பிரபலமாகி விட்டால் – ஒரு பக்க கதை

 

இடுப்பு பிடித்துக்கொண்டது என்று மனைவியிடம் புலம்பிக்கொண்டிருந்தார் ராஜேஷ் குமார், வாயுப்பிடிப்பா, இல்லை மூச்சுப்பிடிப்பா என்று தெரியாமல் மனைவி இடுப்பில் அயொடெக்ஸ் போட்டு தடவி விட்டுக்கொண்டிருந்தாள். இவருக்கு வலி பொறுக்க முடியாமல் ஐயோ அம்மா, என்று அலறிக்கொண்டிருந்தார்.

வயசாயிடுச்சு, போதும் வீட்டுல அடங்குங்கன்னா கேட்டாத்தானே, வயசுக்கு வந்த இரண்டு பையனையும் புள்ளையும் பெத்து, அதுகளும் ஒண்ணு ரெண்டு பெத்தாச்சு. இனி என்ன? பணத்துக்கு ஆலாய் பறக்கணும்னு நமக்கு என்ன தலை எழுத்தா? இல்லை புதுசு புதுசா புள்ளைக கூட கூத்தடிக்கணும்னு நினைப்பா? கடு கடுவென சீறியபடி மீண்டும் இடுப்பில் போட்டு அழுத்தி தேய்த்தாள்.

சத்தம் போட்டு பேசாதடி, இவரின் குரல் மனைவியிடம் இறைஞ்சுவது போல் கேட்டது. ஆமா இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. ரொம்ப நாளா சொல்லிகிட்டு இருக்கேன்,படியேறி பழனி முருகனை தரிசிக்கணும்னு. அடியேய், தயவு செய்து அப்படி வேண்டிறாத, இப்ப எல்லாம் மேடேறுனா முட்டி எல்லாம் வலிக்குது.

ம்..ம்.. உறுத்து பார்த்த மனைவி இப்ப மட்டும் வயசாகுதுன்னு தெரியுதா? பதில் சொல்ல முடியாமல் அசட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்தார். கொஞ்சம் அமைதியாத்தான் பேசேன், வெளியே யாராவது கேட்டுகிட்டா அப்புறம் அவ்வளவுதான் அசட்டு புன்னகையுடன் மனைவியை சமாதானப்படுத்தினார்.

ஐயா, ரெடியாயிட்டாருங்களா? வந்திருந்தவரிடம், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, உள்ளே இருக்காரு, சொல்லிய வேலைக்காரி உள்ளே வந்து அவர்கள் அறைக்கதவை தட்டினாள்.

அதற்குள் அவர் இடுப்பை அயொடெக்ஸ் போட்டு நீவி முடித்திருந்தாள் மனைவி. இவர் உடையை மாற்றியபடி அறைக்கதவை திறந்தார்.

வேலைக்காரி வெளியே உங்களுக்காக வெயிட் பண்ணறாங்க..பவ்யமாய் சொல்லி நகர்ந்து நின்றாள்.

ம்ம்….சொல்லிவிட்டு வேகமாக நடந்து வெளியே வந்தவர் காரில் ஏறி உட்காரவும், காத்திருந்தவர் முன் கதவை திறந்து உட்கார கார் சர்ரென சீறி பாய்ந்தது.

“சார் நீங்க அப்படியே ஸ்டையிலா நடந்து வர்றீங்க, அப்ப ஹீரோயின் ஜிகினா டிரஸ்ஸுல படியில இருந்து இறங்கி உங்க கிட்ட வந்து உங்க கையை பிடிச்சிக்கறாங்க, நீங்க அவங்க கையை அப்படியே பிடிச்சு திரும்பறப்ப உங்களை அடிக்க அடியாளுங்க சுத்திக்கறாங்க. நீங்க ஸ்டைலா கதாநாயகியை இடுப்போட அணைச்சு பிடிச்சுகிட்டு காலை மட்டும் திருப்பி வில்லன்மேல ஒரு உதை கொடுக்கறீங்க… சொல்லிக்கொண்டிருந்தார் டைரக்டர்.

நான் கதாநாயகி இடுப்பை பிடிச்சு நிக்கறதோட எடுங்க, திரும்பி உதைக்கறதை டூப் போட்டுடுங்க. ஜாக்கிரதையுடன் சொன்னார் முன்னனி கதாநாயகன் ராஜேஷ்குமார். இடுப்பு பிடிப்பை வெளியில் சொல்ல முடியாமல்…..

அந்த சண்டையை திரையில் இரசித்து பார்த்து கைதட்டினான் ரசிகன். 

தொடர்புடைய சிறுகதைகள்
எதிரில் உட்கார்ந்திருந்த நண்பருடன் வியாபாரம் சம்பந்தமாக பேசி முடித்து அவரை அனுப்பி விட்டு ஆசுவாசமாய் உட்கார்ந்திருந்த போது, பேரன் விடுமுறைக்கு அப்பா வீட்டிற்கு வந்திருந்த என் பெண் அப்பா உன் பீரோவை சுத்தம் பண்ணப்ப இந்த பேப்பர் கட்டு கட்டி இருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
இன்று எப்படியும் சேகரிடம் பேசிவிட வேண்டும் என்று நினைப்பாள் காஞ்சனா, இது போல் தினமும் நினைத்து நினைத்து பாழும் வெட்கம் வந்து அவளை தடுத்து விடுகிறது, அவளும்தான் என்ன செய்வாள்? மனதில் சலனங்கள் இல்லாதவரை பெண்ணும் ஆணும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ...
மேலும் கதையை படிக்க...
கடும் வெயில் நாக்கு வறட்சியாக இருநதது, எங்காவது தண்ணீர் கிடைக்குமா என மனம் அலைபாய்ந்தது. பக்கத்துக்கடையில் சர்பத் கடை ஒன்று இருந்தது, ஆனால் கையில் பணம் இல்லை சம்பளம் வர இன்னும் ஒரு வாரம் ஆகும். சம்பளம் வநதாலும் அப்படியென்ன வந்துவிடப்போகிறது. இரண்டாயிரம் ...
மேலும் கதையை படிக்க...
கண் விழித்த எனக்கு, ஒரே கும்மிருட்டாகவும், கண்களின் எதிரே பூச்சி பறப்பது போலவும், எங்கும் ஒரே கூக்குரல் சத்தம் மட்டுமே கேட்டது. தலையை உயர்த்தி பார்க்க முயற்சி செய்தேன். முடியவில்லை, உயிர் போகும் வேதனைதான் இருந்தது. இப்படி படுத்திருப்பதற்கு உயிர் போயிருக்கலாம ...
மேலும் கதையை படிக்க...
மலையடிவாரத்தில் இருந்த அந்த ஊரின் ஒதுக்குப்புறமாய் அழகான ஒரு குளம் இருந்தது. அந்த குளத்தில் எண்ணற்ற மீன்களும், தவளைகளும், மற்றும் பல வகையான பூச்சி இனங்களும் வாழ்ந்து வந்தன. அந்த ஊர் மலை அடிவாரத்தில் இருந்ததால் குளமானது மலை அடிவாரத்தை ஒட்டியே இருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
மறைந்த இலக்கணம், படைத்த இலக்கியம்
காஞ்சனாவின் தவிப்பு
அம்மா
எல்லாம் கணக்குத்தான்
பகைவர்கள் செய்த உதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)