பாரபட்சம் – ஒரு பக்க கதை

 

“ஸார் குருவும் மணியும் ஒரே மாதிரி படிக்கிறாங்க. ஆனா குரு பணக்கார வீட்டுப் பையன்ங்கறதால கண்டிக்கிறது இல்ல. மணி ஏழை வீட்டுப் பையன்ங்கறதாலதானே கண்டிக்கிறீங்க’ என்று 50 வயதான ஆசிரியர் விவேகனிடம் கேட்டார் 30 வயதான ஆசிரியர் பாலு.

“ஆமாம், மணி ஏழை வீட்டு பையன்ங்கறதாலதான் கண்டிக்கிறேன்’ என்றார் விவேகன்.

“ஆசிரியரா இருந்துட்டு பாரபட்சம் பார்க்கலாமா சார்’ என்று கேட்டார் பாலு.

“குரு பணக்கார வீட்டு பையன். கொஞ்சம் மார்க் குறைஞ்சாகூட மேல படிக்க முடியும். ஆனா மணி நல்ல மார்க் எடுத்தாதான் மேல படிக்க முடியும். அதனால் தான் படிக்கச் சொல்லி கண்டிக்கிறேன். இப்படிப்பட்ட நிலையில் பாரபட்சம் பார்க்கறது தப்பில்லை’ என்றார் விவேகன்.

விவேகனுக்கு நல்லாசிரியர் விருது கொடுத்தது தப்பில்லை என நினைத்தார் இளம் ஆசிரியர் பாலு.

- நந்தினி கண்ணன் (ஏப்ரல் 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
குமார் தையலகம்
குமாரைச் சுற்றி வட்டம், சாய் சதுரம், செவ்வகம், அருங்கோணம், முக்கோணம் போன்ற ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அது குமாரின் நண்பர்கள் கூட்டம். அவரது ஆத்மார்த்த நண்பர்கள் என ஒரு பட்டியல் எடுத்தால், அதற்கான ரேஷன் கார்டை 50 பேர் வைத்திருப்பார்கள். குமாருக்கு ...
மேலும் கதையை படிக்க...
'கோவிலின் வடக்கு மூலையில் இருக்கும் கல் சாமி என்கிற பாறையை நெம்பி வசதியான வேறு இடத்தில் போட முயற்சி செய்தால் ஏதாவது சண்டை சச்சரவு வந்து குடமுழுக்கே நடக்காமல் நின்று போய் விடும்.."அந்தக் கிராமத்துக் கோவிலின் வடக்கு மூலையில் 'கல் சாமி'ப் ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு சனிக் கிழமை. சூரியனின் தங்க கதிர்கள் மறைந்து, நிலவின் வெள்ளி ஒளி படர்கின்ற மாலைப் பொழுது. அலுவலக பணி தந்த அலுப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஞாயிற்றுக் கிழமை விடுமுறையை மகிழ்ச்சியாக மனதில் அசை போட்டவாறு, எனது பைக்கில் விடு ...
மேலும் கதையை படிக்க...
1 பல்கலைக் கழக ரிஜிஸ்திரார் ஆபீசில் அவள் தெரிந்து கொண்ட தகவல் கவலையளிக்கப் போதுமானதாக இருந்தது. எதிர்காலமே இருண்டு போகும்போல் இருந்தது. விளக்கடியில் தேங்கி நிற்கும் இருட்டைப் போல ஒவ்வொரு பேராசிரியரிடமும் தேங்கியிருந்த விருப்பு வெறுப்புக்களும் பழிவாங்கும் மனப்பான்மையும், சுயசாதி அபிமானமும் பயங்கரமாயிருந்தன; ...
மேலும் கதையை படிக்க...
" பிச்சை எடுக்கிறதுக்காகவே பிள்ளையை பெறுவது , பிறகு - பேத்தி ,பேத்தி - எண்டு சொல்லித்திரியிறது 'பேத்தியின்ர அப்பாவும் நான் தான் ! 'எண்டு சொல் வேண்டியது தானே...." என எரிந்து கொண்டு பெருமாள் கோயில் படி ஏறினார் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
குமார் தையலகம்
கல் சாமி
அந்த பொழுது…
கடைசியாக ஒரு வழிகாட்டி
வெண் நிலவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)