பிச்சைக்காரனைத் தேடி…

 

சவரம்செய்யப்படாத தாடி..அழுக்கேறிய உடை…கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தாலும் அவரின் தோள்களில் தொங்கிக்கொண்டிருந்த தோல்ப்பை..கையில் தடி.. கண்களில் ஒருசோர்வு.. கைகளில் இருக்க வேண்டிய ரேகை முகத்தில்…இப்படி எல்லாமும் இருந்தாலும் அவரின் முகத்தை அழகாகக்காணவைத்தது அவரின் புன்னகைதான்…இத்தனைத் தகுதியுடைய அந்த தடியுடைய மனிதர் எங்களைஅன்போடு அணுகி,

” பேராண்டிகளா பேராண்டிகளா… ” என்று அழைத்தபோது மூன்றுபேரும்
ஒன்றாக அவரைப் பார்த்தோம்..

வழக்கமாக எல்லாப் பிச்சைக்காரர்களையும் பார்க்கும் ஒருஏளனப்பார்வையை அவரிடமும் எந்த கஞ்சத்தனமும்இல்லாமல் வீசினோம்…

மறுபடியும் அந்த மாமனிதர் பேசினார்…

” ஒரு ஒருரூபா கொடுங்க பேராண்டிகளா.. ” என்று …

ஆனால் சுத்தமாக காசில்லை…எப்படி அவரிடம் கொடுப்பது..

” இல்லை ” என்ற ஒரே பதிலை மூவரும் உதிர்த்தோம்.

அவர் விடாமல் எங்கள் மூவரையும் தனித்தனியாகக் கேட்டார்.. ” தம்பி உன்கிட்ட
ஒரு ரூபா இருக்கா..”

” இல்லை.”

” பேராண்டி உன்கிட்ட இருக்கா ”

” இல்லை ”

” உன்கிட்ட ஒரு ரூபாய் கூட இல்லையா..? ”

” இல்லை ”

மூவரும் சொல்லி வைத்தார்போல் அவர் கேட்டதற்கு இல்லை என்ற பதிலை மட்டுமே கூறினோம். இப்போது எங்கள் மூன்று பேரையும் பார்த்து கூறினார்

” உங்க மூனுபேருகிட்டயும் ஒரு ஒரு ரூவாகூட இல்லையா.. சந்தோஷம்..
நீங்க மூனு பேரும் கோடீஸ்வரனா இருப்பிங்க..நல்லாருங்க.. ” என்றுபுன்னகை மாறாமல் சொல்லிவிட்டு அவர் கையில் இருந்தசில்லரையை தனது பையில்
போட்டவாறு எங்களைக்கடந்தார். மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்…

எங்களைப் பார்க்க எங்களுக்கே கேவலமாக இருந்தது..அந்த மனிதனைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்..

அவர் தன் தளர்வான நடையுடன் ஒவ்வொருவரிடமும் பிச்சைக்கேட்டுக் கொண்டே சென்று கொண்டிருந்தார்…

அவரிடமிருந்து நான் கற்ற பாடம் ஒன்றே ஒன்று மட்டும்தான்…’ வாழ்க்கையில் பணம் என்ற உயிரற்ற பொருள் மட்டும்தான் நம்மை இயக்குகிறது…பணம் இல்லை என்றால் யாரும் யாராலும் மதிக்கப்படுவதில்லை..

என்னை இப்படியெல்லாம் யோசிக்க வைத்த அந்த பிச்சைக் காரனை நான் தேடிக் கொண்டேயிருக்கிறேன்…

ஆனால் கண்டிப்பாய் என் தேடல் நிற்காது….!

(இந்த சிறுகதை 26.7.14 பாக்யா வார இதழில் வெளிவந்திருக்கிறது ) 

தொடர்புடைய சிறுகதைகள்
எனக்கு மட்டும் உதவி செய்வதற்கு சில தேவதூதர்களை கடவுள் படைத்திருப்பார் போலும்....நான் தலைவலியால் துன்பப்படுவதை அறிந்த அந்த இதயம், அலுவலகத்தில் எனக்காக விடுப்பு எடுத்துக் கொண்டார்... தலைவலி இப்போது இல்லைதான் இருப்பினும் அந்த தேவதூதரின் அன்புக்கட்டளைக்கு இணைங்கி மருத்துவமனைக்கு சென்றோம்.. அரசாங்கம் பாதி ...
மேலும் கதையை படிக்க...
அந்த பேருந்து வந்ததும் முதல் ஆளாக முன்டியடித்துக் கொண்டு ஏறினேன். கூட்டம் பேருந்திலிருந்து பிதுங்கி வழிந்தது. கூட்டத்தில் அகப்பட்டு அல்லோலப்பட்டு நிற்கும் போதுதான் கவனித்தேன். அவள் பேருந்துக்குள் ஏறவில்லை. பேருந்து கிளம்ப தயாரனது. உடனே சுதாரித்துக் கொண்டு மறுபடியும் கூட்டத்தில் நீச்சலடித்து கீழிறங்கினேன். அவளருகிலும் அருகிலில்லாமலும் நின்றேன். நான் ...
மேலும் கதையை படிக்க...
வழக்கம்போல் அன்று மாலையும் மின்சாரமில்லை. கொஞ்சம் புழுக்கம் அதிகப்படியானதால் மொட்டைமாடிக்கு செல்லலாமென முடிவெடுத்து மாடிக்குச் சென்றேன். காற்று உடலை வருடும்போது தென்றலின் அருமை புரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். எங்கிருந்தோ சிரிப்பு சத்தம் கேட்டது. சிரிப்பு வந்த திசையை நோக்கினேன்.. ...
மேலும் கதையை படிக்க...
தேவதூதரும் தலைவலியும்
பேருந்து காதல்…
நிமிட காதல்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)