பார்வையை மாற்று! – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,486 
 

“ஃபேக்டரியை என்கிட்ட நீங்க ஒப்படைச்சு ஆறு மாசம் ஆயிடுச்சு. ஆனா, இந்த கால கட்டத்தில, உற்பத்தி குறைஞ்சுக்கிட்டு வருது. அதுக்கான காரணம் என்னன்னு
புரியலை’ என்று எம்.பி.ஏ. படித்து முடித்த மகன் சித்தார்த், தந்தை சதுர்வேதியிடம் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டான்.

“உற்பத்தியைப் பெருக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறாய் என்று சற்று விளக்கிச் சொல்லேன்’ என்றார் சதுர்வேதி. “தினமும் சூப்பர்வைஸர்களை அழைத்து அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுகிறேன். எவ்வளவு சொன்னாலும் அவர்கள், தங்கள் தவறுகளை முழுவதும் திருத்திக் கொள்வதாகத் தெரியவில்லை. நான் களைச்சுட்டேன்’ என்றான் வருத்தத்துடன் சித்தார்த்.

“களைச்சது நீ இல்லை சித்தார்த், அவுங்க மனசுதான். வாரம் ஒருமுறை அவங்களை அழைத்து, பணியில், ஒவ்வொருவரின் நிறைகளை சுட்டிக்காட்ட பழகிக்கொள்.

சின்ன சாதனையானாலும், அதனைக் கவனித்து உன் பாராட்டுதல்களைப் பதிவு செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தினால், அவர்களின் தவறுகள் பெரிதாகக் குறைந்துவிடும் பணியில், பணத்தைவிட, மன நிறைவைத்தான் பெரும்பாலும் யாரும் எதிர்பார்க்கிறார்கள் என்பது என் ஐம்பது வருட அனுபவத்தில் நான் கற்ற பாடம். மனிதர்கள் மீதான உன் பார்வையை மாற்று. வெற்றி பெறுவாய்.’

சித்தார்த் தன் பார்வைக் கோளாறை உணர்ந்து செயல்படத் துவங்கினான்.

– ஜூலை 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *