக் கவரவே, அருகில் சென்று என்ன சார் செய்யறீங்க? என்றேன்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னே ஒரு பெரிய அலை வந்து நிறைய மீன்களைத் தூக்கிக் கரையிலே வஈசிட்டுப் போயிடுத்து.

துடிச்சிருக்கற அதுகளை ஒவ்வொண்ணா எடுத்துக் கடல்ல போட்டுக் கொண்டிருக்கேன் என்றார் அவர்.

சிரித்தேன் நான். இவ்வளவு மீன்கள் கிடக்க எல்லாத்தையும் போடறதுக்குள்ளே விடிஞ்சிடும். இங்கே மட்டும் இவ்வளவுன்னா இந்த பீச்சிலே மத்த இடங்களிலே எவ்வளவு இருக்கும்? எனக்கென்னவோ உங்க செய்கை பிரயோஜனமானதா தோணலை.

உங்களுக்கு வேணுமின்னா அப்படித் தோணலாம் சார். ஆனா, இந்த மீனுக்கு எவ்வளவு பிரயோஜம்னு யோசீச்சீங்களா? என்றவர், கையிலிருந்த மீனை கடலினுள் வீசினார்.

- ஷேக் சிந்தா மதார் (டிசம்பர் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
கண்ணை இறுக்கமாக மூடி தலையுள் இங்காலும் அங்காலுமாக ஓடித் திரியும் நினைவுகளை சுற்றித் திரிய விடாமல் வைத்திருக்கும் படி மனசால் மூளைக்குச் சொன்னபடி மெதுமெதுவாக நினைவுகள் அமைதி அடைய அரைத்தூக்கத்துக்குள் போய்க் கொண்டிருந்தான் சமரன். வழமை போலவே இதயம் வேகமாக அடிக்கத் ...
மேலும் கதையை படிக்க...
” சித்து உனக்கு நாய்கள் பிடிக்குமா? ” – இதுதான் லிண்டா என்று அழைக்கப்படும் லிண்டா தாமஸ் அலுவலக விஷயம் தாண்டி என்னிடம் கேட்ட முதல் கேள்வி. பேசிய முதல் விஷயம். பெரும்பான்மையான நாட்கள் அவர் வீட்டிலிருந்தே வேலை செய்வார். 17 ...
மேலும் கதையை படிக்க...
பிரமாண்டமாகப் படம் எடுப்பதில் பேர் வாங்கியிருந்த அந்த இளம் டைரக்டர், முன்னணி படத் தயாரிப்பாளரிடம் கதை சொல்லிக்கொண்டு இருந்தார்... “நாம இப்போ எடுக்கப்போற படம், வறுமையைப் பத்தின படம் சார்!” “சொல்லுங்க...” “மக்களின் வறுமைக்கு என்ன காரணம், இதைப் போக்க என்ன செய்யணும்னு ஆக்கபூர்வமா அலசப்போற ...
மேலும் கதையை படிக்க...
பக்கத்தில் இருக்கிற ஸ்கூலுக்குப் போய் குழந்தை ஸ்வேதாவுக்கு சாப்பாட்டை ஊட்டி விட்டு வராம சாப்பாட்டை கொடுத்து அனுப்பி விடுகிறாள். அப்படி டி.வி. சீரியல் முக்கியமா என்ன? ஹாலில் உட்கார்ந்து டி.வி. சீரியல் பார்த்துக் கொண்டிருந்த மருமகள் அனிதாவை பார்த்து கோபம் வந்தது மாமியார் ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு சனிக் கிழமை. சூரியனின் தங்க கதிர்கள் மறைந்து, நிலவின் வெள்ளி ஒளி படர்கின்ற மாலைப் பொழுது. அலுவலக பணி தந்த அலுப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஞாயிற்றுக் கிழமை விடுமுறையை மகிழ்ச்சியாக மனதில் அசை போட்டவாறு, எனது பைக்கில் விடு ...
மேலும் கதையை படிக்க...
தாவூத்தின் கதை
லிண்டா தாமஸ்
வறுமை
மருமகள் – ஒரு பக்க கதை
அந்த பொழுது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)